சர்வீஸ் பாராமீட்டர்ஸ்
பல்வேறு சேவைகளை வழங்குவதற்காக எடுக்கப்படும் நேரம் உட்பட இதர சேவை வரைக்கூறுகள்
பாலிசிதாரரின் நலன்களைப் பாதுகாப்பதற்கான வாரியம் அங்கீகரிக்கப்பட்ட கொள்கையின்படி, நிறுவனம் பல்வேறு செயல்பாடுகள் தொடர்பாக பின்வரும் TAT - ஐப் பின்பற்ற வேண்டும்.
✓ முன்மொழிவுகளை (ப்ரொபோசல்களை) ஏற்றுக்கொள்வது அல்லது நிராகரிப்பது குறித்த முடிவைத் தெரிவித்தல்: முன்மொழிவு படிவம் மற்றும் தேவையான அனைத்து ஆவணங்களும் கிடைத்த நாளிலிருந்து 15 நாட்கள்.
✓ பிரீமியம் பெற்றதற்கான அங்கீகாரம்: முன்மொழிவு / புதுப்பித்தல் பிரீமியம் கிடைத்தவுடன் உடனடியாக.
✓ பாலிசி வழங்குதல்: முன்மொழிவு படிவம் மற்றும் தேவையான அனைத்து ஆவணங்களும் கிடைத்த நாளிலிருந்து 15 நாட்கள்
✓ முன்மொழிவு படிவத்தின் நகலை அனுப்புதல்: அண்டர்ரைட்டிங் முடிவின் தேதியிலிருந்து 30 நாட்கள்
✓ முன்மொழிவுகளை நிராகரிப்பதன் மூலம் பணத்தைத் திரும்பப் பெறுதல்: அண்டர்ரைட்டிங் முடிவின் தேதியிலிருந்து 30 நாட்கள்
✓ அதிகப்படியாக செலுத்திய தொகையை திரும்பப் பெறுதல்: அண்டர்ரைட்டிங் முடிவின் தேதியிலிருந்து 15 நாட்கள்
✓ காப்பீடு செய்தவரின் கோரிக்கையின் அடிப்படையில் ஒப்புதல் பெறுவதற்கான கால வரம்பு: ஒப்புதல் கோரிக்கை பெறப்பட்ட நாளிலிருந்து 10 நாட்கள்.