தனியுரிமைக் கொள்கை
இந்தத் தனியுரிமைக் கொள்கையானது, ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தின் கொள்கைகள் குறித்தும்; நீங்கள் சேவையைப் பயன்படுத்தும் போது எங்களது நிறுவனம் சார்ந்த தகவலை சேகரிப்பது, பயன்படுத்துவது, மற்றும் வெளியிடுவது ஆகியவை குறித்த நடைமுறைகளை உங்களுக்கு விவரிக்கிறது; மேலும், உங்களது தனியுரிமைகள் மற்றும் பொருந்தக்கூடிய சட்டம் உங்களை எவ்வாறு பாதுகாக்கிறது என்பதையும் தெரிவிக்கிறது. ஸ்டார் ஹெல்த் நிறுவனத்திடம் நீங்கள் வழங்கும் உங்களது தனிப்பட்ட தரவுகளின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை கவனித்து கொள்வதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்; மேலும். நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்ளும் மற்ற தகவல்கள், எங்களது வலைத்தளத்தினை நீங்கள் பார்வையிடும் போது உங்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்க அனுமதிக்கிறது.
நாங்கள் செய்யும் செயல்களில் தலையாய முக்கியத்துவம் வாய்ந்தது வாடிக்கையாளரின் நம்பிக்கையைப் பெறுவதும் பராமரிப்பதுமே ஆகும், ஸ்டார் ஹெல்த் நிறுவனம் அதன் தனியுரிமை சார்ந்த நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையை கடைபிடிப்பதில் உண்மையிலேயே உறுதிபூண்டுள்ளது. எங்களிடம் வழங்கப்படும் எந்தவொரு தனிப்பட்ட தகவலும் நீங்கள் அளித்த ஒப்புதலின் அளவின் படி மட்டுமே செயல்படுத்தப்படும்; மேலும் முழு நம்பிக்கையுடன் எங்களிடம் தொடர்புகொள்ள உங்களை அழைக்கிறோம்.
எங்களது சேவையை வழங்கவும், அதனை மேம்படுத்தவுமே உங்களது தனிப்பட்ட தரவைப் பயன்படுத்துகிறோம். எங்களது சேவையைப் பயன்படுத்துவதன் மூலம், இந்த தனியுரிமைக் கொள்கையின்படி உங்களது தகவல்களை (தனிப்பட்ட, முக்கியமான) சேகரிப்பதற்கும் பயன்படுத்துவதற்கும் நீங்கள் ஒப்புதல் அளிக்கிறீர்கள்.
இந்தக் கொள்கையானது ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தின் இணையதளப் பயன்பாட்டு விதிமுறைகள் & நிபந்தனைகள், மற்றும் குக்கீ கொள்கையுடன் ஒன்றோடொன்று இணைந்திருப்பதாலும், ஒன்றோடொன்று சார்ந்திருப்பதன் காரணமாகவும் சேர்த்தே படிக்கப்படும்.
பொருள் விளக்கம் மற்றும் சொல் விளக்கம்
பொருள் விளக்கம்
ஆரம்ப எழுத்து பெரிய எழுத்தாக இருக்கும் சொற்கள் (தமிழில் தடிமனாக காட்டப்பட்ட சொற்கள்) பின்வரும் நிபந்தனைகளின் கீழ் விளக்கப்பட்ட அர்த்தங்களைக் கொண்டுள்ளன. பின்வரும் சொல் விளக்கங்கள் ஒருமையில் அல்லது பன்மையில் இருந்தாலும் அவை ஒரே பொருளைக் கொண்டிருக்கும்.
சொல் விளக்கம்
இந்த தனியுரிமைக் கொள்கையின் நோக்கங்களுக்காக:
கணக்கு என்பது எங்கள் சேவை அல்லது எங்கள் சேவையின் பகுதிகளை அணுகுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு பிரத்தியேக கணக்கு (அக்கவுண்ட்)
நிறுவனம் (இந்த ஒப்பந்தத்தில் "ஸ்டார் ஹெல்த்", "கம்பெனி", "நாம்", "நாங்கள்" அல்லது "எங்கள்" என குறிப்பிடப்படுகிறது) என்பது ஸ்டார் ஹெல்த் & அல்லைட் இன்சூரன்ஸ் கம்பெனி பிரைவேட் லிமிடெட்டைக் குறிக்கிறது.
குக்கீஸ் என்பது உங்கள் கணினி, மொபைல் சாதனம் அல்லது வேறு எந்தச் சாதனத்திலும் ஒரு வலைதளத்தால் வைக்கப்படும் சிறிய கோப்புகளாகும், அந்த இணையதளத்தில் உங்களது பிரவுசிங் வரலாற்றின் விவரங்கள் அவற்றில் இருப்பது உள்ளிட்ட பல பயன்பாடுகள் குக்கீஸிற்கு உள்ளன. இவை பிரவுசர் குக்கீஸ் அல்லது டிராக்கிங் குக்கீஸ் என்றும் அழைக்கப்படுகின்றன; அவை சிறிய அளவிலும், பெரும்பாலும் என்கிரிப்ட் செய்யப்பட்ட டெக்ஸ்ட் கோப்புகளாக, உங்கள் சாதனத்தின் பிரவுசரில் இருக்கும். இந்த குக்கீஸ் ஸ்டார் ஹெல்த் வலைதளம் முழுவதும் உங்களை இலகுவாக வழிநடத்தும், குறிப்பிட்ட செயல்பாடுகளை உங்களுக்கேற்ப பிரத்தியேகப்படுத்தவும் எங்களுக்கு உதவுகிறது. பயன்பாட்டினை மேம்படுத்த/செயல்படுத்த அல்லது வலைதள செயல்முறைகளை மேம்படுத்த குக்கீகஸ் முக்கிய பங்கு வகிக்கின்றன; எனவே குக்கீஸை முடக்கி வைத்தால், எங்கள் வலைதள செயல்பாடுகளில் சிலவற்றைப் பயன்படுத்துவது பாதிக்கப்படலாம்.
நாடு என்பது: இந்தியாவைக் குறிக்கிறது மற்றும் பயன்பாட்டு அடிப்படையில் இதே சொல் சென்னை அல்லது தமிழ்நாட்டினை குறிக்கும்.
சாதனம் என்பது கணினி, செல்போன் அல்லது டிஜிட்டல் டேப்லெட் போன்ற சேவையை அணுகக்கூடிய எந்தவொரு சாதனத்தையும் குறிக்கும்.
தனிப்பட்ட தரவு என்பது அடையாளம் காணப்பட்ட அல்லது அடையாளம் காணக்கூடிய ஒரு மனிதருடன் (அதாவது, நீங்கள், இந்த வலைதளத்தின் வாடிக்கையாளர் / பார்வையாளர்) தொடர்புடைய எந்தவொரு தகவலையும் குறிக்கும்; இது பெயரின் முதல் பகுதி, பெயரின் கடைசி பகுதி, மனைவியின் பெயர், பான் கார்டு எண், எண், ஆதார் எண், பிறந்த தேதி மற்றும் இடம், தாயின் இயற்பெயர் அல்லது பயோமெட்ரிக் பதிவுகள்; போன்ற தனிநபரின் அடையாளத்தை வேறுபடுத்திக் காட்ட அல்லது அவரைக் கண்டறியப் பயன்படுகிறது; மேலும், மருத்துவம், கல்வி, நிதி மற்றும் வேலைவாய்ப்புத் தகவல் போன்ற தகவல்களுடன் ஒரு தனிநபராக உங்களுடன் இணைக்கக்கூடிய பிற தகவல்களை உள்ளடக்கியதாகும். பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒருமித்த அர்த்தம் தரும் சொற்கள் தனிப்பட்ட தகவல் எனப்படும், அவை தனிப்பட்ட முறையில் அடையாளம் காட்டும் தகவல், தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய தகவல் (PII) அல்லது தனிப்பட்ட/பாதுகாக்கப்பட்ட மருத்துவ மற்றும்/ அல்லது உடல்நலத் தகவலாக (PHI) இருக்கலாம்.
சேவை என்பது வலைதளத்தைக் குறிக்கிறது மற்றும் இந்த வலைதளத்தில் நீங்கள் அங்குமிங்கும் செல்லும்போது நாங்கள் வழங்கும் அனைத்து சேவைகளுக்குமான ஒரு ஒருங்கிணைந்த சொல்லாகவும் அது இருக்கும். அனைத்து தகவல்களையும் இலவசமாக அணுகலாம் என்றபோதும், காப்பீட்டு பிரீமியம் செலுத்துதல் அல்லது தரவிறக்கம் செய்யக்கூடிய ஆதாரங்கள் போன்ற எந்தவொரு குறிப்பிட்ட சேவைகளையும் முழுமையாக வழங்கும் நோக்கத்திற்காக - உங்களது தனிப்பட்ட தரவை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்வோம்.
சேவை வழங்குநர் என்பது ஸ்டார் ஹெல்த் நிறுவனம் சார்பாக தரவைச் செயல்படுத்தும் எந்தவொரு நிஜ மனிதர் அல்லது சட்டப்பூர்வ நபரைக் குறிக்கிறது. எங்களது சேவையை எளிதாக்க, நிறுவனத்தின் சார்பாக சேவையை வழங்க, எங்களது சேவை தொடர்பான சேவைகளை செய்ய, அல்லது சேவை எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை பகுப்பாய்வு செய்வதற்கு ஸ்டார் ஹெல்த் நிறுவனத்திற்கு உதவும் மூன்றாம் தரப்பு நிறுவனங்கள் அல்லது தனிநபர்களையும் இது குறிக்கிறது.
பயன்பாட்டுத் தரவு என்பது சேவையின் பயன்பாட்டின் காரணமாக அல்லது சேவையின் உள்கட்டமைப்பிலிருந்தே உருவாக்கப்பட்டு தாமாக சேகரிக்கப்பட்ட தரவைக் குறிக்கிறது (எடுத்துக்காட்டாக, ஒரு பக்கத்தைப் எவ்வளவு நேரம் காண்கிறார்கள் என்ற விவரம்).
வலைதளம் என்பது ஸ்டார் ஹெல்த்-ஐ குறிக்கிறது, இதனை www.starhealth.in என்கிற முகவரியில் அணுகலாம்.
நீங்கள் என்பது சேவையை அணுகும் அல்லது பயன்படுத்தும் நபர், அல்லது நிறுவனம் அல்லது பிற சட்டப்பூர்வ நிறுவனம் சார்ந்து அணுகும் அல்லது சேவையைப் பயன்படுத்தும் நபர் ஆகியோரைக் குறிக்கும்.
உங்களது தனிப்பட்ட தரவை சேகரித்தல் மற்றும் பயன்படுத்துதல்
சேகரிக்கப்பட்ட தரவுகளின் வகைகள்: தனிப்பட்ட தரவு
ஸ்டார் ஹெல்த் சேவையைப் பயன்படுத்தும் போது, உங்களைத் தொடர்புகொள்ள அல்லது அடையாளம் காண பயன்படும், உங்களைத் தனித்து அடையாளம் காட்டும் சில தகவல்களை எங்களுக்கு வழங்குமாறு உங்களிடம் நாங்கள் கோரலாம். தனிப்பட்ட முறையில் உங்களை அடையாளம் காட்டக்கூடிய தகவல்கள் பின்வருமாறு, ஆனால் இவை மட்டும் அப்படி அடையாளம் காட்டுபவை அல்ல:
1.பெயரின் முதல் பகுதி மற்றும் கடைசி பகுதி
2.மின்னஞ்சல் முகவரி
3.தொலைபேசி எண் / மொபைல் எண்கள்
4.முகவரி, மாநிலம், ஜிப்/அஞ்சல் குறியீடு, நகரம்
5.ஆதார், ஓட்டுனர் உரிமை எண், பான்கார்டு எண் போன்றவை.
6.ஏதேனும் தொழில் சார்ந்த தகவல்கள்
7.ஏதேனும் உடல்நலம் சார்ந்த தகவல்கள்
8.வலைதள பயன்பாடு தொடர்பான தரவு
முக்கியமான தனிப்பட்ட தரவு அல்லது தகவல்கள்
ஸ்டார் ஹ்ல்த் நிறுவனத்தின் சேவைகளைப் பயன்படுத்தும் போது, ஒரு நபரின் முக்கியமான தனிப்பட்ட தரவு அல்லது தகவல்கள் எனப்படுவது பின்வருபவை தொடர்பான தகவல்களைக் கொண்ட தனிநபரின் தகவல்களைக் குறிக்கிறது.
1.கடவுச்சொல்
2.வங்கி கணக்கு, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு அல்லது பிற பணம் செலுத்தும் முறை குறித்த விவரங்கள் போன்ற நிதிசார் தகவல்கள்
3.உடல், உடலியல் மற்றும் மனநல நிலை குறித்த தகவல்கள்
4.பாலினம் குறித்த தகவல்
5.மருத்துவப் பதிவுகள் மற்றும் வரலாறு
6.பயோமெட்ரிக் விவரங்கள்
7.சேவையை வழங்குவதற்காக ஸ்டார் ஹெல்த் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள மேற்கூறிய உட்பிரிவுகளுடன் தொடர்புடைய ஏதேனும் பிற விவரங்கள், மற்றும்
8.ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தினால் செயல்படுத்தப்படுவதற்காக, மேலே உள்ள உட்பிரிவுகளின் கீழ் பெறப்பட்ட தகவல்கள் ஏதேனும் சட்டப்பூர்வ ஒப்பந்தத்தின் கீழ், அல்லது வேறு காரணங்களுக்காக சேமிக்கப்படும் அல்லது செயல்படுத்தப்படும்
இருப்பினும், பொதுவான தளத்தில் இலவசமாகக் கிடைக்கும், அல்லது அணுகக்கூடிய அல்லது தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 அல்லது தற்போதைக்கு நடைமுறையில் உள்ள வேறு ஏதேனும் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட எந்தத் தகவலும் - மேலே குறிப்பிட்ட நோக்கங்களுக்காக முக்கியமான தனிப்பட்ட தரவு அல்லது தகவலாகக் கருதப்படாது.
பயன்பாட்டுத் தரவு அல்லது பிரவுசிங் தரவு.
ஸ்டார் ஹெல்த்தின் சேவையைப்(சேவைகளை) பயன்படுத்தும் போது, வெப் பிரவுசர் மூலம் பயன்பாட்டுத் தரவு தாமாகவே சேகரிக்கப்படும். இணையதளத்தில் உங்களைப் பற்றி வழங்கப்பட்டுள்ள குறிப்பிட்ட தகவலுடன் சேர்த்து இது கூடுதல் தகவலாக இருக்கும்.
உங்கள் சாதனத்தின் இன்டர்நெட் புரோட்டோக்கால் அட்ரஸ் (அதாவது, IP முகவரி), பிரவுசர் வகை, பிரவுசரின் வெர்ஷன், நீங்கள் பார்வையிடும் எங்கள் சேவையின் பக்கங்கள், நீங்கள் பார்வையிட்ட நேரம் மற்றும் தேதி, அந்தப் பக்கங்களில் செலவழித்த நேரம், சாதனங்களை அடையாளம் காட்டும் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் பிற தன்மை கண்டறியும் தரவுகள் போன்ற தகவல்கள் யாவும் பயன்பாட்டுத் தரவில் இருக்கக்கூடும்.
நீங்கள் ஒரு மொபைல் சாதனம் மூலமாகவோ அல்லது அதன் வழியாகவோ சேவையை அணுகும்போது, நீங்கள் பயன்படுத்தும் மொபைல் சாதனத்தின் வகை, உங்கள் மொபைல் சாதனத்தின் தனிப்பட்ட அடையாள எண், உங்கள் மொபைல் சாதனத்தின் IP முகவரி, உங்கள் மொபைலின் இயங்குதள விவரம், நீங்கள் பயன்படுத்தும் மொபைல் வெப் பிரவுசரின் வகை, சாதனத்தை அடையாளம் காட்டும் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் பிற தன்மை கண்டறியும் தரவுகள் உள்ளிட்ட சில தகவல்கள் தாமாகவே சேகரிக்கப்படலாம்.
மொபைல் சாதனத்திலோ அல்லது அதன் மூலமாகவோ நீங்கள் எங்கள் சேவையைப் பார்க்கும் போது அல்லது அணுகும் போது, உங்கள் பிரவுசர் அனுப்பும் தகவலையும் நாங்கள் சேகரிக்கலாம். பின்வரும் கூடுதல் தொழில்நுட்ப தகவல்களையும் நாங்கள் பெறுகிறோம்:
- எங்கள் சேவைகளைப் பயன்படுத்தும் போது நீங்கள் பயன்படுத்தும் கணினிகளின் டொமைன் பெயர்கள்.
- உங்கள் வெப் பிரவுசர் கோரும் ஆதாரங்களின் URI (யூனிஃபார்ம் ரிசோர்ஸ் ஐடென்டிஃபையர்) முகவரிகள்.
- கோரிக்கை விடுக்கும் நேரம்.
- சர்வரில் கோரிக்கையைச் சமர்ப்பிக்க உங்கள் வெப் பிரவுசர் பயன்படுத்திய முறை.
- அதற்கு பதிலாக பெறப்பட்ட கோப்பின் அளவு.
- சர்வர் அளிக்கும் பதிலின் நிலையைக் குறிக்கும் நியூமரிக்கல் கோடு (வெற்றிகரமாக அளிக்கப்படுதல், தவறு ஏற்படுதல், போன்றவை); மற்றும்
- நீங்கள் பயன்படுத்தும் இயங்குதளம் தொடர்பான பிற அளவுருக்கள்.
கண்காணிப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் குக்கீஸ்
எங்கள் சேவையில் நிகழும் செயல்பாட்டைக் கண்காணிக்கவும், சில தகவல்களை சேமிக்கவும் குக்கீஸ் மற்றும் அதுபோன்ற கண்காணிப்பு தொழில்நுட்பங்களை நாங்கள் பயன்படுத்துகிறோம். தகவல்களை சேகரிக்கவும், கண்காணிக்கவும், எங்கள் சேவையை மேம்படுத்தவும், பகுப்பாய்வு செய்யவும், பீக்கன்ஸ், டேக்ஸ் மற்றும் ஸ்கிரிப்ட்ஸ் போன்ற கண்காணிப்பு தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்படுகின்றன. நாங்கள் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களில் பின்வருபவை உள்ளடங்கும்:
- குக்கீஸ் அல்லது பிரவுசர் குக்கீஸ். ஒரு குக்கீ என்பது உங்கள் சாதனத்தில் வைக்கப்பட்டுள்ள சிறிய கோப்பாக்கும் (ஃபைல்). அனைத்து குக்கீஸையும் மறுக்க அல்லது குக்கீ எப்போது அனுப்பப்படுகிறது என்பதைக் காண்பிக்குமாறு உங்கள் பிரவுசருக்கு நீங்கள் அறிவுறுத்தலாம். இருப்பினும், நீங்கள் குக்கீஸை ஏற்கவில்லை என்றால், எங்கள் சேவையின் சில பகுதிகளை உங்களால் பயன்படுத்த முடியாமல் போகலாம். குக்கீஸை மறுக்கும் வகையில் உங்கள் பிரவுசர் செட்டிங்கை நீங்கள் மாற்றவில்லை என்றால், எங்கள் சேவையானது குக்கீஸை பயன்படுத்தும்.
- வெப் பீக்கன்ஸ். எங்கள் சேவையின் சில பிரிவுகள் மற்றும் எங்கள் மின்னஞ்சல்களில் வெப் பீக்கன்ஸ் (தெளிவான gifஸ், பிக்சல் டேக்ஸ் மற்றும் ஒற்றை-பிக்சல் gifs என்றும் குறிப்பிடப்படும்) எனப்படும் சிறிய மின்னணு கோப்புகள் (எலக்ட்ரானிக் ஃபைல்ஸ்) இருக்கலாம்; எடுத்துக்காட்டாக, அந்தப் பக்கங்களைப் பார்வையிட்ட பயன்பாட்டாளரை கணக்கிட, அல்லது ஒரு மின்னஞ்சலைத் திறந்தது, மற்றும் அதனோடு தொடர்புடைய பிற வலைதள புள்ளிவிவரங்களுக்காகவும் (உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட பிரிவின் பிரபலமாக இருப்பதை பதிவுசெய்தல்; சிஸ்டம் மற்றும் சர்வர் சீரான செயல்பாட்டில் ஒருங்கிணைந்திருப்பதை சரிபார்த்தல்) போன்ற செயல்பாடுகளை மேற்கொள்ள இது நிறுவனத்தை அனுமதிக்கிறது.
குக்கீஸ் "நிரந்தரமான" (பெர்சிஸ்டன்ட்) அல்லது "தற்காலிக" (செஷன்) குக்கீஸாக இருக்கலாம். நீங்கள் இணையதளத்தை விட்டு ஆஃப்லைனில் செல்லும்போது பெர்சிஸ்டன்ட் குக்கீஸ் உங்கள் தனிநபர் கணினி அல்லது மொபைல் சாதனத்திலேயே இருக்கும்; அதேவேளையில் உங்கள் வெப் பிரவுசரை மூடியவுடன் செஷன் குக்கீஸ் நீக்கப்படும்.
கீழே குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களுக்காக நாங்கள் செஷன் மற்றும் பெர்சிஸ்டன்ட் குக்கீஸ் ஆகிய இரண்டையும் பயன்படுத்துகிறோம்:
தேவையான / அத்தியாவசிய குக்கீஸ்
வகை: செஷன் குக்கீஸ்
நிர்வகிப்பது: ஸ்டார் ஹெல்த்
நோக்கம்: இந்த குக்கீஸ் எங்களது வலைதளம் மூலம் கிடைக்கும் சேவைகளை உங்களுக்கு வழங்குவதற்கும், அதன் சில அம்சங்களைப் பயன்படுத்துவதற்கும் அவசியமாகிறது. அவை பயன்படுத்துவோரை அங்கீகரிக்கவும், பயன்படுத்துபவரின் கணக்குகளை மற்றவர் மோசடியாக பயன்படுத்துவதைத் தடுக்கவும் உதவுகின்றன. இந்த குக்கீஸ் உங்களைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்காது; அவை மார்கெட்டிங் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படலாம், மற்றும் நீங்கள் இணையத்தில் எங்கெல்லாம் சென்றீர்கள் என்பதை நினைவில் வைக்காது. இந்த குக்கீஸ் இல்லாமல், நீங்கள் கோரிய சேவைகளை வழங்க முடியாது; மேலும் அந்த சேவைகளை உங்களுக்கு வழங்குவதற்காக மட்டுமே இந்த குக்கீஸை நாங்கள் பயன்படுத்துகிறோம்.
குக்கீஸ் கொள்கை / அறிவிப்பினை ஏற்றுக்கொள்வதற்கான குக்கீஸ்
வகை: பெர்சிஸ்டன்ட் குக்கீஸ்
நிர்வகிப்பது: ஸ்டார் ஹெல்த்
நோக்கம்: வலைதளத்தில் குக்கீஸின் பயன்பாட்டை பயன்பாட்டாளர்கள் ஏற்றுக்கொண்டார்களா என்பதை இந்த குக்கீஸ் அடையாளம் காட்டும்.
ஃபங்ஷனாளிட்டி குக்கீஸ் (செயல்பாடு)
வகை: பெர்சிஸ்டன்ட் குக்கீஸ்
நிர்வகிப்பது: ஸ்டார் ஹெல்த்
நோக்கம்: இந்த குக்கீஸ், எங்கள் வலைதளத்தை நீங்கள் பயன்படுத்தும் போது உங்கள் லாகின் விவரங்கள், மொழி மற்றும் நீங்கள் ஏற்கனவே செய்த அல்லது செய்யும் விருப்பத்தேர்வுகள் ஏதேனும் இருந்தால் அவற்றை நினைவில் கொள்வது போன்ற உங்களது விருப்பங்களை நினைவில் வைத்துக் கொள்ள எங்களை அனுமதிக்கிறது. இந்த குக்கீஸின் நோக்கம், உங்களுக்கு பிரத்தியேக அனுபவத்தை வழங்குவதும், ஒவ்வொரு முறை நீங்கள் எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்தும் போதும் - உங்கள் விருப்பத்தேர்வுகளை மீண்டும் உள்ளிடக் கோருவதைத் தவிர்ப்பதுமே ஆகும். உங்கள் வலைதளத்திற்கு வரும் போது எந்த நேரத்திலும், அவற்றை நிறுத்தி வைக்கும் வசதி உங்களிடம் உள்ளது; இருப்பினும், அவ்வாறு செய்வதன் மூலம் நீங்கள் ஏற்கனவே வைத்துள்ள உங்களது விருப்பத்தேர்வுகளை நீங்கள் இழக்க நேரிடும் என்பதை அறிந்து கொள்ளவும்.
குக்கீஸைப் பற்றி மேலும் அறிய, தயவுசெய்து பின்வரும் வலைதளத்தைக் காணவும்: https://www.allaboutcookies.org/
உங்கள் தனிப்பட்ட தரவைப் பயன்படுத்துதல்
ஸ்டார் ஹெல்த் நிறுவனம் தனிப்பட்ட தரவைப் பயன்படுத்தலாம், மேலும் பின்வரும் நோக்கங்களுக்காக எங்களுடன் இணைந்துள்ள கூட்டாளர்களுடன் அவற்றைப் பகிர்ந்து கொள்ளலாம்:
எங்கள் சேவையை வழங்க மற்றும் பராமரிக்க,
எங்கள் சேவையின் பயன்பாட்டைக் கண்காணிப்பது உட்பட.
ஒப்பந்தத்தின் செயல்பாட்டிற்காக:
எங்களது இந்த சேவையின் மூலம் நீங்கள் வாங்கிய தயாரிப்புகள், பொருட்கள் அல்லது சேவைகள் ஆகியவற்றிற்காக மேற்கொண்ட கொள்முதல் ஒப்பந்தம் அல்லது எங்களுடன் மேற்கொண்ட வேறு ஏதேனும் ஒப்பந்தத்தின் மேம்பாடு, இணக்கம் மற்றும் செயல்படுத்துவதன் காரணங்களுக்காக.
உங்களை தொடர்பு கொள்ளும் காரணங்களுக்காக
மின்னஞ்சல், தொலைபேசி அழைப்புகள், குறுந்தகவல் (SMS) அல்லது அதற்கு நிகரான பிற மின்னணு தகவல்தொடர்பு முறைகளான – செயல்பாடுகள், தயாரிப்புகள் அல்லது ஒப்பந்த சேவைகள் தொடர்பான புதுப்பிப்புகள் குறித்த, அல்லது தகவல்கள் இருப்பின் அவை தொடர்பாக மொபைல் செயலியில் புஷ் நோட்டிஃபிகேஷன் மூலம் உங்களைத் தொடர்பு கொள்வது, இதில் பாதுகாப்பிற்கான புதுப்பித்தல்கள் உட்பட மேற்கூறிய தேவை ஏற்படும் போது அல்லது அவற்றை செயல்படுத்தும் காரணங்களுக்காவும் உங்களைத் தொடர்பு கொள்ள நேரும்.
உங்களுக்கு வழங்கும் காரணங்களுக்காக
நீங்கள் தகவல்களைப் பெற வேண்டாம் என தேர்வுசெய்யாத பட்சத்தில் – உங்களுக்கு செய்திகள், சிறப்புச் சலுகைகள் மற்றும் நாங்கள் வழங்கும் பிற பொருட்கள், சேவைகள் மற்றும் நிகழ்வுகள் பற்றிய பொதுவான தகவல்கள்; அல்லது நீங்கள் ஏற்கனவே வாங்கிய அல்லது விசாரித்தவை மாதிரியான தகவல்களைப் அனுப்பும் காரணங்களுக்காக.
உங்கள் கோரிக்கைகளை நிர்வகிக்க:
எங்களிடம் நீங்கள் வைக்கும் கோரிக்கைகளை அறியவும், அவற்றை நிர்வகிக்கவும்.
வணிக மாற்றங்கள் குறித்து தெரிவிக்க:
நிறுவன இணைப்பு, பிரித்தல், சேவை பிரித்தல், மறுசீரமைப்பு, கலைப்பு, அல்லது எங்கள் சில அல்லது அனைத்து பிற சொத்துக்களின் விற்பனை அல்லது பரிமாற்றம் ஆகியவற்றை மதிப்பீடு செய்யலாம்; அதற்கு ஏதேனும் தற்போதைய காரணம், அல்லது திவால்நிலை, கலைப்பு அல்லது அதுபோன்ற நடவடிக்கைகளின் ஒரு பகுதியோ காரணமாக இருக்கலாம்; அது போன்ற சூழலில் எங்கள் சேவையைப் பயன்படுத்துபவர்கள் பற்றி நாங்கள் வைத்திருக்கும் தனிப்பட்ட தரவானது மாற்றப்பட்ட சொத்துக்களில் அடங்கும்.
பிற நோக்கங்களுக்காக:
தரவு பகுப்பாய்வு, பயன்பாட்டின் போக்குகளைக் கண்டறிவது; எங்கள் விளம்பரப் பிரச்சாரங்களின் செயல்திறனைத் தீர்மானிப்பது; மற்றும் எங்கள் சேவை, தயாரிப்புகள், , மார்கெட்டிங் மற்றும் உங்களது அனுபவம் போன்றவற்றை மதிப்பீடு செய்து மேம்படுத்துவது போன்ற பிற நோக்கங்களுக்காக உங்கள் தகவல்களை நாங்கள் பயன்படுத்தலாம்.
உங்கள் தனிப்பட்ட தரவை தக்கவைத்தல்
இந்த தனியுரிமைக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களுக்காக தேவைப்படும் வரை மட்டுமே ஸ்டார் ஹெல்த் நிறுவனம் உங்கள் தனிப்பட்ட தரவைத் தக்கவைத்துக் கொள்ளும். எங்களது சட்டப்பூர்வ கடமைகளுக்கு (உதாரணமாக: பொருந்தக்கூடிய சட்டங்களுக்கு இணங்க உங்கள் தரவை நாங்கள் தக்க வைத்துக் கொள்ள வேண்டியிருந்தால்), சர்ச்சைகளுக்கு தீர்வு காண்பது, எங்கள் சட்ட ஒப்பந்தங்கள் மற்றும் கொள்கைகளை செயல்படுத்துவது போன்றவற்றிற்குத் தேவையான அளவிற்கு உங்களது தனிப்பட்ட தரவை நாங்கள் தக்கவைத்து, பயன்படுத்துவோம்.
கிரெடிட் கார்டு நிறுவனம் அல்லது உங்கள் வங்கியின் இன்டர்நெட் பேங்கிங் சேவையின் மூலம் கிரெடிட் கார்டின் எண் மற்றும் காலாவதியாகும் தேதி போன்ற நிதிசார்ந்த தகவல்களை ஸ்டார் ஹெல்த் நிறுவனம் பெறும்; ஆனால் ஸ்டார் ஹெல்த் இந்த தகவல்களை எங்கள் டேட்டாபேஸில் சேமித்து வைக்காது.
நபரின் அடையாளம் வெளிவராத வகையில் மாற்றி, பயன்பாட்டாளருடனான அனைத்து இணைப்புகளையும் அகற்றிய பிறகு, உள் பகுப்பாய்வு நோக்கங்களுக்காக பயன்பாட்டுத் தரவுகளை ஸ்டார் ஹெல்த் நிறுவனம் தக்க வைத்துக் கொள்ளும். பயன்பாட்டுத் தரவானது - பாதுகாப்பை வலுப்படுத்துவது அல்லது எங்கள் சேவையின் செயல்பாட்டை மேம்படுத்த பயன்படுத்தப்படும் பட்சத்தில் அல்லாமல், அல்லது நீண்ட காலத்திற்கு இந்தத் தரவைத் தக்கவைக்க நாங்கள் சட்டப்பூர்வமாக கடமைப்பட்டுள்ளோம் என்பதைத் தவிர, வேறு எதற்காகவும் இந்த பயன்பாட்டுத் தரவுகள் பொதுவாக குறுகிய காலத்திற்கு மட்டுமே தக்கவைக்கப்படுகிறது.
உங்கள் தனிப்பட்ட தரவின் பரிமாற்றம்
ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தின் இயக்க அலுவலகங்களிலும், செயலாக்கத்தில் உள்ள துணை நிறுவனங்கள், அல்லது நிறுவனத்தோடு தொடர்புடைய சேவை வழங்குநர்கள் இருக்கும் இடங்களிலும் உங்களது தனிப்பட்ட தரவு (முக்கியத் தரவுகள் உட்பட) உள்ளிட்ட தகவல்கள் செயலாக்கப்படும்.
இந்தத் தனியுரிமைக் கொள்கைக்காக நீங்கள் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, அத்தகைய தகவலை நீங்கள் சமர்ப்பித்தால், அது மேற்படி பரிமாற்றத்திற்கான உங்களது ஒப்புதலைக் குறிக்கிறது.
உங்களது தரவு பாதுகாப்பாகவும், இந்த தனியுரிமைக் கொள்கையின்படியும் நடத்தப்படுவதை உறுதிசெய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஸ்டார் ஹெல்த் நிறுவனம் மேற்கொள்ளும்; மேலும், உங்கள் தரவு மற்றும் தனிப்பட்ட தகவல்கள் பிறவற்றின் பாதுகாப்பு உட்பட, போதுமான கட்டுப்பாடுகள் அமலில் இல்லாத பட்சத்தில் உங்களது தனிப்பட்ட தரவு எந்த நிறுவனத்துடனும் பரிமாற்றம் செய்யப்படாது.
உங்கள் தனிப்பட்ட தரவை வெளியிடுதல்
வணிகப் பரிவர்த்தனைகள்
ஸ்டார் ஹெல்த் நிறுவனமானது - நிறுவன இணைப்பு, கையகப்படுத்துதல் அல்லது சொத்து விற்பனை மூலம் அதன் முக்கிய சொத்துக்களின் மீது எந்தவொரு நிதி பரிவர்த்தனைகளிலும் ஈடுபட்டிருந்தால், உங்கள் தனிப்பட்ட தரவு மேற்படி இடமாற்றம் செய்யப்படலாம். உங்கள் தனிப்பட்ட தரவு இடமாற்றம் செய்யப்பட்டு, வேறு தனியுரிமைக் கொள்கைக்கு உட்பட்டதாக மாறுவதற்கு முன், எங்கள் நிறுவனத்தின் வலைதள முகப்பு பக்கத்தில் வெளியிடும் அறிவிப்பின் மூலம் தெரிவிப்போம்.
சட்ட அமலாக்கம்
சில சூழ்நிலைகளில், ஸ்டார் ஹெல்த் நிறுவனம் உங்கள் தனிப்பட்ட தரவை சட்டப்படி அல்லது பொது அதிகாரிகளின் (உதாரணமாக: நீதிமன்றம் அல்லது அரசு நிறுவனம்) ஏற்புடைய கோரிக்கைகளுக்குப் பதிலளிப்பதன் மூலம் வெளிப்படுத்த வேண்டியிருக்கலாம்.
பிற சட்ட தேவைகள்
ஸ்டார் ஹெல்த் நிறுவனம் உங்களது தனிப்பட்ட தரவை நல்ல நோக்கத்திற்காகவும் வெளிப்படுத்தலாம்:
- சட்டப்பூர்வ கடமைக்கு இணங்கி செயல்படும் போது.
- ஸ்டார் ஹெல்த் நிறுவன உரிமைகள் அல்லது சொத்துக்களை தற்காத்து மற்றும் பாதுகாக்கும் போது.
- சேவை தொடர்பாக ஏற்படக்கூடிய சாத்தியமுல்ல தவறுகளைத் தடுப்பது அல்லது விசாரிக்கும் போது.
- சேவையின் பயன்பாட்டாளர், அல்லது பொதுமக்களின் தனிப்பட்ட பாதுகாப்பை காக்கும் போது.
- சட்டப்பூர்வமான பொறுப்பிற்கு எதிராகப் பாதுகாக்கும் போது.
உங்கள் தனிப்பட்ட தரவின் பாதுகாப்பு
உங்கள் தனிப்பட்ட தரவின் பாதுகாப்பு எங்களுக்கு முக்கியமானது. நிறுவனத்தின் தகவல் பாதுகாப்புக் கொள்கையின்படி - பாதுகாப்பு நடைமுறைகள், செயல்முறைகள், கொள்கைகள் மற்றும் தரநிலைகளை சிறந்த நடைமுறைகள், தரநிலைகள், மற்றும் தகவல் பாதுகாப்பு சார்ந்த நடைமுறையில் உள்ள விதிமுறைகளுக்கு இணங்க ஸ்டார் ஹெல்த் நிறுவனம் செயல்படுத்தும்.
ஆதார் எண் அடிப்படையிலான வாடிக்கையாளரை அறியும் முறைக்கு (KYC) ஒப்புதல் அளித்தல்
உங்கள் ஆதார் எண்ணைப் பகிர்வதன் மூலம், உங்கள் ஆதார் எண், விர்ச்சுவல் ID, e-ஆதார், XML நகல், மறைக்கப்பட்ட ஆதார், மக்கள்தொகை கணக்குத் தகவல், அடையாளத் தகவல், ஆதாரில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண், ஆதாரில் பதிவு செய்யப்பட்ட முகவரி, பிறந்த தேதி; ஆகியவற்றை பின்வரும் நோக்கங்களுக்காக பொருந்தக்கூடிய சட்டங்கள்/விதிமுறைகளின்படி (ஒட்டுமொத்தமாக - “ஆதார் தகவல்” என குறிப்பிடப்படலாம்) சேகரிப்பது, பயன்படுத்துவது, மற்றும் சேமிப்பதற்கு - ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனத்திற்கு நீங்கள் ஒப்புதல் அளிக்கிறீர்கள்.
- காப்பீட்டுச் சேவைகளை வழங்குவதற்காக, ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒழுங்குமுறைச் சட்டங்களின்படி - ஆதார் தகவலைப் பயன்படுத்தி அங்கீகரித்தல் / சரிபார்த்தல் / அடையாளம் காணும் நோக்கத்திற்காக KYC மற்றும் அதனோடு தொடர்புடைய செயல்முறைகளை மேற்கொள்ளலாம்.
- மேற்கூறிய நோக்கங்களுக்காகவும், ஒழுங்குமுறை மற்றும் சட்டப்பூர்வ அறிக்கை சமர்பித்தல் மற்றும் தாக்கல் செய்தல் மற்றும்/அல்லது பொருந்தக்கூடிய சட்டங்களுக்கு ஏற்ப தேவைப்படும் போது - ஆதார் தகவல்களைச் சேகரித்தல், பகிர்தல், சேமித்தல், பாதுகாத்தல், பதிவுகளை பராமரித்தல், மற்றும் ஆதார் தகவல்களை பயன்படுத்துதல், மற்றும் அங்கீகரித்தல் / சரிபார்த்தல் / அடையாளம் காண்பதை பயன்படுத்தலாம்.
இவ்வாறு சேகரிக்கப்பட்ட ஆதார் எண்கள், ஒரு என்கிரிப்ட் செய்யப்பட்ட மறைபொருள் வடிவில் பாதுகாக்கப்பட்டு; பரிந்துரைக்கப்பட்ட ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களின்படி ஒரு ஆதார் வால்ட்டில் பத்திரப்படுத்தப்படும்; அவை அனுமதிக்கப்பட்ட ஒழுங்குமுறை கட்டமைப்பின் வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு, தேவை ஏற்படின் மேலே பட்டியலில் தெரிவிக்கபப்ட்ட நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும்.
பிற இணையதளங்களுக்கான இணைப்புகள்
எங்களால் இயக்கப்படாத பிற வலைதளங்களுக்கான இணைப்புகள் எங்கள் சேவையில் இருக்கலாம். மூன்றாம் தரப்பு இணைப்பைக் கிளிக் செய்தால், அந்த மூன்றாம் தரப்பினரின் தளத்திற்கு நீங்கள் செல்ல நேரிடும். நீங்கள் பார்வையிடும் ஒவ்வொரு தளத்தின் தனியுரிமைக் கொள்கையை மதிப்பாய்வு செய்யுமாறு நாங்கள் உறுதியாக அறிவுறுத்துகிறோம்.
எந்தவொரு மூன்றாம் தரப்பினரின் வலைதளங்கள் அல்லது சேவைகளின் உள்ளடக்கம், தனியுரிமைக் கொள்கைகள், அல்லது நடைமுறைகள் மீது எங்களுக்கு எந்தவித கட்டுப்பாடும் கிடையாது, மற்றும் அவற்றிற்கு நாங்கள் பொறுப்பேற்கவும் முடியாது.
கூகுள் ஃபிட்
கூகுள் வழங்கும் Fit SDK-வை நாங்கள் பயன்படுத்துகிறோம் (மேலும் விவரங்களை இங்கே காணலாம்), இது பயன்பாட்டாளர்கள் தங்கள் ஃபிட்னஸ் தரவைக் கட்டுப்படுத்த அனுமதிக்கும் திறந்தநிலை தளமாகும். பயன்பாட்டாளரின் ஒப்புதலுடன் Google Fit SDK மூலம் அவர்களின் நடக்கும் தரவைச் செயல்முறைப்படுத்தி, சேகரிக்கிறோம்.
கூகுள் ஃபிட்னஸுடன் இணைந்த பிறகு, பயன்பாட்டாளர் தமது நடை குறித்த தரவை கிராஃபிக் வடிவத்தில் காண முடியும்; மேலும் கூகுள் ஃபிட்னஸிலிருந்து நடை குறித்த தரவை செயலி தாமாகவே சேகரிக்கத் தொடங்கும். பயன்பாட்டாளர் ஸ்டெப் கவுண்டர் செயல்பாட்டை நிறுத்திவைக்கும் வரை, உபயோகித்து வரும் அவரது யூசர் அக்கவுண்ட்டிலிருந்து வெளியேறும் வரை, அல்லது செயலியை மொபைலிலிருந்து நீக்கும் வரை தரவு சேகரிக்கப்படும்.
கூகுள் ஃபிட் சேவை விதிமுறைகள் மற்றும் கூகுள் API சர்வீசஸ் யூசர் டேட்டா பாலிசியின்படி கூகுள் ஃபிட்டின் தரவை நாங்கள் கையாளுகிறோம்.
கூகுள் ஃபிட் சேவை விதிமுறைகளைப் படிக்க, https://developers.google.com/fit/terms என்ற முகவரிக்கு செல்லவும்
கூகுள் API சேவைகளின் பயன்பாட்டாளர் தரவுக் கொள்கையைப் படிக்க, https://developers.google.com/terms/api-services-user-data-policy என்கிற முகவரிக்கு செல்லவும்
இந்த தனியுரிமைக் கொள்கையில் மாற்றம் செய்தல்
எந்த நேரத்திலும் எங்கள் தனியுரிமைக் கொள்கையைப் புதுப்பிப்பதற்கும், புதுப்பிக்கப்பட்ட கொள்கையை எங்கள் நிறுவனத்தின் முகப்புப் பக்கத்தில் வெளியிடுவதற்கும் எங்களுக்கு உரிமை உள்ளது.
ஏதேனும் மாற்றங்கள் செய்யப்படும் போது, இந்த தனியுரிமைக் கொள்கையை அவ்வப்போது மதிப்பாய்வு செய்யுமாறு நீங்கள் அறிவுறுத்தப்படுகிறீர்கள். இந்தத் தனியுரிமைக் கொள்கையில் செய்யப்படும் மாற்றங்கள் இந்தப் பக்கத்தில் பதிவிடப்படும் போது அவை அமலுக்கு வரும்.