ஸ்பெஷல் கேர் கோல்டு, ஸ்டார் ஹெல்த் அன்ட் அலைடு இன்ஷூரன்ஸ் கம்பெனி லிமிட்டட்

*I consent to be contacted by Star Health Insurance for health insurance product inquiries, overriding my NCPR/DND registration.

IRDAI UIN: SHAHLIP23182V012223

HIGHLIGHTS

Plan Essentials

essentials

நுழைவு வயது

18 முதல் 65 வயது வரை உள்ள எவரும் இந்த பாலிசியைப் பெறலாம். புதிதாகப் பிறந்த குழந்தை முதல் 17 வயது குழந்தை வரை காப்பீடு வழங்கப்படுகிறது.
essentials

பாலிசிக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை

இந்த பாலிசியைப் பெற பாலிசிக்கு முந்தைய மருத்துவப் பரிசோதனை தேவையில்லை. இருப்பினும், சிகிச்சையின் விவரங்கள் உட்பட முந்தைய மருத்துவ பதிவுகள் முன்மொழிவுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
essentials

ஆயுஷ் ட்ரீட்மெண்ட்

ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி முறைகளின் கீழ் உள்நோயாளிகளுக்கான சிகிச்சைக்கான செலவினங்கள் காப்பீட்டுத் தொகையில் 50% வரை கவர் செய்யப்படுகின்றன.
essentials

நவீன சிகிச்சை

நவீன சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கையில் அல்லது ஆழ்ந்த மூளை தூண்டுதல், இன்டரா வைட்ரியல் ஊசிகள், ரோபோடிக் அறுவை சிகிச்சைகள் போன்ற டேகேர் சிகிச்சை நடைமுறைகளுக்கு ஏற்படும் செலவுகள், காப்பீட்டுத் தொகையில் 50% வரை கவராகும்.
essentials

தவணை விருப்பங்கள்

பாலிசி பிரீமியத்தை முறையே 3% மற்றும் 2% என்று காலாண்டு அல்லது அரையாண்டு அடிப்படையில் செலுத்தலாம். மேலும், ஆண்டுதோறும் இதனை செலுத்தலாம்.
DETAILED LIST

பாலிசியில் உள்ள சிறப்பம்சங்கள்

முக்கியமான சிறப்பம்சங்கள்

தனித்துவமான திட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம், 2016 அல்லது / மற்றும் மனித நோயெதிர்ப்பு குறைபாடு வைரஸ் மற்றும் அக்யர்ட் நோயெதிர்ப்பு குறைபாடு சிண்ட்ரோம் (தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 2017 இன் கீழ் வரையறுக்கப்பட்ட HIV/AIDS உடைய நபர்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பாலிசி.

பாலிசி வகை

இந்த பாலிசி தனிப்பட்ட அடிப்படையில் மட்டுமே பலன்களை வழங்குகிறது.

பாலிசி காலம்

இந்த பாலிசியை 1 வருட காலத்திற்கு பெறலாம்

காப்பீட்டுத் தொகை

இந்த பாலிசியின் கீழ் காப்பீட்டுத் தொகைக்கான விருப்பங்கள் ரூ.4,00,000/- மற்றும் ரூ. 5,00,000/-.

தகுதி

மாற்றுத் திறனாளிகளுக்கான பாதுகாப்பு

சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளபடி பின்வரும் இயலாமை / குறைபாடுகளுக்கு இந்த பாலிசியின் கீழ் கவரேஜ் கிடைக்கும். மேலும் சட்டத்தில் உள்ள பட்டியலில் ஏதேனும் சேர்த்தல்/மாற்றங்கள் இருந்தால் அதற்கும் கவர் கிடைக்கும். இந்தக் பாலிசியின் படி குறைபாடு என்பது மாற்றுத்திறனாளிகள் சட்டம் 2016 இன் படி சான்றளிக்கும் அதிகாரியால் சான்றளிக்கப்பட்ட 40% அல்லது அதற்கு மேற்பட்ட குறிப்பிட்ட குறைபாடு கொண்ட நபர் என்று பொருள்படும். 1. கண் பார்வை இல்லாமல் 2. தசை சிதைவு 3. குறைந்த பார்வை 4. நாள்பட்ட நரம்பியல் நிலைமைகள் 5. தொழுநோய் குணப்படுத்தப்பட்ட நபர்கள் 6. குறிப்பிட்ட கற்றல் குறைபாடுகள் 7. செவித்திறன் குறைபாடு (செவிடுதிறன் மற்றும் செவித்திறன் குறைபாடு) 8. மல்டிபிள் ஸ்களீரோசிஸ் 9. லோகோமோட்டர் இயலாமை 10. பேச்சு மற்றும் மொழி குறைபாடு 11. ட்வார்ஃபிஸம் 12. தலசீமியா 13. அறிவுசார் குறைபாடு 14. ஹீமோபிலியா 15. மனநோய் 16. சிக்கில் செல் நோய் 17. ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறு 18. காது கேளாமை / கண் பார்வை இல்லாமை உட்பட பல குறைபாடுகள் 19. பெருமூளை வாதம் 20. ஆசிட் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர் 21. பார்கின்சன் நோய்

எச்.ஐ.வி கவரேஜ்

மனித நோயெதிர்ப்பு குறைபாடு வைரஸ் மற்றும் அக்யர்ட் நோயெதிர்ப்பு குறைபாடு சிண்ட்ரோம் (தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 2017 இன் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளபடி HIV/AIDS உடைய நபர்களுக்கு இந்த பாலிசி கிடைக்கிறது. 350 க்கு மேல் CD4 எண்ணிக்கையுடன் முறையாகத் தகுதியான மருத்துவப் பயிற்சியாளரால் HIV/AIDS கண்டறியப்பட்ட நபர்கள் இந்த பாலிசியின் கீழ் காப்பீட்டிற்கு மட்டுமே தகுதியுடையவராக இருக்க வேண்டும்.

மருத்துவமனையில் சிகிச்சை (இயலாமை மற்றும் எச்ஐவி/எய்ட்ஸ் கவர் உட்பட)

உள்நோயாளராக மருத்துவமனையில் அனுமதித்தல்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்கும் மேலாக ஏற்படும் செலவுகள் கவர் ஆகின்றன.

அறை வாடகை

மருத்துவமனை/நர்சிங் ஹோம் வழங்கும் அறை, தங்குமிடம் மற்றும் மருத்துவ செலவுகள் அனைத்தும் ஒரு நாளைக்கு காப்பீடு செய்யப்பட்ட தொகையில் 1% வரை கவராகும்.

ஐசியூ கட்டணங்கள்

மருத்துவமனை/நர்சிங் ஹோமில் வழங்கப்பட்ட தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU) கட்டணங்கள்/தீவிர இருதய சிகிச்சைப் பிரிவு (ICCU) கட்டணங்கள், ஒரு நாளைக்கு காப்பீடு செய்யப்பட்ட தொகையில் அதிகபட்சம் 2% வரை கவராகும்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு

உள்நோயாளராக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் தேதிக்கு 30 நாட்களுக்கு முன்பு வரை ஏற்படும் மருத்துவச் செலவுகளும் கவராகும்.

டிஸ்சார்ஜுக்கு பிறகு

மருத்துவமனை/மருத்துவப் பயிற்சியாளரால் பரிந்துரைக்கப்படும் ஆலோசனைக் கட்டணங்கள், நோயறிதல் கட்டணங்கள், மருந்துகள் உள்ளிட்ட மருத்துவச் செலவுகள், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜான நாளிலிருந்து 60 நாட்கள் வரை கவராகும்.

அவசரகால சாலைவழி ஆம்புலன்ஸ்

ஆம்புலன்ஸ் கட்டணம் ஒருமுறை மருத்துவமனையில் அனுமதிக்க, அதிகபட்சம் ரூ.2000 வரை கவராகும்.

டே கேர் நடைமுறைகள்

தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பெறும் சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சை நடைமுறைகளுக்கான செலவுகள் கவராகின்றன.

கண்புரை சிகிச்சை

கண்புரை சிகிச்சைக்கான செலவுகள் ஒரு பாலிசி ஆண்டில் ஒரு கண்ணுக்கு ரூ.40,000/- வரை கவர் செய்யப்படுகிறது.

கோ - பேமண்ட்

இந்த பாலிசியின் கீழ் உள்ள ஒவ்வொரு க்ளைம் போதும், பாலிசியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி, பாலிசிதாரர் க்ளைம் தொகைக்கு 20% இணை-தொகை செலுத்த வேண்டும்.

கோ-பேமண்ட் தள்ளுபடி

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி கூடுதல் பிரீமியத்தைச் செலுத்தினால் இணை தொகை தள்ளுபடி கிடைக்கும்.

எச்.ஐ.வி/எய்ட்ஸ்க்கான மொத்த தொகை கவரேஜ்

எச்.ஐ.வி/எய்ட்ஸ்க்கான மொத்த தொகை கவரேஜ்

காப்பீடு செய்தவரின் CD4 எண்ணிக்கை 150க்குக் குறைவாக இருந்தால், நிறுவனம் காப்பீடு செய்யப்பட்ட தொகையில் 100% அல்லது பாலிசியின் கீழ் கிடைக்கும் காப்பீட்டுத் தொகை ஆகிய இவ்விரண்டில் எது குறைவான தொகையோ, அதனை மொத்த தொகையாக பாலிசிதாரருக்கு செலுத்தும். பாலிசி தொடங்கப்பட்ட நாளிலிருந்து 90 நாட்கள் காத்திருப்பு காலத்திற்குப் பிறகு இந்தப் பணம் செலுத்தப்படும். குறிப்பு: மேலே குறிப்பிட்டுள்ள க்ளைம், காப்பீடு செய்யப்பட்ட நபரின் வாழ்நாளில் ஒருமுறை செலுத்தப்படும் மற்றும் உள்நோயாளராக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பெறும் சிகிச்சைக்கு பாலிசியின் கீழ் கோரப்படும் க்ளைமுடன் இணைக்கப்படாது.

காத்திருப்பு காலம்

ஏற்கனவே இருக்கும் நோய்கள்

I) உடல் செயலிழப்பு/எச்.ஐ.வி/எய்ட்ஸ் தவிர மற்ற நோய்களுக்குப் பொருந்தும்: ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கான சிகிச்சை மற்றும் அவற்றின் நேரடிச் சிக்கல்கள் தொடர்பான செலவுகள், முதல் பாலிசி தொடங்கப்பட்ட நாளிலிருந்து 48 மாத காத்திருப்பு காலத்திற்குப் பிறகு கவராகும். II) எச்.ஐ.வி/எய்ட்ஸுக்குப் பொருந்தும்: எச்.ஐ.வி/எய்ட்ஸ் சிகிச்சை தொடர்பான செலவுகள் மற்றும் அதன் நேரடிச் சிக்கல்கள் காப்பீட்டாளரிடம் முதல் பாலிசி வாங்கிய நாளிலிருந்து 90 நாட்கள் தொடர்ச்சியான கவரேஜூக்குப் பிறகு கவர் செய்யப்படும். III) உடல் செயலிழப்புக்கும் பொருந்தும்: ஏற்கனவே இருக்கும் உடல் செயலிழப்புக்கான சிகிச்சை தொடர்பான செலவுகள் மற்றும் அதன் நேரடி சிக்கல்கள் காப்பீட்டாளருடன் முதல் பாலிசி தொடங்கிய தேதிக்குப் பிறகு 24 மாதங்கள் தொடர்ச்சியான கவரேஜூக்குப் பிறகு கவராகும்.

குறிப்பிட்ட நோய்

பட்டியலிடப்பட்ட நோய்களின் சிகிச்சை, அறுவை சிகிச்சைகள் மற்றும் இதர சிகிச்சைகள் தொடர்பான செலவுகள், காப்பீட்டாளருடன் முதல் பாலிசி தொடங்கப்பட்ட தேதிக்குப் பிறகு, 24 மாதங்கள் தொடர்ச்சியான காத்திருப்பு காலத்திற்குப் பிறகு கவர் செய்யப்படும்.

ஆரம்ப காத்திருப்பு காலம்

முதல் பாலிசி தொடங்கப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் ஏதேனும் நோய்க்கான சிகிச்சை தொடர்பான செலவுகள் கவர் ஆகாது. எனினும், விபத்து காரணமாக எழும் க்ளைம் இதில் விதிவிலக்கு.
பாலிசி விவரங்கள் மற்றும் விதிமுறைகள் & நிபந்தனைகளை அறிய, பாலிசி ஆவணங்களைப் பார்க்கவும்.
ஸ்டார் ஹெல்த்

ஸ்டார் இன்ஷூரன்ஸை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

ஒரு மருத்துவ காப்பீட்டு வல்லுனராக, எங்கள் பயனாளர்களுக்கு விரைவான க்ளைம் செட்டில்மெண்ட்ஸ்களை அளிக்கிறோம். எங்களுடன் பல மருத்துவமனைகள் இணைந்து வருவதால் உங்களுக்கான மருத்துவ தேவைகளை மிகவும் எளிதாக நீங்கள் பெறுவதை உறுதி செய்கிறோம்.

எங்களது வாடிக்கையாளர்கள்

ஸ்டார் ஹெல்த்-ல் ‘மகிழ்ச்சியுடன் காப்பீடு செய்யப்பட்டது!’

உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தவும், பணத்தை மிச்சப்படுத்தவும், ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுப்பதன் கடினமான முறைகளை எளிதாக்கவும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

Customer Image
ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுக்க என் நண்பர் சொன்னார். என் மகன் நோயில் பாதிக்கப்பட்டிருந்த போது அது எனக்கு உதவியது. அவர்களின் கேஷ்லஸ் சிகிச்சை வசதி அந்த நேரத்தில் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. அவர்களின் சேவையையும் ஆதரவையும் நான் உண்மையிலேயே பாராட்டுகிறேன்.

டிஜி கே ஊமென்

திருவனந்தபுரம்

காப்பீடு செய்யுங்கள்
Customer Image
8 ஆண்டுகளாக ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸில் இருந்து வருகிறேன். இந்த காலத்தில் இரண்டு க்ளைம்ஸ்க்கு விண்ணப்பித்தேன். இரு முறையும் க்ளைம் செட்டில் ஆனது. நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது ஸ்டாரிடமிருந்து சிறப்பான ஆதரவைப் பெற்றேன்.

வாணிஸ்ரீ

பெங்களூரு

காப்பீடு செய்யுங்கள்
Customer Image
எனது குடும்பம் 2006 முதல் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸில் அங்கம் வகிக்கிறது. கடந்த மாதம் க்ளைம்க்கு விண்ணப்பித்த போது, தொந்தரவும் இல்லாமல் கிடைத்தது. தரமான சேவையை வழங்கும் ஸ்டாரின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

ராமச்சந்திரன்

சென்னை

காப்பீடு செய்யுங்கள்
Customer Image
விரிவான பாலிசியின் கீழ் இருந்தேன். எனது ஆஞ்சியோபிளாஸ்டி போது அவர்களின் நெட்வொர்க் மருத்துவமனையில் பணமில்லா சிகிச்சையை என்னால் பெற முடிந்தது.

ஷைலா கனச்சாரி

மும்பை

காப்பீடு செய்யுங்கள்
Customer Image
நான் 7 - 8 வருடங்களாக மெடிக்ளைம் சேவைகளைப் பயன்படுத்தி வருகிறேன். நான் மற்ற நிறுவனங்களையும் முயற்சித்தேன். ஆனால், ஸ்டார் ஹெல்த் அளித்த சேவையில் திருப்தி அடைந்தேன். அவர்களிடம் நட்புரீதியாக நமக்கு ஆதரவு கொடுக்கும் பணியாளர்களும் உள்ளனர்.

சுதிர் பைஜி

இந்தூர்

காப்பீடு செய்யுங்கள்
user
டிஜி கே ஊமென்
திருவனந்தபுரம்

ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுக்க என் நண்பர் சொன்னார். என் மகன் நோயில் பாதிக்கப்பட்டிருந்த போது அது எனக்கு உதவியது. அவர்களின் கேஷ்லஸ் சிகிச்சை வசதி அந்த நேரத்தில் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. அவர்களின் சேவையையும் ஆதரவையும் நான் உண்மையிலேயே பாராட்டுகிறேன்.

user
வாணிஸ்ரீ
பெங்களூரு

8 ஆண்டுகளாக ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸில் இருந்து வருகிறேன். இந்த காலத்தில் இரண்டு க்ளைம்ஸ்க்கு விண்ணப்பித்தேன். இரு முறையும் க்ளைம் செட்டில் ஆனது. நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது ஸ்டாரிடமிருந்து சிறப்பான ஆதரவைப் பெற்றேன்.

user
ராமச்சந்திரன்
சென்னை

எனது குடும்பம் 2006 முதல் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸில் அங்கம் வகிக்கிறது. கடந்த மாதம் க்ளைம்க்கு விண்ணப்பித்த போது, தொந்தரவும் இல்லாமல் கிடைத்தது. தரமான சேவையை வழங்கும் ஸ்டாரின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

user
ஷைலா கனச்சாரி
மும்பை

விரிவான பாலிசியின் கீழ் இருந்தேன். எனது ஆஞ்சியோபிளாஸ்டி போது அவர்களின் நெட்வொர்க் மருத்துவமனையில் பணமில்லா சிகிச்சையை என்னால் பெற முடிந்தது.

user
சுதிர் பைஜி
இந்தூர்

நான் 7 - 8 வருடங்களாக மெடிக்ளைம் சேவைகளைப் பயன்படுத்தி வருகிறேன். நான் மற்ற நிறுவனங்களையும் முயற்சித்தேன். ஆனால், ஸ்டார் ஹெல்த் அளித்த சேவையில் திருப்தி அடைந்தேன். அவர்களிடம் நட்புரீதியாக நமக்கு ஆதரவு கொடுக்கும் பணியாளர்களும் உள்ளனர்.

வேறு ஏதாவது தேடுகிறீர்களா?

உடனே தொடங்குங்கள்

சிறந்தது என்பதில் உறுதியாக இருங்கள்

உங்களின் எதிர்காலத்தை எங்களுடன் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள்

Contact Us
கூடுதல் தகவல்கள் தேவையா?
Get Insured
உங்கள் பாலிசியைப் பெறத் தயாரா?