ஸ்டார் அவுட் பேஷண்ட் கேர் இன்ஷூரன்ஸ் பாலிசி

*I consent to be contacted by Star Health Insurance for health insurance product inquiries, overriding my NCPR/DND registration.

IRDAI UIN : SHAHLIP22231V012122

HIGHLIGHTS

Plan Essentials

essentials

அவுட் பேஷண்ட் கவரேஜ்

ஸ்டாருடன் இணைப்பில் உள்ள இந்தியாவின் எந்தவொரு மருத்துவமனையிலும் வெளிநோயாளருக்கான மருத்துவ ஆலோசனை, நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சைக்கான செலவுகளுக்கு இந்த பாலிசி உதவுகிறது.
essentials

கவரேஜ் ஆப்ஷன்ஸ்

எந்தவொரு தனிநபர் அல்லது குடும்பமும் (6 உறுப்பினர்கள் வரை) இந்த பாலிசியை பெறலாம். இதில், 4 வகை காப்பீட்டுத் தொகை விருப்பங்கள் உள்ளன. அதாவது, ரூ. 25,000/50,000/75,000/1,00,000 என்று உள்ளன.
essentials

திட்ட விருப்பங்கள்

இந்த பாலிசியில் 3 திட்ட விருப்பங்கள் உள்ளன - சில்வர், கோல்டு மற்றும் பிளாட்டினம், என்று இதன் கீழ், ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கு முறையே 48, 24 மற்றும் 12 மாதங்களுக்குப் பிறகு காப்பீடு செய்யப்படும்.
essentials

அலோபதி அல்லாத சிகிச்சை

ஆயுஷ் மருத்துவ முறைகளின் கீழ் வெளிநோயாளருக்கான மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை செலவுகள் கவர் செய்யப்படுகிறது.
essentials

நோயறிதல், பிசியோதெரபி மற்றும் மருந்தகம்

ஸ்டாருடன் இணைப்பில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை, பிசியோதெரபி மற்றும் மருந்துகளுக்கு ஏற்படும் செலவுகள் கவர் செய்யப்படுகின்றன.
essentials

பற்கள் சிகிச்சைக்கான கவரேஜ்

விபத்துகள் காரணமாக இயற்கையான பற்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கான சிகிச்சை செலவுகள் கவர் செய்யப்படுகின்றன.
essentials

கண் சிகிச்சைக்கான கவரேஜ்

விபத்து காரணமாக கண்களில் ஏற்படும் பாதிப்புகளுக்கான சிகிச்சை செலவுகள் கவர் செய்யப்படுகின்றன.
DETAILED LIST

பாலிசியில் உள்ள சிறப்பம்சங்கள்

முக்கியமான சிறப்பம்சங்கள்

பாலிசி வகை

இந்த பாலிசியை தனிநபர் அல்லது ஃப்ளோட்டர் அடிப்படையில் பெறலாம்.

பாலிசி காலம்

இந்த பாலிசியை ஒரு வருட காலத்திற்குப் பெறலாம்.

நுழைவு வயது

18 முதல் 50 வயது வரை உள்ள எவரும் இந்த பாலிசியைப் பெறலாம். குழந்தைகளுக்கு 31வது நாளில் இருந்து 25 வயது வரை காப்பீடு வழங்கப்படுகிறது.

வெளிநோயாளருக்கான ஆலோசனை

ஸ்டாருடன் இணைப்பில் உள்ள இந்தியாவின் எந்தவொரு மருத்துவமனையிலும் வெளிநோயாளர் கன்சல்டேஷனுக்காக ஏற்படும் செலவுகள் கவர் செய்யப்படும்.

ஆயுஷ் கவரேஜ்

ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி மருத்துவ முறைகளின் கீழ் வெளிநோயாளருக்கான மருத்துவ கன்சல்டேஷன் மற்றும் சிகிச்சை செலவுகள் கவராகின்றன.

நோயறிதல், பிசியோதெரபி மற்றும் மருந்தகம்

ஸ்டாருடன் இணைப்பில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை, பிசியோதெரபி மற்றும் மருந்துகளுக்கு ஏற்படும் செலவுகள் கவர் செய்யப்படுகின்றன.

பல் சிகிச்சை

ஸ்டாருடன் இணைப்பில் உள்ள மருத்துவமனைகளில் இயற்கையான பற்களுக்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சை அல்லது விபத்துகளால் ஏற்படும் பல் சிகிச்சை செலவுகள் கவர் செய்யப்படுகின்றன.

கண் சிகிச்சைக்கான கவரேஜ்

ஸ்டாருடன் இணைப்பில் உள்ள இந்தியாவின் எந்தவொரு மருத்துவமனையிலும் விபத்துக்களால் ஏற்படும் கண் சிகிச்சைக்கான செலவுகள் கவர் செய்யப்படுகின்றன.

வாழ்நாள் முழுவதும் புதுப்பித்தல்

இந்த பாலிசி வாழ்நாள் முழுவதும் புதுப்பித்துக் கொள்ளும் வசதியை வழங்குகிறது.

புதுப்பித்தலில் தள்ளுபடி

காப்பீடு செய்த நபர், தொடர்ச்சியாக 2 ஆண்டுகள் க்ளைம் செய்யவில்லை எனில், பாலிசி புதுப்பிக்கும் நேரத்தில் பிரீமியத்தில் 25% தள்ளுபடி பெறத் தகுதியுடையவர் ஆகிறார்.
பாலிசி விவரங்கள் மற்றும் விதிமுறைகள் & நிபந்தனைகளை அறிய, பாலிசி ஆவணங்களைப் பார்க்கவும்.
ஸ்டார் ஹெல்த்

ஸ்டார் இன்ஷூரன்ஸை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

ஒரு மருத்துவ காப்பீட்டு வல்லுனராக, எங்கள் பயனாளர்களுக்கு விரைவான க்ளைம் செட்டில்மெண்ட்ஸ்களை அளிக்கிறோம். எங்களுடன் பல மருத்துவமனைகள் இணைந்து வருவதால் உங்களுக்கான மருத்துவ தேவைகளை மிகவும் எளிதாக நீங்கள் பெறுவதை உறுதி செய்கிறோம்.

எங்களது வாடிக்கையாளர்கள்

ஸ்டார் ஹெல்த்-ல் ‘மகிழ்ச்சியுடன் காப்பீடு செய்யப்பட்டது!’

உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தவும், பணத்தை மிச்சப்படுத்தவும், ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுப்பதன் கடினமான முறைகளை எளிதாக்கவும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

Customer Image
ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுக்க என் நண்பர் சொன்னார். என் மகன் நோயில் பாதிக்கப்பட்டிருந்த போது அது எனக்கு உதவியது. அவர்களின் கேஷ்லஸ் சிகிச்சை வசதி அந்த நேரத்தில் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. அவர்களின் சேவையையும் ஆதரவையும் நான் உண்மையிலேயே பாராட்டுகிறேன்.

டிஜி கே ஊமென்

திருவனந்தபுரம்

காப்பீடு செய்யுங்கள்
Customer Image
8 ஆண்டுகளாக ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸில் இருந்து வருகிறேன். இந்த காலத்தில் இரண்டு க்ளைம்ஸ்க்கு விண்ணப்பித்தேன். இரு முறையும் க்ளைம் செட்டில் ஆனது. நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது ஸ்டாரிடமிருந்து சிறப்பான ஆதரவைப் பெற்றேன்.

வாணிஸ்ரீ

பெங்களூரு

காப்பீடு செய்யுங்கள்
Customer Image
எனது குடும்பம் 2006 முதல் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸில் அங்கம் வகிக்கிறது. கடந்த மாதம் க்ளைம்க்கு விண்ணப்பித்த போது, தொந்தரவும் இல்லாமல் கிடைத்தது. தரமான சேவையை வழங்கும் ஸ்டாரின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

ராமச்சந்திரன்

சென்னை

காப்பீடு செய்யுங்கள்
Customer Image
விரிவான பாலிசியின் கீழ் இருந்தேன். எனது ஆஞ்சியோபிளாஸ்டி போது அவர்களின் நெட்வொர்க் மருத்துவமனையில் பணமில்லா சிகிச்சையை என்னால் பெற முடிந்தது.

ஷைலா கனச்சாரி

மும்பை

காப்பீடு செய்யுங்கள்
Customer Image
நான் 7 - 8 வருடங்களாக மெடிக்ளைம் சேவைகளைப் பயன்படுத்தி வருகிறேன். நான் மற்ற நிறுவனங்களையும் முயற்சித்தேன். ஆனால், ஸ்டார் ஹெல்த் அளித்த சேவையில் திருப்தி அடைந்தேன். அவர்களிடம் நட்புரீதியாக நமக்கு ஆதரவு கொடுக்கும் பணியாளர்களும் உள்ளனர்.

சுதிர் பைஜி

இந்தூர்

காப்பீடு செய்யுங்கள்
user
டிஜி கே ஊமென்
திருவனந்தபுரம்

ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுக்க என் நண்பர் சொன்னார். என் மகன் நோயில் பாதிக்கப்பட்டிருந்த போது அது எனக்கு உதவியது. அவர்களின் கேஷ்லஸ் சிகிச்சை வசதி அந்த நேரத்தில் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. அவர்களின் சேவையையும் ஆதரவையும் நான் உண்மையிலேயே பாராட்டுகிறேன்.

user
வாணிஸ்ரீ
பெங்களூரு

8 ஆண்டுகளாக ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸில் இருந்து வருகிறேன். இந்த காலத்தில் இரண்டு க்ளைம்ஸ்க்கு விண்ணப்பித்தேன். இரு முறையும் க்ளைம் செட்டில் ஆனது. நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது ஸ்டாரிடமிருந்து சிறப்பான ஆதரவைப் பெற்றேன்.

user
ராமச்சந்திரன்
சென்னை

எனது குடும்பம் 2006 முதல் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸில் அங்கம் வகிக்கிறது. கடந்த மாதம் க்ளைம்க்கு விண்ணப்பித்த போது, தொந்தரவும் இல்லாமல் கிடைத்தது. தரமான சேவையை வழங்கும் ஸ்டாரின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

user
ஷைலா கனச்சாரி
மும்பை

விரிவான பாலிசியின் கீழ் இருந்தேன். எனது ஆஞ்சியோபிளாஸ்டி போது அவர்களின் நெட்வொர்க் மருத்துவமனையில் பணமில்லா சிகிச்சையை என்னால் பெற முடிந்தது.

user
சுதிர் பைஜி
இந்தூர்

நான் 7 - 8 வருடங்களாக மெடிக்ளைம் சேவைகளைப் பயன்படுத்தி வருகிறேன். நான் மற்ற நிறுவனங்களையும் முயற்சித்தேன். ஆனால், ஸ்டார் ஹெல்த் அளித்த சேவையில் திருப்தி அடைந்தேன். அவர்களிடம் நட்புரீதியாக நமக்கு ஆதரவு கொடுக்கும் பணியாளர்களும் உள்ளனர்.

வேறு ஏதாவது தேடுகிறீர்களா?

உடனே தொடங்குங்கள்

சிறந்தது என்பதில் உறுதியாக இருங்கள்

உங்களின் எதிர்காலத்தை எங்களுடன் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள்

Contact Us
கூடுதல் தகவல்கள் தேவையா?
Get Insured
உங்கள் பாலிசியைப் பெறத் தயாரா?

ஸ்டார் அவுட் பேஷண்ட் கேர் இன்ஷூரன்ஸ் பாலிசி

 

OPD கவருடன் கூடிய உடல்நலக் காப்பீடு

 

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை வாங்குவது பொதுவாக எங்கள் முன்னுரிமை பட்டியலில் முதலிடத்தில் இருக்காது. இது பெரும்பாலும் தேவையற்ற செலவாகவே பார்க்கப்படுகிறது. ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகள் வழங்கும் பாதுகாப்பை அரிதாகவே நாங்கள் புரிந்துகொள்கிறோம். மனிதர்களாகிய நாம், பெரிய நோய்கள்/குறைபாடுகளுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோம் என்று நிச்சயமாக எதிர்பார்க்க மாட்டோம். மேலும் நமக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி தேவையில்லை என்று அடிக்கடி நினைக்கிறோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, நாம் நோய்வாய்ப்படுகிறோம். சாதாரண ஜலதோஷம் முதல் இருமல், வயிற்றுப்போக்கு அல்லது அலர்ஜி என ஏதாவது ஒரு பிரச்சனைகள் உங்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கும்.

 

இந்தியாவில் OPD செலவுகள் என்பது மொத்த மருத்துவச் செலவுகளில் 60% க்கும் அதிகமானவை என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், நீங்கள் படித்தது சரிதான். ஒரு ஆலோசனைக்கு ரூ. 500 செலுத்துவது பெரியதாகத் தெரியவில்லை என்றாலும், ஆண்டு முழுவதும் ஏற்படும் ஒட்டுமொத்தச் செலவுகளை நிச்சயமாக சமாளிக்க முடியாது.

 

உடல்நலத்தை பராமரிக்க செலவிடுவதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால் இந்த செலவுகளைக் குறைப்பதற்கான ஒரு வழி, இன்ஷூரன்ஸ் பாலிசியை வாங்குவது. பாலிசியால் வழங்கப்படும் பலன்களைப் பெற நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியதில்லை, உள்நோயாளராக தங்க வேண்டிய அவசியமும் இல்லை.

 

இதையெல்லாம் மனதில் வைத்து, ஸ்டார் அவுட் பேஷண்ட் கேர் இன்ஷூரன்ஸ் பாலிசியை உருவாக்கியுள்ளோம். OPD செலவுகளைச் சமாளிக்க இந்த பாலிசி உங்களுக்கு உதவும். எனவே நீங்கள் நோய்வாய்ப்பட்டால் எந்தவித மன அழுத்தமும் கவலையும் கொள்ளத் தேவையில்லை.

 

எனினும் சில நிபந்தனைகளுக்காக நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியிருந்தாலும், பெரும்பாலான நோய்களுக்கு அப்படி அனுமதிக்கப்பட வேண்டிய அவசியம் இருக்காது. மேலும், அத்தகைய நோய்களுக்கான சிகிச்சைகள் இந்த பாலிசியின் கீழ் வரும். அவுட்பேஷண்ட் கேர் எனும் இந்த பாலிசி என்பது மருத்துவமனையில் அனுமதிக்கப்படாமல் நோயாளி பெறும் அனைத்து சிகிச்சைகளையும் கவர் செய்கிறது. உதாரணமாக, மருத்துவ கன்சல்டேஷன் கட்டணம், கூடுதல் வைட்டமின் மருந்துகள், ஆன்டிபயாட்டிக்ஸ் போன்றவை.

 

ஒரு வெளிநோயாளராக சோதனைகள், ஸ்கேன்கள், மருத்துவமனையில் மருத்துவரிடம் பெறும் ஆலோசனை அல்லது பல் மருத்துவமனையில் பெறும் பற்களுக்கான சிகிச்சை போன்ற மிகவும் பொதுவான சிகிச்சைகளில் நீங்கள் எவ்வளவு பணத்தைச் சேமிக்க முடியும் என்று கற்பனை செய்து பாருங்கள்.

அவுட் பேஷண்ட் கேர் பாலிசி என்றால் என்ன?

  • வெளிநோயாளரின் மருத்துவ ஆலோசனை
  • அலோபதி அல்லாத சிகிச்சை செலவுகள்
  • நோயறிதல், பிசியோதெரபி மற்றும் மருந்துகளுக்கான செலவுகள்
  • பல் மற்றும் கண் சிகிச்சை செலவுகள்

 

பொருளடக்கம்அளவுகோல்
நுழைவு வயது18 ஆண்டுகள் முதல் 50 ஆண்டுகள் வரை
குழந்தைகள் - 31வது நாள் முதல் 25 வயது வரை
புதுப்பித்தல்வாழ்நாள் முழுவதும்
பாலிசி காலம்1 வருடம்
காப்பீட்டுத் தொகைரூ 25000 முதல் 1 லட்சம் வரை
தள்ளுபடிகள்

புதுப்பித்தலில் தள்ளுபடி - 2 தொடர்ச்சியான க்ளைம் இல்லாத ஆண்டுகளுக்கு பிறகு பிரீமியத்தில் 25% தள்ளுபடி

5% - ஆன்லைனில் பாலிசி வாங்குவதற்கு

காத்திருப்பு காலங்கள்PED- 48/24/12 மாதங்கள் (முறையே சில்வர்/கோல்டு/பிளாட்டினம்)ஆரம்ப காத்திருப்பு காலம் - 30 நாட்கள் (விபத்துகள் தவிர) 

 

பலன்கள்கவரேஜ் லிமிட்கவரேஜ் பற்றிய விளக்கம்
வெளிநோயாளருக்கான கன்சல்டேஷன்கவரேஜ் தொகை வரை மற்றும் போனஸ் ஏதேனும் இருந்தால்ஸ்டாருடன் இணைப்பில் உள்ள இந்தியாவின் எந்தவொரு மருத்துவமனையிலும் வெளிநோயாளருக்கான செலவுகளை கவர் செய்கிறது.
அலோபதி அல்லாத சிகிச்சை செலவுகள்கவர் செய்யப்படுகிறதுஅலோபதி அல்லாத ஆயுஷ் சிகிச்சையை விரும்புவோருக்கும் காப்பீடு தொகை கவர் செய்யப்படுகிறது
நோயறிதல், பிசியோதெரபி மற்றும் மருந்துகளின் செலவுகள்கவர் செய்யப்படுகிறதுஇந்தியாவில் ஸ்டாருடன் இணைப்பில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை, பிசியோதெரபி மற்றும் மருந்துகளுக்கு ஏற்படும் செலவுகள் கவர் செய்யப்படுகின்றன.
பல் மற்றும் கண் சிகிச்சை செலவுகள்கவர் செய்யப்படுகிறதுஸ்டாருடன் இணைப்பில் உள்ள இந்தியாவின் எந்தவொரு மருத்துவமனையிலும் விபத்துக்களால் ஏற்படும் பல் மற்றும் கண் சிகிச்சைக்கான செலவுகள் கவர் செய்யப்படுகின்றன.

டேகேர் சிகிச்சைக்கும் OPD சிகிச்சைக்கும் உள்ள வேறுபாடு

 

டே கேர் சிகிச்சைகள்:

 

பொதுவாக, உங்கள் ஹெல்த் இன்ஷூரன்ஸில் க்ளைம் செய்ய, நீங்கள் குறைந்தபட்சம் 24 மணிநேரம் மருத்துவமனையில் இருக்க வேண்டும். இருப்பினும், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் காரணமாக சில சிகிச்சைகளுக்கு 24 மணிநேரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியதில்லை. உதாரணமாக, கடந்த காலங்களில், கண்புரை அறுவை சிகிச்சை பெறும் நோயாளி அறுவை சிகிச்சைக்குப் பிறகு பல நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டும். தற்போது தொழில்நுட்ப முன்னேற்றத்தின் காரணமாக, நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்யப்படும் அதே நாளில், டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்.

 

அத்தகைய சிகிச்சையானது, உங்கள் பாலிசியில் சேர்க்கப்பட்டிருந்தால், காப்பீட்டு சிகிச்சையின் பாலிசி வரையறையின் கீழ் வரும்.

 

OPD சிகிச்சைகள்:

 

வெளிநோயாளர் பிரிவு அல்லது OPD சிகிச்சை என்பது, நோயாளி ஒருவர் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதையும், பரிசோதனைகள், எக்ஸ்ரே, அறிவுரை, பிசியோதெரபி போன்றவற்றைப் பெறுவதற்காகச் செல்லும் சூழ்நிலையைக் குறிக்கிறது.

 

டே கேர் பராமரிப்பு மற்றும் OPD சிகிச்சைகள் ஒரே மாதிரியானவை என்று தோன்றலாம், ஏனெனில் அவை குறுகிய நேரத்தையே எடுத்துக் கொள்கின்றன.

 

இரண்டுக்கும் இடையே உள்ள மிக முக்கியமான வேறுபாடு என்பது மருத்துவமனையில் சேர்க்கப்படுவது தான். ஒரு டே கேர் செயல்முறையில், சிகிச்சைக்கு குறைந்த நேரமே எடுத்துக் கொண்டாலும், அது மருத்துவமனையில் மேற்கொள்ளப்படுகிறது, அப்போதுதான் உங்கள் மருத்துவச் செலவுகளை டே கேர் சிகிச்சையின் கீழ் நீங்கள் க்ளைம் செய்ய முடியும். OPDக்கான சிகிச்சைகளுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியதில்லை. OPD சிகிச்சையின் தன்மை என்னவென்றால், மருத்துவமனை அல்லது கிளினிக்கில் அனுமதிக்கப்படாமலேயே சிகிச்சையைப் பெற முடியும்.

 

இதை புரிந்துகொள்ள ரூட் கேனல் சிகிச்சை ஒரு சிறந்த உதாரணம் எனலாம். ரூட் கேனல் சிகிச்சையை ஒரு மருத்துவமனையிலோ அல்லது க்ளீனிக்கிலோ அனுமதிக்கப்படாமல் மேற்கொள்ளலாம். எனவே இது OPD பாலிசி வகையின் கீழ் கவராகும். எனினும், விபத்து காரணமாக செய்யப்படும் பல் அறுவை சிகிச்சை, டே கேர் சிகிச்சையில் மேற்கொள்ள முடியும்.

அவுட் பேஷண்ட் கேர் இன்ஷூரன்ஸ் பாலிசியை ஏன் வாங்க வேண்டும்?

இந்தியாவில் மருத்துவச் செலவு நிற்காமல் அதிகரித்து வருகிறது. இதனால் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுப்பது நமது விருப்பம் என்பதைத் தாண்டி, அவசியம் என்ற நிலைக்கு வந்துவிட்டோம். OPD சிகிச்சைகள் இன்று மிகவும் சாதாரணமாகிவிட்டன. காய்ச்சல், இரத்த சர்க்கரை பரிசோதனை, ஈசிஜி, எக்ஸ்ரே, போன்ற காரணங்களுக்காக யார் தான் அடிக்கடி குடும்ப மருத்துவர் அல்லது இதர மருத்துவர்களை சந்திக்காமல் இருக்கிறார்கள்?

 

பொதுவாக, வெளிநோயாளிகளுக்கான சிகிச்சைகள் ஏற்கனவே இருக்கும் பாலிசிகள் மூலமாகவோ அல்லது நிலையான பாலிசி மூலமாகவோ கிடைக்கும்.  ஏனெனில் ஒவ்வொருவருக்கும் அவரவர் தேவைகள் மற்றும் அவரவர் பாக்கெட்டுக்கு ஏற்ற ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை அவரவர் தேவைக்கு ஏற்ப தேர்வு செய்வார்கள். இங்கு, ஒரு OP கவரேஜ் மற்றும் உள்நோயாளிகளுக்கான கவரேஜ் வைத்திருப்பதன் மூலம், அந்த நபர் முழுமையாக கவர் செய்யப்படுகிறார். அதேசமயம், ஒரு ஆரோக்கியமான நபர் கூட தனது மருத்துவ நிலைமைகளுக்காக மருத்துவரைச் சந்திப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. எந்தவித சீரியஸ் குறைபாடுகளும் இல்லாததால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கும் சூழலும் இல்லை. உதாரணமாக, பற்களுக்கான சிகிச்சைக்காகவோ அல்லது வேறு சில  காரணங்களுக்காகவோ உங்கள் மருத்துவரை சில முறை சந்திக்க நேரிடலாம். வயதாகும்போது, வழக்கமான உடல்நலப் பரிசோதனைகள் வாழ்க்கையின் ஒரு அங்கமாகின்றன. நீங்கள் வழக்கமான உடல்நலப் பரிசோதனைகளை மேற்கொள்பவராக இருந்தால், அத்தகைய செலவுகள் OP கேர் கீழ் வழங்கப்படும். அப்போது துரதிர்ஷ்டவசமாக, பல் சிகிச்சைகள், நோயறிதல் சோதனைகள், அவ்வப்போது மருத்துவரின் ஆலோசனை, பரிசோதனைகள் மற்றும் மருந்துகளின் விலை ஆயிரம் முதல் 1 லட்சம் வரை கூட இருக்கலாம். இந்த அவுட் பேஷண்ட் கவரேஜ் என்பது ஆரோக்கியமான நபருக்கும், மருத்துவமனைகள் மற்றும் க்ளினிக்குகளுக்கு அடிக்கடி வருகை தரும் எவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனால் நீங்கள் செய்யும் செலவுகளை உங்கள் பாக்கெட்டில் இருந்து செலுத்த வேண்டிய அவசியமில்லை.

ஸ்டார் அவுட் பேஷண்ட் கேர் இன்ஷூரன்ஸ் பாலிசியை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

 

  • நெட்வொர்க் மருத்துவமனைகளில் பணமில்லா வசதி

 

எங்களின் அதிகரித்து வரும் நெட்வொர்க் மருத்துவமனைகளில் பணமில்லா வசதியை உங்களுக்கு வழங்குகிறோம். திட்டமிட்ட அல்லது திட்டமிடப்படாத மருத்துவச் செலவுகளின் போது உங்களுக்கு அருகிலுள்ள நெட்வொர்க் மருத்துவமனையை நீங்கள் எளிதாக அணுக வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் 13,000+ மருத்துவமனைகளின் நெட்வொர்க்கைக் கொண்டுள்ளது. முழுமையான பட்டியலுக்கு, இங்கே பார்க்க

 

  • ஆன்லைன் தள்ளுபடி

 

starhealth.in தளத்தில் இருந்து நேரடியாக ஆன்லைன் மூலம் நீங்கள் பெறும் பாலிசிகளுக்கு 5% தள்ளுபடியைப் பெறலாம். புதுப்பித்தலின் போது தள்ளுபடி - தொடர்ச்சியாக க்ளைம் செய்யாத இரண்டு வருடங்களுக்கு பிறகு பிரீமியத்தில் 25% தள்ளுபடி பெறலாம்

 

  • சிக்கல் இல்லாத க்ளைம் செயல்முறை

 

இன்ஷூரன்ஸ் செயல்முறைகள் பெரும்பாலும் அதிக நாட்கள் எடுத்துக் கொள்ளும், மேலும் எண்ணற்ற ஆவணங்களை கொண்டதாக இருக்கும். இருப்பினும், ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸின் டிஜிட்டல் ரீதியிலான முறை, மிக விரைவாக மற்றும் வசதியான ஆப்ஷன்களை வழங்குகிறது. இது இந்த நோய்த் தோற்று காலத்தில் உங்களுக்கு சிறப்பாக கைக்கொடுக்கும்.

 

  • வரிச் சலுகைகள்

 

60 வயதுக்குட்பட்ட தனிநபர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் வருமான வரி பிடித்தத்தில் இருந்து ரூ.25,000 விலக்கு பெறலாம். அதேசமயம், வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80D இன் படி மூத்த குடிமக்கள்  செலுத்தும் பிரீமியம் தொகையில், ரூ.50,000 வரை விலக்கு பெறலாம். 60 வயதுக்கு மேற்பட்ட இரண்டு குடும்ப உறுப்பினர்கள் ஒரு பாலிசியின் கீழ் காப்பீடு செய்யப்பட்டிருந்தால், விலக்கு தொகை ரூ. 1 லட்சமாக நீட்டிக்கப்படுகிறது. மாறாக, 60 வயதிற்குட்பட்ட குடும்ப உறுப்பினர் ஒருவர் மற்றும் அவரது பெற்றோரும் அதே பாலிசியின் கீழ் காப்பீடு செய்யப்பட்டிருந்தால், அவர்கள் ரூ.75,000 விலக்கு பெறலாம்.

FAQ's