பாலிசி காலம்இந்த பாலிசியை ஒரு வருட காலத்திற்குப் பெறலாம். |
நுழைவு வயது18 முதல் 65 வயது வரை உள்ள எவரும் இந்த பாலிசியைப் பெறலாம். ஃப்ளோட்டர் அடிப்படையில், 12 மாத குழந்தைகள் முதல் 25 வயது வரை உள்ள 2 பிள்ளைகள் வரை காப்பீடு பெறுவார்கள். |
உள்நோயாளராக மருத்துவமனையில் அனுமதித்தல்நோய், காயம் அல்லது விபத்துகள் காரணமாக 24 மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சைக்கான செலவுகள் கவர் செய்யப்படும். |
அறை வாடகைஅறை, தங்குமிடம் மற்றும் நர்சிங் செலவுகள், ஒவ்வொரு நாளுக்கும் நீங்கள் காப்பீடு செய்த தொகையில் 1% வரை கவர் செய்யப்படும். |
அவசர சிகிச்சை பிரிவு கட்டணம்இந்த பாலிசியின் கீழ் அவசர சிகிச்சை பிரிவுக்கான கட்டணம் செலுத்தப்படும், |
டே கேர் நடைமுறைகள்தொழில்நுட்ப முன்னேற்றங்கள் காரணமாக 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரம் மருத்துவமனையில் பெறும் சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சை நடைமுறைகள் கவர் செய்யப்படும். |
நவீன சிகிச்சைபாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகள் வரை நவீன சிகிச்சை செலவுகள் கவர் செய்யப்படும். |
கோ - பேமண்ட்காப்பீட்டு திட்டத்தில் இணையும் போதோ, காப்பீட்டை பெறும் போது மற்றும் புதுப்பிக்கும் போதோ பயனாளருக்கு 61 வயது அல்லது அதற்கு மேல் இருந்தால் மருத்துவ செலவுகளில் 20% தொகையை பயனாளரே தான் செலுத்த வேண்டும்.
|
கண்புரை சிகிச்சைகண்புரை சிகிச்சைகளில் ஒரு கண்ணுக்கு ரூ.10,000/- வரை கவராகும். மேலும் ஒரு பாலிசி காலத்திற்கு ரூ.15,000/- வரை கவர் செய்யப்படும் |
தவணை விருப்பங்கள்பாலிசிதாரர்கள் தங்கள் பிரீமியங்களை காலாண்டு அல்லது அரையாண்டு அடிப்படையில் செலுத்தலாம். அதேபோல், ஆண்டுதோறும் செலுத்தலாம். |
வாழ்நாள் முழுவதும் புதுப்பித்தல்இந்த பாலிசி வாழ்நாள் முழுவதும் புதுப்பித்தல் ஆப்ஷனை வழங்குகிறது. |
ஒரு மருத்துவ காப்பீட்டு வல்லுனராக, எங்கள் பயனாளர்களுக்கு விரைவான க்ளைம் செட்டில்மெண்ட்ஸ்களை அளிக்கிறோம். எங்களுடன் பல மருத்துவமனைகள் இணைந்து வருவதால் உங்களுக்கான மருத்துவ தேவைகளை மிகவும் எளிதாக நீங்கள் பெறுவதை உறுதி செய்கிறோம்.
உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தவும், பணத்தை மிச்சப்படுத்தவும், ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுப்பதன் கடினமான முறைகளை எளிதாக்கவும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
உங்களின் எதிர்காலத்தை எங்களுடன் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள்