நுழைவு வயது5 மாதங்கள் முதல் 65 வயதுள்ள எவருக்கும் இந்த பாலிசி பொருந்தும். |
உள்-நோயாளராக அனுமதித்தல்நோய், காயம் அல்லது விபத்துகள் காரணமாக 24 மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவமனையில் பெறும் சிகிச்சைக்கான செலவுகள் ஈடுசெய்யப்படும். |
மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்புஉள்நோயாளராக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் செலவுகள் மட்டுமின்றி, அனுமதிக்கப்படும் தேதிக்கு 30 நாட்களுக்கு முன்பு வரை ஏற்படும் மருத்துவச் செலவுகளும் ஈடுசெய்யப்படும். |
டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின்புடிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நாளிலிருந்து 60 நாட்கள் வரையிலான மருத்துவச் செலவுகள் பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளின்படி கவர் செய்யப்படும். |
அறை வாடகைஉள்நோயாளராக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது ஏற்படும் அறை, தங்குமிடம் மற்றும் மருத்துவச் செலவுகள் போன்றவை அடிப்படைக் காப்பீட்டுத் தொகையில் 2% வரை காப்பீடு செய்யப்படும். அதாவது ஒரு நாளைக்கு ரூ.5000/-.வரை கவராகும். |
சாலை வழி ஆம்புலன்ஸ்ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கான ஆம்புலன்ஸ் கட்டணம் ரூ.750 ஆகும். மேலும், காப்பீடு செய்த நபரை, தனியார் ஆம்புலன்ஸ் சேவை மூலம் கொண்டு செல்வதற்கான கட்டணம், பாலிசி காலத்தில் ரூ.1,500/- வரை கவர் செய்யப்படுகிறது. |
டே கேர் நடைமுறைகள்தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரம் மருத்துவமனையில் பெறும் சிகிச்சைக்கான கட்டணம் மற்றும் அறுவை சிகிச்சை முறைகளுக்கான கட்டணம் கவராகிறது. |
நவீன சிகிச்சைவாய்வழியாக செய்யப்படும் கேன்சர் சிகிச்சை, இன்ட்ரா வைட்ரியல் ஊசிகள், ரோபோடிக் அறுவை சிகிச்சைகள் போன்ற நவீன சிகிச்சைகளுக்கு ஏற்படும் செலவுகள் பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளுக்கு உட்பட்டவை. |
அலோபதி அல்லாத சிகிச்சை / ஆயுஷ்ஆயுஷ் மருத்துவமனைகளில் ஆயுர்வேதம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி மருந்துகளின் கீழ் சிகிச்சைக்காக ஏற்படும் செலவுகள் காப்பீட்டுத் தொகையில் 25% வரை, பாலிசி காலத்தில் அதிகபட்சமாக ரூ. 25,000/- கவர் செய்யப்படுகிறது.
|
கண்புரை சிகிச்சைகண்புரை சிகிச்சைக்காக ஏற்படும் செலவுகள் பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளுக்கு உட்பட்டவை. |
ஆட்டோமேட்டிக் ரீஸ்டோரேஷன்பாலிசி காலத்தில் கவரேஜ் வரம்பு நிறைவடைந்தால், பாலிசி ஆண்டில் ஒருமுறை 200% அடிப்படை காப்பீட்டுத் தொகை மீட்டமைக்கப்படும், இது ஒரு குறிப்பிட்ட உடல் பிரச்சனை அல்லது நோய்க்கு க்ளைம் செய்த பிறகு மீண்டும் அதே உடல் பிரச்சனை அல்லது நோயாக இல்லாமல் இருக்கும் பட்சத்தில், அதன் சிகிச்சைக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும். |
சைக்கியாட்ரிக் மற்றும் சைக்கோசோமேட்டிக் கவரேஜ்காப்பீடு செய்த நபர் தொடர்ந்து 5 நாட்களுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால், முதல் முறையாக மனநல கோளாறுகளுக்கான சிகிச்சை செலவுகள் கவராகும். |
ஃபேமிலி பேக்கேஜ் ப்ளான்இது 5 மாதங்கள் முதல் 45 வயது வரையிலான நபர்களுக்குக் கிடைக்கும். காப்பீடு செய்த குடும்ப உறுப்பினர்களிடையே காப்பீட்டுத் தொகை சமமாகப் பிரிக்கப்படுகிறது. இந்த தொகையின் அடிப்படையில் உடல்நல பரிசோதனைப் பலன்கள் கணக்கிடப்பட்டு, காப்பீடு செய்த அனைவருக்கும் சமமாகப் பிரிக்கப்படும்.
|
ஒட்டுமொத்த போனஸ்ஒவ்வொரு க்ளைம் இல்லாத ஆண்டிற்கும், அடிப்படை காப்பீட்டுத் தொகையில் 5% முதல் அதிகபட்சம் 25% வரை ஒட்டுமொத்த போனஸாக கணக்கிடப்படும். |
உடல்நலப் பரிசோதனைஅடிப்படை காப்பீட்டுத் தொகை ரூ. 2,00,000/- மற்றும் அதற்கு மேல் இருக்கும் பட்சத்தில், உடல்நல பரிசோதனை செலவுகள், அடிப்படைக் காப்பீட்டுத் தொகையில் 1% வரை அதிகபட்சமாக ரூ. 5000/ வரை கவர் செய்யப்படும். தொடர்ச்சியாக 4 வருடங்கள் க்ளைம் செய்யாத பட்சத்தில், காப்பீடு செய்த நபர் இந்த பலனை பெற தகுதி பெறுவார். |
கோ-பேமண்ட்இந்த பாலிசி படி, 61 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய காப்பீடு செய்தவர்கள், அவர்களின் புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட பாலிசிக்கான ஒவ்வொரு க்ளைம் போதும், 10% தொகையை அவர்களே செலுத்த வேண்டும். |
நுழைவு வயதுகோல்டு பிளான் கீழ், 16 நாட்கள் முதல் 65 வயது வரை உள்ள எந்தவொரு நபரும் இந்த பாலிசியைப் பெறலாம். |
உள்-நோயாளராக அனுமதித்தல்நோய், காயம் அல்லது விபத்துகள் காரணமாக 24 மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவமனையில் பெறும் சிகிச்சைக்கான செலவுகள் கவராகும். |
மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்புஉள்நோயாளியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் செலவுகள் மட்டுமின்றி, அனுமதிக்கப்படும் தேதிக்கு 30 நாட்களுக்கு முன்பு வரை ஏற்படும் மருத்துவச் செலவுகளும் ஈடுசெய்யப்படும். |
டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின்புமருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நாளிலிருந்து 60 நாட்கள் வரையிலான மருத்துவச் செலவுகளுக்கு காப்பீடு செய்யப்படுகிறது. |
அறை வாடகைஉள்நோயாளியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது ஏற்படும் அறை, தங்கும் மற்றும் மருத்துவச் செலவுகள் பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளுக்கு உட்பட்டவை. |
சாலை வழி ஆம்புலன்ஸ்காப்பீடு செய்த நபரை, தனியார் ஆம்புலன்ஸ் சேவை மூலம் ஒரு முறை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கான கட்டணம் ரூ.2000 ஆகும். |
டே கேர் நடைமுறைகள்தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரம் மருத்துவமனையில் பெறும் சிகிச்சைக்கான கட்டணம் மற்றும் அறுவை சிகிச்சை முறைகளுக்கான கட்டணம் கவராகிறது. |
நவீன சிகிச்சைவாய்வழியாக செய்யப்படும் கேன்சர் சிகிச்சை, இன்ட்ரா வைட்ரியல் ஊசிகள், ரோபோடிக் அறுவை சிகிச்சைகள் போன்ற நவீன சிகிச்சைகளுக்கு ஏற்படும் செலவுகள் பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளுக்கு உட்பட்டவை. |
கண்புரை சிகிச்சைகண்புரை சிகிச்சைக்காக ஏற்படும் செலவுகள் பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளுக்கு உட்பட்டவை. |
சைக்கியாட்ரிக் மற்றும் சைக்கோசோமேட்டிக் கவரேஜ்காப்பீடு செய்த நபர் தொடர்ந்து 5 நாட்களுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால், முதல் முறையாக மனநல கோளாறுகளுக்கான சிகிச்சை செலவுகள் கவராகும். |
உடல்நலப் பரிசோதனைஅடிப்படை காப்பீட்டுத் தொகை ரூ. 2,00,000/- மற்றும் அதற்கு மேல் இருக்கும் பட்சத்தில், உடல்நல பரிசோதனை செலவுகள், அடிப்படைக் காப்பீட்டுத் தொகையில் 1% வரை அதிகபட்சமாக ரூ. 5000/ வரை கவர் செய்யப்படும். |
ஒட்டுமொத்த போனஸ்ஒவ்வொரு க்ளைம் இல்லாத ஆண்டிற்கும், காப்பீடு செய்த நபர், இரண்டாம் ஆண்டில் அடிப்படை காப்பீட்டுத் தொகையில் 25% ஒட்டுமொத்த போனஸுக்குத் தகுதி பெறுவார், மேலும் அடுத்தடுத்த ஆண்டுகளில், அடிப்படைக் காப்பீட்டுத் தொகையில் கூடுதலாக 20% போனஸ் கிடைக்கும். ஒட்டுமொத்தமாக அதிகபட்சம் 100% வரை இது கிடைக்கும். |
ஆட்டோமேட்டிக் ரீஸ்டோரேஷன்பாலிசி காலத்தில் கவரேஜ் வரம்பு தீர்ந்தால், பாலிசி ஆண்டில் 200% அடிப்படை காப்பீட்டுத் தொகை மீட்டமைக்கப்படும். இது ஏற்கனவே க்ளைம் செய்யப்பட்ட உடல்நல பிரச்சனைகளுக்கோ, அல்லது நோய்களுக்கோ அன்றி, மற்ற நோய்கள் அல்லது பிரச்சனைகளுக்கு பயன்படுத்தலாம். |
சூப்பர் ரீஸ்டோரேஷன்பாலிசி காலத்தில் கவரேஜ் வரம்பு தீர்ந்தால், கோல்டு பிளான் கீழ், மீதமுள்ள பாலிசி ஆண்டுக்கு ஒரு முறை காப்பீட்டுத் தொகையில் 100% மீட்டெடுக்கப்படும், அது அனைத்து க்ளைம்ஸ்களுக்கும் பயன்படுத்தப்படலாம். |
வீட்டில் அளிக்கப்படும் சிகிச்சைமூன்று நாட்களுக்கு மேல் ஒரு மருத்துவரின் ஆலோசனையின் பேரில் ஆயுஷ் உட்பட வீட்டில் அளிக்கப்படும் சிகிச்சை செலவுகள் கவராகும். |
பகிர்ந்து தங்கியிருத்தல்காப்பீடு செய்த நபர் நெட்வொர்க் மருத்துவமனையில், பகிர்ந்து தங்கும் ஆப்ஷனை தேர்வுசெய்தால், பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி தேர்ந்தெடுக்கப்பட்ட காப்பீட்டுத் தொகைக்கு பண உதவி வழங்கப்படும். |
உறுப்பு தானம் அளிப்பவருக்கான செலவுகள்காப்பீடு செய்த நபர் உறுப்பு பெறுபவராக இருந்தால், உறுப்பு தானம் அளிப்பவரை அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்படும் செலவுகள் ஈடுசெய்யப்படும். |
சாலை போக்குவரத்து விபத்துக்கான கூடுதல் அடிப்படைத் தொகை (RTA)அடிப்படைக் கவரேஜ் தொகை தீர்ந்துவிட்டால், இரு சக்கர வாகனங்களில் ஏற்படும் விபத்துகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் பட்சத்தில் அதில் 50% அதிகரிக்கப்படும். |
புதிதாக பிறந்த குழந்தையின் மருத்துவமனை சிகிச்சை செலவுகள்தொடர்ச்சியாக 12 மாதங்களுக்கு எந்தவித தடையுமின்றி ஒரு பெண்/தாய் பாலிசி செலுத்தி வரும் பட்சத்தில், அவருக்கு புதிதாக பிறக்கும் குழந்தைக்கு, பிறந்த தேதியில் இருந்து, 16வது நாளில் இருந்து பாலிசி கவராகும். பாலிசி காலம் காலாவதி ஆகும் வரை கவரேஜ் கிடைக்கும். அந்த தாயின் அடிப்படை கவரேஜ் தொகையில், 10% அல்லது ரூ.50,000 தொகை என்று பிரிக்கப்பட்டு, இவ்விரண்டில் எது குறைவான தொகையோ அது அந்த குழந்தையின் சிகிச்சைக்கு கவராகும். |
அலோபதி அல்லாத சிகிச்சை / ஆயுஷ்ஆயுஷ் மருத்துவமனைகளில் ஆயுர்வேதம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி மருந்துகளின் சிகிச்சைக்காக ஏற்படும் செலவுகள் கவரேஜ் தொகையில் 25% வரை அதிகபட்சமாக ரூ.25,000 வரை பாலிசி காலத்தில் கவராகும். |
பேஷண்ட் கேர்மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன உடனே, காப்பீடு செய்த நபரின் இல்லத்தில் மருத்துவரின் பரிந்துரையின் பேரில், மருத்துவ சிகிச்சை அளிக்கும் உதவியாளருக்கு ஏற்படும் செலவுகள் கவர் செய்யப்படும். இத்தகைய செலவுகள் ஒரு நாள் முழுமைக்கும் என 5 நாட்கள் வரை ரூ. 400/- வரை கவராகும். மேலும், ஒரு பாலிசி காலத்தில் 14 நாட்கள் வரை கவராகும். |
ஹாஸ்பிடல் கேஷ் பலன்கள்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒவ்வொரு நாளுக்கும் ரூ.1000 தொகை வழங்கப்படும். இது ஒவ்வொரு முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது அதிகபட்சம் 7 நாட்களுக்கும், பாலிசி காலத்தில் 14 நாட்களுக்கும் வழங்கப்படுகிறது. |
கோ-பேமண்ட்இந்த பாலிசி படி, 61 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள், அவர்களின் புதிய பாலிசி மற்றும் புதுப்பிக்கப்பட்ட பாலிசிக்கான ஒவ்வொரு க்ளைம் போதும், 10% தொகையை அவர்களே செலுத்த வேண்டும். |
குடும்பத்திற்கான தள்ளுபடிஇந்த பாலிசியின் கீழ் 2 அல்லது அதற்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் இருந்தால் பிரீமியத்தில் 5% தள்ளுபடி கிடைக்கும். |
முக்கிய உறுப்பை தானம் அளிப்பவருக்கான தள்ளுபடிகாப்பீடு செய்யப்பட்ட நபர் அவர்/அவள் ஒரு முக்கியமான உறுப்பை தானம் செய்ததற்கான ஆதாரத்தை சமர்ப்பித்தால், பாலிசி புதுப்பித்தலின் போது பிரீமியத்தில் 25% தள்ளுபடி கிடைக்கும். இந்த தள்ளுபடியானது அடுத்தடுத்த புதுப்பித்தல்களுக்கும் கூட கிடைக்கும். |
ஒரு மருத்துவ காப்பீட்டு வல்லுனராக, எங்கள் பயனாளர்களுக்கு விரைவான க்ளைம் செட்டில்மெண்ட்ஸ்களை அளிக்கிறோம். எங்களுடன் பல மருத்துவமனைகள் இணைந்து வருவதால் உங்களுக்கான மருத்துவ தேவைகளை மிகவும் எளிதாக நீங்கள் பெறுவதை உறுதி செய்கிறோம்.
உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தவும், பணத்தை மிச்சப்படுத்தவும், ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுப்பதன் கடினமான முறைகளை எளிதாக்கவும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
உங்களின் எதிர்காலத்தை எங்களுடன் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள்