தி ஹெல்த் இன்ஷூரன்ஸ் ஸ்பெஷலிஸ்ட்

ஹெல்த் இன்ஷூரன்ஸ் ஃபார் இன்டிவிஜுவல்

தனிநபர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சிறந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துடன் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்

*I consent to be contacted by Star Health Insurance for health insurance product inquiries, overriding my NCPR/DND registration.

All Health Plans

Section Title

Star Cardiac Care Health Insurance Platinum

ஸ்டார் கார்டியாக் கேர் இன்ஷூரன்ஸ் பாலிசி - பிளாட்டினம்

பிரத்யேக கவரேஜ்: இதய நோய் அல்லது கோளாறு உள்ளவர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பாலிசி

பாலிசிக்கு முந்தைய பரிசோதனை: இந்த பாலிசியைப் பெற, காப்பீட்டுக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை தேவையில்லை

கார்டியாக் சாதனங்கள்: இதய சாதனங்களுக்கான காப்பீடு தொகையில் 50% வரை பெறுங்கள்

View Plan

Health Insurance for Diabetes

டயபிடீஸ் சேஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி

நீரிழிவு நோய்க்கான கவரேஜ்: டைப்-1 மற்றும் டைப்-2 நீரிழிவு நோயாளர்களுக்கான கவரேஜாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது

குடும்பக் காப்பீடு: இந்த பாலிசியை ஃப்ளோட்டர் அடிப்படையிலும் (தனிநபர் மற்றும் மனைவி) அவர்களில் யாருக்கேனும் நீரிழிவு நோய் இருந்தால் பெறலாம்

தாமாக மீட்டமைத்தல்: தனிநபர் திட்டத்தில் ஒரு பாலிசி வருடத்திற்கு ஒருமுறை காப்பீட்டுத் தொகையில் 100% ரீஸ்டோர் செய்யப்படும்

View Plan

Star Cardiac Care Health Insurance

ஸ்டார் கார்டியாக் கேர் இன்ஷூரன்ஸ் பாலிசி

கார்டியாக் கவரேஜ்: 10 முதல் 65 வயதுக்குட்பட்ட இதய நோய் பாதிப்புள்ள நபர்களை கவர் செய்கிறது.  உள்ளடக்கியது

கார்டியாக் அல்லாத கவரேஜ்: இதயம் சாராத நோய்கள் மற்றும் விபத்துக்களையும் கவர் செய்கிறது

காப்பீட்டுக்கு முந்தைய பரிசோதனை: இந்த பாலிசியைப் பெற, காப்பீட்டுக்கு முந்தைய பரிசோதனை தேவையில்லை

View Plan

Special Care Gold

ஸ்பெஷல் கேர் கோல்டு, ஸ்டார் ஹெல்த் அன்ட் அலைடு இன்ஷூரன்ஸ் கம்பெனி லிமிட்டட்

தனித்துவமான பாலிசி: மாற்றுத்திறனாளி நபர்கள் அல்லது/மற்றும் எச்.ஐ.வி/எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பாதுகாப்பு வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது
ஆயுஷ் காப்பீடு: ஆயுஷ் சிகிச்சைக்கான மருத்துவமனை செலவுகள் காப்பீட்டுத் தொகையில் 50% வரை கவராகும்
காப்பீட்டுக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை: இந்த பாலிசியைப் பெற பாலிசிக்கு முந்தைய மருத்துவப் பரிசோதனை தேவையில்லை

View Plan

Star Cancer Care Health Insurance

ஸ்டார் கேன்சர் கேர் பிளாட்டினம் இன்ஷூரன்ஸ் பாலிசி

பிரத்யேக கவரேஜ்: புற்றுநோய் கண்டறியப்பட்டவர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பாலிசி

பரந்த கவரேஜ்: புற்றுநோய்க்கு கவர் செய்வது மட்டுமின்றி, புற்றுநோயுடன் தொடர்பில்லாத வழக்கமான மருத்துவமனை செலவுகளையும் கவர் செய்கிறது.

மொத்தத் தொகை கவரேஜ்: ஒரு விருப்பத் தொகையாக, கேன்சர், மெட்டாஸ்டாஸிஸ் மற்றும்/அல்லது முதல் புற்றுநோய்க்கு தொடர்பில்லாத இரண்டாவது புற்றுநோய் புதிதாக ஏற்படும் பட்சத்தில் மொத்த தொகை வழங்கப்படுகிறது.

View Plan

Individual Health Insurance

மெடி க்ளாசிக் இன்ஷூரன்ஸ் பாலிசி (தனிநபர்)

ரீஸ்டோரேஷன் நன்மை: ஒரு பாலிசி காலத்தில் ஒரேயொரு முறை அடிப்படை காப்பீட்டுத் தொகையில் 200% ரீஸ்டோர் செய்யப்படும்

சாலை போக்குவரத்து விபத்து: அடிப்படை கவரேஜ் தொகை முடிவுற்ற நிலையில், சாலை போக்குவரத்து விபத்து ஏற்படும் பட்சத்தில், கவரேஜ் மீண்டும் கிடைக்கும்

நீண்ட கால தள்ளுபடி: பாலிசியை 2 அல்லது 3 வருட காலத்திற்கு தேர்வு செய்தால், பிரீமியத்தில் தள்ளுபடி கிடைக்கும்

View Plan

Star Health Assure Insurance Policy

ஸ்டார் ஹெல்த் அஷ்யூர் இன்ஷூரன்ஸ் பாலிசி

குடும்பத்தின் அளவு: தனி நபர், மனைவி, பெற்றோர் மற்றும் மனைவியின் பெற்றோர் உட்பட 6 பெரியவர்கள் மற்றும் 3 குழந்தைகளுக்கு கவர் ஆகிறது.

ஆட்டோமேட்டிக் ரீஸ்டோரேஷன்: ஒவ்வொரு முறையும் 100% வரை காப்பீட்டுத் தொகை எண்ணற்ற முறை ரீஸ்டோர் செய்யப்படும்

நீண்ட கால தள்ளுபடி: பாலிசியை 2 அல்லது 3 வருட காலத்திற்கு தேர்வு செய்தால், பிரீமியத்தில் தள்ளுபடி கிடைக்கும்

View Plan

Star Health Gain Insurance Policy

ஸ்டார் ஹெல்த் கெய்ன் இன்ஷூரன்ஸ் பாலிசி

விரிவான கவரேஜ்: உள்நோயாளராக மருத்துவமனையில் சேர்க்கப்படுதல் மற்றும் வெளிநோயாளருக்கான மருத்துவ செலவுகள் ஆகிய இரண்டிற்கும் விரிவான கவரேஜ் வழங்குகிறது

நவீன சிகிச்சை: உள்நோயாளராக மருத்துவமனையில் சேர்ப்பது அல்லது டே கேர் நடைமுறைகளுக்கான செலவுகள் கவராகிறது

வெளிநோயாளருக்கான நன்மை: எந்தவொரு நெட்வொர்க் மருத்துவமனையிலும் ஏற்படும் வெளிநோயாளருக்கான செலவுகள் கவராகும்

View Plan

Star Hospital Cash Insurance Policy

ஸ்டார் ஹாஸ்பிடல் கேஷ் இன்ஷூரன்ஸ் பாலிசி

மொத்த-தொகை மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கையில் கிடைக்கும் நன்மை: மருத்துவமனையில் சேர்க்கப்படும் போது ஏற்படும் தற்செயலான செலவுகளுக்கு தினசரி பணப் பலன்களை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது

ஐசியூ ஹாஸ்பிடல் கேஷ்: மருத்துவமனையில் ICU-வில் அனுமதிக்கப்பட்டால், ஹாஸ்பிடல் கேஷ் தொகையில் (ஒரு நாளைக்கு) 200% வரை பெறுங்கள்

விபத்துக்கான ஹாஸ்பிடல் கேஷ்: விபத்து ஏற்பட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் 150% வரை ஹாஸ்பிடல் கேஷ் தொகையைப் பெறுங்கள்

View Plan

Star Micro Rural and Farmers Care

ஸ்டார் மைக்ரோ ரூரல் அண்ட் ஃபார்மர்ஸ் கேர்

கிராமப்புற கவரேஜ்: பிரத்யேகமாக கிராமப்புற மக்களுக்காக  வடிவமைக்கப்பட்டுள்ளது

காப்பீட்டுக்கு முந்தைய சோதனை: இந்த பாலிசியைப் பெற, காப்பீட்டுக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை தேவையில்லை

குறைவான காத்திருப்பு காலம்: PED & குறிப்பிட்ட நோய்கள் 6 மாதங்களுக்குப் பிறகுதான் பாதுகாக்கப்படும்

View Plan

Star Out Patient Care Insurance Policy

ஸ்டார் அவுட் பேஷண்ட் கேர் இன்ஷூரன்ஸ் பாலிசி

அவுட் பேஷண்ட் கவரேஜ்: நெட்வொர்க் மருத்துவமனைகளில் வெளிநோயாளருக்கான கன்சல்டேஷன் செலவுகள் கவர் செய்யப்படுகின்றன

நோயறிதல் & மருந்தகம்: நெட்வொர்க் மருத்துவமனைகளில் ஏற்படும் செலவுகள் கவர் செய்யப்படுகின்றன

பல் மற்றும் கண் மருத்துவம்: நெட்வொர்க் மருத்துவமனைகளில் ஏற்படும் செலவுகள் கவர் செய்யப்படுகின்றன

View Plan

Star Women Care Insurance Policy

ஸ்டார் வுமன் கேர் இன்ஷூரன்ஸ் பாலிசி

தனித்துவமான பாலிசி: பெண்களுக்கு பலதரப்பட்ட நன்மைகளை வழங்குவதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட பாலிசி

ஆட்டோமேட்டிக் ரீஸ்டோரேஷன்: பாலிசி காலத்தில் ஒரு முறை 100% காப்பீடு தொகை ரீஸ்டோர் செய்யப்படும்

மகப்பேறு கட்டணங்கள்: நார்மல் & சிசேரியன் மகப்பேறு சிகிச்சைக்கான கட்டணம் கவர் செய்யப்படும் (பிறப்புக்கு முந்தைய மற்றும் பிறப்புக்கு பிறகான கட்டணம் உட்பட)

View Plan

Young Star Insurance Policy

யங் ஸ்டார் இன்ஷூரன்ஸ் பாலிசி

ஆட்டோமேட்டிக் ரீஸ்டோரேஷன்: பாலிசி காலத்தில் 100% கவரேஜ் தொகை ஒருமுறை ரீஸ்டோர் செய்யப்படும்.

இடைக்கால சேர்க்கை: புதிதாக திருமணம் செய்த மனைவி, சட்டப்பூர்வமாக தத்தெடுக்கப்பட்ட குழந்தை மற்றும் புதிதாக பிறந்த குழந்தை ஆகியோரை பாலிசியின் இடைக்காலத்தில் சேர்க்கலாம்.

லாயல்டி தள்ளுபடி: 36 வயதுக்கு முன் பாலிசியைத் தேர்ந்தெடுத்து, 40 வயதுக்கு மேல் தொடர்ந்து ஒவ்வொரு முறை பாலிசியை புதுப்பிப்பிக்கும் போதும் பயனர்களுக்கு 10% தள்ளுபடி கிடைக்கும்.

View Plan

Senior Citizen Health Insurance

சீனியர் சிட்டிசன் ரெட் கார்பெட் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி

முதியோர்களுக்கான கவரேஜ்: 60 - 75 வயதுக்குட்பட்டவர்களுக்காக வாழ்நாள் முழுவதும் புதுப்பித்தல் வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது

வெளிநோயாளருக்கான கவரேஜ்: நெட்வொர்க் மருத்துவமனைகளில் வெளிநோயாளராக பெறும் மருத்துவ ஆலோசனைகளுக்கான கட்டணத்துக்கும் கவரேஜ் பெறுங்கள்

காப்பீட்டுக்கு முந்தைய மருத்துவ சோதனை: இந்த பாலிசியைப் பெற, காப்பீட்டுக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை தேவையில்லை

View Plan

Star Comprehensive Insurance Policy

ஸ்டார் காம்ப்ரிஹென்சிவ் இன்ஷூரன்ஸ் பாலிசி

ஆட்டோமேட்டிக் ரீஸ்டோரேஷன்: பாலிசி ஆண்டில் ஒருமுறை அடிப்படை காப்பீட்டுத் தொகையில் 100% திரும்பப் பெறலாம்

பை-பேக் PED: முன்பே இருக்கும் நோய்களுக்கான காத்திருப்பு காலத்தை குறைக்க உதவும் ஆப்ஷனல் கவரேஜ் இது

இடைக்கால சேர்க்கை: புதிதாக திருமணம் செய்த மனைவி மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைக்கு கூடுதல் பிரீமியம் செலுத்தும் பட்சத்தில் அவர்களுக்கும் கவரேஜ் கிடைக்கும்

View Plan

Arogya Sanjeevani Policy

ஆரோக்ய சஞ்சீவனி பாலிசி, ஸ்டார் ஹெல்த் அன்ட் அலைட் இன்ஷூரன்ஸ் கோ லிமிடெட்.

கிராமப்புறங்களுக்கான தள்ளுபடி: கிராமப்புற மக்களுக்கு பிரீமியத்தில் 20% தள்ளுபடி
நவீன சிகிச்சைகள்: காப்பீடு செய்யப்பட்ட தொகையில் 50% வரை நவீன சிகிச்சைகளுக்கான காப்பீட்டைப் பெறுங்கள்
ஆயுஷ் கவர்: ஆயுஷ் சிகிச்சைகளில், மருத்துவமனையில் சேர்க்கும் செலவுகளை உள்ளடக்கியது

View Plan

Top-up Health Insurance

சூப்பர் சர்ப்ளஸ் இன்சூரன்ஸ் பாலிசி

குறை நிரப்பு திட்டம்: மலிவு பிரீமியத்தில் மேம்படுத்தப்பட்டஉடல்நல பாதுகாப்பைப் பெறுங்கள்
ரீசார்ஜ் பலன்:  காப்பீட்டுத் தொகை தீர்ந்தால், கூடுதல் செலவு எதுவுமில்லாமல் கூடுதல் இழப்பீட்டைப் பெறுங்கள்
நீண்ட கால தள்ளுபடி: 2 வருட காலத்திற்கு பாலிசி தேர்ந்தெடுக்கப்பட்டால், 5% பிரீமியம் தள்ளுபடி கிடைக்கும்

View Plan

Star Health Premier Insurance Policy

ஸ்டார் ஹெல்த் ப்ரீமியர் இன்ஷூரன்ஸ் பாலிசி

சிறப்பு பாலிசி: அதிகபட்ச வயது வரம்பு ஏதுமின்றி 50 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

பாலிசிக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை: இந்த பாலிசியைப் பெற, காப்பீட்டுக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை தேவையில்லை.

மருத்துவ பரிசோதனைக்கான தள்ளுபடி: பாலிசியின் தொடக்கத்தில் பட்டியலிடப்பட்ட மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டால் ப்ரீமியத்தில் 10% தள்ளுபடி கிடைக்கும்.

View Plan

மருத்துவக் காப்பீட்டின் முக்கியத்துவம்

 

தற்போதைய கோவிட்-19 பெருந்தொற்றானது உலகம் முழுவதையும் விழிப்புடன் இருக்கச் செய்துள்ளது மற்றும் மருத்துவ அவசரநிலைகள் கணிக்க முடியாதவையாக உள்ளதால், அவை கையாள கடினமான வகையில் நிதிச்சுமையை அதிகரிக்கலாம். அதிகரித்துவரும் மருத்துவச் செலவுகளைக் கருதி மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் முக்கியத்துவத்தை மக்கள் புரிந்து கொள்ளத் துவங்கியுள்ளனர். இது தவிர, நல்ல மருத்துவ வசதியைப் பெறுவதும், மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறுவதும் பலருக்கு ஒரு நிதிச்சுமையாக இருக்கும். எனவே, இதுபோன்ற சமயங்களில் நீண்ட கால பாதுகாப்பை கூடுதலாக அளிக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் நன்மைகளை ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டும். உங்கள் அன்புக்குரியவர்களைக் கவனித்துக்கொள்வதற்கான நிதிசார் நம்பிக்கை உங்களுக்கு இருந்தாலும், அதிகரித்துவரும் மருத்துவ செலவினங்களை எதிர்கொண்டு சமாளிக்க ஒரு மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

 

ஒரு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை பெறுவதற்காக உங்களுக்கு பரிந்துரைக்கப்படும்  5  காரணங்கள் பின்வருமாறு:

 

1. வாழ்க்கைமுறை சார்ந்த நோய்களை எதிர்த்து போராடுவதற்கு

 

நீரிழிவு, உடல் பருமன், சுவாசப் பிரச்சனைகள், இதய நோய்கள் போன்ற வாழ்க்கைமுறை சார்ந்த நோய்கள் - குறிப்பாக 45 வயதிற்குட்பட்டவர்களிடையே அதிகரித்து வருகின்றன. ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றாமை, மன அழுத்தம், மாசுபாடு, ஒழுக்கமற்ற வாழ்க்கையை நடத்துதல் போன்றவை அத்தகைய மருத்துவச் சிக்கல்களை ஏற்படுத்தலாம். நீங்கள் என்னதான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைபிடித்தாலும், திடீரென ஏற்படும் அதிகப்படியான மருத்துவமனை செலவை எதிர்கொள்ள வேண்டிய ஒரு துரதிர்ஷ்டவசமான தருணத்தை கடப்பது கஷ்டமாக இருக்கும். எனவே, வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளை உள்ளடக்கிய மெடிகிளைம் பாலிசியில் முதலீடு செய்வது, மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க ஒரு துவக்க நடவடிக்கையாக இருக்கும், இதனால் நீங்கள் மன அழுத்தமின்றி இருக்கலாம்.

 

2. உங்கள் குடும்பத்தினரைப் பாதுகாப்பதற்கு

 

அதிக நன்மை தரும் காப்பீட்டுக் திட்டத்தை நீங்கள் தேர்ந்தெடுக்கும்போது, முழு குடும்பத்தையும் பாதுகாக்கக்கூடிய மற்றும் ​​உங்கள் தேவைகளுக்கு ஏற்ற ஒரு காப்பீட்டுத் திட்டத்தையே நீங்கள் எப்போதும் தேர்வு செய்ய வேண்டும்; (அதாவது) உங்களிடம் பொருத்தமான மருத்துவக் காப்பீடு இருந்தால், சிறந்த மற்றும் மேம்பட்ட மருத்துவ சிகிச்சையைப் பெறுவதைப்பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. அத்தகைய சூழ்நிலையில், டாப்-அப் ப்ளானுடன் கூடிய ஒரு பேசிக் ப்ளான் சிறந்த தேர்வாக இருக்கும். மேலும், நீங்கள் அதிகபட்ச பலனைப் பெறும் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஒரு மருத்துவக் காப்பீட்டு நிறுவனம் எப்போதும் தொழில்முறை ஆலோசனைகளை உங்களுக்கு வழங்கும்

 

3. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய மற்றும் பிந்தைய நிலைமைகளை சமாளிப்பதற்கு

 

உங்கள் மருத்துவக் கட்டணம் என்பது சிகிச்சைக்கு ஆகும் செலவு மட்டுமில்லாமல், மருத்துவமனையில் சேர்வதற்கு முந்தைய மற்றும் பிந்தைய சூழல்களில் ஏற்படும் செலவுகளையும் உள்ளடக்கியதாகும். மருத்துவரின் ஆலோசனை, நோயறியும் பரிசோதனைகள், ஆம்புலன்ஸ் கட்டணம், ஆப்ரேஷன் தியேட்டருக்கான செலவுகள், மருந்துகள், அறை வாடகை போன்றவற்றுக்கான செலவுகள் ஒருசேர அதிகரித்து வருகின்றன. உகந்த மருத்துவக் காப்பீட்டை நீங்கள் பெறத் தவறினால், இவை அனைத்தும் உங்களுக்கு கூடுதல் நிதிச்சுமையாகி அழுத்தத்தை ஏற்படுத்தலாம். ஒவ்வொரு ஆண்டும் கட்டுப்படியாகக் கூடிய விலையில் மருத்துவக் காப்பீட்டு பிரீமியத்தைச் செலுத்துவதன் மூலம், தரமான சிகிச்சையைத் தேர்ந்தெடுக்கும்போது மருத்துவக் கட்டண அதிகரிப்பின் சுமையை தைரியமாக எதிர்கொண்டு வெல்லலாம்.

 

4. உங்கள் சேமிப்புத் தொகையை பாதுகாப்பதற்கு

 

எதிர்பாராத உடல்நல பாதிப்பு ஏற்படுவது மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும், அதேவேளையில், நீங்கள் சிந்திக்க வேண்டிய மற்றொரு விஷயம் தான் –செலவுகள். மருத்துவக் காப்பீட்டுக் திட்டத்தை வாங்குவதன் மூலம், உங்கள் நிதியிழப்பு ஆபத்தை காப்பீட்டு நிறுவனத்திடம்  விட்டுவிடுகிறீர்கள்; அப்போது காப்பீட்டு நிறுவனம் ஒரு குழுவைக் கொண்டு உங்களது மருத்துவச் செலவுகளுக்கு உதவும். கூடுதலாக, மருத்துவக் காப்பீடானது நீங்கள் வரிச் சலுகைகளைப் பெறுவதற்கும் அனுமதிக்கிறது; இதனால் உங்கள் சேமிப்பு மேலும் அதிகரிக்கிறது. சுருக்கமாக, உங்கள் சேமிப்பைத் தொகையை துளியும் குறைக்காமல் மருத்துவச் செலவுகளை நீங்கள் பார்த்துக்கொள்ளலாம்.

 

5. பாதுகாப்பாக இருக்க முன்கூட்டியே காப்பீடு செய்யவும்

 

வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே மருத்துவக் காப்பீடை வைத்திருப்பதில் பல நன்மைகள் உள்ளன. வாழ்க்கையின் ஆரம்பத்தில் நீங்கள் ஒரு ஹெல்த் இன்ஷூரன்ஸை வாங்கும் போது, ​​குறைந்த கட்டணத்தில் காப்பீட்டுத் திட்டங்களைப் பெறலாம்; மற்றும் கண்டினியூட்டி பலன்களையும் பெறலாம். மேலும், ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனம் உங்களுக்கு விரிவான கவரேஜ் ஆப்ஷன்களையும் வழங்கும்.

 

சரியான ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

 

உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்குமான சரியான காப்பீட்டுத் தொகையைத் தேர்வுசெய்ய உதவும் சில குறிப்புகள் இதோ:

  • எந்தவொரு அவசியமான தேவைகளுக்கான தீர்வாக ஒரு அவசரகால காப்பீட்டைத் தேடுங்கள், அதில் கூடுதல் பலன்கள் இருக்கவேண்டும் / பாலிசி பற்றிய தெளிவான கண்ணோட்டத்தைப் பெறஇன்ஷூரன்ஸ் ஆலோசகரிடம் பேசுங்கள்.
  • உங்களுக்கு கட்டுப்படியாகும் விலையில் வைத்திருங்கள்
  • எப்போதும் அதிகமான காப்பீட்டுத் தொகையையே தேர்வு செய்யவும்
  • உங்களுக்கு அருகிலுள்ள பல்வேறு நெட்வொர்க் மருத்துவமனைகளைத் அறியவும்

 

தனிநபருக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்

 

தனிநபர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் யாவும் ஒரு பிரத்தியேக காப்பீட்டுத் தொகையின் அடிப்படையில் அந்த நபருக்கு கவரேஜை வழங்குகிறது. இந்த குறிப்பிட்ட காப்பீட்டுத் தொகையை, பாலிசிதாரர் தனது மருத்துவச் செலவுகளுக்காக மட்டுமே பயன்படுத்த முடியும்.

 

தனிநபர் அடிப்படையில் பரிந்துரைக்கப்படும் திட்டங்கள்

 

ஸ்டார் காம்ப்ரிஹென்சிவ் இன்ஷூரன்ஸ் பாலிசி

 

இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 18 முதல் 65 வயதிற்குட்பட்ட எந்தவொரு நபரும், காப்பீட்டின் பாதுகாப்பிற்குள் வரும் போது வாழ்நாள் முழுவதற்கும் புதுப்பிக்கும் பலனைப் பெறலாம். இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டமானது, தனிநபர்களுக்கான பல்வேறு காப்பீட்டுத் தொகைகளை தேர்வு செய்யும் அடிப்படையில் கவரேஜை வழங்குகிறது. தனிநபர்கள் குறைந்தபட்சம் 5 லட்சம் முதல் அதிகபட்சம் 1 கோடி வரை குறிப்பிட்ட காப்பீட்டுத் தொகையைத் தேர்வு செய்யலாம்.

 

காம்ப்ரிஹென்சிவ் பாலிசியை வைத்திருப்பது உங்கள் நிதியை பாதுகாப்பாக வைத்திருப்பதுடன் - உள்நோயாளராக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல், அவசர சிகிச்சைக்கான போக்குவரத்துக் கட்டணம், தினசரி பராமரிப்பு சிகிச்சைகள், வருடாந்திர மருத்துவப் பரிசோதனைகள் போன்றவை உட்பட உங்களின் அனைத்து விதமான மருத்துவச் செலவுகளுக்கும் காப்பீடு கிடைப்பதை உறுதிசெய்கிறது.

 

ஸ்டார் காம்ப்ரிஹென்சிவ் இன்ஷூரன்ஸ் பாலிசியின் கீழ் எவையெல்லாம் காப்பீடு செய்யப்படுகின்றன?

 

ஸ்டார் காம்ப்ரிஹென்சிவ் இன்ஷூரன்ஸ் பாலிசியின் கீழ் வழங்கப்படும் கவரேஜ் விவரங்கள் பின்வருமாறு:

 

  • உள்-நோயாளராக மருத்துவமனையில் சேர்வதற்கான செலவுகள்
  • மருத்துவமனையில் சேர்வதற்கு முந்தைய மற்றும் பிந்தைய செலவுகள்
  • தினசரி பராமரிப்பு செயல்முறைகள் / சிகிச்சைகள்
  • வீட்டிலேயே மருத்துவ சிகிச்சை பெறுவது
  • அவசர சிகிச்சைக்காக சாலை மற்றும் வான்வழி ஆம்புலன்ஸ் கட்டணங்கள்
  • ஆயுஷ் சிகிச்சைகள்
  • இரண்டாம் மருத்துவரிடம் கருத்தினை பெறுவது
  • பிரசவம் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைக்கான பாதுகாப்பு
  • உறுப்பு தானம் செய்பவருக்கான செலவுகள்
  • எடை குறைப்பிற்கான அறுவைசிகிச்சை
  • தனிநபர் விபத்துக் காப்பீடு – இறப்பு ஏற்படும் பட்சத்தில் மற்றும் நிரந்தரமாக முழு உடல் செயலிழந்து போகும் பட்சத்தில் மொத்த தொகை பலனாக கிடைக்கும்.
  • ஹாஸ்பிடல் கேஷ் பலன்கள்
  • நவீன சிகிச்சைகள்
  • வருடாந்திர மருத்துவப் பரிசோதனைகள்
  • வெல்னஸ் சேவைகள்
  • காத்திருப்பு காலம் முடியும் வரை ஏற்கனவே இருக்கும் மருத்துவ பாதிப்புகள்
  • நோயறிவதற்கான விவரங்களை பெறவேண்டும் என்கிற பிரதான நோக்கத்திற்காக, எந்த மருத்துவமனையிலும் சேர்க்கப்படும் போது
  • இந்தியாவிற்கு வெளியே சிகிச்சை பெறும்போது
  • விருத்தசேதனம் (சர்க்கம்சீஷன்), பாலினம் மாறும் அறுவை சிகிச்சை, அழகியல் அறுவை சிகிச்சை மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை
  • 7.5 டையோப்டர்களுக்கு (diopters) குறைவான ரிஃப்ராக்டிவ் பார்வை குறைபாட்டை சரிசெய்தல், செவித்திறன் குறைபாட்டினை திருத்தம் செய்தல், சீராக்கும்  மற்றும் அழகியல் சார்ந்த பல் அறுவை சிகிச்சை
  • அபாயகரமான அல்லது சாகச விளையாட்டுகளில் ஈடுபடுவதால் உண்டாகும் காயங்கள்
  • நிரூபிக்கப்படாத சிகிச்சைகள்
  • பாலியல் நோய்கள் மற்றும் STD நோய்கள் (HIV தவிர)
  • அணு ஆயுதம் மற்றும் போர் தொடர்பான ஆபத்துகள்
  • வேண்டுமென்றே தன்னைத் தானே காயப்படுத்திக்கொள்ளுதல்
  • விபத்துகள் தவிர அனைத்து சிகிச்சைகளுக்கும் 30 நாள் காத்திருப்பு காலம் பொருந்தும்
  • பாலிசி தொடங்கப்பட்ட நாளிலிருந்து 36 மாத காத்திருப்பு காலத்திற்குப் பிறகு ஏற்கனவே இருக்கும் நோய்கள் பாலிசியின் பாதுகாப்பின் கீழ் வரும்.
  • பாலிசி ஆவணத்தில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட நோய்கள் பாலிசி துவங்கப்பட்ட நாளிலிருந்து 24 மாத காத்திருப்பு காலத்திற்குப் பிறகு காப்பீட்டு பாதுகாப்பின் கீழ் வரும்.

 

 

 

மெடி கிளாசிக் இன்ஷூரன்ஸ் பாலிசி (தனி நபர்)

 

இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டமானது, தனிநபர்கள் தங்கள் மருத்துவச் செலவுகளை கவனிக்க உதவும், பல்வேறு பலன்களை அளிக்கும், கட்டுப்படியாகக் கூடிய அளவில் கிடைக்கும் ஒரு மருத்துவக் காப்பீட்டுத் திட்டமாகும். 16 நாட்கள் முதல் 65 வயது வரையிலான தனிநபர்களுக்கு காப்பீட்டு பாதுகாப்பை வழங்கும் வகையில் பிரதியேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் - வாழ்நாள் முழுவதும் புதுப்பிக்கும் வசதியை உள்ளடக்கியதாகும். இத்திட்டம் கோல்டு என்கிற மாற்று வகையிலும் கிடைக்கிறது.

 

மெடி கிளாசிக் இன்ஷூரன்ஸ் பாலிசி (தனிநபர்) கோல்டு ப்ளான் என்பது,  ரூ. 3 லட்சம் - ரூ. 25 லட்சம் வரையிலான காப்பீட்டுத் தொகையை வழங்குகிறது. இத்திட்டம் பிரத்யேகமாக உறுப்பு தானம் செய்பவர்களுக்கு முழு காப்பீட்டுத் தொகை வரையிலும், ஆயுஷ் சிகிச்சைகள், வீட்டிலேயே சிகிச்சை பெறுவது, நவீன சிகிச்சைகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கியது.

 

மெடி கிளாசிக் இன்ஷூரன்ஸ் பாலிசியின் கீழ் (தனிநபர்) எவையெல்லாம் காப்பீடு செய்யப்படுகின்றன?

 

மெடி கிளாசிக் இன்ஷூரன்ஸ் பாலிசி (தனிநபர்) கோல்டு ப்ளானின் கீழ் வழங்கப்படும் கவரேஜ் விவரங்கள் பின்வருமாறு:

 

  • உள்-நோயாளராக மருத்துவமனையில் சேர்வதற்கான செலவுகள்
  • மருத்துவமனையில் சேர்வதற்கு முந்தைய மற்றும் பிந்தைய செலவுகள்
  • அவசரசிகிச்சைக்கான் ஆம்புலன்ஸ் சேவை
  • அலோபதி அல்லாத சிகிச்சைகள்
  • புதிதாகப் பிறந்த குழந்தைக்கான காப்பீடு (பிறந்த 16வது நாளிலிருந்து)
  • வீட்டிலேயே மருத்துவ சிகிச்சை பெறுதல் 
  • நவீன சிகிச்சைகள்
  • மனநல பிரச்சனைகள் மற்றும் மனநல பிரச்சனைகளால் ஏற்படும் பாதிப்புகள்
  • வருடாந்திர மருத்துவப் பரிசோதனைகள்
  • தினசரி சிகிச்சைகள்
  • பகிர்ந்து தங்குமிடத்திற்கான செலவுகள்
  • சாலை போக்குவரத்தில் ஏற்படும் விபத்து (RTA)
  • பேஸிக் காப்பீட்டுத் தொகையின் சூப்பர் ரீஸ்டோரேஷன்
  • ஆட்டோமேட்டிக்  ரீஸ்டோரேஷன்
  • உறுப்பு தானம் செய்பவருக்கான செலவுகள்
  • ஓய்வு சிகிச்சை, மறுவாழ்வு மற்றும் ஓய்வில் கவனிப்பது
  • பாலினம் மாற்றும் சிகிச்சைகள்
  • விபத்தைத் தொடர்ந்து மறுசீரமைப்பு செய்யும் சிகிச்சைகளைத் தவிர, அழகியல் சிகிச்சை / பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை
  • அபாயகரமான / சாகச விளையாட்டுகள் மற்றும் செயல்பாடுகளால் ஏற்படும் காயங்கள்
  • நிரூபிக்கப்படாத சிகிச்சைகள் ஏதேனும்
  • 7.5 டையோப்டரை (dioptre) விட குறைவான ரிஃப்ராக்டிவ் எரர் சிகிச்சை
  • மகப்பேறு, உயிரணுவில்லாத நிலை மற்றும் மலட்டுத்தன்மைக்காக மேற்கொள்ளும் சிகிச்சை செலவுகள்
  • விபத்துகள் தவிர அனைத்து சிகிச்சைகளுக்கும் 30 நாள் காத்திருப்பு காலம் உண்டு.
  • பாலிசி தொடங்கப்பட்ட நாளிலிருந்து 48 மாத காத்திருப்பு காலத்திற்குப் பிறகு, ஏற்கனவே உள்ள நோய்கள் காப்பீட்டின் பாதுகாப்பின் கீழ் வரும்.
  • பாலிசி ஆவணத்தில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட நோய்கள் பாலிசி தொடங்கப்பட்ட நாளிலிருந்து 24 மாத காத்திருப்பு காலத்திற்குப் பிறகு காப்பீட்டு பாதுகாப்பின் கீழ் வரும்.

 

யங் ஸ்டார் இன்ஷூரன்ஸ் பாலிசி

 

மருத்துவக் காப்பீடு என்பது முதியவர்களுக்கு மட்டுமே தேவை என்ற அனுமானம் முன்பு இருந்தது.

 

அதிகரித்து வரும் உடல்நலப் பிரச்சனைகளால், இன்றைய இளைய தலைமுறையினர் கூட மருத்துவக் காப்பீட்டின் அவசியத்தை உணரத் தொடங்கியுள்ளனர். வாழ்க்கையின் எந்தக் கட்டத்திலும் எதிர்பாராத நிகழ்வுகள் ஏற்படக்கூடும் என்பதையும் இன்றைய சூழ்நிலை நமக்கு உணர்த்தியுள்ளது. இளம் வயதிலேயே மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஒன்றை தேர்ந்தெடுப்பதன் மூலம், குறைந்த பிரீமியத்தில் அதிக காப்பீட்டுத் தொகையைப் பெறலாம்.

 

யங் ஸ்டார் இன்ஷூரன்ஸ் பாலிசி என்பது, இளைஞர்கள் அமைதியான ஒரு வாழ்க்கை முறையைக் கொண்டிருப்பதை உறுதிசெய்வது, மற்றும் சிறந்த மருத்துவப் பாதுகாப்பு வசதிகளை எந்தவித இடையூறும் இல்லாமல் உடனடியாக அணுகவும் வேண்டும் என்கிற நோக்கத்துடன் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு காப்பீட்டுத் திட்டமாகும். இக்காப்பீட்டுத் திட்டம் - தாமும், தமது குடும்பத்தினரும் ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிக்க வேண்டும் என விரும்பும் 40 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தனிநபர் திட்டத்தின் கீழ் இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைப் பெறலாம்.

 

யங் ஸ்டார் இன்ஷூரன்ஸ் பாலிசியானது 3 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரையிலான காப்பீட்டுத் தொகையை தேர்வு செய்யும் பரந்த அளவிலான வாய்ப்புகளை வழங்குகிறது. இதன் மூலம், ஊக்கத்தொகையால் வழிநடத்தப்படும்  வெல்னஸ் புரோகிராம்கள், புதுப்பிக்கும் போது தள்ளுபடி வழங்குதல், குறைவான காத்திருப்பு காலங்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய மற்றும் பிந்தைய செலவுகளுக்கான காப்பீடு, ஒட்டுமொத்த போனஸ், ஹாஸ்பிடல் கேஷ் பெனிஃபிட்ஸ், வருடாந்திர மருத்துவப் பரிசோதனைகள், மொத்தக் காப்பீட்டுத் தொகையை தாமாக ரீஸ்டோர் செய்யும் வசதி, போன்ற பல நன்மைகளை வழங்குகின்றது மற்றும் சாலை விபத்துகளுக்கான கூடுதல் பேஸிக் காப்பீட்டுத் தொகையையும் வழங்குகின்றது.

 

யங் ஸ்டார் இன்ஷூரன்ஸ் பாலிசியின் கீழ் எவையெல்லாம் காப்பீடு செய்யப்படுகின்றன?

 

யங் ஸ்டார் இன்ஷூரன்ஸ் பாலிசியின் கீழ் வழங்கப்படும் கவரேஜ் விவரங்கள் பின்வருமாறு:

 

  • உள்-நோயாளராக மருத்துவமனையில் சேர்வதற்கான செலவுகள்
  • மருத்துவமனையில் சேர்வதற்கு முந்தைய மற்றும் பிந்தைய செலவுகள்
  • அவசர சிகிச்சைக்கான  சாலை வழி ஆம்புலன்ஸ் கட்டணங்கள்
  • தினசரிபராமரிப்பு சிகிச்சைகள்
  • பிரசவ செலவுகள் (கோல்டு)
  • மருத்துவமனை கேஷ் பெனிஃபிட் (கோல்டு)
  • நவீன சிகிச்சைகள்
  • சாலை போக்குவரத்தில் ஏற்படும் விபத்து (RTA)
  • காப்பீட்டுத் தொகையை தாமாக ரீஸ்டோர் செய்தல்
  • மனைவி அல்லது புதிதாகப் பிறந்த குழந்தையை காப்பீட்டின் கீழ் இடைக்காலத்தில் சேர்த்தல்
  • வருடாந்திர மருத்துவப் பரிசோதனைகள்
  • இணையவழியில்-மருத்துவ கருத்து பெறுதல்
  • வெல்னஸ் புரோகிராம்கள்
  • பாலினம் மாற்றுதல், மற்றும் உடல் பருமன் தொடர்பான செலவுகள்.
  • விபத்தைத் தொடர்ந்து மறுசீரமைப்பிற்கான சிகிச்சைகள் தவிர, அழகியல் அல்லது பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை தொடர்பான செலவுகள்
  • மலட்டுத்தன்மை அல்லது உயிரணுவில்லாத நிலைக்கான சிகிச்சை செலவுகள்
  • போர், அணு ஆயுத தாக்குதல் அல்லது படையெடுப்பு காரணமாக ஏற்படும் சிகிச்சைக்கான செலவுகள்
  • 7.5 டையோப்டர்களுக்கு (diopters) குறைவான ரிஃப்ராக்டிவ் பார்வை குறைபாட்டை சரிசெய்தல்
  • வேண்டுமென்றே சுயமாக காயம் ஏற்படுத்திக்கொள்தல்
  • படையெடுப்பு, வெளிநாட்டு எதிரிகளின் செயல், அல்லது போர் போன்ற நடவடிக்கைகளால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அல்லது அதனால் ஏற்படும் காயம்/நோய்க்கான சிகிச்சை
  • விபத்துகள் தவிர அனைத்து சிகிச்சைகளுக்கும் 30 நாள் காத்திருப்பு காலம் உண்டு.
  • பாலிசி தொடங்கப்பட்ட நாளிலிருந்து 12 மாத காத்திருப்பு காலத்திற்குப் பிறகு, ஏற்கனவே உள்ள நோய்கள் காப்பீட்டின் பாதுகாப்பின் கீழ் வரும்.
  • பாலிசி ஆவணத்தில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட நோய்கள் பாலிசி தொடங்கப்பட்ட நாளிலிருந்து 12 மாத காத்திருப்பு காலத்திற்குப் பிறகு காப்பீட்டு பாதுகாப்பின் கீழ் வரும்.

 

ஸ்டார் மைக்ரோ ரூரல் மற்றும் ஃபார்மர்ஸ் கேர்

 

அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். இங்கு மருத்துவக் காப்பீடு என்பது விருப்பத்தின் பேரில் பெறப்படுகிறது, ஆனால் அந்தந்த மாநில மற்றும் அரசு மருத்துவமனைகளில் அனைத்து குடிமக்களுக்கும் மருத்துவப் வசதிகள் இலவசமாக கிடைக்கின்றன, ஆனால் அவை ஊழியர்கள் மற்றும் தேவையான மருத்துவ வசதிகள் கிடைப்பதில் சவால்களைக் கொண்டுள்ளன். உலக வங்கியின் அறிக்கையின் படி 2020-ல் இந்தியாவில் கிராமப்புற மக்கள் தொகை 65.07 சதவீதமாக இருந்தது. 

 

ஸ்டார் மைக்ரோ ரூரல் மற்றும் ஃபார்மர்ஸ் கேர்: கிராமப்புற விவசாயிகள் மருத்துவ பராமரிப்பில் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்கிற ஒரே காரணத்திற்காக இத்திட்டம் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் வசிக்கும், 1 வயது முதல் 65 வயது வரை உள்ள தனிநபர் அல்லது விவசாயி குடும்பங்களுக்கு இந்தத் திட்டம் வழங்கப்படுகிறது. தனிநபர் ஒருவருக்கு ரூ. 1 லட்சம் மற்றும் குடும்பத்துடன் ரூ. 2 லட்சம் காப்பீட்டுத் தொகையை வழங்குகிறது. இந்த பாலிசியில் காலாண்டு மற்றும் அரையாண்டு வீதம் எளிதாக தவணை முறையில் பிரீமியம் செலுத்தும் வசதி இதில் உள்ளது. சாலை வழி ஆம்புலன்ஸ், தினசரி பராமரிப்பு சிகிச்சைகள் மற்றும் கீமோதெரபி, டயாலிசிஸ் மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சைகள் போன்ற நவீன சிகிச்சைகளுக்கான மருத்துவச் செலவுகளை இத்திட்டம் ஈடு செய்யும். ஏற்கனவே இருக்கும் நோய்கள் மற்றும் குறிப்பிட்ட உடல்நல பாதிப்புக்களுக்கு பாலிசி தொடங்கிய நாளிலிருந்து ஆறு மாத காத்திருப்பு காலம் மட்டுமே உள்ளது.

 

 

சீனியர் சிட்டிசன் ரெட் கார்பெட் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி

 

வயது தொடர்பான உடல் நல பாதிப்புகளுக்கு ஆளாகும் முதியவர்களுக்கு மருத்துவக் காப்பீடு மிகவும் அவசியமானதாகும். ஒரு நீண்ட கால சிகிச்சை அல்லது விலை உயர்ந்த சிகிச்சைக்கான செலவானது அவர்களின் சேமிப்பை பாதிக்கும்; ஆனால் 60 வயதுக்குப் பிறகு மருத்துவக் காப்பீட்டை வாங்குவது விலை உயர்ந்த செலவாக இருக்கும். ஸ்டார் ஹெல்த் நிறுவனம், முதியவர்களை புரிந்துகொண்டு, மதிப்புடனும் மரியாதையுடனும் அவர்களை வரவேற்கிறது, மேலும் அவர்களின் முழுமையான மருத்துவ அல்லது சிகிச்சைச் செலவுகளின் தேவைகளை சிவப்புக் கம்பள வரவேற்புடன் கௌரவமாக பூர்த்தி செய்கிறது.

 

சீனியர் சிட்டிசன் ரெட் கார்பெட் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி, வாழ்நாள் முழுவதும் புதுப்பிக்கும் வசதியுடன் 60 வயது முதல் 75 வயது வரை உள்ள தனிநபர்கள்/குடும்பங்களுக்காக மட்டும் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. காப்பீட்டுக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய கட்டாயமில்லை. ஏற்கனவே இருக்கும் நோய்க்கான (PED) காத்திருப்பு காலம், பாலிசி தொடங்கப்பட்ட நாளிலிருந்து 12 மாதங்களாக குறைக்கப்பட்டதால், PED-கள் எப்போதும் சாதகமான ஒன்றாகவே இருக்குமென அறிவிக்கிறது. காப்பீட்டுத் தொகையாக 1 / 2 / 3 / 4 / 5 / 7.5 / 10 / 15 / 20 / 25 லட்சங்கள் என தேர்வு செய்ய பல்வேறு வாய்ப்புகளை கொண்டுள்ளது. சந்தையில் உள்ள மற்ற காப்பீட்டுத் திட்டங்களைப் போல வயது அதிகரிக்கும் போது இந்த மருத்துவக் காப்பீட்டில் பிரீமியங்கள் அதிகரிக்காது.

 

 

ஸ்டார் வுமன் கேர் இன்ஷூரன்ஸ் பாலிசி

 

இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டமானது, பெண்களின் தேவைகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் பெண்களுக்கே உரித்தான காரணிகளை ஒன்றாகத் தொகுத்து, பெண்களுக்காகவும், அவர்களது குடும்பங்களுக்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் பெண்களுக்கான ஒரு சிறந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டமாக இது பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

ஸ்டார் வுமன் கேர் இன்ஷூரன்ஸ் பாலிசி என்பது 91 நாட்கள் முதல் 75 வயது வரையிலான தனிநபராக இருக்கும் பெண்கள் அல்லது குடும்பமாக  வாழ்க்கைத்துணை  மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் பெண்களின் நலனை நோக்கமாகக் கொண்ட ஒரு காப்பீட்டுத் திட்டமாகும்; இதன் காப்பீட்டுத் தொகை 5/10/15/20/25/50/100 லட்சமாகும். மகப்பேறு, பிரசவத்திற்கு முந்தைய (கர்ப்ப பராமரிப்பு) சிகிச்சை, கருப்பையில் உள்ள சிசுவிற்கான அறுவை சிகிச்சைகள், கருவில் உள்ள சிசுவினை சரிசெய்தல், பச்சிளம் குழந்தைகள், பிரசவத்திற்கு முந்தைய மற்றும் கருத்தடை நடைமுறைகளுடன் பிந்தைய சிகிச்சைகள் என பெண்களை மையமாகக் கொண்ட சிகிச்சை செலவுகளை இந்த காப்பீடு கவனித்துக்கொள்கிறது.

 

 

ஸ்டார் ஹெல்த் பிரீமியர் இன்ஷூரன்ஸ் பாலிசி

 

சிறந்த மருத்துவக் காப்பீடு என்பது அனைவருக்கும் பாதுகாப்பு உணர்வையும், சிகிச்சைப் பாதுகாப்பையும் தருகிறது. இந்தியாவில், இளையவர்களுக்கு ஏற்படக் கூடிய உடல்நல ஆபத்துக்கள் 50+ வயதிற்கு மேற்பட்டவர்களை அதிகம் பாதிக்கின்றன. விரிவான காப்பீட்டுத் தொகையுடன் 50 வயதுக்கு மேற்பட்ட தனிநபர்கள் அல்லது குடும்பங்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைப் பெறுங்கள். அது மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது நிதி உதவியையும், அந்த சூழ்நிலையை எதிர்கொள்ள மனநிறைவையும், தைரியத்தையும் உங்களுக்குத் தரும்.

 

ஸ்டார் ஹெல்த் பிரீமியர் இன்ஷூரன்ஸ் பாலிசி என்பது வயதில் உயர்மட்ட வரம்பு இல்லாமல் 50 வயதுக்கு மேற்பட்ட தனிநபர் அல்லது  குடும்பங்களுக்கு  காப்பீடு கிடைப்பதற்காக ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிபுணரால் வழங்கப்படும், அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு மருத்துவக் காப்பீட்டுத் திட்டமாகும்.

 

இந்தத் திட்டம் 10 லட்சம் முதல் 1 கோடி வரையிலான பல்வேறு காப்பீட்டுத் தொகைகளை வழங்குகிறது. இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டமானது ஆயுஷ், உடல் பருமனுக்கான அறுவை சிகிச்சைகள், நவீன சிகிச்சைகள், வான்வழி ஆம்புலன்ஸ், வீட்டிலேயே பெறப்படும் சிகிச்சைகள், வெளிநோயாளர்களுக்கான ஆலோசனைகள் மற்றும் பலவற்றிற்கு காப்பீடு வழங்குகிறது.

 

 

சூப்பர் சர்ப்லஸ் இன்ஷூரன்ஸ் பாலிசி

 

பலர் பண இழப்பை சந்தித்திருக்கின்றனர், மற்றும் மருத்துவ சிகிச்சைக்கான பணப் போராட்டத்தில் தங்கள் அன்புக்குரியவர்கள் அல்லது அன்பானவர்களை இழந்துள்ளனர், இது அவர்களை திவால் நிலைக்கும் இட்டுச் சென்றுள்ளது . கார்ப்பரேட் பாலிசியின் கீழ் இருப்பது அவர்களின் மருத்துவ சிகிச்சை செலவுகளுக்கு போதுமானதாக இருக்கும் என்று சிலர் நம்புகிறார்கள். போதுமான காப்பீட்டுடன், செலவு குறைந்த டாப்-அப் ஹெல்த் இன்ஷூரன்ஸ் திட்டம் ஒன்றை வைத்திருப்பது  எப்போதும் பரிந்துரைக்கப்படுகிறது.

 

சூப்பர் சர்ப்லஸ் இன்ஷூரன்ஸ் பாலிசி - (டாப்-அப் கோல்ட் ப்ளான்) என்பது தற்போதுள்ள மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துடன் கூடிய ஒரு கூடுதல் கவர் (காப்பீடு) ஆகும்; மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது ஏற்படும் மாறிவரும் சிகிச்சை செலவுகளை மிகச் சிக்கனமான முறையில் ஈடுகட்ட இந்த டாப்-அப் திட்டம் உதவுகிறது. 

 

சூப்பர் சர்ப்லஸ் இன்ஷூரன்ஸ் பாலிசியானது குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட தொகை வரம்புகளுக்கு மேல், 5 லட்சம் முதல் 1 கோடி வரையிலான இழப்பீட்டுத் தொகையை வழங்குகிறது. பாலிசிதாரர் இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் செல்லுபடியாகும் கிளைம்களுக்கு பாலிசி காலத்தின் போது குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும். வான்வழி / சாலை வழி ஆம்புலன்ஸ், தினசரி பராமரிப்பு நடைமுறைகள், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய மற்றும் பிந்தைய பராமரிப்புகள், மகப்பேறு மற்றும் நவீன சிகிச்சை ஆகியவற்றிற்கான காப்பீட்டை இத்திட்டம் வழங்குகிறது.

 

 

 

 

உதவி மையம்

குழப்பமாக உள்ளதா? பதில் எங்களிடம்

ஹெல்த் இன்ஷூரன்ஸ் தொடர்பான சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளவும்.