உடல்நலமின்மைக்கான ஹாஸ்பிடல் கேஷ்நோயின் காரணமாக காப்பீடு செய்தவர் தேர்வு செய்த அதிகபட்ச நாட்களுக்கு, ஹாஸ்பிடல் கேஷ் தொகை காப்பீட்டாளரால் வழங்கப்படுகிறது. அடிப்படை திட்டத்தின் கீழ், ஒரு நாளுக்கு மட்டும் இதில் விலக்கு பொருந்தும். |
விபத்துக்கான ஹாஸ்பிடல் கேஷ்விபத்துக்கள் காரணமாக, காப்பீடு செய்தவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகபட்ச நாட்களுக்கு, காப்பீடு செய்தவரால் எடுக்கப்பட்ட ஹாஸ்பிடல் கேஷ் தொகையில் 150% வரை வழங்கப்படுகிறது. |
ஐசியூ ஹாஸ்பிடல் கேஷ்நோய் அல்லது காயம் காரணமாக ICU செலவினங்களுக்காக, காப்பீடு செய்யப்பட்ட நபரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹாஸ்பிடல் கேஷ் தொகையில் 200% வரை வழங்கப்படுகிறது. தனிநபர் மற்றும் ஃப்ளோட்டர் பாலிசியைப் பொறுத்தவரை, காப்பீடு செய்தவர் தேர்வு செய்யும் அதிகபட்ச ஹாஸ்பிடல் கேஷ் நாட்களின் எண்ணிக்கையில் மாறுபாடுகள் இருக்கும். |
கன்வல்சென்ஸ் ஹாஸ்பிடல் கேஷ்தொடர்ந்து 5 நாட்களுக்கு மேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், ஒரு நாளுக்கான கூடுதல் ஹாஸ்பிடல் கேஷ் தொகை, கன்வல்சென்ஸ் கேஷ் பலனாக வழங்கப்படும். |
குழந்தை பிறப்புக்கான ஹாஸ்பிடல் கேஷ்இந்த பாலிசி எடுத்ததில் இருந்து 2 ஆண்டுகள் காத்திருப்பு காலம் முடிந்த பிறகு, காப்பீடு செய்த பெண் தனது பிரசவத்திற்காக தினசரி ஹாஸ்பிடல் கேஷ் பலனைப் பெறத் தகுதி பெறுவார். |
உலகளாவிய ஹாஸ்பிடல் கேஷ்இந்தியாவிற்கு வெளியே நோய் அல்லது காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், காப்பீடு செய்யப்பட்ட நபரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகபட்ச நாட்களுக்கு உட்பட்டு தினசரி ஹாஸ்பிடல் கேஷ் தொகையில் 200% வழங்கப்படுகிறது. |
டே கேர் நடைமுறைகள்பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்பிட்ட நாளில் மேற்கொள்ளும் பராமரிப்பு சிகிச்சைக்கான செலவுகள் பாலிசி ஆண்டில் ஐந்து முறை வரை காப்பீடு செய்யப்படும். |
ஒரு மருத்துவ காப்பீட்டு வல்லுனராக, எங்கள் பயனாளர்களுக்கு விரைவான க்ளைம் செட்டில்மெண்ட்ஸ்களை அளிக்கிறோம். எங்களுடன் பல மருத்துவமனைகள் இணைந்து வருவதால் உங்களுக்கான மருத்துவ தேவைகளை மிகவும் எளிதாக நீங்கள் பெறுவதை உறுதி செய்கிறோம்.
உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தவும், பணத்தை மிச்சப்படுத்தவும், ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுப்பதன் கடினமான முறைகளை எளிதாக்கவும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
உங்களின் எதிர்காலத்தை எங்களுடன் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள்
இன்று மருத்துவ செலவுகள் அதிகரித்து வருகின்றன என்பதில் சந்தேகமில்லை. பூச்சிகளாலும், காற்றினாலும் நீரின் மூலமும் பரவும் நோய்த்தொற்றுகள், ஒரு நபரின் முழு மாதாந்திர சேமிப்பையும் எளிதில் கரைத்துவிடும். உங்கள் மருத்துவமனை செலவை ஈடுகட்ட நீங்கள் வழக்கமான மருத்துவ காப்பீட்டைப் பெற்றிருக்கலாம். ஆனால் நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், பல இதர செலவுகளையும் தவிர்க்க முடியாத செலவுகளையும் சந்திக்க நேரிடும்.
அப்படியொரு சூழலில், ஒரு ஹாபிஸ்டல் கேஷ் இன்ஷூரன்ஸ் பாலிசி சில நிவாரணங்களை வழங்க முடியும். மேலும் இந்த பாலிசியின் சிறந்த அம்சங்களில் ஒன்று, சிறிய விஷயங்கள் கூட உங்களுக்காகக் காப்பீடு செய்யப்படும். இந்த திட்டம் உங்களிடம் இருக்கும் பட்சத்தில், உங்கள் அன்றாட தேவைகள் கவனித்துக் கொள்ளப்படும். ஸ்டார் ஹாஸ்பிடல் கேஷ் பாலிசியானது, உங்களுடைய தற்போதைய ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியுடன் கூடுதலாக ஒரு பயனளிக்கும் திட்டமாக இருக்கும். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை உங்களுக்கு வழங்க உதவும். நீங்கள் மருத்துவமனையில் தங்கியிருக்கும் போது ஏற்படும் பல்வேறு செலவுகளுக்கு இந்த பணம் பயன்படுத்தப்படலாம். தவிர, இந்த பாலிசியானது, பெட்ரோல் செலவு, நோயாளரை பார்த்து கொள்பவர்களுக்கான உணவு போன்ற வேறு செலவினங்களை ஈடுசெய்யவும் பயனளிக்கும். எடுத்துக்காட்டாக, உங்கள் ஹாஸ்பிடல் கேஷ் பாலிசியின் கவரேஜ் ஒரு நாளைக்கு ரூ.1000 என்றால், காப்பீட்டாளர் நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காலம் முழுவதும் ஒவ்வொரு நாளும் ரூ.1000 வழங்க வேண்டும். அந்த தொகையை எப்படி செலவிட வேண்டும் என்ற முடிவு உங்களுடையது.
உங்களின் தற்போதைய ஹெல்த் மெடிக்கல் பாலிசியின் கூடுதல் அம்சமாகவும் இவை சிறப்பாகச் செயல்படுகின்றன. இதற்கு நீங்கள் தினசரி கேஷ் லிமிட் மற்றும் பாலிசியின் படி நாட்களின் எண்ணிக்கையை தேர்வு செய்ய வேண்டும்.
ஸ்டார் ஹாஸ்பிடல் கேஷ் இன்ஷூரன்ஸ் பாலிசியானது, காப்பீடு செய்தவருக்கு அவர் மருத்துவமனையில் இருக்கும் காலக்கட்டத்தில் தினமும் கேஷ் வழங்குகிறது. இந்த பாலிசியானது, ஸ்டார் ஹெல்த் வழங்கும் அனைத்து ஹெல்த் பிளான்களுக்கும் கூடுதல் உதவித் திட்டமாக இருக்கும்.
தகுதி
ஸ்டார் ஹாஸ்பிடல் கேஷ் இன்ஷூரன்ஸ் பாலிசியை 18 வயது முதல் 65 வயது வரை உள்ள தனிநபர்கள் மற்றும் குடும்பங்கள் வாங்கலாம். இது உங்கள் மனைவி மற்றும் 3 மாதங்கள் முதல் 25 வயது உள்ள உங்களை சார்ந்திருக்கும் பிள்ளைகளுக்கும் கவராகும்.
கவர் வகை
தனிநபர் மற்றும் ஃப்ளோட்டர் அடிப்படையில், ஒரு அடிப்படை பிளான் மற்றும் மேம்படுத்தப்பட்ட பிளான் என்று இரண்டு பிளான்ஸ் கிடைக்கின்றன. இந்த இரண்டு பிளான்களின் கீழ், பாலிசிதாரர் ஒவ்வொரு நாளுக்கான ஹாஸ்பிடல் கேஷ் தொகை மற்றும் ஹாஸ்பிடல் கேஷ் நாட்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் கலவையைத் தேர்வு செய்யலாம். கீழே உள்ள அட்டவணை, ஹாஸ்பிடல் கேஷ் தொகை மற்றும் ஹாஸ்பிடல் கேஷ் நாட்களின் எண்ணிக்கை ஆகிய ஆப்ஷன்களை விளக்குகிறது.
பிளான் வகை | ஹாஸ்பிடல் கேஷ் தொகை | ஹாஸ்பிடல் கேஷ் நாட்களின் எண்ணிக்கை |
---|---|---|
அடிப்படை பிளான் | ரூ. 1000, ரூ. 2000, ரூ. 3000 | 30/60/90/120/180 நாட்கள் |
மேம்படுத்தப்பட்ட பிளான் | ரூ. 3000, ரூ. 4000, ரூ. 5000 | 90/120/180 நாட்கள் |
பாலிசி காலம்
1 வருடம் / 2 ஆண்டுகள் / 3 ஆண்டுகளுக்கு கிடைக்கும்
காத்திருப்பு காலங்கள்
பாலிசி தொடங்கிய நாளில் இருந்து 30 நாட்களுக்குள் ஏற்பட்ட நோய்க்கு காப்பீடு கவராகாது. விபத்து ஏற்பட்டால் இதில் விதிவிலக்கு உண்டு. குறிப்பிட்ட நோய்கள்/ அறுவை சிகிச்சைகளுக்கான கவரேஜ் 24 மாதங்களுக்குப் பிறகு நடைமுறைக்கு வரும். பாலிசி தொடங்கப்பட்ட நாளிலிருந்து 36 மாதங்கள் (அடிப்படைத் திட்டம்) மற்றும் 24 மாதங்கள் (மேம்படுத்தப்பட்ட திட்டம்) காத்திருப்பு காலத்திற்குப் பிறகு முன்பே இருக்கும் நோய்களுக்குக் காப்பீடு வழங்கப்படும்.
போர்ட்டபிலிட்டி
போர்ட்டபிலிட்டி குறித்த IRDAI வழிகாட்டுதல்களின்படி, காப்பீடு எடுத்தவர் முழு பாலிசியையும் போர்ட் செய்ய, காப்பீட்டாளரிடம் விண்ணப்பிப்பதன் மூலம் மற்றொரு காப்பீடு நிறுவனத்துக்கு பாலிசியை மாற்ற ஏற்பாடு செய்ய முடியும். அனைத்து குடும்ப உறுப்பினர்களும் புதுப்பித்தல் தேதிக்கு குறைந்தபட்சம் 45 நாட்களுக்கு முன்பு போர்ட் செய்யலாம், ஆனால் புதுப்பித்தல் தேதிக்கு 60 நாட்களுக்கு முன்பு போர்ட் செய்ய முடியாது.
ஃப்ரீ லுக் பீரியட்
பாலிசியின் டெர்ம்ஸ் மற்றும் நிபந்தனைகளை மதிப்பாய்வு செய்வதற்கு, பாலிசி பெறப்பட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்கு ஃப்ரீ லுக் பீரியட் உள்ளது. காப்பீடு செய்தவர் பாலிசியில் திருப்தி அடையவில்லை என்றால், குறிப்பிட்ட காலத்திற்குள் பாலிசியை ரத்து செய்வதற்கான ஆப்ஷன் உள்ளது. இருப்பினும், பாலிசி புதுப்பிப்புகளுக்கு இந்த அம்சம் பொருந்தாது.
ஸ்டார் ஹாஸ்பிடல் கேஷ் இன்ஷூரன்ஸ் பாலிசியில் (அடிப்படை மற்றும் மேம்படுத்தப்பட்ட திட்டம்) என்ன கவர் செய்யப்படுகிறது?
ஸ்டார் ஹாஸ்பிடல் கேஷ் இன்ஷூரன்ஸ் பாலிசியானது, காப்பீடு செய்தவர் தேர்ந்தெடுத்த அதிகபட்ச நாட்களுக்கு உட்பட்டு, குறைந்தபட்சம் 24 மணிநேரம் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியிருக்கும் போது, தினசரி பணப் பலன்களை வழங்கும். பாலிசியின் விதிமுறைகளின்படி பின்வருவனவற்றிற்கு ஏற்படும் செலவுகளை இந்த பிளான் ஈடு செய்யும்.
ஸ்டார் ஹெல்த் அதன் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சிக்கல் இல்லாத க்ளைம் செட்டில்மென்ட்டை வழங்குகிறது. ஸ்டார் ஹாஸ்பிடல் கேஷ் இன்சூரன்ஸ் திட்டத்தில் செலவுத்தொகையை நீங்கள் திரும்பப் பெறலாம்.