காப்பீட்டுத் தொகைஇந்த பாலிசியின் கீழ் காப்பீட்டுத் தொகைக்கான விருப்பங்கள் ரூ.10,00,000/-, ரூ.20,00,000/-, ரூ.30,00,000/-, ரூ.50,00,000/-, ரூ.75,00,000/- மற்றும் ரூ.1, 00,00,000/-. இருப்பினும், ரூ.75,00,000/- மற்றும் ரூ.1,00,00,000/-க்கான காப்பீட்டுத் தொகையை 65 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே பெற முடியும். இந்த பாலிசி தொடங்கும் போது மட்டுமே இது பொருந்தும். |
பாலிசி காலம்இந்த பாலிசியை ஒன்று, இரண்டு அல்லது மூன்று வருட காலத்திற்குப் பெறலாம். |
பாலிசிக்கு முந்தைய மருத்துவ பரிசோதனைஇந்த பாலிசியைப் பெறுவதற்கு வயது மற்றும் காப்பீட்டுத் தொகையைத் தவிர, பாலிசிக்கு முந்தைய மருத்துவப் பரிசோதனை தேவையில்லை. |
உள்நோயாளராக மருத்துவமனையில் அனுமதித்தல்நோய், காயம் அல்லது விபத்துகள் காரணமாக 24 மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பெறும் சிகிச்சைக்கான செலவுகள் கவராகும். |
மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்புஉள்நோயாளராக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் தேதிக்கு 60 நாட்களுக்கு முன்பு வரை ஏற்படும் மருத்துவச் செலவுகளும் ஈடுசெய்யப்படும். |
டிஸ்சார்ஜுக்குப் பிறகுமருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நாளிலிருந்து 90 நாட்கள் வரை ஏற்படும் மருத்துவச் செலவுகளும் கவராகும். |
அறை வாடகைஉள்நோயாளராக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது ஏற்படும் அறை, தங்குமிடம் மற்றும் மருத்துவச் செலவுகள், காப்பீட்டுத் தொகையில் 1% வரை அல்லது அதிகபட்சமாக ரூ. ஒரு நாளைக்கு 20,000 வரை கவர் செய்யப்படும். |
வீட்டில் அளிக்கப்படும் சிகிச்சைகுறிப்பிட்ட உடல் நிலைகளுக்கு வீட்டில் அளிக்கப்படும் சிகிச்சைக்காக ஏற்படும் செலவுகள், பாலிசி ஆண்டில் 10% வரை, அதாவது அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை கவராகும். பாலிசிதாரர் இந்த சேவையை பணமில்லா அல்லது கட்டணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளும் முறையில் பயன்படுத்தலாம். |
மருத்துவம் அல்லாத பொருட்களுக்கான கவரேஜ்பாலிசியின் கீழ் மருத்துவமனை சிகிச்சையின் செலவுகளுக்கான க்ளைம் இருக்கும் பட்சத்தில், மருத்துவம் அல்லாத பொருட்களுக்கான செலவுகளும் கவராகும். |
சாலை வழி ஆம்புலன்ஸ்இந்த பாலிசி மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ஆம்புலன்ஸ் கட்டணங்கள், சிறந்த மருத்துவ சிகிச்சைக்காக ஒரு மருத்துவமனையிலிருந்து மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றுதல் மற்றும் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு கொண்டு செல்லும் கட்டணம் ஆகியவற்றை உள்ளடக்குகிறது. |
ஏர் ஆம்புலன்ஸ்பாலிசி காலத்தில் ஒவ்வொரு முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போதும், ஏர் ஆம்புலன்ஸ் செலவுகள் ரூ. 2.5 லட்சம் வரை கவராகும். ஒரு பாலிசி காலத்தில் அதிகபட்சமாக ரூ. 5 லட்சம் வரை கவராகும். |
வீட்டில் இருந்து பெறும் சிகிச்சைமூன்று நாட்களுக்கு மேல் ஒரு மருத்துவரின் ஆலோசனையின் பேரில் வீட்டில் அளிக்கப்படும் ஆயுஷ் உள்ளிட்ட சிகிச்சை முறைகளுக்கான செலவுகள் கவர் செய்யப்படும். |
டே கேர் நடைமுறைகள்தொழில்நுட்ப முன்னேற்றங்கள் காரணமாக 24 மணி நேரத்திற்கும் குறைவாக மருத்துவமனையில் பெறும் சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சை நடைமுறைகளுக்கான செலவுகளும் கவர் செய்யப்படுகிறது. |
உறுப்பு தானம் அளிப்பவருக்கான செலவுகள்உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் செலவுகள், க்ளைம் செய்யப்படும் பட்சத்தில், நன்கொடையாளருக்கு கவர் செய்யப்படும். கூடுதலாக, நன்கொடையாளருக்கு ரெட்ரோ அறுவை சிகிச்சை அல்லது ஐசியூ-வில் அனுமதிக்கப்பட நேர்ந்தாலோ அதற்கான கட்டணங்களும் கவராகும். |
ஹாஸ்பிஸ் கேர்எங்கள் நெட்வொர்க் மருத்துவமனைகளில் இதற்கான வசதி இருந்தால், அதிகபட்சமாக ரூ.5 லட்சத்திற்கு உட்பட்டு காப்பீட்டுத் தொகையில் 10% வரை செலுத்தப்படும். பாலிசி தொடங்கியதில் இருந்து 24 மாதங்கள் காத்திருப்பு காலத்திற்குப் பிறகு இந்த கவரேஜ் கிடைக்கும். |
மறுவாழ்வு & வலி மேலாண்மைமறுவாழ்வு மற்றும் வலி மேலாண்மைக்கான செலவினங்கள் குறிப்பிட்ட துணை வரம்பு தொகை வரை அல்லது காப்பீடு செய்யப்பட்ட அடிப்படைத் தொகையில் அதிகபட்சமாக 10% கவராகும். பாலிசி காலத்தில் இவ்விரண்டில் எது குறைவாக உள்ளதோ அந்த தொகை கவர் செய்யப்படும். |
ஆயுஷ் சிகிச்சைஆயுஷ் மருத்துவமனைகளில் உள்ள ஆயுர்வேதம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி முறைகளின் கீழ் சிகிச்சைக்காக உள்நோயாளியாக மருத்துவமனையில் சேர்க்கப்படும் செலவுகள் காப்பீட்டுத் தொகையில் கவராகும். |
எடை குறைப்பு அறுவை சிகிச்சைஎடை குறைப்பு அறுவை சிகிச்சை நடைமுறைகளுக்கு மருத்துவமனையில் சேர்க்கப்படும் செலவுகள், பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளுக்கு உட்பட்டு கவராகும். |
நவீன சிகிச்சைவாய்வழி கீமோதெரபி, இன்ட்ரா வைட்ரியல் ஊசிகள், ரோபோடிக் அறுவை சிகிச்சைகள் போன்ற நவீன சிகிச்சைகளுக்கு ஏற்படும் செலவுகள் பாலிசி அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள காப்பீட்டுத் தொகையில் 50% வரை கவராகும். |
ஒட்டுமொத்த போனஸ்காப்பீட்டுத் தொகையில் அதிகபட்சம் 100%க்கு உட்பட்டு, ஒவ்வொரு க்ளைம் இல்லாத ஆண்டிற்கும் காப்பீடு செய்யப்பட்ட தொகையில், 20% ஒட்டுமொத்த போனஸ் வழங்கப்படுகிறது. |
கோ - பேமண்ட்65 வயதுக்கு மேல் காப்பீடு எடுக்கும் நபர்களுக்கும் இது பொருந்தும். இந்த பாலிசியின் கீழ் செய்யப்படும் ஒவ்வொரு க்ளைமும், பாலிசியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி ஏற்றுக்கொள்ளக்கூடிய மற்றும் செலுத்த வேண்டிய தொகைக்கு 20% இணை-கட்டணத்திற்கு உட்பட்டது. |
மருத்துவ பரிசோதனைஒவ்வொரு க்ளைம் இல்லாத ஆண்டிற்கும் குறிப்பிட்ட வரம்புகளுக்குள் மருத்துவ பரிசோதனைச் செலவுகள் கவர் செய்யப்படுகின்றன. |
தவணை விருப்பங்கள்பாலிசி பிரீமியத்தை காலாண்டு அல்லது அரையாண்டு அடிப்படையில் செலுத்தலாம். இது ஆண்டுதோறும், 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை மற்றும் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை என்ற அடிப்படையிலும் செலுத்தலாம். நீண்ட கால (2 & 3 வருட கால) ஆப்ஷன்களுக்கு இந்த வசதி கிடைக்காது. |
ஸ்டார் வெல்னஸ் புரோகிராம்பல்வேறு வெல்னஸ் நடவடிக்கைகள் மூலம் பாலிசிதாரரின் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்க வடிவமைக்கப்பட்ட திட்டம் இது. அதுமட்டுமின்றி, நீங்கள் பெற்ற வெல்னஸ் புள்ளிகள், புதுப்பித்தலின் போது அதிகபட்சம் 10% வரை தள்ளுபடி பெற பயன்படுத்தப்படலாம். |
குடும்பத்திற்கான தள்ளுபடிஃப்ளோட்டர் அடிப்படையிலான கவரேஜ் தொகையில், இரண்டு பெரியவர்களுக்கு காப்பீடு செய்யப்பட்டால், குடும்பத்தில் இளைய உறுப்பினர் ஒருவருக்கு பிரீமியத்தில் 40% தள்ளுபடி கிடைக்கும். |
இளம் வயதினருக்கான தள்ளுபடி50 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு, அவர்கள் மனைவி 50 வயதுக்கு குறைவானவராக இருந்தால், 10% தள்ளுபடியுடன் ஃப்ளோட்டர் கவரேஜ் பெறலாம். |
ஒரு மருத்துவ காப்பீட்டு வல்லுனராக, எங்கள் பயனாளர்களுக்கு விரைவான க்ளைம் செட்டில்மெண்ட்ஸ்களை அளிக்கிறோம். எங்களுடன் பல மருத்துவமனைகள் இணைந்து வருவதால் உங்களுக்கான மருத்துவ தேவைகளை மிகவும் எளிதாக நீங்கள் பெறுவதை உறுதி செய்கிறோம்.
உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தவும், பணத்தை மிச்சப்படுத்தவும், ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுப்பதன் கடினமான முறைகளை எளிதாக்கவும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
உங்களின் எதிர்காலத்தை எங்களுடன் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள்