சீனியர் சிட்டிசன் ரெட் கார்பெட் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி

*I consent to be contacted by Star Health Insurance for health insurance product inquiries, overriding my NCPR/DND registration.

IRDAI UIN: SHAHLIP22199V062122

HIGHLIGHTS

Plan Essentials

essentials

ஏதுவான காப்பீட்டுத் தொகை

தனிநபர் அடிப்படையில் கிடைக்கும் காப்பீட்டுத் தொகை - 1/2/3/4/5/7.5/10/15/20/20/25 லட்சம் மற்றும் ஃப்ளோட்டர் (தனி நபர் மற்றும் மனைவி) அடிப்படையில் - 10/15/20/25 லட்சம்.
essentials

நவீன சிகிச்சை

வாய்வழி கீமோதெரபி, இன்ட்ரா விட்ரியல் ஊசிகள், ரோபோடிக் அறுவை சிகிச்சைகள் போன்ற நவீன சிகிச்சைகளுக்கு ஏற்படும் செலவுகள் பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளுக்கு உட்பட்டு கவர் செய்யப்படும்.
essentials

பிரீமியம் தள்ளுபடிகள்

பாலிசியை ஆன்லைனில் வாங்குவதற்கும் புதுப்பிப்பதற்கும் 5% தள்ளுபடி பெறலாம். கூடுதலாக, பாலிசியை வாங்குவதற்கு அல்லது புதுப்பிப்பதற்கு முன் 45 நாட்களுக்குள் பட்டியலிடப்பட்ட மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்ட ஆரோக்கியமான நபர்களுக்கு 10% தள்ளுபடி பொருந்தும்.
essentials

ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கான காத்திருக்கும் காலம்

ஏற்கனவே இருக்கும் நோய்கள் (PED) மற்றும் அது தொடர்பான பிரச்சனைகளுக்கு இந்த பாலிசியின் கீழ் 12 மாதங்களுக்குப் பிறகு காப்பீடு செய்யப்படும்.
essentials

வெளிநோயாளருக்கான கன்சல்டேஷன்

நெட்வொர்க் மருத்துவமனைகளில் வெளிநோயாளருக்கான மருத்துவ ஆலோசனை, பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகள் வரை செலுத்தப்படும்.
essentials

நுழைவு வயது

60 முதல் 75 வயது வரை உள்ள மூத்த குடிமக்கள், நிலையான பிரீமியம் மற்றும் வாழ்நாள் முழுவதும் புதுப்பித்தல் ஆப்ஷனுடன் இந்த பாலிசியைப் பெறலாம்.
essentials

பாலிசிக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை

இந்த பாலிசியைப் பெறுவதற்கு முன் மருத்துவப் பரிசோதனை கட்டாயமில்லை.
essentials

பாலிசி வகை

இந்த பாலிசியை தனிநபர் அல்லது ஃப்ளோட்டர் அடிப்படையில் பெறலாம்.
DETAILED LIST

பாலிசியில் உள்ள சிறப்பம்சங்கள்

முக்கியமான சிறப்பம்சங்கள்

பாலிசி காலம்

இந்த பாலிசியை ஒன்று, இரண்டு அல்லது மூன்று வருட காலத்திற்குப் பெறலாம்.

காப்பீட்டுத் தொகை

ரூ. 1,00,000/-, ரூ. 2,00,000/-, ரூ. 3,00,000/-, ரூ. 4,00,000/-, ரூ. 5,00,000/-, ரூ. 7,50,000/- , ரூ. 10,00,000/-, ரூ. 15,00,000/-, ரூ. 20,00,000/- மற்றும் ரூ. 25,00,000/- ஆகியவை இந்த பாலிசியின் கீழ் காப்பீட்டுத் தொகைக்கான ஆப்ஷன்களாகும். அதுமட்டுமின்றி, காப்பீட்டுத் தொகை ரூ. 10,00,000/- முதல் ரூ. 25,00,000/- வரை ஃப்ளோட்டர் அடிப்படையில் கிடைக்கிறது.

உள்நோயாளராக அனுமதித்தல்

நோய், காயம் அல்லது விபத்துகள் காரணமாக 24 மணி நேரத்திற்கும் மேலாக ஏற்படும் மருத்துவமனையில் சேர்க்கப்படும் செலவுகள் கவர் செய்யப்படும்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு

உள்நோயாளியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் செலவுகள் மட்டுமின்றி, அனுமதிக்கப்படும் தேதிக்கு 30 நாட்களுக்கு முன்பு வரை ஏற்படும் மருத்துவச் செலவுகளும் கவர் செய்யப்படும்.

டிஸ்சார்ஜூக்கு பிறகு

பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளின்படி. மருத்துவமனையில் இருந்து வெளியேறிய பிறகான மருத்துவச் செலவுகள் 7% வரை கவராகும்.

அறை வாடகை

தேர்வு செய்யப்பட்ட அதிகபட்ச காப்பீட்டுத் தொகைக்கு, உள்நோயாளராக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது ஏற்படும் அறை வாடகை , தங்குமிடம் மற்றும் மருத்துவ செலவுகள் ரூ. 10,000/- வரை கவர் செய்யப்படும்.

ஐசியூ கட்டணங்கள்

ரூ.10 லட்சம் வரை எடுக்கப்பட்ட காப்பீட்டுத் தொகையில், 2% வரை ICU கட்டணமாக கவர் செய்யப்படும். மேலும் ரூ. 15 லட்சம் முதல் ரூ. 25 லட்சம் வரையிலான காப்பீட்டுத் தொகைக்கு ICU கட்டணங்கள் அதன் நிர்ணயிக்கப்பட்ட தொகை வரை கவர் செய்யப்படும்.

சாலை வழி ஆம்புலன்ஸ்

தனியார் ஆம்புலன்ஸ் சேவை மூலம் காப்பீடு செய்யப்பட்ட நபரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு ஏற்படும் ஆம்புலன்ஸ் கட்டணங்களும் கவர் செய்யப்படும்.

டே கேர் நடைமுறைகள்

தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரம் மருத்துவமனையில் பெறும் சிகிச்சைக்கான கட்டணம் மற்றும் அறுவை சிகிச்சை முறைகளுக்கான கட்டணம் கவராகிறது.

கண்புரை சிகிச்சை

கண்புரை சிகிச்சைக்காக ஏற்படும் செலவுகள், பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகள் வரை 24 மாதங்கள் காத்திருப்பு காலத்திற்குப் பிறகு கவர் செய்யப்படும்.

கோ-பேமண்ட்

இந்த பாலிசியானது அனைத்து க்ளைம்ஸ்களுக்கும் 30% கோ-பேமண்ட் செலுத்துதலுக்கு உட்பட்டது.

உடல்நலப் பரிசோதனை

ஒவ்வொரு க்ளைம் இல்லாத ஆண்டிற்கும், நெட்வொர்க் மருத்துவமனைகளில் வருடாந்திர உடல்நல பரிசோதனைக்காக ஏற்படும் செலவுகள் குறிப்பிட்ட வரம்புகளுக்குள் செலுத்தப்படும்.

தவணை முறைகள்

பாலிசி பிரீமியத்தை காலாண்டு அல்லது அரையாண்டு அடிப்படையில் செலுத்தலாம். மேலும் இதனை ஆண்டுதோறும், 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மற்றும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்ற அடிப்படையிலும் செலுத்தலாம்.
பாலிசி விவரங்கள் மற்றும் விதிமுறைகள் & நிபந்தனைகளை அறிய, பாலிசி ஆவணங்களைப் பார்க்கவும்.
ஸ்டார் ஹெல்த்

ஸ்டார் இன்ஷூரன்ஸை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

ஒரு மருத்துவ காப்பீட்டு வல்லுனராக, எங்கள் பயனாளர்களுக்கு விரைவான க்ளைம் செட்டில்மெண்ட்ஸ்களை அளிக்கிறோம். எங்களுடன் பல மருத்துவமனைகள் இணைந்து வருவதால் உங்களுக்கான மருத்துவ தேவைகளை மிகவும் எளிதாக நீங்கள் பெறுவதை உறுதி செய்கிறோம்.

எங்களது வாடிக்கையாளர்கள்

ஸ்டார் ஹெல்த்-ல் ‘மகிழ்ச்சியுடன் காப்பீடு செய்யப்பட்டது!’

உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தவும், பணத்தை மிச்சப்படுத்தவும், ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுப்பதன் கடினமான முறைகளை எளிதாக்கவும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

Customer Image
ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுக்க என் நண்பர் சொன்னார். என் மகன் நோயில் பாதிக்கப்பட்டிருந்த போது அது எனக்கு உதவியது. அவர்களின் கேஷ்லஸ் சிகிச்சை வசதி அந்த நேரத்தில் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. அவர்களின் சேவையையும் ஆதரவையும் நான் உண்மையிலேயே பாராட்டுகிறேன்.

டிஜி கே ஊமென்

திருவனந்தபுரம்

காப்பீடு செய்யுங்கள்
Customer Image
8 ஆண்டுகளாக ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸில் இருந்து வருகிறேன். இந்த காலத்தில் இரண்டு க்ளைம்ஸ்க்கு விண்ணப்பித்தேன். இரு முறையும் க்ளைம் செட்டில் ஆனது. நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது ஸ்டாரிடமிருந்து சிறப்பான ஆதரவைப் பெற்றேன்.

வாணிஸ்ரீ

பெங்களூரு

காப்பீடு செய்யுங்கள்
Customer Image
எனது குடும்பம் 2006 முதல் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸில் அங்கம் வகிக்கிறது. கடந்த மாதம் க்ளைம்க்கு விண்ணப்பித்த போது, தொந்தரவும் இல்லாமல் கிடைத்தது. தரமான சேவையை வழங்கும் ஸ்டாரின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

ராமச்சந்திரன்

சென்னை

காப்பீடு செய்யுங்கள்
Customer Image
விரிவான பாலிசியின் கீழ் இருந்தேன். எனது ஆஞ்சியோபிளாஸ்டி போது அவர்களின் நெட்வொர்க் மருத்துவமனையில் பணமில்லா சிகிச்சையை என்னால் பெற முடிந்தது.

ஷைலா கனச்சாரி

மும்பை

காப்பீடு செய்யுங்கள்
Customer Image
நான் 7 - 8 வருடங்களாக மெடிக்ளைம் சேவைகளைப் பயன்படுத்தி வருகிறேன். நான் மற்ற நிறுவனங்களையும் முயற்சித்தேன். ஆனால், ஸ்டார் ஹெல்த் அளித்த சேவையில் திருப்தி அடைந்தேன். அவர்களிடம் நட்புரீதியாக நமக்கு ஆதரவு கொடுக்கும் பணியாளர்களும் உள்ளனர்.

சுதிர் பைஜி

இந்தூர்

காப்பீடு செய்யுங்கள்
user
டிஜி கே ஊமென்
திருவனந்தபுரம்

ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுக்க என் நண்பர் சொன்னார். என் மகன் நோயில் பாதிக்கப்பட்டிருந்த போது அது எனக்கு உதவியது. அவர்களின் கேஷ்லஸ் சிகிச்சை வசதி அந்த நேரத்தில் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. அவர்களின் சேவையையும் ஆதரவையும் நான் உண்மையிலேயே பாராட்டுகிறேன்.

user
வாணிஸ்ரீ
பெங்களூரு

8 ஆண்டுகளாக ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸில் இருந்து வருகிறேன். இந்த காலத்தில் இரண்டு க்ளைம்ஸ்க்கு விண்ணப்பித்தேன். இரு முறையும் க்ளைம் செட்டில் ஆனது. நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது ஸ்டாரிடமிருந்து சிறப்பான ஆதரவைப் பெற்றேன்.

user
ராமச்சந்திரன்
சென்னை

எனது குடும்பம் 2006 முதல் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸில் அங்கம் வகிக்கிறது. கடந்த மாதம் க்ளைம்க்கு விண்ணப்பித்த போது, தொந்தரவும் இல்லாமல் கிடைத்தது. தரமான சேவையை வழங்கும் ஸ்டாரின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

user
ஷைலா கனச்சாரி
மும்பை

விரிவான பாலிசியின் கீழ் இருந்தேன். எனது ஆஞ்சியோபிளாஸ்டி போது அவர்களின் நெட்வொர்க் மருத்துவமனையில் பணமில்லா சிகிச்சையை என்னால் பெற முடிந்தது.

user
சுதிர் பைஜி
இந்தூர்

நான் 7 - 8 வருடங்களாக மெடிக்ளைம் சேவைகளைப் பயன்படுத்தி வருகிறேன். நான் மற்ற நிறுவனங்களையும் முயற்சித்தேன். ஆனால், ஸ்டார் ஹெல்த் அளித்த சேவையில் திருப்தி அடைந்தேன். அவர்களிடம் நட்புரீதியாக நமக்கு ஆதரவு கொடுக்கும் பணியாளர்களும் உள்ளனர்.

வேறு ஏதாவது தேடுகிறீர்களா?

உடனே தொடங்குங்கள்

சிறந்தது என்பதில் உறுதியாக இருங்கள்

உங்களின் எதிர்காலத்தை எங்களுடன் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள்

Contact Us
கூடுதல் தகவல்கள் தேவையா?
Get Insured
உங்கள் பாலிசியைப் பெறத் தயாரா?

மூத்த குடிமக்களுக்கான மருத்துவ காப்பீடு

 

முதுமை - இது ஒரு இயற்கையான செயல்முறை. நமது சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் இதுவொரு தனித்துவமான சவாலாக உள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட தனிநபர்கள் மூத்த குடிமக்களாகக் கருதப்படுவார்கள். இந்தியாவின் முதல் லாங்கிட்யூடினல் ஏஜிங் ஆய்வின் (LASI) படி, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மூன்று மூத்த குடிமக்களில் இருவர் சில நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். வயதானவர்களிடையே அதிகமாகக் காணப்படும் நோய்களில் இருதய நோய்கள் (CVD), நாள்பட்ட உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, எலும்பு மற்றும் மூட்டு நோய்கள் மற்றும் பல அடங்கும். உடல்நலப் பாதுகாப்புத் தேவைகள் என்பவை ஓய்வு பெற்றவர்கள் அறியாத மிகப் பெரிய விஷயமாக உள்ளது. மூத்த குடிமக்களாகிய உங்கள் நிதி நிலைமையில் இருந்து, இத்தகைய நாள்பட்ட நோய்களுக்கான நிலையான சிகிச்சையைப் பெறுவது, அதிகரித்து வரும் மருத்துவச் செலவு காரணமாக உங்கள் சேமிப்பை வீணாக்கலாம். மேலும் இது நீங்கள் வகுத்திருந்த ஓய்வூதிய திட்டத்தை கடினமாக்குகிறது. மூத்த குடிமக்களுக்கு அவர்களின் தனிப்பட்ட உடல்நல தேவைகளைப் பூர்த்தி செய்ய மருத்துவ காப்பீடு தேவைப்படுகிறது. எனவே, உங்கள் உடல்நலப் பாதுகாப்புத் தேவைகளைத் தணிக்கும் சரியான மற்றும் பயனுள்ள மருத்துவ காப்பீடு திட்டத்துடன் உடனடியாக உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

சீனியர் சிட்டிசன்ஸ் ரெட் கார்பெட் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி

ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ், மூத்த குடிமக்களுக்கான ரெட் கார்பெட் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை ஒரு பயனுள்ள அணுகுமுறையுடன் வழங்குகிறது. இந்தத் திட்டம் 60 முதல் 75 வயதுக்குட்பட்ட மூத்த குடிமக்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

இந்த பாலிசியானது மூத்த குடிமக்களுக்கான சிறந்த பலன்களுடன் உள்ளது. இதில், நவீன சிகிச்சை மூலம் பெறும் பெரும்பாலான டே கேர் நடைமுறைகள் கவராகும். இரண்டாவது பாலிசி ஆண்டிலிருந்து ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கான சிகிச்சை செலவுகள் கவர் செய்யப்படும்.  இதன் பிரீமியம் தொகை நிலையானது, வாழ்நாள் முழுவதும் புதுப்பித்துக் கொள்ளும் வசதியும் உள்ளது. இந்த பாலிசி தனிநபர்/ஃப்ளோட்டர் தொகை காப்பீடு அடிப்படையில் கிடைக்கும். இந்தியாவில் உள்ள மூத்த குடிமக்களுக்கான மருத்துவக் காப்பீட்டில் சிறந்த பிரீமியம் கொண்ட பாலிசி இது. இதன் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால், பாலிசியை வாங்கும் போது காப்பீட்டுக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை தேவையில்லை. அதேபோல், ​​பிரிவு 80டியின் கீழ் வரி விலக்கின் பலனையும் நீங்கள் பெறலாம்.

60+ வயதானவர்கள் ஏன் ஸ்டார் ஹெல்த் மெடிக்கல் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும்

 

ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ், ஒரு காலத்தில் நாட்டைக் கட்டியெழுப்பிய மூத்த குடிமக்களுக்காக உடல்நல காப்பீடு திட்டங்களை வடிவமைக்கிறது. சீனியர் சிட்டிசன்ஸ் ரெட் கார்பெட் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி என்பது முதியோர் சமூகத்திற்கு ஆதரவான ஒரு முழுமையான திட்டமாகும்.

பாலிசியை வாங்குவதில் மூத்த குடிமக்கள் அனுபவிக்க பல மதிப்புமிக்க நன்மைகள் உள்ளன:

 

  • நெட்வொர்க் மருத்துவமனையில் வெளிநோயாளராக பெறும் மருத்துவ ஆலோசனைகளுக்கான கவரேஜ்
  • காப்பீட்டுக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை தேவையில்லை.
  • ஏற்கனவே இருக்கும் நோய்கள் (PED) ஒரு வருட காத்திருப்பு காலத்திற்குப் பிறகு கவராகும்..
  • டே கேர் நடைமுறைகள் மற்றும் நவீன சிகிச்சைகளுக்கான முழு பாதுகாப்பு.

 

மூத்த குடிமக்களுக்கான க்ளைம்ஸ் மற்றும் குறைகள்

 

காப்பீட்டாளர்களுக்கு எதிராக புகார்கள் இருந்தால், பாலிசிதாரர்கள் கீழே உள்ள புகார்கள்/குறைகளைத் தீர்க்கும் லிங்கை க்ளிக் செய்து அணுகலாம்,

https://www.starhealth.in/grievance-redressal

இ-மெயில்:gro@starhealth.in or grievances@starhealth.in

அவர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் காப்பீட்டாளரிடமிருந்து பதிலைப் பெறவில்லை என்றால் அல்லது நிறுவனத்தின் பதிலில் அதிருப்தி அடைந்தால், இங்கே தொடர்பு கொள்ளவும்

ஒருங்கிணைந்த புகார் மேலாண்மை அமைப்பு (IGMS) - IRDAI போர்டல், https://igms.irda.gov.in இல் புகார்களைப் பதிவுசெய்வதற்கு complaints@irdai.gov.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.

மேலும் கட்டணமில்லா எண் 155255 அல்லது 1800 4254 732-ஐ அழைக்கலாம்.

 

ரெட் கார்பெட் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை வாங்குவதன் மூலம் கிடைக்கும் வரிச் சலுகை

 

பாலிசியின் முக்கிய நன்மை என்னவென்றால், ரொக்கமாக செலுத்துவதைத் தவிர வேறு எந்த முறையில்  பிரீமியம் செலுத்தியிருந்தாலும், வருமான வரிச் சட்டம் 1961 இன் பிரிவு 80-D இன் கீழ், காப்பீடு செய்யப்பட்ட நபர் வரிச் சலுகைகளுக்குத் தகுதி பெறுபவர் ஆகிறார்.

FAQ's