உள்நோயாளராக மருத்துவமனையில் சேர்க்கப்படுதல்நோய், காயம் அல்லது விபத்துகள் காரணமாக 24 மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஏற்படும் செலவுகள் கவராகும். |
மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்புஉள்நோயாளராக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதோடு, அட்மிஷன் தேதிக்கு 30 நாட்களுக்கு முன்பு வரை ஏற்படும் மருத்துவச் செலவுகளும் கவர் செய்யப்படும். |
டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகுமருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நாளிலிருந்து 60 நாட்கள் வரையிலான மருத்துவச் செலவுகளுக்கு காப்பீடு செய்யப்படுகிறது. |
அறை வாடகைஉள்நோயாளராக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது ஏற்படும் அறை வாடகை, தங்குமிடம் மற்றும் மருத்துவச் செலவுகள் ஆகியவை, ஒவ்வொரு நாளும் அடிப்படை காப்பீட்டுத் தொகையில் 1% வரை கவர் செய்யப்படும். |
சாலை வழி ஆம்புலன்ஸ்மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ஒருமுறைக்கு, ஆம்புலன்ஸ் கட்டணம் ரூ. 750/- வரை கவராகும். மேலும், பாலிசி காலத்தில் காப்பீடு எடுத்த நபரை தனியார் ஆம்புலன்ஸ் சேவை மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கான கட்டணத்தில், ரூ.1500/-.வரை கவர் செய்யப்படும். |
டே-கேர் நடைமுறைகள்தொழில்நுட்ப முன்னேற்றங்கள் காரணமாக 24 மணி நேரத்திற்கும் குறைவாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சிகிச்சை செலவுகள் மற்றும் அறுவை சிகிச்சைக்கான நடைமுறைகள் கவர் செய்யப்படுகிறது. |
நவீன சிகிச்சைவாய்வழி கீமோதெரபி, இன்ட்ரா வைட்ரியல் ஊசிகள், ரோபோடிக் அறுவை சிகிச்சைகள் போன்ற நவீன சிகிச்சைகளுக்கு ஏற்படும் செலவுகள் பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளுக்கு உட்பட்டு கவராகும். |
கண்புரை சிகிச்சைகண்புரை சிகிச்சைக்காக ஏற்படும் செலவுகள் பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளுக்கு உட்பட்டு கவராகும். |
கோ-பேமண்ட்இந்த பாலிசியானது, 61 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய நபர்கள், புதிதாக பாலிசி எடுக்கும் போதும், பாலிசி புதுப்பிக்கப்படும் போதும், ஒவ்வொரு அனுமதிக்கப்படும் க்ளைம் தொகையிலும் காப்பீடு செய்தவர்களே 20% தொகை செலுத்திக் கொள்ள வேண்டும். |
வெளிநோயாளருக்கான பலன்இந்தியாவில் உள்ள எந்தவொரு நெட்வொர்க்கிங் மருத்துவமனையிலும் ஏற்படும் அவசியமான வெளிநோயாளருக்கான செலவுகள் பாலிசி அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகள் வரை கவர் செய்யப்படும். |
தொடர்ந்து கிடைக்கும் பலன்கள்பாலிசி ஆண்டில் பயன்படுத்தப்படாத பலன்களை உடனடியாக அடுத்து வரும் புதுப்பிக்க வேண்டிய ஆண்டில் பயன்படுத்தலாம். அதற்கு மேற்பட்ட பலன்களை எதுவும், புதிய ஆண்டில் பயன்படுத்த அனுமதி இல்லை. |
ஒரு மருத்துவ காப்பீட்டு வல்லுனராக, எங்கள் பயனாளர்களுக்கு விரைவான க்ளைம் செட்டில்மெண்ட்ஸ்களை அளிக்கிறோம். எங்களுடன் பல மருத்துவமனைகள் இணைந்து வருவதால் உங்களுக்கான மருத்துவ தேவைகளை மிகவும் எளிதாக நீங்கள் பெறுவதை உறுதி செய்கிறோம்.
உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தவும், பணத்தை மிச்சப்படுத்தவும், ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுப்பதன் கடினமான முறைகளை எளிதாக்கவும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
உங்களின் எதிர்காலத்தை எங்களுடன் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள்