பாலிசி வகைஇந்த பாலிசி ஃப்ளோட்டர் அடிப்படையில் மட்டுமே பலன்களை வழங்குகிறது. |
நுழைவு வயது18 வயது முதல் 65 வயதுக்குட்பட்டோர் இந்த பாலிசியில் இணையலாம். காப்பீடு செய்தவரை சார்ந்திருக்கும் 16 நாள் குழந்தை முதல் 25 வயது பிள்ளை வரை பலனை பெற முடியும். |
குடும்பத்தின் அளவுஇந்த பாலிசியின் கீழ் பாலிசிதாரர், மனைவி, சார்ந்திருக்கும் குழந்தைகள் (அதிகபட்சம் 3 பேர்), பெற்றோர்கள், மனைவியின் பெற்றோர்கள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் பயன் பெறலாம். |
உள்நோயாளருக்கான சிகிச்சைகள்நோய், காயம் அல்லது விபத்துகள் காரணமாக 24 மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுக்க நேர்ந்தால், அதற்கான செலவுகளுக்கு காப்பீடு வழங்கப்படும். |
மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்புமருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு 60 நாட்கள் முன்பு வரை செய்யும் மருத்துவ செலவுகளை காப்பீட்டில் பெறலாம். |
டிஸ்சார்ஜுக்கு பிறகுமருத்துவமனையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதில் இருந்து 90 நாட்கள் வரை ஆகும் மருத்துவ செலவுகள் கவராகும். |
அறை பகிர்ந்து தங்கியிருத்தல்மருத்துவமனையில் காப்பீடு செய்தவர் பகிர்ந்து தங்கும் அறைகளில் தங்கியிருக்கும் செலவுகள் பாலிசியில் வரம்புக்கு ஏற்ப கவராகும். |
சாலை வழி ஆம்புலன்ஸ்பாலிசிதாரரை ஒருமுறை மருத்துவமனையில் அனுமதிக்க, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுச் செல்வதற்கான கட்டணம் ரூ.750 வரை கவராகும். பாலிசி காலத்தில் மொத்தமாக ரூ.1500 வரை பெற முடியும். |
ஏர் ஆம்புலன்ஸ்ஏர் ஆம்புலன்ஸ் செலவுகள் பாலிசி காலம் முழுவதும் காப்பீடு செய்யப்பட்ட தொகையில் 10% வரை கவராகும். |
கவரேஜ் தொகை தாமாக மீட்டமைத்தல்பாலிசி காலத்தில் வரம்புத்தொகை முழுவதுமாக பெற்றுவிட்டாலும், அதே பாலிசி ஆண்டிற்குள் 100% காப்பீட்டுத் தொகையை மீண்டும் 3 முறை புதுப்பிக்க முடியும். |
ஒட்டுமொத்த போனஸ்ரூ. 3,00,000 அல்லது அதற்கும் மேற்பட்ட கவரேஜ் தொகை விருப்பங்களைப் பொறுத்தவரை, காலாவதியான கவரேஜ் தொகையில் 25% ஒட்டுமொத்த போனஸாக சேர்க்கப்படும், அடுத்தடுத்த ஆண்டுகளில் கூடுதலாக 10% சேர்ந்துகொண்டே இருக்கும். எனினும், அதிகபட்ச போனஸ் 100% ஐ விட அதிகமாக இருக்கக்கூடாது, |
சாலை விபத்திற்கான கூடுதல் தொகை காப்பீடு (RTA)பாலிசிதாரர் சாலை விபத்து காரணமாக மருத்துவமனையில் உள்நோயாளராக அனுமதிக்கப்பட்டால், அடிப்படைக் காப்பீட்டுத் தொகை அதிகபட்சமாக ரூ.5,00,000/-க்கு உட்பட்டு 25% அதிகரிக்கப்படும். இந்த பலனைப் பெற, பாலிசிதாரர் ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனத்தை இயக்கியோ அல்லது பின்பக்கம் அமர்ந்தோ சென்றிருக்க வேண்டும். |
கருவுறும் சிகிச்சைக்கான உதவிகருவுறுதலுக்கான சிகிச்சைக்கு ஏற்படும் மருத்துவச் செலவுகளை, காப்பீட்டு நிறுவனம் ரீஇம்பர்ஸ்மெண்ட் முறையில் திருப்பிச் செலுத்தும்.
1. இந்த பாலிசியின் முதல் தேதியிலிருந்து 36 மாதங்கள் காத்திருக்கும் காலம் பொருந்தும்.
2. அத்தகைய சிகிச்சையின் போது, 36 மாதங்கள் கடந்திருக்கும் பட்சத்தில், ரூ.5 லட்சம் கவரேஜ் எடுத்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், ரூ.10 லட்சத்துக்கு கவரேஜ் எடுத்தவர்களுக்கு ரூ.2 லட்சமும் மற்றும் அதற்கு மேற்பட்ட தொகையும் வழங்கப்படும்.
|
பிறந்த குழந்தைக்கான மருத்துவ செலவுகள்குழந்தை பிறந்த 16வது நாளிலிருந்து காப்பீடு தொடங்குகிறது. காப்பீட்டுத் தொகையில் 10% அல்லது ஐம்பதாயிரம் ரூபாய் என இவ்விரண்டில் எது குறைவான தொகையோ அந்த தொகை, குழந்தையை பெற்றெடுத்த தாய் தொடர்ந்து 12 மாதங்களுக்கு இடைவெளியின்றி காப்பீடு செய்திருந்தால் வழங்கப்படும்.
குறிப்பு: விதிவிலக்குகள் எண்.1(குறியீடு Excl 01), விலக்கு எண்.2(குறியீடு Excl 02), விலக்கு எண்.3(குறியீடு Excl 03) மற்றும் மேற்கூறிய தொகையானது பிறந்த குழந்தைக்கு பிறவி நோய்/குறைபாடுகள் இருந்தால் அது தொடர்பான சிகிச்சைக்கு பொருந்தாது. |
ஆயுஷ் சிகிச்சைஆயுஷ் மருத்துவமனைகளில் ஆயுர்வேதம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி மருந்துகளின் கீழ் சிகிச்சைக்காக ஏற்படும் செலவுகள் கவராகும். |
உள்நாட்டில் அவசரகால மருத்துவ இடமாற்றம்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாலிசிதாரர் அவசர காரணங்களுக்காக வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டால் குறிப்பிட்ட வரம்பிற்குள் காப்பீடு வழங்கப்படும். |
கம்பாஷ்னேட் டிராவல்உயிருக்கு ஆபத்தான அவசர நிலையில், காப்பீடு செய்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவரது வீட்டில் இருந்து மருத்துவமனை தூரத்தில் இருக்கும் பட்சத்தில், அவருக்கு நெருக்கமான குடும்பத்தினர் ஒருவர் விமானத்தில் பயணிக்கும் செலவில் ரூ.5000/- வரை கவர் செய்யப்படும்.
|
2வது மருத்துவ ஆலோசனைகாப்பீடு செய்த நபர், காப்பீட்டு நிறுவனத்தின் இணைப்பில் உள்ள ஒரு மருத்துவரிடம் இருந்து இரண்டாவது மருத்துவ ஆலோசனையைப் பெறலாம். |
நவீன சிகிச்சைநவீன முறை சிகிச்சைகளுக்கு ஆகும் செலவுகளை பாலிசி வரம்புக்கு உட்பட்டு காப்பீடாக பெறலாம். |
ரீசார்ஜ் பலன்குறிப்பிட்ட வரம்புகள் வரை கிடைக்கும். |
டே கேர் நடைமுறைகள்தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக 24 மணி நேரத்திற்கும் குறைவாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பெறும் சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சை நடைமுறைகள் கவர் செய்யப்படுகிறது. |
வீட்டில் இருந்தபடி சிகிச்சைமூன்று நாட்களுக்கு மேல் ஒரு மருத்துவர் அல்லது செவிலியர் ஆலோசனையின் பேரில் வீட்டில் மேற்கொள்ளப்படும் ஆயுர்வேதம் உட்பட மருத்துவ செலவுகள் ஈடுசெய்யப்படும். |
உறுப்பு தானம் செய்பவருக்கான செலவுகள்உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான செலவுகள் வரம்புகளுக்கு உட்பட்டு, கவரேஜ் தொகையில் 10% வரை, அதாவது அதிகபட்சம் ரூ.1,00,000 வரை கவராகும். எனினும், இவ்விரண்டில் எது குறைவான தொகையோ அது கவர் செய்யப்படும். |
இறந்த உடலை சொந்த இடத்துக்கு கொண்டுச் செல்லுதல்காப்பீடு செய்த நபர் உயிரிழக்கும் பட்சத்தில், அவரது உடல் சொந்த இடத்துக்கு கொண்டுச் செல்வதற்கான செலவுகள் பாலிசி ஆண்டில் ரூ.5,000/-. வரை கவர் செய்யப்படும். |
கண் புரை சிகிச்சைகண்புரை சிகிச்சைக்காக ஏற்படும் செலவுகள் பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளுக்கு உட்பட்டு கவராகும். |
மதிப்புமிக்க சேவை வழங்குநர்களிடம் பெறும் சிகிச்சைகாப்பீட்டு நிறுவனம் பரிந்துரைத்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால், காப்பீட்டுத் தொகையில் 1% மொத்தமாக அதிகபட்சமாக ரூ. ஒரு பாலிசி காலத்திற்கு ரூ.5,000/- செலுத்தப்படும். |
உடல்நலப் பரிசோதனைநெட்வொர்க் மருத்துவமனைகளில் ஏற்படும் உடல்நலப் பரிசோதனைச் செலவுகள், ஒவ்வொரு க்ளைம் இல்லாத ஆண்டிற்கும் குறிப்பிட்ட வரம்புகளுக்குள் கவர் செய்யப்படும். |
கோ-பேமண்ட்காப்பீடு செய்த நபர் 61 வயதில் அல்லது அதற்கு மேற்பட்ட வயதில் பாலிசியை வாங்கினாலோ அல்லது புதுப்பித்தாலோ, அவர் ஒவ்வொரு க்ளெய்ம் தொகைக்கும் 20% இணை தொகை செலுத்த வேண்டும். |
தவணை முறைபிரீமியத்தை காலாண்டு மற்றும் அரையாண்டு அடிப்படையில் செலுத்தலாம். மேலும், பிரீமியத்தை ஆண்டுதோறும் மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையும் செலுத்தலாம்.
குறிப்பு: தவணை வசதியை 2 வருடங்கள் கொண்ட பாலிசிகளுக்குத் தேர்வுசெய்தால், 2 வருட காலத்திற்குப் பொருந்தக்கூடிய முழு பிரீமியத்தையும், முதல் வருடம் முடிவதற்குள் காலாண்டு அல்லது அரையாண்டு அடிப்படையில் செலுத்த வேண்டும்.
|
முன்கூட்டியே பெறும் தள்ளுபடிஇந்த பாலிசியின் தொடக்கத்தில் வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்கள் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்கும் பட்சத்தில் 5% தள்ளுபடி கிடைக்கும். |
ஒரு மருத்துவ காப்பீட்டு வல்லுனராக, எங்கள் பயனாளர்களுக்கு விரைவான க்ளைம் செட்டில்மெண்ட்ஸ்களை அளிக்கிறோம். எங்களுடன் பல மருத்துவமனைகள் இணைந்து வருவதால் உங்களுக்கான மருத்துவ தேவைகளை மிகவும் எளிதாக நீங்கள் பெறுவதை உறுதி செய்கிறோம்.
உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தவும், பணத்தை மிச்சப்படுத்தவும், ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுப்பதன் கடினமான முறைகளை எளிதாக்கவும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
உங்களின் எதிர்காலத்தை எங்களுடன் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள்