தி ஹெல்த் இன்ஷூரன்ஸ் ஸ்பெஷலிஸ்ட்

ஹெல்த் இன்ஷூரன்ஸ் ப்ளான்ஸ் ஃபார் ஃபேமிலி

உங்கள் குடும்பத்தை எங்களது சிறந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் மூலம் பாதுகாத்திடுங்கள். 

*I consent to be contacted by Star Health Insurance for health insurance product inquiries, overriding my NCPR/DND registration.

All Health Plans

Section Title

Health Insurance for Diabetes

டயபிடீஸ் சேஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி

நீரிழிவு நோய்க்கான கவரேஜ்: டைப்-1 மற்றும் டைப்-2 நீரிழிவு நோயாளர்களுக்கான கவரேஜாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது

குடும்பக் காப்பீடு: இந்த பாலிசியை ஃப்ளோட்டர் அடிப்படையிலும் (தனிநபர் மற்றும் மனைவி) அவர்களில் யாருக்கேனும் நீரிழிவு நோய் இருந்தால் பெறலாம்

தாமாக மீட்டமைத்தல்: தனிநபர் திட்டத்தில் ஒரு பாலிசி வருடத்திற்கு ஒருமுறை காப்பீட்டுத் தொகையில் 100% ரீஸ்டோர் செய்யப்படும்

View Plan

Star Health Assure Insurance Policy

ஸ்டார் ஹெல்த் அஷ்யூர் இன்ஷூரன்ஸ் பாலிசி

குடும்பத்தின் அளவு: தனி நபர், மனைவி, பெற்றோர் மற்றும் மனைவியின் பெற்றோர் உட்பட 6 பெரியவர்கள் மற்றும் 3 குழந்தைகளுக்கு கவர் ஆகிறது.

ஆட்டோமேட்டிக் ரீஸ்டோரேஷன்: ஒவ்வொரு முறையும் 100% வரை காப்பீட்டுத் தொகை எண்ணற்ற முறை ரீஸ்டோர் செய்யப்படும்

நீண்ட கால தள்ளுபடி: பாலிசியை 2 அல்லது 3 வருட காலத்திற்கு தேர்வு செய்தால், பிரீமியத்தில் தள்ளுபடி கிடைக்கும்

View Plan

Star Health Gain Insurance Policy

ஸ்டார் ஹெல்த் கெய்ன் இன்ஷூரன்ஸ் பாலிசி

விரிவான கவரேஜ்: உள்நோயாளராக மருத்துவமனையில் சேர்க்கப்படுதல் மற்றும் வெளிநோயாளருக்கான மருத்துவ செலவுகள் ஆகிய இரண்டிற்கும் விரிவான கவரேஜ் வழங்குகிறது

நவீன சிகிச்சை: உள்நோயாளராக மருத்துவமனையில் சேர்ப்பது அல்லது டே கேர் நடைமுறைகளுக்கான செலவுகள் கவராகிறது

வெளிநோயாளருக்கான நன்மை: எந்தவொரு நெட்வொர்க் மருத்துவமனையிலும் ஏற்படும் வெளிநோயாளருக்கான செலவுகள் கவராகும்

View Plan

Star Hospital Cash Insurance Policy

ஸ்டார் ஹாஸ்பிடல் கேஷ் இன்ஷூரன்ஸ் பாலிசி

மொத்த-தொகை மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கையில் கிடைக்கும் நன்மை: மருத்துவமனையில் சேர்க்கப்படும் போது ஏற்படும் தற்செயலான செலவுகளுக்கு தினசரி பணப் பலன்களை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது

ஐசியூ ஹாஸ்பிடல் கேஷ்: மருத்துவமனையில் ICU-வில் அனுமதிக்கப்பட்டால், ஹாஸ்பிடல் கேஷ் தொகையில் (ஒரு நாளைக்கு) 200% வரை பெறுங்கள்

விபத்துக்கான ஹாஸ்பிடல் கேஷ்: விபத்து ஏற்பட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் 150% வரை ஹாஸ்பிடல் கேஷ் தொகையைப் பெறுங்கள்

View Plan

Star Micro Rural and Farmers Care

ஸ்டார் மைக்ரோ ரூரல் அண்ட் ஃபார்மர்ஸ் கேர்

கிராமப்புற கவரேஜ்: பிரத்யேகமாக கிராமப்புற மக்களுக்காக  வடிவமைக்கப்பட்டுள்ளது

காப்பீட்டுக்கு முந்தைய சோதனை: இந்த பாலிசியைப் பெற, காப்பீட்டுக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை தேவையில்லை

குறைவான காத்திருப்பு காலம்: PED & குறிப்பிட்ட நோய்கள் 6 மாதங்களுக்குப் பிறகுதான் பாதுகாக்கப்படும்

View Plan

Star Women Care Insurance Policy

ஸ்டார் வுமன் கேர் இன்ஷூரன்ஸ் பாலிசி

தனித்துவமான பாலிசி: பெண்களுக்கு பலதரப்பட்ட நன்மைகளை வழங்குவதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட பாலிசி

ஆட்டோமேட்டிக் ரீஸ்டோரேஷன்: பாலிசி காலத்தில் ஒரு முறை 100% காப்பீடு தொகை ரீஸ்டோர் செய்யப்படும்

மகப்பேறு கட்டணங்கள்: நார்மல் & சிசேரியன் மகப்பேறு சிகிச்சைக்கான கட்டணம் கவர் செய்யப்படும் (பிறப்புக்கு முந்தைய மற்றும் பிறப்புக்கு பிறகான கட்டணம் உட்பட)

View Plan

Young Star Insurance Policy

யங் ஸ்டார் இன்ஷூரன்ஸ் பாலிசி

ஆட்டோமேட்டிக் ரீஸ்டோரேஷன்: பாலிசி காலத்தில் 100% கவரேஜ் தொகை ஒருமுறை ரீஸ்டோர் செய்யப்படும்.

இடைக்கால சேர்க்கை: புதிதாக திருமணம் செய்த மனைவி, சட்டப்பூர்வமாக தத்தெடுக்கப்பட்ட குழந்தை மற்றும் புதிதாக பிறந்த குழந்தை ஆகியோரை பாலிசியின் இடைக்காலத்தில் சேர்க்கலாம்.

லாயல்டி தள்ளுபடி: 36 வயதுக்கு முன் பாலிசியைத் தேர்ந்தெடுத்து, 40 வயதுக்கு மேல் தொடர்ந்து ஒவ்வொரு முறை பாலிசியை புதுப்பிப்பிக்கும் போதும் பயனர்களுக்கு 10% தள்ளுபடி கிடைக்கும்.

View Plan

Senior Citizen Health Insurance

சீனியர் சிட்டிசன் ரெட் கார்பெட் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி

முதியோர்களுக்கான கவரேஜ்: 60 - 75 வயதுக்குட்பட்டவர்களுக்காக வாழ்நாள் முழுவதும் புதுப்பித்தல் வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது

வெளிநோயாளருக்கான கவரேஜ்: நெட்வொர்க் மருத்துவமனைகளில் வெளிநோயாளராக பெறும் மருத்துவ ஆலோசனைகளுக்கான கட்டணத்துக்கும் கவரேஜ் பெறுங்கள்

காப்பீட்டுக்கு முந்தைய மருத்துவ சோதனை: இந்த பாலிசியைப் பெற, காப்பீட்டுக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை தேவையில்லை

View Plan

Trending
Family Health Insurance

ஃபேமிலி ஹெல்த் ஆப்டிமா இன்ஷூரன்ஸ் பிளான்

ஆட்டோமேட்டிக் ரீஸ்டோரேஷன்: காப்பீட்டுத் தொகையில் 100% பாலிசி ஆண்டில் மூன்று முறை ரீஸ்டோர் செய்யப்படும்

சாலை போக்குவரத்து விபத்துக்கான கூடுதல் காப்பீட்டுத் தொகை: கவரேஜ் வரம்பு தீர்ந்துவிட்டால், சாலை போக்குவரத்து விபத்துக்கான காப்பீட்டுத் தொகை அதிகரிக்கப்படும்

ரீசார்ஜ் நன்மை: கவரேஜ் வரம்பு தீர்ந்தால் பாலிசி ஆண்டில் ஒருமுறை கூடுதல் இழப்பீடு பெறுங்கள்

View Plan

Star Comprehensive Insurance Policy

ஸ்டார் காம்ப்ரிஹென்சிவ் இன்ஷூரன்ஸ் பாலிசி

ஆட்டோமேட்டிக் ரீஸ்டோரேஷன்: பாலிசி ஆண்டில் ஒருமுறை அடிப்படை காப்பீட்டுத் தொகையில் 100% திரும்பப் பெறலாம்

பை-பேக் PED: முன்பே இருக்கும் நோய்களுக்கான காத்திருப்பு காலத்தை குறைக்க உதவும் ஆப்ஷனல் கவரேஜ் இது

இடைக்கால சேர்க்கை: புதிதாக திருமணம் செய்த மனைவி மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைக்கு கூடுதல் பிரீமியம் செலுத்தும் பட்சத்தில் அவர்களுக்கும் கவரேஜ் கிடைக்கும்

View Plan

Arogya Sanjeevani Policy

ஆரோக்ய சஞ்சீவனி பாலிசி, ஸ்டார் ஹெல்த் அன்ட் அலைட் இன்ஷூரன்ஸ் கோ லிமிடெட்.

கிராமப்புறங்களுக்கான தள்ளுபடி: கிராமப்புற மக்களுக்கு பிரீமியத்தில் 20% தள்ளுபடி
நவீன சிகிச்சைகள்: காப்பீடு செய்யப்பட்ட தொகையில் 50% வரை நவீன சிகிச்சைகளுக்கான காப்பீட்டைப் பெறுங்கள்
ஆயுஷ் கவர்: ஆயுஷ் சிகிச்சைகளில், மருத்துவமனையில் சேர்க்கும் செலவுகளை உள்ளடக்கியது

View Plan

Top-up Health Insurance

சூப்பர் சர்ப்ளஸ் இன்சூரன்ஸ் பாலிசி

குறை நிரப்பு திட்டம்: மலிவு பிரீமியத்தில் மேம்படுத்தப்பட்டஉடல்நல பாதுகாப்பைப் பெறுங்கள்
ரீசார்ஜ் பலன்:  காப்பீட்டுத் தொகை தீர்ந்தால், கூடுதல் செலவு எதுவுமில்லாமல் கூடுதல் இழப்பீட்டைப் பெறுங்கள்
நீண்ட கால தள்ளுபடி: 2 வருட காலத்திற்கு பாலிசி தேர்ந்தெடுக்கப்பட்டால், 5% பிரீமியம் தள்ளுபடி கிடைக்கும்

View Plan

Star Health Premier Insurance Policy

ஸ்டார் ஹெல்த் ப்ரீமியர் இன்ஷூரன்ஸ் பாலிசி

சிறப்பு பாலிசி: அதிகபட்ச வயது வரம்பு ஏதுமின்றி 50 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

பாலிசிக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை: இந்த பாலிசியைப் பெற, காப்பீட்டுக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை தேவையில்லை.

மருத்துவ பரிசோதனைக்கான தள்ளுபடி: பாலிசியின் தொடக்கத்தில் பட்டியலிடப்பட்ட மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டால் ப்ரீமியத்தில் 10% தள்ளுபடி கிடைக்கும்.

View Plan

நம் வாழ்வில் குடும்பம் என்பது ஒரு வரமாகவும், மிக முக்கிய அங்கமாகவும் உள்ளது. மகிழ்ச்சியான குடும்பம் என்பது அன்பு மற்றும் நல்ல ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்க வேண்டும். இந்த காரணத்திற்காக, ஸ்டார் ஹெல்த் பல்வேறு குடும்ப நல மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களை வழங்குகிறது.

உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் மனதில் கொண்டு, குடும்ப நல மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களை நாங்கள் வடிவமைத்துள்ளோம். உங்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரையும் பாதுகாப்பதற்காக நீங்கள் சிறந்த தீர்வுகளை தேர்ந்தேடுப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த திட்டங்கள் பல்வேறு பலன்களை வழங்குகின்றன.

 

குடும்ப நல மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தினை வாங்க வேண்டியதற்கான 5 முக்கிய காரணங்கள்

 

1. நிதிசார் பாதுகாப்பு  

 

ஒரு நல்ல குடும்ப நல மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்வது என்பது ஏதாவது ஒரு கடினமான மருத்துவத் தேவைகள் ஏற்படும் சூழ்நிலையில் உங்கள் நிதிப் பொறுப்புகளை குறைப்பதை உறுதி செய்கிறது. சில அவசர மருத்துவத் தேவைகள் ஏற்படும் போது திடீரென மருத்துவ சிகிச்சையை பெறுவதால், உங்களது நிதி நிலைத்தன்மை கடுமையாக பாதிக்கப்படலாம்; அதனால் நீங்கள் ஏற்கனவே மேற்கொண்டுள்ள திட்டங்களும் பாதிக்கப்படலாம். மாறிவரும் வாழ்க்கை முறையால், கடுமையான நோய்கள் மற்றும் உடல்நல பாதிப்புகளுக்கு நாம் உள்ளாகிறோம். இதுபோன்ற நிகழ்வுகளில், தேவையான பணத்தை பெறுவது என்பது கடினமாகிறது; இந்த சூழ்நிலையில் தான் மருத்துவக் காப்பீடு உங்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும். உங்கள் பாலிசியின் வகையைப் பொறுத்து மருத்துவமனைச் செலவுகள், சிகிச்சை செலவுகள், வீட்டிலேயே மருத்துவ பார்க்கும் செலவுகள், ஆம்புலன்ஸ் கட்டணங்கள் மற்றும் பல்வேறு செலவுகளை ஈடுகட்ட உங்களது மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் உங்களுக்கு உதவும்.

 

2. மன அமைதி 

 

ஒரு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியில் முதலீடு செய்வது என்பது உங்களது அன்புக்குரியவர்களின் மருத்துவ செலவுகளுக்கான தொகையை தயாராக வைப்பதை உறுதி செய்து உங்களுக்கு மன அமைதியைத் தருகிறது. நிதி ரீதியாக நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் பாதுகாப்பாக இருக்கும்பட்சத்தில், ​​உடல் நல சிக்கலிலிருந்து மீண்டுவருகையில் அதிக மன அமைதி கிடைக்கிறது.

 

3. தரமான சிகிச்சை

 

குடும்ப நல மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தரமான மருத்துவப் பாதுகாப்பைப் பெறலாம்; இந்தியாவின் பல நகரங்களில் உள்ள நெட்வொர்க் மருத்துவமனைகளில் கேஷ்லெஸ் சிகிச்சையைப்  பெறலாம். ஒருவர் தனக்கு விருப்பமான மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம்.

 

4. அதிகரித்து வரும் மருத்துவ செலவுகள்

 

இன்றைய நிதர்சனம் என்னவென்றால், மருத்துவம் உட்பட எல்லாவற்றின் விலையும் உயர்ந்து வருகிறது. சராசரி மருத்துவச் செலவானது சீராக உயர்ந்துள்ளதால், சில சிகிச்சைகள் சாமானியனுக்குச் கட்டுப்படியாகாத ஒன்றாகிவிட்டன. ஒரு நல்ல குடும்ப நலக் காப்பீட்டுத் திட்டமானது, சேமித்துவைத்த பணத்தை  இழக்காமல் ஒரு குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் சிறந்த சிகிச்சையைப் பெறுவதை உறுதிசெய்வதாக இருக்கும்.

 

5. வரி விலக்கு

 

வருமான வரிச் சட்டம், 1961-இன் பிரிவு 80D இன் கீழ், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு செலுத்தப்படும் பிரீமியத்தின் மீதான வரிச் சலுகைகளை பாலிசிதாரர் பெற முடியும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நீங்கள் மருத்தவக் காப்பீட்டு பிரீமியங்களைச் செலுத்தினால், வரி பிடித்தங்களை ஒன்றாக இணைத்து, ஒவ்வொரு ஆண்டும் வரி பிடித்தங்களைப் பெறலாம்.

 

பரிந்துரைக்கப்படும் குடும்ப நல மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள்

 

யங் ஸ்டார் இன்ஷூரன்ஸ் பாலிசி (UIN: SHAHLIP23164V072223)

 

இந்த யங் ஸ்டார் இன்ஷூரன்ஸ் பாலிசி என்பது குடும்பத்தின் ஆரோக்கியமான நல்வாழ்வின் மீது கவனம் செலுத்தும், வயது அதிகரித்து வரும், பொறுப்புள்ள  40 வயதுக்குட்பட்ட நடுத்தர பிரிவினருக்கான காப்பீடாகும். இன்ஷூர் செய்யப்பட்ட குடும்பம் இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துடன் மருத்துவமனையில் சேர்ந்தால் -  ஏற்படும் அனைத்து மருத்துவச் செலவுகளையும் ஈடுகட்ட முடியும். இத்திட்டம் ஆட்டோமேட்டிக் ரீஸ்டோரேஷன், நவீன சிகிச்சை பெறும் வசதி, சாலை போக்குவரத்து விபத்து (RTA), பிரசவ செலவுகள் (கோல்டு பிளானின் கீழ்) போன்ற சிறப்பு அம்சங்களை உள்ளடக்கியதாகும். இந்த இன்ஷூரன்ஸ் பாலிசி 18 முதல் 40 வயது வரையிலான நபர்களுக்குக் கிடைக்கிறது.



இந்த பாலிசியை தனிநபர் காப்பீடாக அல்லது ஃப்ளோட்டர் அடிப்படையில் பெறலாம். வாழ்நாள் முழுவதும் புதுப்பிக்கும் வசதியுடன் வரும் இந்த பாலிசியை ஃப்ளோட்டர் அடிப்படையில் பெற்றால் - பாலிசிதாரர், மனைவி மற்றும் சார்ந்து வாழும் மூன்று குழந்தைகள் வரை (2 பெரியவர்கள் + 3 குழந்தைகள்) பலன் பெறலாம். 91 நாட்கள் முதல் 25 வயது வரையிலான சார்ந்திருக்கும் குழந்தைகளை இதில் சேர்க்கலாம்.



இந்த யங் ஸ்டார் இன்ஷூரன்ஸ் பாலிசியை தனிநபர் அடிப்படையில் பெற்றால்₹ 3 லட்சம்  என்கிற விரிவான சம் இன்ஷூர்டு ஆப்ஷனையும், மற்றும் தனிநபர் & ஃப்ளோட்டர் அடிப்படையில் பெற்றால் ₹ 5 / 10 / 15 / 20 / 25 / 50 / 75 / 100 லட்சம் என்கிற விரிவான சம் இன்ஷூர்டு ஆப்ஷனையும் வழங்குகிறது. இதில் 1 வருடம்/2 ஆண்டுகள்/3 ஆண்டுகள் வரை பாலிசி காலம் உள்ளது. பிரீமியத்தை காலாண்டு மற்றும் அரையாண்டுக்கு ஒருமுறை செலுத்தலாம். பிரீமியத்தை வருடாந்திரமாகவும், பைனியல் (2 ஆண்டுகளுக்கு ஒருமுறை) மற்றும் ட்ரினியல் (3 ஆண்டுகளுக்கு ஒருமுறை) முறையிலும் செலுத்தலாம்.

 

ஃபேமிலி ஹெல்த் ஆப்டிமா இன்ஷூரன்ஸ் ப்ளான் (UIN: SHAHLIP23164V072223)

 

இந்த ஃபேமிலி ஹெல்த் ஆப்டிமா இன்ஷூரன்ஸ் ப்ளான் என்பது, 18 முதல் 65 வயது வரையிலான அனைவருக்குமான ஒரு காப்பீடாகும். இந்தப் பாலிசியானது பாலிசிதாரர், மனைவி, எண்ணிக்கையில் மூன்றிற்கு அதிகமாகாமல் சார்ந்திருக்கும் குழந்தைகள், சார்ந்திருக்கும் பெற்றோர் மற்றும் சார்ந்திருக்கும் மாமனார்-மாமியார் உட்பட ஒரு விரிவான குடும்பக் காப்பீட்டை வழங்குகிறது.



இந்த ஹெல்த் இன்ஷூரன்ஸ் திட்டத்தின் கீழ் மொத்த காப்பீட்டுத் தொகை ரூ. ₹ 3 / 4 / 5 / 10 / 15 / 20 / 25 லட்சம் ஆகும். கிளெய்ம் செய்யப்படாத ஒவ்வொரு ஆண்டிற்கும், பாலிசியில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கை வரை மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்வதை பாலிசி கவர் செய்கிறது. இந்த பாலிசியானது, காப்பீட்டுக் காலத்தின் போது, ​​கவரேஜ் தொகை முழுமையான தீர்ந்து போகும் ஒவ்வொரு பட்சத்திலும் 100% இன்ஷூரன்ஸ் தொகையை 3 முறை தானாகவே ரீஸ்டோர் செய்கிறது.



மேலும், இந்த ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டமானது - அனைத்து பகல்நேர சிகிச்சை செயல்முறைகள், இறந்தவர் உடலை அனுப்புதல், உடன் இருப்பவருக்கான பயணம், உள்நாட்டில் அவசர சிகிச்சைக்காக கொண்டுசெல்தல், வீட்டிலேயே பெறும் மருத்துவ சிகிச்சை, உறுப்பு மாற்று சிகிச்சைக்காக தானம் செய்பவருக்கான செலவுகள், பிறந்த 16வது நாள் முதல் பச்சிளம் குழந்தைக்கான காப்பீடு, ரீசார்ஜ் பெனிஃபிட், சாலை விபத்துக்களுக்கான கூடுதல் சம் இன்ஷூர்டு தொகை, மருத்துவ உதவியுடன் கூடிய மகப்பேறு சிகிச்சை போன்ற பல்வேறு சூழல்களில்  காப்பீட்டுத் தொகை வழங்கும் தனித்துவமான அம்சங்களை அளிக்கிறது.

 

ஸ்டார் காம்ப்ரிஹென்சிவ் இன்ஷூரன்ஸ் பாலிசி (UIN: SHAHLIP22028V072122)

 

இந்த ஸ்டார் காம்ப்ரிஹென்சிவ் இன்ஷூரன்ஸ் பாலிசி யானது, ரூ. 1 கோடி வரையிலான காப்பீட்டுத் தொகையை வழங்குகிறது. மருத்துவச் செலவுகள் அதிகரித்து வரும் இன்றைய சூழலில், இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் பாலிசிதாரர்களுக்கு மருத்துவ நெருக்கடியின் போது நிதி உதவியை அளிக்கிறது. ஒரு முழுமையான குடும்ப நல மருத்துவ காப்பீட்டுத் திட்டமான இது, ஒரே காப்பீட்டுத் தொகையின் கீழ் குடும்பத்தின் உறுப்பினர்களுக்கு கவரேஜை வழங்குகிறது.



இந்த பாலிசியின் கீழ், வரையிலான, 3 மாத வயதைக் கடந்த சார்ந்திருக்கும் குழந்தைகள் உட்பட 65 வயது வரையிலான குடும்ப உறுப்பினர்கள் வரை இந்த காப்பீட்டின் கீழ் கவரேஜைப் பெறலாம். சார்ந்திருக்கும் குழந்தைகளுக்கு 25 வயதாகும் வரை காப்பீட்டின் பாதுகாப்பை பெறலாம். வாழ்நாள் முழுவதும் புதுப்பிப்பதற்கான உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.



இந்தக் பாலிசியானது உங்கள் குடும்பத்தின் மருத்துவத் தேவைகளுக்கு பல்வேறு வகையான பலன்களை வழங்குகிறது. ஸ்டார் காம்ப்ரிஹென்சிவ் இன்ஷூரன்ஸ் பாலிசியானது - பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை முறைகள், சுகப்பிரசவம் மற்றும் சிசேரியன் பிரசவ செலவுகள், புதிதாகப் பிறந்த பச்சிளம் குழந்தைகான காப்பீடு, வசிப்பிடத்தில் மருத்துவ சிகிச்சை பெறுதல், வெளி நோயாளராக மருத்துவ ஆலோசனை பெறுதல், மருத்துவமனை கேஷ் பெனிஃபிட்ஸ் உள்ளிட்ட பல சூழல்களில் ஏற்படும் மருத்துவச் செலவுகளை ஈடு செய்கிறது. இந்தக் காப்பீடானது விபத்தில் மரணமடைவது, மற்றும் நிரந்தரமாக முழுமையாக ஊனமடைந்தவர்களுக்கு உலகளாவிய பாதுகாப்பையும் வழங்குகிறது.

 

ஆரோக்ய சஞ்சீவனி பாலிசி, ஸ்டார் ஹெல்த் அண்ட் அல்லைடு இன்ஷூரன்ஸ் கோ. லிமிடெட் (UIN: SHAHLIP22027V032122)

 

இந்த ஆரோக்ய சஞ்சீவனி பாலிசி, ஸ்டார் ஹெல்த் அண்ட் அல்லைடு இன்ஷூரன்ஸ் கோ. லிமிடெட், காப்பீடானது IRDAI-வின் உத்தரவின்படி வழங்கப்படும் ஒரு ஸ்டான்டர்டு பாலிசி ஆகும்; இது அவசர மருத்துவத் தேவைகளின் போது உங்களுக்கும், உங்களது குடும்பத்தினருக்கும் நிதி பாதுகாப்பளிக்கும் நோக்கில் வழங்கப்படுகிறது. இதன் ஃபேமிலி ஃப்ளோட்டர் திட்டமானது 18 முதல் 65 வயது வரை உள்ளவர்களுக்கு, வாழ்நாள் முழுவதற்குமான புதுப்பித்தலுடன் கிடைக்கிறது. 3 மாதங்கள் முதல் 25 வயது வரை உள்ள சார்ந்திருக்கும் குழந்தைகள் இந்த பாலிசியின் கீழ் பாதுகாக்கப்படுகிறார்கள்.



இந்த ஆரோக்ய சஞ்சீவனி காப்பீட்டுத் திட்டமானது - ரூ. 50,000/- முதல் ₹ 10 லட்சம் வரையிலான காப்பீட்டுத் தொகையுடன் (ரூ. 50,000/- மடங்குகளாக) உங்களையும், உங்கள் மனைவியையும், சார்ந்திருக்கும் குழந்தைகளையும், பெற்றோர்/மாமனார்/மாமியாரையும்  சேர்த்துக்கொள்ள அனுமதிக்கிறது. எளிமையான, ஆனால் அத்தியாவசிய பலன்கள் நிறைந்த இந்த காப்பீடானது ஒரு குடும்பத்திற்கான சிறந்த தேர்வாகும். உள்நோயாளராக  மருத்துவமனையில் சேர்வது, பகல்நேர சிகிச்சைகள், ஆயுஷ் சிகிச்சை, சாலை வழி ஆம்புலன்ஸ் செலவுகள், கண்புரை அறுவை சிகிச்சை, நவீன சிகிச்சைகள் மற்றும் பல சூழ்நிலைகளில் காப்பீட்டின் பாதுகாப்பை வழங்குகிறது. கிராமப்புற மக்களுக்கு இந்தக் காப்பீடு பிரீமியத்தில் 20% தள்ளுபடியையும் வழங்குகிறது.

 

சீனியர் சிட்டிசன்ஸ் ரெட் கார்பெட் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி (UIN: SHAHLIP22199V062122)

 

சீனியர் சிட்டிசன்ஸ் ரெட் கார்பெட் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி, என்பது 60 முதல் 75 வயதுடைய மூத்த குடிமக்களுக்கு ரூ. 1 / 2 / 3 / 4 / 5 / 7.5 / 10 / 15 / 20 / 25 லட்சம் காப்பீட்டுத் தொகையை வழங்கும் ஒரு இன்ஷூரன்ஸ் திட்டமாகும். இந்த பாலிசியை அதன்பிறகு வாழ்நாள் முழுவதும் புதுப்பித்துக்கொள்ளலாம். இத்திட்டத்தின் மூலம், வயது முதிர்ந்தோர் தங்களது மருத்துவ செலவுகளை எளிமையாக கவனித்துக்கொள்ளலாம். 



காப்பீட்டிற்கு முந்தைய மருத்துவ பரிசோதனைக்கான அவசியமின்மை, பகல்நேர சிகிச்சைகள், ஏற்கனவே இருக்கும் நோய்கள் (12 மாதங்கள் காத்திருப்பு காலம்), நவீன சிகிச்சைகள் ஆகியவற்றிற்கான கவரேஜ் மற்றும் வயது எதுவாக இருந்தாலும் மாறாமல் இருக்கும் பிரீமியங்கள் போன்ற பல நன்மைகளை இந்த காப்பீடு வழங்குகிறது. இந்த பாலிசியானது 1, 2 அல்லது 3 வருட காலத்திற்குக் கிடைக்கிறது.

 

ஸ்டார் சூப்பர் சர்ப்லஸ் (ஃப்ளோட்டர்) இன்ஷூரன்ஸ் பாலிசி (UIN: : SHAHLIP22035V062122)

 

ஸ்டார் சூப்பர் சர்ப்லஸ் (ஃப்ளோட்டர்) இன்ஷூரன்ஸ் பாலிசி என்பது, குடும்பத்திற்குத் தேவையான காப்பீட்டுப் பாதுகாப்பை வழங்கும் ஒரு டாப்-அப் திட்டமாகும்; இது உங்களது அடிப்படை பாலிசியின் அதிகபட்ச காப்பீட்டுத் தொகை முழுவதுமாக நிறைவடைந்த பிறகு, அதற்கு மேலும் நிதி உதவிகளை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டதாகும். கட்டுப்படியாகக் கூடிய ஒரு ப்ரீமியத்துடன் அதிகமான காப்பீட்டுத் தொகையை வழங்குகிறது. ஒரு டாப்-அப் திட்டமான இது, உங்களது தற்போதைய காப்பீட்டுத் திட்டம் வழங்கும் தொகை பத்தாமல் போகும் பட்சத்தில், இது உங்கள் கட்டணங்களை ஈடுகட்ட உதவுகிறது. 



இந்த பாலிசியானது, 18 முதல் 65 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஃப்ளோட்டர் அடிப்படையில் கிடைக்கிறது, மற்றும் 91 நாட்கள் முதல் 25 வயது வரை உள்ள சார்ந்திருக்கும் குழந்தைகளையும் உள்ளடக்கியதாகும்.



ஒரு/இரண்டு வருட பாலிசி காலத்துடன் கூடிய சில்வர் மற்றும் கோல்டு திட்டங்களுடன் கிடைக்கும் இந்த காப்பீட்டுத் திட்டம், வாழ்நாள் முழுவதும் புதுப்பிக்கும் வசதியை உள்ளடக்கியது. பகல்நேர சிகிச்சைகள், உள்நோயாளராக மருத்துவமனையில் சேர்க்கப்படுதல், நவீன சிகிச்சை போன்றவை இத்திட்டத்தின் கீழ் கிடைக்கும் முக்கிய கவரேஜில் அடங்கும். கோல்டு ப்ளானின் கீழ் பிரசவ செலவுகள், உறுப்பு தானம் செய்பவர்களுக்கான செலவுகள், ஏர் ஆம்புலன்ஸ் பாதுகாப்பு, ரீசார்ஜ் பலன்கள் ஆகியவை கிடைக்கும்.

 

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் பலன்களை அறிந்து கொள்ளுங்கள்

 

‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது’ அனைவரும் அறிந்த பழமொழி. மருத்துவக் காப்பீடு என்பது நம் வாழ்வில் இன்றியமையாததாக மாறிவிட்டது. ஆரோக்கியமான வாழ்வை போலவே மருத்துவக் காப்பீடும் மிக முக்கியமானதாகும். எதிராபாராத மருத்துவ செலவுகளை சமாளிக்க இது பெரிதும் உதவுகிறது. இது போன்ற திட்டமிடப்படாத தருணங்களில் மருத்துவக் காப்பீடு இல்லாமல் போனால் அது பெரும் சிக்கலாக மாறிவிடும். எனவே, ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் ஃபேமிலி ப்ளான்களின் பலன்களை இங்கே காணலாம்.

 

1.உள்நோயாளராக மருத்துவமனையில் சேர்தல் 
2.மருத்துவமனையில் சேர்வதற்கு முன்பு.
3.மருத்துவமனையிலிருந்து சிகிச்சை பெற்று திரும்பிய பிறகு
4.வீட்டிலேயே மருத்துவ சிகிச்சைகளை பெறுதல்
5.ஆம்புலன்ஸ் கட்டணங்கள்
6.பகல் நேர சிகிச்சைகள்
7.ஆயுஷ் சிகிச்சைகள்.
8.இரண்டாவது மருத்துவரின் கருத்துகள்
9.பிரசவ மற்றும் பச்சிளம் குழந்தைக்கான காப்பீடு
10.உடல் உறுப்பு தான கட்டணங்கள்
11.நவீன மருத்துவ செலவுகள்
12.சாலை விபத்துகள்
13.கண் புரை சிகிச்சைகள்
14.உடல் பருமனுக்கான அறுவை சிகிச்சை
15.தனி நபர் விபத்து காப்பீடு
16. வான்வழி ஆம்புலன்ஸ்
17.உடன் இருப்பவரின்  பயணக் கட்டணம்
18. பகிர்ந்து தங்கும்  ஆதாயங்கள்.
19.ஆட்டோமேடிக் ரீஸ்ட்டோரேஷேன் 
20.மருத்துவ ஆலோசனை
21.வெளிநோயாளர்களுக்கான பல் மற்றும் கண் சார்ந்த சிகிச்சைகள்.
22.ஹாஸ்பிடல் கேஷ் பெனிஃபிட்
23.வருடாந்திர மருத்துவப் பரிசோதனை
24.வெல்னஸ் ரீவார்ட்
25.டெலிமெடிஸின் சேவை- ஸ்டாருடன் பேசுங்கள்

 

சரியான  ஃபேமிலி ஹெல்த் இன்ஷூரன்ஸை தேர்ந்தெடுப்பது எப்படி?

 

ஏராளமான ஃபேமிலி ஹெல்த் இன்ஷூரன்ஸ்கள் இருப்பதால், சரியானதொரு குடும்ப நல மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது என்பது ஒரு கடினமான பணியாக இருக்கலாம். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை  தேர்வு செய்வதற்கு முன்பு கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களின் பட்டியல் இங்கே வழங்கப்பட்டுள்ளது.

 

  • காப்பீட்டுத் திட்டங்களை ஒப்பிட்டு பாருங்கள்
  • சம்மந்தப்பட்ட மருத்துவமனையின் கிளைம் செயல்முறையை அறிந்து கொள்ளுங்கள்
  • கிளைம்-செட்டில்மெண்ட் ரேஷியோவை கவனியுங்கள்
  • உங்கள் ஊரின் அஞ்சல் குறியீட்டு எண்ணை தெரிந்து கொள்ளுங்கள்
  • உங்கள் குடும்ப உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை
  • உங்கள் குடும்பத்தின் மூத்த உறுப்பினரின் வயதை அறிந்து கொள்ளுங்கள்
  • உங்களுக்குத் தேவையான மொத்த காப்பீட்டுத் தொகையை கணக்கிட்டு கொள்ளுங்கள்
  • உங்களுக்குப் பொருத்தமான காப்பீட்டுத் திட்டத்தை தேர்ந்தெடுங்கள்

 

அதிகரித்துவரும் மருத்துவ செலவுகளாலும் அன்றாடம் அதிகரிக்கும் உடல்நல பிரச்சனைகளாலும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் ஒவ்வொரு குடும்பத்தின் அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டது. எதிர்பாரா மருத்துவ பிரச்சனைகள் எந்தவொரு எச்சரிக்கையும் விடுக்காமல் வந்துவிடும், அதற்கான மருத்துவ செலவுகள் நம்முடைய வாழ்நாளின் மொத்த சேமிப்பையும் சுரண்டிவிடும்.  ஆகவே மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் இன்றைய காலக்கட்டத்தில் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. ஆகவே நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் ஒரு சிறந்த மருத்துவக் காப்பீட்டைப் பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

 

பாலிசி பெறுவதற்கான தகுதி வரம்பு

 

ஹெல்த் இன்ஷூரன்ஸ் வாங்கும் போது, ​​நம் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அதற்குத் தகுதியானவர்களா என்று நாம் யோசிப்பதுண்டு. காப்பீட்டுத் தகுதி முதன்மையாக பின்வருவனவற்றால் தீர்மானிக்கப்படுகிறது:

 

  • வயது

18 முதல் 65 வயது வரை உள்ள எந்த பெரியவர்களும் குடும்ப நல மருத்துவக் காப்பீட்டை பெறலாம். இருப்பினும், சார்ந்திருக்கும் குழந்தைகளுக்கு 16 நாட்கள் முதல் 25 வயது வரை காப்பீடு வழங்கப்படுகிறது.

 

  • முந்தைய மருத்துவ பாதிப்புகள்/ ஏற்கனவே இருக்கும் நோய்கள்

மருத்துவக் காப்பீட்டை வாங்கும்போது, ​​உங்களுக்கு ஏற்கனவே இருக்கும் மருத்துவ பிரச்சனைகளை தெரிவிக்க வேண்டும். காத்திருப்பு காலத்திற்குப் பிறகு ஏற்கனவே இருக்கும் சில நோய்களுக்கு காப்பீட்டின் மூலம் சிகிச்சை பெறலாம். கார்டியாக் கேர், டையாபிடிஸ் சேஃப், கேன்சர் கேர் மற்றும் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான ஸ்பெஷல் கேர் போன்ற பலன்ககளை மற்ற உறுப்பினர்கள் பெறலாம்.

 

உங்கள் ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸை எப்படி கிளைம் செய்வது?

 

நாங்கள் வாடிக்கையாளர்களுக்கு எளிதான மற்றும்  சிக்கலற்ற கிளைம் செயல்முறைகளை வழங்குவதன் மூலம்,  சரியான நேரத்தில்  அனைத்து செட்டில்மென்ட்களையும் வழங்குவதை உறுதி செய்கிறோம். மருத்துவ காப்பீட்டில் நிபுணர்களாகத் திகழும் நாங்கள், இந்தியா முழுவதும் உள்ள எங்கள் நெட்வொர்க்கில் இருக்கும் அனைத்து மருத்துவமனைகளிலும் பணமில்லா வசதியை வழங்குகிறோம்.

வாடிக்கையாளர் சேவை, கவனம் செலுத்துதல், வேகமாக செயல்படுதல் மற்றும் செயல்திறன் ஆகியவற்றில் உயர்தரத்தை  கடைபிடிப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். வாடிக்கையாளர்களின் கருத்து எங்களுக்கு முக்கியமானது, மேலும் உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவும், அவற்றை விஞ்சும் வண்ணம் எங்களுடைய செயல்பாடுகள் இருப்பதையும் நாங்கள் உறுதி செய்கிறோம்.

 

கிளைம்களை துரிதமாக பெறுவது எப்படி?

 

  • ஸ்டார் ஹெல்த் இணையதளத்தில் நெட்வொர்க் மருத்துவமனைகளின் பட்டியல் உள்ளது, இதில் ஒப்பந்தத்தில் உள்ள நெட்வொர்க் மருத்துவமனைகளும் அடங்கும்
  • எங்கள் இணையதளத்தில் (https://www.starhealth.in/network-hospitals) உள்ள நெட்வொர்க் மருத்துவமனை பட்டியலைப் பயன்படுத்தி, உங்கள் வீட்டின் அருகில் உள்ள நெட்வொர்க் மருத்துவமனையைக் கண்டறியவும்.
  • திட்டமிடலுடன் மருத்துவமனையில் சேர்வதற்கு, காப்பீடு செய்யப்பட்ட நோயாளரின் , பாலிசி நகல்; காப்பீடு செய்யப்பட்ட நோயாளர் மற்றும் புரோபோசரின் அடையாளச் சான்றான பான் கார்டு, ஆதார் அட்டை போன்றவற்றுடன் மருத்துவமனையைத் தொடர்பு கொள்ளவும், அவை ப்ரீ-ஆத்தரைஷேஷன் படிவத்துடன் சேர்த்து அனுப்பப்படும்.
  • உங்கள் தொடர்பு எண் ப்ரீ-ஆத்தரைசேஷன் படிவத்தில் சேர்க்கப்பட வேண்டும்
  • விவரங்கள் முழுமையாக இல்லாத பட்சத்தில் இருந்தால் அங்கீகரிக்க விடுக்கப்படும் கோரிக்கைகள் தாமதமாகலாம்.

 

கேஷ்லெஸ் வசதிக்கான நடைமுறைகள்:

 

நெட்வொர்க் மருத்துவமனையில் உள்ள காப்பீட்டு அலுவலரை அணுகவும். 1800 425 2255 / 1800 102 4477 என்ற எண்ணில் எங்களைத் தொடர்புகொள்வதன் மூலமோ அல்லது support@starhealth.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் மூலமோ தகவல் தெரிவிக்கலாம்.

 

  • கிளைம் எண்ணைப் பெற ஆப்பரேட்டரிடம் தெரிவிக்கவும்
  • கஸ்டமர் ID / பாலிசி எண்
  • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான காரணம்
  • மருத்துவமனையின் பெயர்
  • பாலிசிதாரர்/நோயாளரின் பெயர்

 

திட்டமிடலுடன் மருத்துவமனையில் சேர்வதற்கு, 7 முதல் 10 நாட்களுக்கு முன்பே தெரிவிக்கலாம், மேலும் அவசர காலத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது  24 மணி நேரத்திற்குள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது பற்றி எங்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

 

  • கிளைமைப் பதிவு செய்யவும்
  • நெட்வொர்க் மருத்துவமனையில்  உள்ள காப்பீட்டு அலுவலரை அணுகி ஆவணங்களைச் சமர்ப்பிக்கவும்.
  • ஸ்டார் க்ளைம்ஸ் குழுவிற்கு ஆவணங்கள் அனுப்பப்படும்.
  • எங்களது கிளைம் புராசஸிங் குழுவால் ஆவணங்கள் சரிபார்க்கப்படும்.
  • பணமில்லா சேவைக்கான ஒப்புதல்/வினவல்/மறுப்பு/ நிராகரிப்பு ஆகிய முடிவுகள் 2 மணி
  • நேரத்திற்குள் நெட்வொர்க் மருத்துவமனைக்குத் தெரிவிக்கப்படும்.
  • அங்கீகரிக்கபட்டால், பாலிசியின் நிபந்தனைகளின்படி கிளைம் செட்டில் செய்யப்படும்.
  • கட்டணத் தொகை நெட்வொர்க் மருத்துவமனையை அடையும்.

 

ரீஇம்பர்ஸ்மென்ட் கிளைம் செயல்முறைகள்: 

 

இன்ஷூரருக்கு (காப்பீட்டு நிறுவனம்) சிகிச்சை பற்றிய விவரங்கள் முன்கூட்டியே தெரிவிக்கப்படும் மற்றும் பாலிசிதாரர் மருத்துவமனைக்கு பணம் செலுத்துவார். மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டப்பின், பாலிசிதாரர் 15 நாட்களுக்குள்  தொகையைத் திரும்பப்பெற ரீஇம்பர்ஸ்மென்ட் கிளைம் செய்ய வேண்டும்.

 

ரீஇம்பர்ஸ்மென்ட் கிளைமின் போது சமர்ப்பிக்க வேண்டிய அசல் ஆவணங்கள்:

 

  • முறையாக பூர்த்தி செய்யப்பட்ட கிளைம்  படிவம், சிகிச்சை அளிக்கும் டாக்டரின் முத்திரை மற்றும் கையொப்பமுள்ள கிளைம்  படிவத்தின் பாகம் B
  • மருத்துவமைனயில் அனுமதிக்கப்படும் முன் செய்யப்பட மருத்துவ சோதனைகள் மற்றும் சிகிச்சை ஆவணங்கள்
  • மருத்துவமனையில் அளிக்கப்பட டிஸ்சார்ஜ் குறிப்பு 
  • எல்லா வித கட்டணங்களை உள்ளடக்கிய இறுதி பில்
  • மருத்துவமனை மற்றும் மருந்தகத்திலிருந்து பெறப்பட்ட பண ரசீதுகள்.
  • பரிசோதனைகளுக்கான பண ரசீதுகள் மற்றும் பரிசோதனை முடிவுகள்
  • மருத்துவர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் மயக்க மருந்து நிபுணர்களிடமிருந்து பெறப்பட்ட ரசீதுகள்
  • நோயைக் கண்டறிந்த  மருத்துவர் அளித்த சான்றிதழ்
  • பான் கார்டின் நகல், ரத்து செய்யப்பட்ட காசோலை அல்லது புரபோசரின் NEFT விவரங்கள்

 

உங்கள் கேள்விகளுக்கு தீர்வு காண எங்கள் 24/7 வாடிக்கையாளர் சேவையையும் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.

 

குடும்ப நல மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களை வாங்குவதன் பலன்கள் 

 

குடும்ப நல மருத்துவக் காப்பீடு உங்களுக்கு நெருக்கமானவர்களை உங்களுடன் ஒன்றாக வைத்திருக்க உதவுகிறது. இது மனக் கவலையைச் சமாளிப்பதில் உதவுகிறது, மற்றும் உங்களது மற்றும் உங்கள் அன்புக்குரியவரின் வாழ்க்கைத் தரத்தை பாதிக்கக்கூடிய எந்தவொரு உடல் நல பிரச்சனைகளையும் எதிர்கொள்ள உங்களை தயார்படுத்துகிறது. எளிமையாகச் சொன்னால், நீங்கள் எப்போதும் முக்கியத்துவம் தரும், உங்களுக்கு விருப்பமான நபர்களின் நலனில் கவனம் செலுத்த இது உங்களை அனுமதிக்கிறது.

 

வாழ்வில் உங்கள் குடும்பத்திற்கு மிகச் சிறந்தவற்றையே வழங்க விரும்புகிறீர்கள் என்பதை நாங்கள் புரிந்துவைத்துள்ளோம். இதன் காரணமாக, அவர்களின் நல்வாழ்வுக்கு இலகுவான அச்சுறுத்தல்கள்  ஏற்பட்டால் கூட சாத்தியமான சிறந்த சிகிச்சையுடன் அவற்றை நிவர்த்தி செய்வதை நீங்கள் உறுதி செய்யவேண்டியது அவசியமாகிறது.

 

ஸ்டார் ஹெல்த் குடும்ப நல காப்பீட்டுத் திட்டங்களின் நன்மைகள், இந்த இன்ஷூரன்ஸ துறையில் முன்னணி வகிக்கின்றன, மற்றும் அதன் பல்வேறு சலுகைகள் மூலம் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன.

 

உள்-நோயாளராக மருத்தவமனையில் சேர்தல்

 

உள்-நோயாளராக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கான அறை வாடகை, ICU கட்டணங்கள், அறுவைசிகிச்சை அறை கட்டணங்கள், மருத்துவர் கட்டணம், நர்சிங் கட்டணங்கள், மயக்க மருந்து உள்ளிட்ட பல கட்டணங்களை ஈடு  செய்ய எங்கள் காப்பீடுகள் உங்களுக்கு உதவுகின்றன. எங்களது மருத்துவமனைகளின் நெட்வொர்க்கில் இந்தியா முழுவதும் பணமில்லா சிகிச்சை பெறும் வசதிகள் உள்ளன.

 

பிரசவம் மற்றும் பச்சிளம் குழந்தை 

 

எங்கள் மருத்தவக் காப்பீட்டுத் திட்டங்கள், பிரசவத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய செலவுகள், சுகப் பிரசவம் மற்றும் சிசேரியன் பிரசவ செலவுகளுக்கான காப்பீட்டுத் தொகை கிடைப்பதை உறுதி செய்கின்றன. அத்தகைய காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், பாலிசி காலத்தின் போது கட்டணம் செலுத்தி பிரசவம் நடந்தால், பிறந்த குழந்தைக்கான சிகிச்சைகள், தடுப்பூசிகள் மற்றும் சிக்கல்களை சமாளிக்க, பாலிசி காலாவதியாகும் வரை குறிப்பிட்ட வரம்புகள் வரை கூடுதல் பிரீமியம் இல்லாமல் முதல் நாளிலிருந்து கவரேஜை பெறலாம்.

 

வெளிநோயாளருக்கான பல் மற்றும் கண் சிகிச்சை

 

எங்களது சிறப்பு மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள், பாலிசிதார் உடல்நல பாதிப்பிற்காக மருத்துவமனைக்குச் செல்வது, ஆலோசனைக் கட்டணங்கள் மற்றும் ஊசி, காயத்திற்கு மருந்து போடுதல் போன்ற பிற சேவைகள் போன்ற செலவுகளையும் ஈடு செய்கிறது. அதேபோல, மருந்தகத்தில் மருந்துகளுக்கான செலவுகள், ஆய்வகத்தில் எக்ஸ்ரே போன்ற நோய் கண்டறியும் பரிசோதனைகள், இரத்த பரிசோதனைகள் போன்றவை, மற்றும் நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய அவசியமில்லா சிறிய நடைமுறைகள் ஆகியவற்றையும் காப்பீட்டின் கீழ் கொண்டுவருகிறது. எங்கள் ஃபேமிலி மெடிகிளைம்  திட்டங்களின் கீழ், குறிப்பிட்ட காத்திருப்பு காலத்திற்குப் பிறகு, குறிப்பிட்ட வரம்பு வரையிலான தொகைக்கு நீங்கள் வெளிநோயாளராக பல் மற்றும் கண் சிகிச்சைகளை பெறலாம்.

 

உறுப்பு தானம் செய்பவருக்கான செலவுகள்

 

ஸ்டார் ஹெல்த்தின் பல்வேறு காப்பீட்டுத் திட்டங்களின் மூலம் உங்களுக்கு உறுப்பு தானம் செய்பவருக்கான செலவுகளை நீங்கள் நிர்வாகிக்கலாம். பாலிசிதாரருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும்போது, ​​பாலிசி உட்பிரிவுகளில் கூறியுள்ள குறிப்பிட்ட தொகை வரை அறுவை சிகிச்சை மற்றும் உறுப்பை அறுவைசிகிச்சை மூலம் எடுப்பதற்கான செலவை எங்கள் குடும்ப நல மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களால் ஈடுசெய்ய முடியும்.

 

மருத்துவப் பரிசோதனைகள்

 

"வரும் முன் காப்பதே நலம்". குடும்ப நலனுக்கான எங்களது மெடிகிளைம் பாலிசிகள் மூலம் காப்பீடு கோரப்படாத ஒவ்வொரு ஆண்டிற்குப் பிறகும் உங்களது உடல்நலப் பரிசோதனைக்கான  செலவுகளைப் பெறலாம்.

 

இரண்டாவது மருத்துவக் கருத்தை பெறும் வசதி 

 

பாலிசிதாரர்கள் ஸ்டார் ஹெல்த்தின் மருத்துவ நெட்வொர்க்கில் உள்ள மருத்துவரிடம் இரண்டாவது மருத்துவக் கருத்தைப் பெறுவதற்கான அனுமதி உள்ளது.

 

ஆயுஷ் சிகிச்சைகள்

 

இந்திய தர கவுன்சில்/ தேசிய சுகாதார அங்கீகார வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும்/அல்லது அரசு/அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் உங்கள் குடும்ப உறுப்பினர்கள்  உள்நோயாளராக சேர்க்கப்பட்டு பின்வரும் சிகிச்சைகளைப் பெற்றால் அதற்கான  செலவுகளை எங்கள் காப்பீட்டுத் திட்டங்கள் ஈடு செய்யும். பின்வரும் சிகிச்சைகளுக்கு பாலிசியில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகள் வரை காப்பீட்டுத் தொகையைப் பெறலாம்:

 

1. ஆயுர்வேதம் 
2. யுனானி
3. சித்த மருத்துவம்
4. ஹோமியோபதி

 

தனிநபர் விபத்துக்கான காப்பீடு

 

எங்களது காப்பீட்டுத் திட்டங்கள் தனிநபர் விபத்துக் காப்பீட்டை வழங்குகின்றன, இது பாலிசியில் குறிப்பிடப்பட்டுள்ள விபத்தின் காரணமாக பாலிசிதாரர் இறக்க நேர்ந்தாலோ அல்லது நிரந்தர முழுவதும் ஊனமுற்றாலோ மொத்த தொகையுடன் கூடிய பலனை வழங்குகிறது.

 

  ஸ்டார் வெல்னஸ் புரோகிராம்

 

ஸ்டார் வெல்னஸ் திட்டமானது, பாலிசிதாரர்கள் நல்ல உடல் இயக்கத்துடன் கூடிய ஆரோக்கியமான வாழ்க்கை முறையைத் துவங்க, மேம்படுத்த மற்றும் பராமரிக்க உதவ விழைகிறது. பாலிசிதாரர் நல்ல ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு, எங்களது பெரும்பாலான காப்பீட்டுத் திட்டங்கள் வழங்கும் ஸ்டார் வெல்னஸ் புரோகிராமை பயன்படுத்திக் கொள்ளலாம்.

 

இந்தத் திட்டத்தின் மூலம், உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நல்ல உடல் இயக்கத்துடன் கூடிய வாழ்க்கையை வாழ நாங்கள் ஊக்குவிக்கிறோம். எனவே, எங்கள் பாலிசிகளில், ஸ்டார் வெல்னஸ் புரோகிராமில் பங்கேற்பதன் மூலம் ஈட்டும் வெல்ன்ஸ் பாயின்ட்களுக்கு ஏற்ப பிரீமியத்தில் புதுப்பிக்கும் போது தள்ளுபடிகளை வழங்குகிறோம்.

 

ஆன்லைனில் மருத்துவக் காப்பீட்டை வாங்குவதன் நன்மைகள் என்ன?

 

  • நேரத்தை மிச்சப்படுத்தும்

உங்களுக்கு ஏற்ற இன்ஷுரன்ஸ் பாலிசியை எந்தவிதமான சிரமமும் இல்லாமல் ஆன்லைனில் வாங்கலாம். இது எளிதான ஆன்லைன் புதுப்பிப்புகளின் போதும் உதவுகிறது. மிகக் குறைந்த நேரத்தில் இணையத்தில் நேரடியாக பாலிசி விலை விவரங்களைப் பெறலாம்.

 

  • எளிதான ஒப்பீடுகள்

இந்த டிஜிட்டல் யுகத்தில், ஆன்லைனில் அதிக பாலிசிகளை ஒப்பிடுவது மிகவும் எளிதானது. பொதுவாக, ஒவ்வொரு காப்பீட்டு நிறுவனமும் தங்கள் இணையதளத்தில் விரிவான தகவல்களை வழங்குகிறார்கள்.

 

  • சரியான முடிவுகளை எடுப்பதில் உதவும்

சரியான தகவல்கள் , பாலிசி விலை விவரங்கள், பாலிசியின் நன்மைகள், விலக்கப்பட்ட நோய்களின் பட்டியல் மற்றும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் போன்ற தேவையான அனைத்து தகவல்களுக்கும் கிடைக்கும்.

வெவ்வேறு மருத்துவ காப்பீட்டுத் திட்டங்களை ஒப்பிடுவதை இத்தகவல்கள் எளிதாக்குகிறது.

இணையத்தில் உள்ள பாலிசிகளை ஒப்பிட்டு பெறும் தகவல்களைக் கொண்டு, பல்வேறு மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களை நம்மால் நன்கு புரிந்துகொள்ள முடிகிறது. இதன் மூலம் சிறந்த முடிவை எடுப்பதை உறுதி செய்யலாம்.

 

  • 24x7 தகவல் சேவை

உங்கள் காப்பீடு பற்றிய தகவல்களை 24 மணி நேரமும் ஆன்லைனில் பெறுவது சாத்தியமாகும்.

 

  • தள்ளுபடிகள்

இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் இணையதளத்தில் பெரும்பாலும் தள்ளுபடி விலையில் ஹெல்த் இன்ஷூரன்ஸை பெற முடியும். பெரும்பாலான ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகள், முதல் முறையாக காப்பீடு வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 5%தள்ளுபடி விலையில் கிடைக்கும்.

உதவி மையம்

குழப்பமாக உள்ளதா? எங்களிடம் பதில் உள்ளது

ஹெல்த் இன்ஷூரன்ஸ் தொடர்பான சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளவும்.