அதிகரிக்கும் அறை வாடகைபாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளின்படி, அறை, தங்குமிடம் மற்றும் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும் பட்சத்தில் அதனை கவர் அதிகரிக்கிறது. |
க்ளைம் பாதுகாப்பு (மருத்துவம் அல்லாத பொருட்களுக்கான கவரேஜ்)அடிப்படை பாலிசியின் கீழ் ஏற்றுக்கொள்ளக்கூடிய க்ளைம் இருந்தால், இந்த ஆட் ஆன் கவரில் குறிப்பிடப்பட்டுள்ள மருத்துவம் அல்லாத பொருட்களுக்கான செலவுகள் கவராகும். |
நவீன சிகிச்சைகளுக்கான மேம்படுத்தப்பட்ட வரம்புபாலிசி பிரிவில் பட்டியலிடப்பட்டுள்ள நவீன சிகிச்சைகள், அடிப்படை பாலிசியில் கவராகும் என்றால், அத்தகைய சிகிச்சைகள் அடிப்படை பாலிசியின் காப்பீட்டுத் தொகை வரை கவர் செய்யப்படும். |
ஆயுஷ் சிகிச்சைக்கான மேம்படுத்தப்பட்ட வரம்புஆயுஷ் மருத்துவமனைகளில் உள்ள ஆயுர்வேதம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி முறைகளின் கீழ் சிகிச்சைக்காக உள்நோயாளராக மருத்துவமனையில் சேர்க்கப்படும் செலவுகள், அடிப்படை பாலிசியின் காப்பீட்டுத் தொகை வரை கவராகும். |
வீட்டில் அளிக்கப்படும் சிகிச்சைபாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு, வீட்டு பராமரிப்பு சிகிச்சைக்காக ஏற்படும் செலவுகள், அடிப்படை பாலிசியின் காப்பீட்டுத் தொகையில் 10% வரை அதிகபட்சமாக ரூ. ஒரு பாலிசி ஆண்டில் 5,00,000/ வரை கவராகும். |
போனஸ் பாதுகாப்பு1) அடிப்படை பாலிசியின் கீழ் வழங்கப்பட்ட ஒட்டுமொத்த போனஸ், பாலிசிதாரரால் பயன்படுத்தப்பட்டிருந்தால், புதுப்பிக்கும் நேரத்தில் குறைக்கப்படாது.
2) காப்பீட்டுத் தொகையை முழுமையாகப் பயன்படுத்திய அதே சமயத்தில், ஒட்டுமொத்த போனஸை முழுவதும் பயன்படுத்தாமல் இருக்கும் பட்சத்தில், புதுப்பித்தலின் போது அடிப்படை பாலிசியின் கீழ் வழங்கப்படும் ஒட்டுமொத்த போனஸ் குறைக்கப்படாது.
3) காப்பீடு செய்யப்பட்ட தொகையை முழுமையாகப் பயன்படுத்தி, ஒட்டுமொத்த போனஸில் பகுதியளவு பயன்படுத்தினால், புதுப்பித்தலின் போது அடிப்படை பாலிசியின் கீழ் வழங்கப்பட்ட ஒட்டுமொத்த போனஸ், மீதமுள்ள ஒட்டுமொத்த போனஸாக இருக்கும்.
4) காப்பீட்டுத் தொகை மற்றும் ஒட்டுமொத்த போனஸ் முழுமையாக பயன்படுத்தினால், புதுப்பித்தலின் போது, அடிப்படை பாலிசியின் கீழ் வழங்கப்படும் ஒட்டுமொத்த போனஸ் பூஜ்யமாக இருக்கும். |
மொத்த விலக்கு தேர்ந்தெடுப்பதற்கான விருப்பம்காப்பீடு செய்த நபர் பாலிசி பிரிவில் பட்டியலிடப்பட்டுள்ள விலக்குகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்தால், பிரீமியத்தில் தள்ளுபடி கிடைக்கும். |
ஒரு மருத்துவ காப்பீட்டு வல்லுனராக, எங்கள் பயனாளர்களுக்கு விரைவான க்ளைம் செட்டில்மெண்ட்ஸ்களை அளிக்கிறோம். எங்களுடன் பல மருத்துவமனைகள் இணைந்து வருவதால் உங்களுக்கான மருத்துவ தேவைகளை மிகவும் எளிதாக நீங்கள் பெறுவதை உறுதி செய்கிறோம்.
உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தவும், பணத்தை மிச்சப்படுத்தவும், ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுப்பதன் கடினமான முறைகளை எளிதாக்கவும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
உங்களின் எதிர்காலத்தை எங்களுடன் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள்