பாலிசி விவரம் | ப்ளான் A | ப்ளான் B |
---|---|---|
காப்பீட்டுக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை கட்டாயம் |
பாலிசி விவரம் | ப்ளான் A | ப்ளான் B |
---|---|---|
உள்நோயாளராக மருத்துவமனையில் அனுமதித்தல்நோய், காயம் அல்லது விபத்துகள் காரணமாக 24 மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பெறும் சிகிச்சைக்கான செலவுகள் கவராகும். | ||
மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்புஉள்நோயாளராக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் தேதிக்கு 30 நாட்களுக்கு முன்பு வரை ஏற்படும் மருத்துவச் செலவுகளும் கவராகும். | ||
டிஸ்சார்ஜுக்கு பிறகுமருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நாளிலிருந்து 60 நாட்கள் வரை ஏற்படும் மருத்துவச் செலவுகள் பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளின்படி கவராகும். | ||
அறை வாடகைஅறை (தனி ஏ/சி அறை), உள்நோயாளராக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது அங்கு தங்குவதற்கு ஏற்படும் செலவுகள் மற்றும் மருத்துவ செலவுகள் கவராகும். | ||
ஐசியூ கட்டணம்இந்த பாலிசியின் கீழ் ICU கட்டணம் செலுத்தப்படும். | ||
எமெர்ஜென்சி ஆம்புலன்ஸ்தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பாலிசிதாரரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கான ஆம்புலன்ஸ் கட்டணம் ஒரு பாலிசி காலத்திற்கு ரூ.2000/- வரை கவராகும். | ||
டே கேர் நடைமுறைகள்தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பெறும் சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சை நடைமுறைகளுக்கான செலவுகள் கவராகின்றன. |
ப்ளான் A | ப்ளான் B | |
---|---|---|
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைசிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில், தானம் பெறுபவர் பாலிசிதாரராக இருந்தால், தானம் செய்பவருக்கான செலவுகள் காப்பீடு செய்யப்பட்ட தொகையின் இருப்புக்கு உட்பட்டு செலுத்தப்படும். | ||
டயாலிசிஸ் செலவுகள்டயாலிசிஸ் (AV ஃபிஸ்துலா / கிராஃப்ட் ஏற்படுத்தும் மாற்றங்கள் உட்பட) செலவுகள் ஒரு முறைக்கு ரூ.1000/-. வரை கவராகும். பாலிசிதாரருக்கு நாள்பட்ட சிறுநீரக நோய்கள் இருப்பது கண்டறியப்பட்டால், தொடர்ந்து 24 மாதங்களுக்கு கவர் செய்யப்படும் | ||
செயற்கை உறுப்புகளின் விலைதுண்டிக்கப்பட்ட உறுப்புகளுக்கு மாற்றாக செயற்கை உறுப்புகளுக்கு ஏற்படும் செலவுகள் காப்பீட்டுத் தொகையில் 10% வரை கவராகும். |
ப்ளான் A | ப்ளான் B | |
---|---|---|
உள்நோயாளராக மருத்துவமனையில் அனுமதித்தல்நோய், காயம் அல்லது விபத்துகள் காரணமாக 24 மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பெறும் சிகிச்சைக்கான செலவுகள் கவராகும். | ||
மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்புஉள்நோயாளராக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது மட்டுமின்றி, அனுமதிக்கப்படும் தேதிக்கு 30 நாட்களுக்கு முன்பு வரை ஏற்படும் மருத்துவச் செலவுகளும் கவராகும். | ||
டிஸ்சார்ஜுக்கு பிறகுமருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நாளிலிருந்து 60 நாட்கள் வரை ஏற்படும் மருத்துவச் செலவுகள் பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளின்படி கவராகும். | ||
அறை வாடகைஅறை (ஒற்றை ஏ/சி அறை), உள்நோயாளராக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது அங்கு தங்குவதற்கு ஏற்படும் செலவுகள் மற்றும் மருத்துவ செலவுகள் கவராகும். | ||
ஐசியூ கட்டணம்இந்த பாலிசியின் கீழ் ICU கட்டணம் செலுத்தப்படும். | ||
எமெர்ஜென்சி ஆம்புலன்ஸ்தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பாலிசிதாரரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கான ஆம்புலன்ஸ் கட்டணம் ஒரு பாலிசி காலத்திற்கு ரூ.2000/- வரை கவராகும். | ||
டே கேர் நடைமுறைகள்தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பெறும் சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சை நடைமுறைகளுக்கான செலவுகள் கவராகின்றன. |
Plan A | Plan B | |
---|---|---|
கண்புரை சிகிச்சைகண்புரை சிகிச்சைக்காக ஏற்படும் செலவுகள் பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளுக்கு உட்பட்டு கவராகும். |
ப்ளான் A | ப்ளான் B | |
---|---|---|
வெளிநோயாளருக்கான செலவுகள்நெட்வொர்க் மருத்துவமனைகள் அல்லது நோயறிதல் மையங்களில் ஏற்படும் வெளிநோயாளருக்கான செலவுகள் பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளுக்கு உட்பட்டு கவராகும். |
ப்ளான் A | ப்ளான் B | |
---|---|---|
நவீன சிகிச்சைபலூன் சினுப்ளாஸ்டி, இன்ட்ரா வைட்ரியல் ஊசிகள், ரோபோடிக் அறுவை சிகிச்சைகள் போன்ற நவீன சிகிச்சைகளுக்கு ஏற்படும் செலவுகள் பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளுக்கு உட்பட்டு கவராகும். |
ப்ளான் A | ப்ளான் B | |
---|---|---|
தனிப்பட்ட விபத்துக்கான கவரேஜ்உலகில் எங்கு விபத்து நடந்தாலும், ஒரு நபர் கூடுதல் செலவின்றி தனிப்பட்ட விபத்துக் காப்பீட்டைப் பெற முடியும். |
ஒரு மருத்துவ காப்பீட்டு வல்லுனராக, எங்கள் பயனாளர்களுக்கு விரைவான க்ளைம் செட்டில்மெண்ட்ஸ்களை அளிக்கிறோம். எங்களுடன் பல மருத்துவமனைகள் இணைந்து வருவதால் உங்களுக்கான மருத்துவ தேவைகளை மிகவும் எளிதாக நீங்கள் பெறுவதை உறுதி செய்கிறோம்.
உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தவும், பணத்தை மிச்சப்படுத்தவும், ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுப்பதன் கடினமான முறைகளை எளிதாக்கவும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
உங்களின் எதிர்காலத்தை எங்களுடன் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள்
பெரும்பான்மையான மக்கள் நீரிழிவு நோய் மற்றும் அதனுடன் தொடர்புடைய காரணிகளைப் பற்றி அறிந்திருப்பதில்லை. நீரிழிவு நோய் என்பது ஒரு வாழ்க்கை முறைக் கோளாறு ஆகும். இது பெரும்பாலும் மற்ற கடுமையான நோய்கள் பாதிப்பு ஏற்படுத்தத் தூண்டுகிறது. மேலும் இது மாரடைப்புக்கான முதன்மைக் காரணமாக அறியப்படுகிறது.
“இந்தியாவில் 77 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்”- என்று மெடிக்கல் நியூஸ் டுடே 28-ஜூலை-2021 அன்று பதிவு செய்துள்ளது.
இளம் தலைமுறையினர் இடையே நீரிழிவு நோய் பாதிப்பு என்பது பொதுவானதாகி வருகிறது. நீரிழிவு நோயில் டைப் I மற்றும் டைப் II என்று இரண்டு வகை உள்ளது.
நீரிழிவு நோயை ஏற்படுத்தும் வாழ்க்கை முறை பிரச்சனைகளை நிர்வகிக்க, அதனை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் நிலையான கண்காணிப்பு அவசியம். முறையான மருத்துவ கவனிப்புடன், உங்கள் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல் ஆரோக்கியமான வாழ்க்கையையும் மேற்கொள்ள முடியும். இருப்பினும், விரிவான மருத்துவ சிகிச்சை காரணமாக, அதிக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. அதனால் நீரிழிவு நோயாளிகளுக்கு மருத்துவ காப்பீடு தேவைப்படலாம். ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் டயபிடீஸ் சேஃப் இன்ஷூரன்ஸ் பாலிசியை வழங்குகிறது. இது நீரிழிவு நோய் உள்ளவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சிறப்புத் திட்டமாகும்.
பெயருக்கு ஏற்றார் போல், டயபிடீஸ் சேஃப் இன்ஷூரன்ஸ் பாலிசியானது டைப் I அல்லது டைப் II நீரிழிவு நோய்க்கான சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்படும்போது ஏற்படும் அனைத்துச் செலவுகளையும் கவர் செய்கிறது. இந்தத் திட்டம் தனிநபர் மற்றும் ஃப்ளோட்டர் அடிப்படையில் 24 மணிநேரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பெறும் சிகிச்சை செலவுகளை கவர் செய்கிறது.
நீரிழிவு நோயின் சிக்கல்களைத் தவிர மற்ற மருத்துவமனை செலவுகளையும் கவர் செய்கிறது