Health Insurance for Diabetes

டயபிடீஸ் சேஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி

*I consent to be contacted by Star Health Insurance for health insurance product inquiries, overriding my NCPR/DND registration.

IRDAI UIN : SHAHLIP23081V082223

HIGHLIGHTS

Plan Essentials

essentials

நீரிழிவு நோய்க்கான காப்பீடு

டைப் 1 மற்றும் டைப் 2 வகை நீரிழிவு நோய் கண்டறியப்பட்ட நபர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பிற நோய்கள் அல்லது குறைபாடுகளும் இதில் கவர் ஆகிறது.
essentials

நுழைவு வயது

18 முதல் 65 வயது வரை உள்ள எவரும் இந்த பாலிசியைப் பெறலாம்.
essentials

பாலிசி வகை

இந்த பாலிசியை தனிநபர் அல்லது ஃப்ளோட்டர் அடிப்படையில் பெறலாம். 2 உறுப்பினர்கள் கொண்ட குடும்பத்திற்கு மட்டுமே ஃப்ளோட்டர் அடிப்படையில் எடுக்க முடியும்.
essentials

ஏதுவான திட்ட விருப்பங்கள்

திட்டம் A: காப்பீட்டுக்கு முந்தைய மருத்துவ பரிசோதனையுடன். திட்டம் B: காப்பீட்டுக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை இல்லாமல்
essentials

வெளிநோயாளருக்கான செலவுகள்

நெட்வொர்க் மருத்துவமனைகள் அல்லது நோய் கண்டறிதல் மையங்களில் ஏற்படும் வெளிநோயாளருக்கான செலவுகள் பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளுக்கு உட்பட்டு செலுத்தப்படும்.
essentials

ஆட்டோமேட்டிக் ரீஸ்டோரேஷன்

பாலிசி காலத்தில் அடிப்படை காப்பீட்டுத் தொகை தீர்ந்துவிட்டால், பாலிசி ஆண்டில் ஒருமுறை அடிப்படை காப்பீட்டுத் தொகையில் 100% ரீஸ்டோர் செய்யப்படும்.
essentials

தனிப்பட்ட விபத்துக்கான கவரேஜ்

உலகில் எங்கு விபத்து நடந்தாலும், ஒரு நபர் கூடுதல் செலவின்றி தனிப்பட்ட விபத்துக் காப்பீட்டைப் பெற முடியும்.
essentials

தவணை விருப்பங்கள்

பாலிசி பிரீமியத்தை அரையாண்டு அடிப்படையில் செலுத்தலாம். மேலும் இதனை ஆண்டுக்கு ஒருமுறை, இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை என்ற அடிப்படையிலும் செலுத்தலாம்.
DETAILED LIST

பாலிசியில் உள்ள சிறப்பம்சங்கள்

முக்கியமான சிறப்பம்சங்கள்

பாலிசி விவரம்ப்ளான் Aப்ளான் B

காப்பீட்டுக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை கட்டாயம்

yesyes

பிரிவு I - நீரிழிவு நோயின் சிக்கல்களால் மருத்துவமனையில் அனுமதி

பாலிசி விவரம்ப்ளான் Aப்ளான் B

உள்நோயாளராக மருத்துவமனையில் அனுமதித்தல்

நோய், காயம் அல்லது விபத்துகள் காரணமாக 24 மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பெறும் சிகிச்சைக்கான செலவுகள் கவராகும்.
yesyes

மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு

உள்நோயாளராக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் தேதிக்கு 30 நாட்களுக்கு முன்பு வரை ஏற்படும் மருத்துவச் செலவுகளும் கவராகும்.
yesyes

டிஸ்சார்ஜுக்கு பிறகு

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நாளிலிருந்து 60 நாட்கள் வரை ஏற்படும் மருத்துவச் செலவுகள் பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளின்படி கவராகும்.
yesyes

அறை வாடகை

அறை (தனி ஏ/சி அறை), உள்நோயாளராக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது அங்கு தங்குவதற்கு ஏற்படும் செலவுகள் மற்றும் மருத்துவ செலவுகள் கவராகும்.
yesyes

ஐசியூ கட்டணம்

இந்த பாலிசியின் கீழ் ICU கட்டணம் செலுத்தப்படும்.
yesyes

எமெர்ஜென்சி ஆம்புலன்ஸ்

தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பாலிசிதாரரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கான ஆம்புலன்ஸ் கட்டணம் ஒரு பாலிசி காலத்திற்கு ரூ.2000/- வரை கவராகும்.
yesyes

டே கேர் நடைமுறைகள்

தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பெறும் சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சை நடைமுறைகளுக்கான செலவுகள் கவராகின்றன.
yesyes

பிரிவு I இன் கீழ் கவராகும் சிறப்பு நிலைகள்

ப்ளான் Aப்ளான் B

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில், தானம் பெறுபவர் பாலிசிதாரராக இருந்தால், தானம் செய்பவருக்கான செலவுகள் காப்பீடு செய்யப்பட்ட தொகையின் இருப்புக்கு உட்பட்டு செலுத்தப்படும்.
yesyes

டயாலிசிஸ் செலவுகள்

டயாலிசிஸ் (AV ஃபிஸ்துலா / கிராஃப்ட் ஏற்படுத்தும் மாற்றங்கள் உட்பட) செலவுகள் ஒரு முறைக்கு ரூ.1000/-. வரை கவராகும். பாலிசிதாரருக்கு நாள்பட்ட சிறுநீரக நோய்கள் இருப்பது கண்டறியப்பட்டால், தொடர்ந்து 24 மாதங்களுக்கு கவர் செய்யப்படும்
yesyes

செயற்கை உறுப்புகளின் விலை

துண்டிக்கப்பட்ட உறுப்புகளுக்கு மாற்றாக செயற்கை உறுப்புகளுக்கு ஏற்படும் செலவுகள் காப்பீட்டுத் தொகையில் 10% வரை கவராகும்.
yesyes

பிரிவு II - வழக்கமாக மருத்துவமனையில் அனுமதிக்கும் செலவுகள்

ப்ளான் Aப்ளான் B

உள்நோயாளராக மருத்துவமனையில் அனுமதித்தல்

நோய், காயம் அல்லது விபத்துகள் காரணமாக 24 மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பெறும் சிகிச்சைக்கான செலவுகள் கவராகும்.
yesyes

மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு

உள்நோயாளராக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது மட்டுமின்றி, அனுமதிக்கப்படும் தேதிக்கு 30 நாட்களுக்கு முன்பு வரை ஏற்படும் மருத்துவச் செலவுகளும் கவராகும்.
yesyes

டிஸ்சார்ஜுக்கு பிறகு

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நாளிலிருந்து 60 நாட்கள் வரை ஏற்படும் மருத்துவச் செலவுகள் பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளின்படி கவராகும்.
yesyes

அறை வாடகை

அறை (ஒற்றை ஏ/சி அறை), உள்நோயாளராக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது அங்கு தங்குவதற்கு ஏற்படும் செலவுகள் மற்றும் மருத்துவ செலவுகள் கவராகும்.
yesyes

ஐசியூ கட்டணம்

இந்த பாலிசியின் கீழ் ICU கட்டணம் செலுத்தப்படும்.
yesyes

எமெர்ஜென்சி ஆம்புலன்ஸ்

தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பாலிசிதாரரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கான ஆம்புலன்ஸ் கட்டணம் ஒரு பாலிசி காலத்திற்கு ரூ.2000/- வரை கவராகும்.
yesyes

டே கேர் நடைமுறைகள்

தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பெறும் சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சை நடைமுறைகளுக்கான செலவுகள் கவராகின்றன.
yesyes

பிரிவு II இன் கீழ் கவராகும் சிறப்பு நிலைகள்

Plan APlan B

கண்புரை சிகிச்சை

கண்புரை சிகிச்சைக்காக ஏற்படும் செலவுகள் பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளுக்கு உட்பட்டு கவராகும்.
yesyes

பிரிவு III - வெளிநோயாளருக்கான செலவுகள்

ப்ளான் Aப்ளான் B

வெளிநோயாளருக்கான செலவுகள்

நெட்வொர்க் மருத்துவமனைகள் அல்லது நோயறிதல் மையங்களில் ஏற்படும் வெளிநோயாளருக்கான செலவுகள் பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளுக்கு உட்பட்டு கவராகும்.
yesyes

பிரிவு IV - நவீன சிகிச்சைக்கான பாதுகாப்பு

ப்ளான் Aப்ளான் B

நவீன சிகிச்சை

பலூன் சினுப்ளாஸ்டி, இன்ட்ரா வைட்ரியல் ஊசிகள், ரோபோடிக் அறுவை சிகிச்சைகள் போன்ற நவீன சிகிச்சைகளுக்கு ஏற்படும் செலவுகள் பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளுக்கு உட்பட்டு கவராகும்.
yesyes

பிரிவு V - தனிப்பட்ட விபத்து

ப்ளான் Aப்ளான் B

தனிப்பட்ட விபத்துக்கான கவரேஜ்

உலகில் எங்கு விபத்து நடந்தாலும், ஒரு நபர் கூடுதல் செலவின்றி தனிப்பட்ட விபத்துக் காப்பீட்டைப் பெற முடியும்.
yesyes
பாலிசி விவரங்கள் மற்றும் விதிமுறைகள் & நிபந்தனைகளை அறிய, பாலிசி ஆவணங்களைப் பார்க்கவும்.
ஸ்டார் ஹெல்த்

ஸ்டார் இன்ஷூரன்ஸை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

ஒரு மருத்துவ காப்பீட்டு வல்லுனராக, எங்கள் பயனாளர்களுக்கு விரைவான க்ளைம் செட்டில்மெண்ட்ஸ்களை அளிக்கிறோம். எங்களுடன் பல மருத்துவமனைகள் இணைந்து வருவதால் உங்களுக்கான மருத்துவ தேவைகளை மிகவும் எளிதாக நீங்கள் பெறுவதை உறுதி செய்கிறோம்.

star-health
வெல்னஸ் புரோகிராம்
எங்கள் வெல்னஸ் திட்டங்களில் பங்கேற்று, ஆரோக்கியமாக இருப்பதற்கான ரிவார்ட் புள்ளிகளை பெறுங்கள். அந்த புள்ளிகளை பயன்படுத்தி திட்டத்தை புதுப்பிக்கும் போது தள்ளுபடி பெறலாம்
star-health
ஆன்லைன் மருந்தகம்
ஆன்லைனில் தள்ளுபடியுடன் மருந்துகளை வாங்கலாம்; 2780 நகரங்களில் ஹோம் டெலிவரி மற்றும் மருந்தகத்திற்கே சென்று பெற்றுக்கொள்ளும் வசதிகள் உள்ளன.
star-health
விருதுகள்
புகழ்பெற்ற சர்வே நிறுவனங்களிடமிருந்து புதுமையான தயாரிப்பு, சிறந்த க்ளைம் தீர்வு மற்றும் சேவை வழங்குநர் ஆகியவற்றிற்காக நாங்கள் விருது பெற்றுள்ளோம்.
எங்களது வாடிக்கையாளர்கள்

ஸ்டார் ஹெல்த்-ல் ‘மகிழ்ச்சியுடன் காப்பீடு செய்யப்பட்டது!’

உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தவும், பணத்தை மிச்சப்படுத்தவும், ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுப்பதன் கடினமான முறைகளை எளிதாக்கவும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

வேறு ஏதாவது தேடுகிறீர்களா?

உடனே தொடங்குங்கள்

சிறந்தது என்பதில் உறுதியாக இருங்கள்

உங்களின் எதிர்காலத்தை எங்களுடன் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள்

Contact Us
கூடுதல் தகவல்கள் தேவையா?
Get Insured
உங்கள் பாலிசியைப் பெறத் தயாரா?

நீரிழிவு நோய்க்கான மருத்துவ காப்பீடு

 

பெரும்பான்மையான மக்கள் நீரிழிவு நோய் மற்றும் அதனுடன் தொடர்புடைய காரணிகளைப் பற்றி அறிந்திருப்பதில்லை. நீரிழிவு நோய் என்பது ஒரு வாழ்க்கை முறைக் கோளாறு ஆகும். இது பெரும்பாலும் மற்ற கடுமையான நோய்கள் பாதிப்பு ஏற்படுத்தத் தூண்டுகிறது. மேலும் இது மாரடைப்புக்கான முதன்மைக் காரணமாக அறியப்படுகிறது.

 

“இந்தியாவில் 77 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்”- என்று மெடிக்கல் நியூஸ் டுடே 28-ஜூலை-2021 அன்று பதிவு செய்துள்ளது.

 

இளம் தலைமுறையினர் இடையே நீரிழிவு நோய் பாதிப்பு என்பது பொதுவானதாகி வருகிறது. நீரிழிவு நோயில் டைப் I மற்றும் டைப் II என்று இரண்டு வகை உள்ளது.

 

நீரிழிவு நோயை ஏற்படுத்தும் வாழ்க்கை முறை பிரச்சனைகளை நிர்வகிக்க, அதனை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் நிலையான கண்காணிப்பு அவசியம். முறையான மருத்துவ கவனிப்புடன், உங்கள் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல் ஆரோக்கியமான வாழ்க்கையையும் மேற்கொள்ள முடியும். இருப்பினும், விரிவான மருத்துவ சிகிச்சை காரணமாக, அதிக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. அதனால் நீரிழிவு நோயாளிகளுக்கு மருத்துவ காப்பீடு தேவைப்படலாம். ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் டயபிடீஸ் சேஃப் இன்ஷூரன்ஸ் பாலிசியை வழங்குகிறது. இது நீரிழிவு நோய் உள்ளவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சிறப்புத் திட்டமாகும்.

டயபிடீஸ் சேஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி

பெயருக்கு ஏற்றார் போல், டயபிடீஸ் சேஃப் இன்ஷூரன்ஸ் பாலிசியானது டைப் I அல்லது டைப் II நீரிழிவு நோய்க்கான சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்படும்போது ஏற்படும் அனைத்துச் செலவுகளையும் கவர் செய்கிறது. இந்தத் திட்டம் தனிநபர் மற்றும் ஃப்ளோட்டர் அடிப்படையில் 24 மணிநேரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பெறும் சிகிச்சை செலவுகளை கவர் செய்கிறது.

டயபிடீஸ் சேஃப் இன்ஷூரன்ஸ் பாலிசியை தேர்வு செய்வதற்கான காரணங்கள்

 

நீரிழிவு நோயின் சிக்கல்களைத் தவிர மற்ற மருத்துவமனை செலவுகளையும் கவர் செய்கிறது

  1. கார்டியோவாஸ்குலர் நோய், சிறுநீரக அமைப்பின் நோய்கள், கண் மற்றும் கால் புண்கள் போன்ற நோய்கள் பிளான் A இல் காத்திருப்பு காலம் இன்றி கவர் ஆகும். அதே சமயம், பிளான் B இல் காத்திருப்பு காலத்துடன் கவராகும்.
  2. பாலிசி காலத்தின் போது ஒருமுறை அடிப்படை காப்பீட்டுத் தொகை தீர்ந்தவுடன், முழு காப்பீட்டுத் தொகையையும் 100% தானாக மீட்டமைக்கப்படும்
  3. செலுத்தப்பட்ட பிரீமியம் வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80D இன் கீழ் நிவாரணத்திற்குத் தகுதியானது
  4. க்ளைம் போது கோ-பேமண்ட் தேவையில்லை

FAQ's