பாலிசி காலம்இந்த பாலிசியை ஒன்று, இரண்டு அல்லது மூன்று வருட காலத்திற்குப் பெறலாம். |
பாலிசிக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை50 வயதிற்குட்பட்டவர்கள் இந்த பாலிசியைப் பெறுவதற்கு முன் மருத்துவ பரிசோதனை எடுக்க தேவையில்லை. இருப்பினும், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இக்கட்டான மருத்துவ நிலையில் உள்ளவர்கள் பாலிசிக்கு முந்தைய மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். |
காப்பீட்டுத் தொகைஇந்த பாலிசியின் குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூ. 5,00,000/- மற்றும் அதிகபட்சம் ரூ. 25,00,000/- (ரூ. 1,00,000/- மடங்குகளில்).
1) சம்பாதிக்கும் நபர்களுக்கு - 18 முதல் 35 வயது வரையிலான ஆண்டு வருமானத்தில் 12 மடங்கு, 35 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு ஆண்டு வருமானத்தில் 10 மடங்கு. அதிகபட்ச காப்பீட்டுத் தொகை ரூ.25 லட்சத்திற்கு மேல் இருக்கக்கூடாது.
2) சம்பாதிக்காத நபர்களுக்கு - அதிகபட்சம் 15 லட்சம் வரை. முதன்மை உறுப்பினருக்கான காப்பீட்டுத் தொகையை விட வருமானம் ஈட்டாத நபர்களுக்கான காப்பீட்டுத் தொகை அதிகமாக இருக்க முடியாது. |
இக்கட்டான பாதிப்புகளுக்கான பரந்த கவரேஜ்இந்த பாலிசியானது நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்ட தீவிர பாதிப்புகளுக்கு உள்ளானவர்களுக்கான பரந்த கவரேஜ் வழங்குகிறது. |
புற்றுநோய்க்கான கவரேஜ்இந்த பாலிசி புற்றுநோய் தொடர்பான முக்கிய நோய்களுக்கு மொத்த தொகையை வழங்குகிறது. |
இதய நோய்க்கான கவரேஜ்இந்த பாலிசி இதயம் தொடர்பான முக்கிய நிலைமைகளுக்கு மொத்த தொகையை வழங்குகிறது. |
மூளை மற்றும் நரம்பு மண்டலம்இந்த பாலிசி மூளை மற்றும் நரம்பு மண்டலம் தொடர்பான முக்கியமான நோய்களுக்கு மொத்த தொகையை வழங்குகிறது. |
முக்கிய உறுப்பு மற்றும் பிற நிலைகள்இந்த பாலிசி முக்கிய உறுப்புகள் மற்றும் பிற நிலைமைகள் தொடர்பான தீவிர நோய்களுக்கு மொத்த தொகையை வழங்குகிறது. |
தவணை விருப்பங்கள்பாலிசி பிரீமியத்தை காலாண்டு அல்லது அரையாண்டு அடிப்படையில் செலுத்தலாம். இது ஆண்டுதோரும், இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை என்ற அடிப்படையிலும் செலுத்தலாம். |
ஒரு மருத்துவ காப்பீட்டு வல்லுனராக, எங்கள் பயனாளர்களுக்கு விரைவான க்ளைம் செட்டில்மெண்ட்ஸ்களை அளிக்கிறோம். எங்களுடன் பல மருத்துவமனைகள் இணைந்து வருவதால் உங்களுக்கான மருத்துவ தேவைகளை மிகவும் எளிதாக நீங்கள் பெறுவதை உறுதி செய்கிறோம்.
உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தவும், பணத்தை மிச்சப்படுத்தவும், ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுப்பதன் கடினமான முறைகளை எளிதாக்கவும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
உங்களின் எதிர்காலத்தை எங்களுடன் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள்