பாலிசி விவரம் | கோல்டு பிளான் | சில்வர் பிளான் |
---|---|---|
உள்நோயாளராக மருத்துவமனையில் அனுமதித்தல்நோய், காயம் அல்லது விபத்துகள் காரணமாக 24 மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பெறும் சிகிச்சைக்கான செலவுகள் கவராகும். | ||
மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்புஉள்நோயாளராக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் தேதிக்கு 30 நாட்களுக்கு முன்பு வரை ஏற்படும் மருத்துவச் செலவுகளும் கவராகும். | ||
டிஸ்சார்ஜுக்கு பிறகுமருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நாளிலிருந்து 60 நாட்கள் வரை ஏற்படும் மருத்துவச் செலவுகளில் 7% வரை கவராகும். அதாவது அதிகபட்சமாக ஒருமுறை மருத்துவமனையில் பெறும் சிகிச்சையில் அதிகபட்சம் ரூ.5000 வரை கவராகும். | ||
அறை வாடகைஉள்நோயாளராக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது ஏற்படும் அறை, தங்குமிடம் மற்றும் மருத்துவச் செலவுகள் காப்பீட்டுத் தொகையில் 2% வரை கவராகும். அதாவது, அதிகபட்சமாக ஒரு நாளைக்கு ரூ.5000/- வரை கவராகும். | ||
சாலைவழி ஆம்புலன்ஸ்ஆம்புலன்ஸ் கட்டணம் ஒருமுறை மருத்துவமனையில் அனுமதிக்க ரூ. 750/- வரை கவராகும். மேலும், பாலிசிதாரரை தனியார் ஆம்புலன்ஸ் சேவை மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கான கட்டணம் ரூ.1500/- வரை பாலிசி காலத்தில் கவராகும். | ||
டே கேர் நடைமுறைகள்தொழில்நுட்ப முன்னேற்றங்கள் காரணமாக 24 மணி நேரத்திற்கும் குறைவாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பெறும் சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சை நடைமுறைகளுக்கான செலவுகள் கவராகின்றன. | ||
நவீன சிகிச்சைவாய்வழி கீமோதெரபி, இன்ட்ரா வைட்ரியல் ஊசிகள், ரோபோடிக் அறுவை சிகிச்சைகள் போன்ற நவீன சிகிச்சைகளுக்கு ஏற்படும் செலவுகள் பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளுக்கு உட்பட்டு கவராகும். | ||
கண்புரை சிகிச்சைகண்புரை சிகிச்சைக்கான செலவுகள் பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகள் வரை செலுத்தப்படும். | ||
கோ - பேமண்ட்பாலிசிதாரர் தனது 61 வயதில் அல்லது அதற்கு மேற்பட்ட வயதில் பாலிசியை வாங்கினாலோ அல்லது புதுப்பித்தாலோ, அவர் ஒவ்வொரு க்ளைம் தொகைக்கும் 10% இணை-தொகை செலுத்த வேண்டும். |
இதய நோய்கள் (அறுவை சிகிச்சை / வலியை குறைக்கும் சிகிச்சை, மருத்துவ மேலாண்மை)பிரிவு I இல் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அம்சங்களும், கோல்ட் பிளானில் உள்நோயாளராக மருத்துவமனையில் இதயம் தொடர்பான பிரச்சனைகளுடன் அனுமதிக்கப்பட்டு பெறும் சிகிச்சைக்கான கட்டணங்களுடன் இந்த பாலிசியின் கீழ் கவராகும். |
இதய நோய்கள் (அறுவை சிகிச்சை / வலியை குறைக்கும் சிகிச்சை மட்டும்)பிரிவு I இல் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அம்சங்களும், இந்த பாலிசியின் கீழ் சில்வர் பிளானில் இதயம் தொடர்பான பிரச்சனைகளில் தேவைப்படும் அறுவை சிகிச்சை அல்லது இதர சிகிச்சைக்கான செலவுகளுடன் சேர்த்து கவர் செய்யப்படும். |
கோல்டு பிளான் | சில்வர் பிளான் | |
---|---|---|
வெளிநோயாளர் செலவுகள்இந்தியாவில் உள்ள நெட்வொர்க் மருத்துவமனைகளில், வெளிநோயாளருக்கு அவசியம் ஏற்படும் தேவையான செலவுகள் ஒரு நிகழ்வுக்கு ரூ. 500/ வரையும், ஒரு பாலிசி காலத்தில் அதிகபட்சமாக ரூ. 1500/- வரை கவராகும். |
கோல்டு பிளான் | சில்வர் பிளான் | |
---|---|---|
தனிப்பட்ட விபத்துக்கான கவரேஜ்பாலிசி காலத்தில் விபத்துகளால் பாலிசிதாரருக்கு துரதிர்ஷ்டவசமான இறப்பு ஏற்பட்டால் உலகளாவிய தனிநபர் விபத்துக் காப்பீடு வழங்கப்படுகிறது. |
ஒரு மருத்துவ காப்பீட்டு வல்லுனராக, எங்கள் பயனாளர்களுக்கு விரைவான க்ளைம் செட்டில்மெண்ட்ஸ்களை அளிக்கிறோம். எங்களுடன் பல மருத்துவமனைகள் இணைந்து வருவதால் உங்களுக்கான மருத்துவ தேவைகளை மிகவும் எளிதாக நீங்கள் பெறுவதை உறுதி செய்கிறோம்.
உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தவும், பணத்தை மிச்சப்படுத்தவும், ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுப்பதன் கடினமான முறைகளை எளிதாக்கவும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
உங்களின் எதிர்காலத்தை எங்களுடன் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள்
இந்தியாவில் இதய நோய்கள் ஆபத்தான விகிதத்தில் அதிகரித்து வருகின்றன. இதய நோய்களுக்கான சிகிச்சை விலையும் அதிகமாக உள்ளது. இந்த நோய்த் தொற்று சூழல் மற்றும் மருத்துவத்தில் அதிகரித்து வரும் செலவுகள், இதயம் தொடர்பான நோய்களுக்கான மருத்துவ காப்பீட்டின் முக்கியத்துவத்தை பலருக்கு உணர்த்தியுள்ளன. எனவே இதய நோய்களின் அபாயத்திலிருந்து உங்களை பொருளாதார ரீதியாகப் பாதுகாக்கும் ஒரு காப்பீட்டுத் திட்டத்தை வைத்திருப்பது இன்றியமையாதது. இந்த நோக்கத்திற்காக, ஸ்டார் ஹெல்த், ஸ்டார் கார்டியாக் கேர் இன்ஷூரன்ஸ் பாலிசியை வழங்குகிறது. இது இதய அறுவை சிகிச்சை, பைபாஸ் அல்லது ஸ்டென்டிங் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட தனிநபர்களுக்கான மருத்துவ காப்பீட்டுத் திட்டமாகும்.
கார்டியாக் கேர் இன்ஷூரன்ஸ் என்பது, கார்டியாக் மற்றும் கார்டியாக் அல்லாத சிகிச்சைகளுக்கு முழுமையான காப்பீட்டை வழங்கும் பாலிசிகளில் ஒன்றாகும். இது இதய நோயாளிகளுக்கு மருத்துவ காப்பீட்டை வழங்குகிறது, மேலும், அவர்களின் அனைத்து இருதயத் தேவைகளுக்குமான கவரேஜை உறுதி செய்கிறது. இது கார்டியோ வாஸ்குலர் மற்றும் வழக்கமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் தேவைகளின் கலவையான பாலிசியாகும்.
இது மீண்டும் மீண்டும் வரும் இதய நோய்களுக்கு சிகிச்சையளிப்பது போன்ற சூழ்நிலையில் உள்ளவர்களின் பொருளாதார சுமையை எளிதாக்க உதவுகிறது மற்றும் செலவுகளை சமாளிக்க போதுமான காப்பீட்டை வழங்குகிறது.
இந்த பாலிசி பல்வேறு இதயம் தொடர்பான சிகிச்சைகளுக்காக பல க்ளைம்ஸ்களை கவர் செய்கிறது. இருப்பினும், இந்த க்ளைம்ஸ் காப்பீட்டுத் தொகைக்கு உட்பட்டவை. அறுவை சிகிச்சை, அறுவை சிகிச்சை அல்லாத சிகிச்சைகள் மற்றும் நவீன சிகிச்சைகளுக்கான பாதுகாப்பு, வெளிநோயாளருக்கான பாதுகாப்பு மற்றும் விபத்து காரணமாக ஏற்படும் இறப்புக்கான தனிப்பட்ட விபத்துக் காப்பீடு போன்ற பலன்களை கார்டியாக் கேர் இன்ஷூரன்ஸ் பாலிசி வழங்குகிறது.
பிரிவு | கோல்டு பிளான் | சில்வர் பிளான் |
---|---|---|
1 | விபத்து மற்றும் இதயம் சாராத நோய்களுக்கு பொருந்தும் | விபத்து மற்றும் இதயம் சாராத நோய்களுக்கு பொருந்தும் |
2 | இதய நோய்கள் மற்றும் அது தொடர்பான பிரச்சனைகளின் சிகிச்சைக்கு பொருந்தும். அறுவை சிகிச்சை மற்றும் இதர சிகிச்சை ஆகிய இரண்டிற்கும் கவரேஜ் கிடைக்கிறது. | இதய நோய்கள் மற்றும் அது தொடர்பான பிரச்சனைகளின் சிகிச்சைக்கு பொருந்தும். அறுவை சிகிச்சைக்கு மட்டுமே கவரேஜ் கிடைக்கும். |
3 | நெட்வொர்க் மருத்துவமனைகளில் வெளிநோயாளருக்கான செலவுகள் | நெட்வொர்க் மருத்துவமனைகளில் வெளிநோயாளருக்கான செலவுகள் |
4 | தனிப்பட்ட விபத்து: தேர்ந்தெடுக்கப்பட்ட காப்பீட்டுத் தொகைக்கு சமமான தொகை, விபத்தால் ஏற்படும் இறப்பின் போது கிடைக்கும். | தனிப்பட்ட விபத்து: தேர்ந்தெடுக்கப்பட்ட காப்பீட்டுத் தொகைக்கு சமமான தொகை, விபத்தால் ஏற்படும் இறப்பின் போது கிடைக்கும். |
இதய சிகிச்சைகளுக்கு 90 நாட்கள் மட்டுமே காத்திருப்பு காலம் பொருந்தும், |
கார்டியாக் இன்ஷூரன்ஸ், இதயம் மற்றும் இதயம் அல்லாத நோய்களின் சிகிச்சைக்கான காப்பீட்டை வழங்குகிறது. இந்த பாலிசியின் முக்கிய அம்சம் என்னவென்றால், ஏற்கனவே இதய நோய் அல்லது அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கும் இது பொருந்தும். கடந்த 7 ஆண்டுகளில் நீங்கள் இதய அறுவை சிகிச்சை அல்லது அதன் நடைமுறைகளுக்கு உட்பட்டிருக்கும் பட்சத்தில், இதய நோய்களுக்கான அதிக ஆபத்து இருப்பதால், இந்த கார்டியாக் கேர் பாலிசியை வாங்குவது நல்லது.
காப்பீடு செய்யப்பட்ட நபர், பாலிசி காலத்தில் குறைந்தபட்சம் 24 மணிநேரம் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய சூழல் இருந்தால், ஸ்டார் கார்டியாக் கேர் பாலிசி மருத்துவமனையில் அனுமதிக்கும் செலவுகளை கவர் செய்கிறது. இந்தத் திட்டம் பின்வருவனவற்றிற்காக ஏற்படும் செலவுகளை ஈடு செய்யும்:
பாலிசி விதிமுறைகளின்படி 24 மணிநேரத்திற்கும் குறைவாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அனைத்து டே கேர் சிகிச்சை நடைமுறைகள், அறுவை சிகிச்சைகள் மற்றும் சிகிச்சைகளுக்கான செலவுகளை பாலிசி கவர் செய்கிறது.
முழு பாலிசி காலத்திலும் ₹30,000 வரை கண்புரை சிகிச்சைக்காக ஏற்படும் செலவுகளை பாலிசி கவர் செய்கிறது.
காப்பீட்டுக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை தேவையில்லை. முன்மொழிவு படிவத்துடன் சமீபத்திய சிகிச்சையின் விவரங்கள் உட்பட முந்தைய மருத்துவ பதிவுகளை சமர்ப்பித்தால் போதும்.
தனிப்பட்ட விபத்துக்கான கவரேஜ்: ஸ்டார் ஹெல்த் கார்டியாக் கேர் இன்ஷூரன்ஸ் உலகளாவிய கவரேஜை வழங்குகிறது. மேலும், விபத்தால் ஏற்படும் இறப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட காப்பீட்டுத் தொகைக்கு சமமாக கவர் செய்கிறது.
சில நவீன சிகிச்சைகள் ஸ்டார் கார்டியாக் இன்ஷூரன்ஸ் கீழ் கவர் செய்யப்படுகிறது. கவரேஜ் விவரங்கள் பின்வருமாறு: வரம்புகள் பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளன.
பின்வருபவை பாலிசியில் கவர் ஆகாத சிகிச்சைகளின் பட்டியலாகும். பாலிசி ஆவணத்தில் கவர் ஆகாத அனைத்து சிகிச்சை சிகிச்சைகளின் விரிவான பட்டியல் சேர்க்கப்பட்டுள்ளது.
ஸ்டார் ஹெல்த் கார்டியாக் கேர் பாலிசி இதயம் மற்றும் இதயம் அல்லாத நோய்களுக்கு விரிவான கவரேஜை வழங்கும் அதே வேளையில், சில விதிவிலக்குகள் இந்த பாலிசியின் கீழ் வருகின்றன. இந்த விலக்குகள் பின்வருமாறு: