பாலிசி காலம்இந்த பாலிசியை ஒரு வருட காலத்திற்குப் பெறலாம். |
நுழைவு வயது5 மாதங்கள் முதல் 65 வயது வரை உள்ள புற்றுநோய் கண்டறியப்பட்ட நபர்கள் இந்த பாலிசியைப் பெறலாம். |
காப்பீட்டுத் தொகைஇந்த பாலிசியின் கீழ் காப்பீட்டுத் தொகைக்கான விருப்பங்கள் ரூ. 5,00,000/-, ரூ. 7,50,000/- மற்றும் ரூ. 10,00,000/-. |
உள்நோயாளராக மருத்துவமனையில் அனுமதித்தல்நோய், காயம் அல்லது விபத்துகள் காரணமாக 24 மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பெறும் சிகிச்சைக்கான செலவுகள் கவராகும். |
மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்புஉள்நோயாளராக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் தேதிக்கு 30 நாட்களுக்கு முன்பு வரை ஏற்படும் மருத்துவச் செலவுகளும் கவராகும். |
டிஸ்சார்ஜுக்கு பிறகுமருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நாளிலிருந்து 60 நாட்கள் வரை ஏற்படும் மருத்துவச் செலவுகள், அடிப்படை காப்பீட்டுத் தொகையில் 2% வரை கவர் செய்யப்படும். |
சாலைவழி ஆம்புலன்ஸ்பாலிசிதாரரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு ஏற்படும் தனியார் ஆம்புலன்ஸ் கட்டணங்கள் கவராகின்றன. |
அறை வாடகைதனி ஏ/சி அறை, உள்நோயாளராக மருத்துவமனையில் சேர்க்கப்படும் போது ஏற்படும் தங்குமிடம் மற்றும் மருத்துவ செலவுகள் கவராகும். |
ICU கட்டணம்இந்த பாலிசியின் கீழ் ICU கட்டணம் செலுத்தப்படும். |
கண்புரை சிகிச்சைகண்புரை சிகிச்சைக்காக ஏற்படும் செலவுகள் பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளுக்கு உட்பட்டு கவராகும். |
நவீன சிகிச்சைநவீன சிகிச்சை செலவுகள் பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளுக்கு உட்பட்டு கவராகும். |
டே கேர் சிகிச்சை நடைமுறைகள்தொழில்நுட்ப முன்னேற்றங்கள் காரணமாக 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பெறும் மருத்துவ சிகிச்சைக்கான கட்டணங்கள் மற்றும் அறுவை சிகிச்சை முறைகள் கவராகின்றன. |
மறுவாழ்வு & வலி மேலாண்மைமறுவாழ்வு மற்றும் வலி மேலாண்மைக்கான செலவுகள், ஒரு பாலிசி ஆண்டில், அடிப்படை காப்பீட்டுத் தொகையில், குறிப்பிட்ட துணை வரம்பு வரை அல்லது அதிகபட்சமாக 10% வரை என இவை இரண்டில் எது குறைவான தொகையோ அது கவராகும். |
ஹாஸ்பிஸ் கேர்புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் இருப்பவர்களுக்கு, 12 மாத காத்திருப்பு காலம் முடிந்த பிறகு, நெட்வொர்க் மருத்துவமனைகளில் கருணையுடன் கூடிய பராமரிப்புக்காக, காப்பீடு செய்யப்பட்ட தொகையில் 20% கவர் செய்யப்படும். |
கோ - பேமண்ட்பாலிசிதாரர் தனது 61 வயதில் அல்லது அதற்கு மேற்பட்ட வயதில் பாலிசியை வாங்கினாலோ அல்லது புதுப்பித்தாலோ, அவர் ஒவ்வொரு க்ளைம் தொகைக்கும் 10% இணை-தொகை செலுத்த வேண்டும். |
ஒட்டுமொத்த போனஸ்ஒட்டுமொத்த போனஸ் முறையை பொறுத்தவரை, ஒவ்வொரு க்ளைம் இல்லாத ஆண்டிற்கும், காப்பீட்டுத் தொகையில் 5% முதல் அதிகபட்சம் 50% வரை ஒட்டுமொத்த போனஸாக வழங்கப்படுகிறது. |
2வது மருத்துவ ஆலோசனைபாலிசிதாரர் காப்பீட்டு நிறுவனத்தின் இணைப்பில் உள்ள ஒரு மருத்துவரிடம் இருந்து இரண்டாவது மருத்துவ ஆலோசனையைப் பெறலாம். |
மருத்துவ பரிசோதனைமருத்துவ பரிசோதனைக்கு ஆகும் செலவுகள் ஒவ்வொரு க்ளைம் இல்லாத ஆண்டிற்கும், ரூ. 2500/- வரை கவராகிறது. |
வெல்னஸ் சேவைகள்இந்த திட்டம் பல்வேறு வெல்னஸ் நடவடிக்கைகள் மூலம் பாலிசிதாரரின் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதையும் வெகுமதி அளிப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது. |
தவணை விருப்பங்கள்இந்த பாலிசி பிரீமியத்தை காலாண்டு அல்லது அரையாண்டு அடிப்படையில் செலுத்தலாம். |
புற்றுநோய்க்கான மொத்த தொகை கவரேஜ் - ஆப்ஷனல் கவரேஜ்புற்றுநோய், மெட்டாஸ்டாஸிஸ் மற்றும்/அல்லது முதல் புற்றுநோயுடன் தொடர்பில்லாத இரண்டாவது புற்றுநோய் ஏற்படும் பட்சத்தில் மொத்தத் தொகை வழங்கப்படுகிறது. பிரிவு I இன் கீழ் காப்பீடு செய்யப்பட்ட இழப்பீட்டுத் தொகையுடன் கூடுதலாக இந்த நன்மை வழங்கப்படுகிறது. இந்த பிரிவின் கீழ் காப்பீடு செய்யப்பட்ட தொகையானது பிரிவு I காப்பீட்டுத் தொகையில் 50% ஆகும். |
ஒரு மருத்துவ காப்பீட்டு வல்லுனராக, எங்கள் பயனாளர்களுக்கு விரைவான க்ளைம் செட்டில்மெண்ட்ஸ்களை அளிக்கிறோம். எங்களுடன் பல மருத்துவமனைகள் இணைந்து வருவதால் உங்களுக்கான மருத்துவ தேவைகளை மிகவும் எளிதாக நீங்கள் பெறுவதை உறுதி செய்கிறோம்.
உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தவும், பணத்தை மிச்சப்படுத்தவும், ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுப்பதன் கடினமான முறைகளை எளிதாக்கவும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
உங்களின் எதிர்காலத்தை எங்களுடன் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள்