ஆரோக்ய சஞ்சீவனி பாலிசி, ஸ்டார் ஹெல்த் அன்ட் அலைட் இன்ஷூரன்ஸ் கோ லிமிடெட்.

*I consent to be contacted by Star Health Insurance for health insurance product inquiries, overriding my NCPR/DND registration.

IRDAI UIN: SHAHLIP22027V032122

HIGHLIGHTS

Plan Essentials

essentials

ஏதுவான பாலிசி

காப்பீட்டு ஒழுங்குமுறை அமைப்பால், இந்தியாவில் அனைவருக்கும் ஏற்ற வகையில் சிக்கனமான ப்ரீமியத்துடன் கூடிய ஒரு ஏதுவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டமாக இது உருவாக்கப்பட்டுள்ளது.
essentials

பாலிசியின் வகை

இந்தப் பாலிசியை தனிநபர் அல்லது ஃப்ளோட்டர் வகையாக வாங்கலாம்.
essentials

காப்பீட்டு நுழைவு வயது

18 முதல் 65 வயது வரை உள்ள எவரும் இந்த பாலிசியை வாங்கலாம். ஃப்ளோட்டர் அடிப்படையில், 3 மாதங்கள் முதல் 25 வயது வரையிலான, பொருளாதார ரீதியாக சார்ந்திருக்கும் அதிகபட்சம் மூன்று குழந்தைகள் வரை இந்த காப்பீட்டின் பாதுகாப்பினை பெறுவார்கள்.
essentials

இலகுவான கொள்கை

18 முதல் 65 வயதுக்குட்பட்டவர்கள் இந்த பாலிசியை தனிநபர் அல்லது ஃப்ளோட்டர் அடிப்படையில் பெறலாம். ஒரு குடும்பம் சுயமாக, மனைவியாக, சார்ந்திருக்கும் குழந்தைகள் (3 மாதங்கள் முதல் 25 வயது வரை) மற்றும் பெற்றோர்களாக இருக்கலாம்.
essentials

டே கேர் சிகிச்சை நடைமுறைகள்

தொழில்நுட்ப முன்னேற்றங்களின் காரணமாக, 24 மணி நேரத்திற்கும் குறைவாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் மருத்துவ சிகிச்சைகள் மற்றும் அறுவைசிகிச்சை முறைகளுக்கு காப்பீட்டு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
essentials

ஆயுஷ் சிகிச்சை

ஆயுஷ் மருத்துவமனைகளில் ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி முறைகளின் கீழ் சிகிச்சைக்காக ஏற்படும் செலவுகளுக்கு காப்பீடு வழங்கப்படுகிறது.
essentials

நவீன சிகிச்சை

நவீன சிகிச்சைகளான ஓரல் கீமோதெரபி, இன்ட்ரா விட்ரியல் ஊசிகள், ரோபாடிக் அறுவை சிகிச்சைகள் போன்றவற்றிற்கான செலவுகள் சம் இன்ஷூர்டு தொகையில் 50% வரை காப்பீடு செய்யப்படுகிறது.
essentials

ஒட்டுமொத்த போனஸ்

மொத்த காப்பீட்டுத் தொகையில் அதிகபட்சம் 50 சதவீதத்திற்கு உட்பட்டு, ஒவ்வொரு க்ளைம் இல்லாத ஆண்டிற்கும் மொத்த காப்பீட்டுத் தொகையின் 5% ஒட்டுமொத்த போனஸாக வழங்கப்படுகிறது.
DETAILED LIST

பாலிசியில் உள்ள சிறப்பம்சங்கள்

முக்கியமான சிறப்பம்சங்கள்

பாலிசி காலம்

இந்த பாலிசியை ஒரு வருட காலத்திற்குப் பெறலாம்.

ப்ரீ-மெடிக்கல் பரிசோதனை

50 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய நபர்கள் இந்த பாலிசியைப் பெறுவதற்கு முன்பு, நிறுவனத்தால் பரிந்துரைக்கப்படும் மையங்களில் காப்பீட்டுத் திட்டத்தைப் பெறுவதற்கு முந்தைய மருத்துவப் பரிசோதனையை எடுத்துக்கொள்ள வேண்டும்.

மொத்த காப்பீட்டுத் தொகை (சம் இன்ஷூர்டு)

இந்த பாலிசி ரூ. 50,000/- துவங்கி ரூ. 10,00,000/- வரை (ரூ. 50,000/-த்தின் மடங்குகளாக) மொத்த காப்பீட்டுத் தொகைக்கான வாய்ப்புகளை தேர்வு செய்ய வழங்குகின்றது.

உள்நோயாளராக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல்

உடல்நல பாதிப்பு, காயம் அல்லது விபத்துகள் காரணமாக 24 மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேற்கொள்ளும் சிகிச்சைகளுக்கான செலவுகள் பாலிசியால் ஈடுசெய்யப்படும்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு

உள்நோயாளராக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதுடன் சேர்த்து, மருத்துவமனையில் சேர்க்கப்படும் தேதிக்கு முன்பு 30 நாட்கள் வரை செய்யப்படும் மருத்துவ செலவுகளும் பாலிசியின் காப்பீட்டின் கீழ் வரும்.

மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின்பு

சிகிச்சை பெற்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன தேதியிலிருந்து, 60 நாட்கள் வரை மேற்கொள்ளப்படும் மருத்துவ செலவுகளும் பாலிசியின் காப்பீட்டின் கீழ் வரும்.

அறை வாடகை

உள்நோயாளராக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது செய்யப்படும் செலவுகளான அறை வாடகை, தங்கும் செலவுகள் மற்றும் நர்சிங் செலவுகளுக்கு அதிகபட்சமாக ஒரு நாளைக்கு ரூ. 5000/- வீதம் மொத்த காப்பீட்டுத் தொகையில் 2% வரை வழங்கப்படும்உள்நோயாளராக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது செய்யப்படும் செலவுகளான அறை வாடகை, தங்கும் செலவுகள் மற்றும் நர்சிங் செலவுகளுக்கு அதிகபட்சமாக ஒரு நாளைக்கு ரூ. 5000/- வீதம் மொத்த காப்பீட்டுத் தொகையில் 2% வரை வழங்கப்படும்.

ICU கட்டணங்கள்

மொத்த காப்பீட்டுத் தொகையில் 5% வரை ICU கட்டணத்திற்காக, ஒரு நாளைக்கு அதிகபட்சம் ரூ. 10,000/- வரை பாலிசியின் கீழ் வழங்கப்படும்.

சாலைவழி ஆம்புலன்ஸ்

மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் மூலம் அனுமதிக்கப்படும் ஒவ்வொரு முறைக்கும் ரூ.2000/- வரையிலான கட்டணங்கள் காப்பீட்டின் கீழ் வரும்.

டே கேர் சிகிச்சை முறைகள்

தொழில்நுட்ப முன்னேற்றங்களின் காரணமாக, 24 மணி நேரத்திற்கும் குறைவாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேற்கொள்ளப்படும் மருத்துவ சிகிச்சைகள் மற்றும் அறுவைசிகிச்சைகளுக்கு காப்பீட்டு பாதுகாப்பு வழங்கப்படும்.

ஆயுஷ் சிகிச்சை

ஆயுஷ் மருத்துவமனைகளில் ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி முறைகளின் கீழ் சிகிச்சைக்காக ஏற்படும் செலவுகளுக்கு காப்பீடு வழங்கப்படுகிறது.

கிராமப்புறத்திற்கான தள்ளுபடி

கிராமப்புறம் என்று அடையாளம் காணப்பட்ட பகுதிகளுக்கு, தனிநபர் மற்றும் ஃப்ளோட்டர் பாலிசிகள் இரண்டிற்கும் ப்ரீமியத்தில் 20% தள்ளுபடி கிடைக்கும்கிராமப்புறம் என்று அடையாளம் காணப்பட்ட பகுதிகளுக்கு, தனிநபர் மற்றும் ஃப்ளோட்டர் பாலிசிகள் இரண்டிற்கும் ப்ரீமியத்தில் 20% தள்ளுபடி கிடைக்கும்.

ஆயுள் முழுவதும் புதுப்பிக்கும் வசதி

இந்த பாலிசி ஆயுள் முழுவதும் புதுப்பித்துக்கொள்ளும் வாய்ப்பினை வழங்குகிறது.

ஒட்டுமொத்த போனஸ்

மொத்த காப்பீட்டுத் தொகையில் அதிகபட்சம் 50 சதவீதத்திற்கு உட்பட்டு, ஒவ்வொரு க்ளைம் இல்லாத ஆண்டிற்கும் மொத்த காப்பீட்டுத் தொகையின் 5% ஒட்டுமொத்த போனஸாக வழங்கப்படுகிறது.

கோ-பேமென்ட்

பாலிசியின் கீழ் கோரப்படும் ஒவ்வொரு க்ளைமும், முடிவாகும் க்ளைம் தொகையில் 5% கோ-பேமென்ட்டிற்கு உட்படுத்தப்படும் மற்றும் பாலிசியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி அதனை செலுத்த வேண்டியிருக்கும்.

கண்புரை சிகிச்சை

கண்புரை சிகிச்சைக்காக செய்யப்படும் செலவுகள், மொத்த சம் இன்ஷூர்டு தொகையில் 25%, அல்லது ஒரு பாலிசி ஆண்டில் ஒரு கண்ணுக்கு ரூ. 40,000/- விதத்தில், எது குறைவாக உள்ளதோ அது செல்லுபடியாகும்.

தவணை முறையில் செலுத்தும் வாய்ப்புகள்

இந்த பாலிசியின் ப்ரீமியத்தை காலாண்டு அல்லது அரையாண்டு அடிப்படையில் செலுத்தலாம். மேலும், ஆண்டுதோறும் செலுத்தும் வசதியும் உள்ளது.
பாலிசி விவரங்கள் மற்றும் விதிமுறைகள் & நிபந்தனைகளை அறிய, பாலிசி ஆவணங்களைப் பார்க்கவும்.
ஸ்டார் ஹெல்த்

ஸ்டார் இன்ஷூரன்ஸை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

ஒரு மருத்துவ காப்பீட்டு வல்லுனராக, எங்கள் பயனாளர்களுக்கு விரைவான க்ளைம் செட்டில்மெண்ட்ஸ்களை அளிக்கிறோம். எங்களுடன் பல மருத்துவமனைகள் இணைந்து வருவதால் உங்களுக்கான மருத்துவ தேவைகளை மிகவும் எளிதாக நீங்கள் பெறுவதை உறுதி செய்கிறோம்.

எங்களது வாடிக்கையாளர்கள்

ஸ்டார் ஹெல்த்-ல் ‘மகிழ்ச்சியுடன் காப்பீடு செய்யப்பட்டது!’

உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தவும், பணத்தை மிச்சப்படுத்தவும், ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுப்பதன் கடினமான முறைகளை எளிதாக்கவும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

Customer Image
ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுக்க என் நண்பர் சொன்னார். என் மகன் நோயில் பாதிக்கப்பட்டிருந்த போது அது எனக்கு உதவியது. அவர்களின் கேஷ்லஸ் சிகிச்சை வசதி அந்த நேரத்தில் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. அவர்களின் சேவையையும் ஆதரவையும் நான் உண்மையிலேயே பாராட்டுகிறேன்.

டிஜி கே ஊமென்

திருவனந்தபுரம்

காப்பீடு செய்யுங்கள்
Customer Image
8 ஆண்டுகளாக ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸில் இருந்து வருகிறேன். இந்த காலத்தில் இரண்டு க்ளைம்ஸ்க்கு விண்ணப்பித்தேன். இரு முறையும் க்ளைம் செட்டில் ஆனது. நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது ஸ்டாரிடமிருந்து சிறப்பான ஆதரவைப் பெற்றேன்.

வாணிஸ்ரீ

பெங்களூரு

காப்பீடு செய்யுங்கள்
Customer Image
எனது குடும்பம் 2006 முதல் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸில் அங்கம் வகிக்கிறது. கடந்த மாதம் க்ளைம்க்கு விண்ணப்பித்த போது, தொந்தரவும் இல்லாமல் கிடைத்தது. தரமான சேவையை வழங்கும் ஸ்டாரின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

ராமச்சந்திரன்

சென்னை

காப்பீடு செய்யுங்கள்
Customer Image
விரிவான பாலிசியின் கீழ் இருந்தேன். எனது ஆஞ்சியோபிளாஸ்டி போது அவர்களின் நெட்வொர்க் மருத்துவமனையில் பணமில்லா சிகிச்சையை என்னால் பெற முடிந்தது.

ஷைலா கனச்சாரி

மும்பை

காப்பீடு செய்யுங்கள்
Customer Image
நான் 7 - 8 வருடங்களாக மெடிக்ளைம் சேவைகளைப் பயன்படுத்தி வருகிறேன். நான் மற்ற நிறுவனங்களையும் முயற்சித்தேன். ஆனால், ஸ்டார் ஹெல்த் அளித்த சேவையில் திருப்தி அடைந்தேன். அவர்களிடம் நட்புரீதியாக நமக்கு ஆதரவு கொடுக்கும் பணியாளர்களும் உள்ளனர்.

சுதிர் பைஜி

இந்தூர்

காப்பீடு செய்யுங்கள்
user
டிஜி கே ஊமென்
திருவனந்தபுரம்

ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுக்க என் நண்பர் சொன்னார். என் மகன் நோயில் பாதிக்கப்பட்டிருந்த போது அது எனக்கு உதவியது. அவர்களின் கேஷ்லஸ் சிகிச்சை வசதி அந்த நேரத்தில் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. அவர்களின் சேவையையும் ஆதரவையும் நான் உண்மையிலேயே பாராட்டுகிறேன்.

user
வாணிஸ்ரீ
பெங்களூரு

8 ஆண்டுகளாக ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸில் இருந்து வருகிறேன். இந்த காலத்தில் இரண்டு க்ளைம்ஸ்க்கு விண்ணப்பித்தேன். இரு முறையும் க்ளைம் செட்டில் ஆனது. நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது ஸ்டாரிடமிருந்து சிறப்பான ஆதரவைப் பெற்றேன்.

user
ராமச்சந்திரன்
சென்னை

எனது குடும்பம் 2006 முதல் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸில் அங்கம் வகிக்கிறது. கடந்த மாதம் க்ளைம்க்கு விண்ணப்பித்த போது, தொந்தரவும் இல்லாமல் கிடைத்தது. தரமான சேவையை வழங்கும் ஸ்டாரின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

user
ஷைலா கனச்சாரி
மும்பை

விரிவான பாலிசியின் கீழ் இருந்தேன். எனது ஆஞ்சியோபிளாஸ்டி போது அவர்களின் நெட்வொர்க் மருத்துவமனையில் பணமில்லா சிகிச்சையை என்னால் பெற முடிந்தது.

user
சுதிர் பைஜி
இந்தூர்

நான் 7 - 8 வருடங்களாக மெடிக்ளைம் சேவைகளைப் பயன்படுத்தி வருகிறேன். நான் மற்ற நிறுவனங்களையும் முயற்சித்தேன். ஆனால், ஸ்டார் ஹெல்த் அளித்த சேவையில் திருப்தி அடைந்தேன். அவர்களிடம் நட்புரீதியாக நமக்கு ஆதரவு கொடுக்கும் பணியாளர்களும் உள்ளனர்.

வேறு ஏதாவது தேடுகிறீர்களா?

உடனே தொடங்குங்கள்

சிறந்தது என்பதில் உறுதியாக இருங்கள்

உங்களின் எதிர்காலத்தை எங்களுடன் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள்

Contact Us
கூடுதல் தகவல்கள் தேவையா?
Get Insured
உங்கள் பாலிசியைப் பெறத் தயாரா?

ஆரோக்ய சஞ்சீவனி பாலிசி, ஸ்டார் ஹெல்த் அன்ட் அலைட் இன்ஷூரன்ஸ்  கோ லிமிடெட்.

 

ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதன் முக்கியத்துவத்தை நாம் அறிந்திருந்தாலும், நாம் முன்னுரிமை அளிக்கும் விஷயங்கள் பட்டியலில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் பெரும்பாலும் கடைசியாகவே இருக்கும். “காப்பீடு அதன் நோக்கத்தை நிறைவேற்றுகிறதா?”, “நான் ஆரோக்கியமாக இருக்கும்போது, ஏன் ஹெல்த் இன்ஷூரன்ஸ் வாங்க வேண்டும்?”, “இந்த ப்ரீமியத்தை இதைவிட மதிப்புள்ள வேறு ஏதாவது ஒன்றில் செலவு செய்யலாமா?", என்பன போன்று மருத்துவக் காப்பீட்டின் முக்கியத்துவம் குறித்த கேள்விகள் பலமுறை நம்மிடையே எழுகிறது.  இவை மிகவும் சரியான கேள்விகள் தான் என்றாலும், 2020 நமக்குக் கற்பித்த பாடத்தினை நாம் நினைவு கொள்ள வேண்டும்: நம்மால் கணிக்க முடியாதவை, நம் கண்ணுக்குத் தெரியாமல் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என்பதே அந்த பாடம்!

 

மருத்துவ சிகிச்சைகளின் விலை உயர்ந்துவிட்டது, குறிப்பாக தனியார் துறையில்; எனவே, உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை வாங்குவது அவசியமாகும். எங்களுக்குத் தெரிந்தவரை, மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டால், உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள தொகை முழுவதையும் செலவிட நேரலாம், மற்றும் உங்கள் நிதிநிலை மோசமாக திசை மாறலாம். உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் ஒரு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை பெறுமாறு பரிந்துரைப்பது எதற்கென்றால், இதன் மூலம் ஏதேனும் அவசர மருத்துவ செலவுகளைக் குறைக்க முடியும்.

 

ஆரோக்ய சஞ்சீவனி பாலிசி இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (IRDAI) அறிமுகப்படுத்தப்பட்டது. கட்டுப்படியாகக் கூடிய விலையில் முழுமையான கவரேஜ் தேடுபவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்தக் காப்பீட்டுத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த பல தசாப்தங்களாக மருத்துவச் செலவுகள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், அவை மேலும் தொடர்ந்து அதிகரிக்கும் என்பதே நிதர்சனமான எதிர்பார்ப்பாக உள்ளது. ஆரோக்ய சஞ்சீவனி இன்ஷூரன்ஸ் பாலிசியை வாங்குவதன் மூலம், எதிர்பாராத மருத்துவ அவசரநிலைகளை எதிர்கொள்கையில், ​​பாலிசிதாரருக்கு  நிதி ரீதியாக பாதுகாப்பினை அளிப்பதில் அது உதவும்.

 

ஆரோக்ய சஞ்சீவனி பாலிசி என்பது இழப்பீடு அடிப்படையிலான ஒரு மருத்துவக் காப்பீட்டுத் திட்டமாகும், இது ரூ.10 லட்சம் வரை உள்நோயாளராக மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறும் செலவுகள், டே கேர் சிகிச்சைகள்/செயல்முறைகள், கோவிட்-19 சிகிச்சை, ஆயுஷ் சிகிச்சை மற்றும் பலவற்றிற்காக தனிநபர் மற்றும் ஃப்ளோட்டர் அடிப்படையில் காப்பீட்டுப் பாதுகாப்பினை வழங்குகிறது.

 

தனிநபர், அவரது கணவர்/மனைவி மற்றும் 3 மாதங்கள் முதல் 25 வயது வரையிலான சார்ந்திருக்கும் குழந்தைகளை காப்பீட்டு வரம்பிற்குள் கொண்டுவரும் ஒரு குடும்பத்திற்கான ஃப்ளோட்டர் திட்டமாகவும் தேர்வுசெய்ய, ஆரோக்ய சஞ்சீவனி பாலிசி உங்களை அனுமதிக்கிறது. கூடுதலாக, நீங்கள் இத்திட்டத்தை உங்களது பெற்றோர்கள் மற்றும் மாமனார், மாமியார் ஆகியோருக்காவும் வாங்கலாம்.

 

ஆரோக்ய சஞ்சீவனி பாலிசியின் கீழ் பெறப்படும் காப்பீட்டு பாதுகாப்பில் (கவரேஜ்) பின்வருபவை உள்ளடங்கும்:

 

  • உள்நோயாளராக மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறும் செலவுகள்
  • மருத்துவமனையில் சேர்வதற்கு முந்தைய மற்றும் பிந்தைய செலவுகள்
  • கண்புரை சிகிச்சை
  • ஆயுஷ் சிகிச்சை
  • டே கேர் சிகிச்சைகள்
  • ஆம்புலன்ஸ் செலவுகள்
  • நவீன சிகிச்சைகள்
  • தீவிர சிகிச்சைப் பிரிவிற்கான (ICU/ICCU) செலவுகள்
  • கோவிட்-19 சிகிச்சைக்கான காப்பீட்டுப் பாதுகாப்பு
  • டெலி மெடிசின் சர்வீஸ் - ஸ்டார் நிபுணர்களுடன் பேசும் வசதி

ஆரோக்ய சஞ்சீவனி ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியின் திட்ட அம்சங்கள்

இந்த பாலிசியை எப்படி வாங்குவது?

 

ஆன்லைனில் ஆரோக்ய சஞ்சீவனி பாலிசியை வாங்குவது மிகவும் எளிதானது:

 

நிலை 1: ஸ்டார் ஹெல்த் வலைதளம் அல்லது மொபைல் செயலியில், ஆரோக்கிய சஞ்சீவனி பாலிசியைக் கண்டறியவும். உங்கள் பெயர், மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை வழங்கவும்.

 

நிலை 2: சில முக்கிய விவரங்களை உரிய இடங்களில் நிரப்பவும், நீங்கள் பாலிசி எடுக்க விரும்பும் நபர்களின் எண்ணிக்கை (குடும்பத்திற்காக வாங்கினால்), பிறந்த தேதி, பாலிசி காலம் போன்றவை.

 

நிலை 3: இந்தத் தகவலைப் பகிர்ந்தவுடன், நீங்கள் தேர்ந்தெடுத்த மொத்த காப்பீட்டுத் தொகைக்கான உங்களது ப்ரீமியத்தின் இறுதிக் கட்டணம் காண்பிக்கப்படும்; பின்னர், நீங்கள் அதற்கான பணத்தை செலுத்திய சில நிமிடங்களில், ​​உங்கள் மின்னஞ்சலின் இன்பாக்ஸில் உங்களது பாலிசி உங்களை வந்து சேரும்.

 

உங்கள் பாலிசியை புதுப்பிப்பது மேலும் எளிமையானது. பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணுடன் (அல்லது பாலிசி விவரங்கள்) உள்நுழைந்து, உங்கள் விவரங்களை உறுதிப்படுத்தி, பணம் செலுத்துங்கள். அவ்வளவு தான்!

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்