தி ஹெல்த் இன்ஷூரன்ஸ் ஸ்பெஷலிஸ்ட்
ஸ்டார் குரூப் ஹெல்த் இன்ஷூரன்ஸ்
உங்கள் ஊழியர்களுக்கு ஏற்ற மருத்துவக் காப்பீட்டை நீங்கள் தேவைக்கேற்ப வடிவமைத்துக்கொள்ளலாம்.
குரூப் மெடிக்கல் கவர் (GMC) என்றால் என்ன?
குரூப் மெடிக்கல் கவர் என்பது குறிப்பிட்ட ஒரு குழுவாக செயல்படும் நபர்களுக்கான, பொதுவாக, ஏதேனும் தொழில் சார்ந்தவர்களாக இருப்பவர்கள், அல்லது ஒரு சமூகமாக அல்லது ஒரு நிறுவனத்திற்காக பணி புரிபவர்களுக்கான காப்பீட்டுத் திட்டமாகும். குரூப் மெடிக்கல் இன்ஷுரன்ஸ் பாலிசி என்பது உடல்நல மற்றும் மருத்துவ செலவுகளை ஏற்கும்.
குரூப் என்றால் என்ன?
IRDAI-யில் விளக்கப்படி, ஒரு தொழில் அல்லது பொருளாதார நோக்கத்துடன் சேர்ந்து செயல்படும் ஒரு குழுவின் உறுப்பனர்களை குரூப் என்கிறது, அத்தகைய குழு காப்பீட்டுக்காகவே உருவாக்கப்பட்டதாக இருத்தல் கூடாது.
குரூப் பெரும்பாலும் இரண்டு வகைகளாக பிரிக்கப்படும்
பணியமர்த்துவோர்-பணியாளர் அல்லாத குரூப்கள்
பதிவு செய்யப்பட நல சங்கங்கள், குறிப்பிட்ட நிறுவனம்/வங்கிகளால் வழங்கப்பட்ட கிரெடிட் கார்டுகளை வைத்திருப்பவர்கள், காப்பீட்டை ஒரு கூடுதல் நன்மையாக வழங்கும் குறிப்பிட்ட நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் போன்றோர் இதில் அடங்குவர்.
பணியமர்த்துவோர்-பணியாளர் குரூப்கள்
ஒரு குறிப்பிட்ட பதிவு செய்யப்பட்ட அமைப்பின் ஊழியர்களாக இருப்பவர்கள் இந்த வகையான குரூப்களில் இருக்கலாம்.
ஸ்டார் ஹெல்த் அன்ட் அலைட் இன்ஷூரன்ஸ் கம்பெனி லிமிடெட் என்பது ஏற்கனவே இருக்கும் குழுக்களுக்கு குரூப் மெடிகிளைம் பாலிசிகளை வழங்குவதில் நிபுணத்துவம் பெற்ற ஒரு ஹெல்த் இன்ஷுரன்ஸ் நிறுவனமாகும். உதாரணம்: பணியமர்த்துவோர்-பணியாளர்
குரூப் அட்மினிஸ்டிரேட்டர்/ புரோபோசர் என்பவர் யார்?
குரூப் அட்மினிஸ்டிரேட்டர்/ புரோபோசர் என்பவர் ஒரு நபர்/நிறுவனமாக இருக்கலாம், முன்மொழிவுக்கான புரோபோசல் ஃபார்ம்/ டிக்லேரேஷன் ஃபார்மில் இவரே கையெழுத்திட்டிருப்பார். அவருடைய பெயர் பாலிசி ஸ்கெட்யூளில் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த நபர் காப்பீடு பலனை பெற்றிருக்கலாம் அல்லது பெறாமலும் இருக்கலாம்.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான ஸ்டார் ஹெல்த் குரூப் ஹெல்த் இன்ஷூரன்ஸ்
- குரூப் ஆரோக்ய சஞ்சீவனி பாலிசி, ஸ்டார் ஹெல்த் அன்ட் அலைட் இன்ஷூரன்ஸ் கோ லிமிடெட்
- ஸ்டார் குரூப் ஹெல்த் இன்ஷூரன்ஸ்
ப்ளான் | குரூப் ஆரோக்ய சஞ்சீவனி பாலிசி, ஸ்டார் ஹெல்த் அன்ட் அலைட் இன்ஷூரன்ஸ் கோ லிமிடெட் (SHAHLGP21153V012021) | ஸ்டார் குரூப் ஹெல்த் இன்ஷூரன்ஸ் (SHAHLGP21214V022021) | ||||
---|---|---|---|---|---|---|
காப்பீட்டின் வகை | தனி நபர் /குடும்பம் | தனி நபர் /குடும்பம் | ||||
மொத்த காப்பீட்டுத் தொகை (லட்சங்களில்) | ₹100000 முதல் ₹10 லட்சம் வரை | ₹1 கோடி வரை | ||||
ரூம் வாடைகை , போர்டிங், நர்சிங் செலவுகள் | மொத்த காப்பீட்டுத்தொகையில் 2% , அதிக பட்சமாக நாள் ஒன்றுக்கு ₹5000/- | காப்பீட்டுத் தொகை மாற்றிகொள்ளக்கூடியது | ||||
மருத்துவமனை சேர்க்கைக்கு முன் | மருத்துவமனை சேர்க்கைக்கு 30 நாட்களுக்கு முன் | காப்பீட்டுத் தொகை மாற்றிகொள்ளக்கூடியது | ||||
மருத்துவமனயிலிருந்து வெளியேறிய பின் | மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன 60 நாட்கள் வரை | காப்பீட்டுத் தொகை மாற்றிகொள்ளக்கூடியது | ||||
அவசரகால ஆம்புலன்ஸ் | மருத்துவமனயில் சேரும் போது ஒவ்வொரு முறைக்கும் ₹2000 வரை | காப்பீட்டுத் தொகை மாற்றிகொள்ளக்கூடியது | ||||
ஆயுஷ் சிகிச்சை | மொத்த காப்பீட்டுத் தொகை வரை | மொத்த காப்பீட்டுத் தொகை தொகையில் 25% அதிகபட்சமாக பாலிசி ஒன்றுக்கு ₹25,000/- | ||||
தினசரி சிகிச்சைகள் | காப்பீட்டுக்கு உட்பட்டது | காப்பீட்டுக்கு உட்பட்டது | ||||
நவீன சிகிச்சைகள் | மொத்த காப்பீட்டுத் தொகையில் 50% வரை | காப்பீட்டுத் தொகை மாற்றிகொள்ளக்கூடியது | ||||
கண்புரை அறுவை சிகிச்சை | மொத்த காப்பீட்டுத் தொகையில் 25% அல்லது ₹40000 எது குறைவான தொகையோ அதுவே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும், ஆண்டுக்கு பாலிசி ஒன்றுக்கு ஒரு கண்ணிற்கு சிகிச்சை பெற்றுக்கொள்ளல்லாம் | காப்பீட்டுத் தொகை மாற்றிகொள்ளக்கூடியது | ||||
காத்திருப்பு காலம் | ஏற்கனவே இருக்கும் நோய்கள் | பாலிசி துவங்கிய சமயத்திலிருந்து தொடர்ந்து 24 மாதங்கள் | காலத்துடன் அல்லது காத்திருப்பு காலம் இல்லாமல் (காத்திருப்பு காலத்தை நீக்கும் வசதி உள்ளது) | |||
சில குறிப்பிட்ட நோய்கள் | முதல் பாலிசி துவங்கிய சமயத்திலிருந்து தொடர்ந்து 48 மாதங்கள் | காத்திருப்பு காலத்துடன் அல்லது காத்திருப்பு காலம் இல்லாமல் (காத்திருப்பு காலத்தை நீக்கும் வசதி உள்ளது) | ||||
சில குறிப்பிட்ட நோய்கள் | முதல் பாலிசி எடுத்த சமயத்திலிருந்து தொடர்ந்து 48 மாதங்கள் | காத்திருப்பு காலத்துடன் அல்லது காத்திருப்பு காலம் இல்லாமல் (காத்திருப்பு காலத்தை நீக்கும் வசதி உள்ளது) | ||||
விபத்து அல்லாது பிற நோய்கள் | முதல் பாலிசி துவங்கிய சமயத்திலிருந்து முதல் 30 நாட்கள் கழித்து | காத்திருப்பு காலத்துடன் அல்லது காத்திருப்பு காலம் இல்லாமல் (காத்திருப்பு காலத்தை நீக்கும் வசதி உள்ளது) | ||||
மைக்ரேஷேன் (இன்ஷூரன்ஸ் ரெகுலேட்டர் மூலம் வழங்கப்படுவது) |
எழுத்துபூர்வமான மாறுதலைப் பொருத்தது:
| |||||
காப்பீட்டில் அடங்குபவை | நோய்/ விபத்துகள் மற்றும் தினசரி சிகிச்சை அல்லது மருத்துவ நடைமுறைகள் . இது நோயாளர் 24 மணி நேரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் பொருந்தும். | |||||
சேர்க்கை மற்றும் நீக்கம் |
|
குறிப்பு: மேலே உள்ள தகவல்கள் வெறும் குறிப்பேடு மட்டுமே ஆகும். காப்பீட்டுத் திட்டத்தை வாங்குவதற்கு முன்பு விதிமுறைகள் & நிபந்தனைகளின் முழுமையான விவரங்களுக்கு பாலிசி ஆவணத்தில் உள்ள அதன் பகுதியை படிக்கவும்.
ஸ்டார் குரூப் ஹெல்த் இன்ஷூரன்ஸ்
புரோபோசரின் தேவைக்கேற்ப வடிவமைத்த பிறகே ஸ்டார் குரூப் ஹெல்த் இன்ஷூரன்ஸ் அவருக்கு பாலிசியைத் தருகிறது. பாலிசி அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள துணை வரம்புகளுக்கு உட்பட்டு இந்த பாலிசியின் பலன்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன:
உள்-நோயாளருக்கான மருத்துவமனை செலவுகள்: மருத்துவர்களின் கட்டணம், நர்சிங் செலவுகள், அறுவை சிகிச்சை செலவுகள், அவசர சிகிச்சைப் பிரிவிற்கான (ICU) கட்டணங்கள், மயக்க மருந்து நிபுணர் கட்டணங்கள், மயக்க மருந்து செலவுகள், அறுவை சிகிச்சை அறையின் கட்டணம், அறை கட்டணங்கள்/போர்டிங் செலவுகள் உட்பட எல்லா செலவுகளும் நோயாளர் மருத்துவமனயில் குறைந்த பட்சம் 24மணி நேரம் இருக்கும் பட்சத்தில் பொருந்தும்.
மருத்துவமனையில் சேர்வதற்கு முந்தைய மற்றும் பிந்தைய செலவுகள்: காப்பீட்டு ஆவணத்தின் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்பு வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய மற்றும் பிந்தைய மருத்துவச் செலவுகள்.
தினசரி சிகிச்சைகள்/செயல்முறைகள்: தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக, 24 மணி நேரத்திற்குள் மேற்கொள்ளப்படும் மருத்துவ சிகிச்சை மற்றும்/அல்லது அறுவை சிகிச்சை தொடர்பான அனைத்து தினசரி சிகிச்சைகளும் இதில் உள்ளடங்கும். வெளிநோயாளராக எடுத்துக் கொள்ளும் சிகிச்சைகள், தினசரி சிகிச்சைகள்/செயல்முறைகளிலிருந்து விலக்கப்படும்.
மகப்பேறு நன்மைகள்: C-செக்ஷன் பிரசவம் அல்லது சுகப்பிரசவம் (பிரசவத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய செலவுகள் உட்பட), பாலிசி காலத்தில் கர்ப்பத்தைச் சட்டப்பூர்வமாக கலைக்கும் செலவுகள் ஏற்கப்படும். குழந்தை பிறப்பு தொடர்பான செலவுகளை 1-வது நாளிலிருந்து பாலிசி அட்டவணையில் கூறியுள்ள குறிப்பிட்ட காப்பீட்டுத் தொகை வரம்பு வரை இந்த பாலிசி ஏற்கும். இந்த பாலிசி காத்திருப்பு காலத்துடன் அல்லது காத்திருப்பு காலம் இல்லாமலும் வழங்கப்படலாம். இக்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 9 மாத காத்திருப்பு காலத்தை தள்ளுபடி செய்வதற்கான வழியும் உள்ளது.
புதிதாகப் பிறந்த குழந்தைக்குக் காப்பீடு: காப்பீட்டுத் திட்டத்தின் அட்டவணையில் கூறப்பட்டுள்ளபடி, புதிதாகப் பிறந்த குழந்தை, உள் நோயாளாராக கருதப்பட்டு காப்பீட்டுத் தொகையின் ஃப்ளோட்டருக்கான அளவு வரை மருத்துவ செலவுகள் ஏற்கப்படும், அல்லது தாயின் மொத்த காப்பீட்டுத் தொகையில் ஒரு குறிப்பிட்ட விழுக்காடு வரை அளிக்கப்படும். இது விருப்பத்தின் பேரில் பெறக்கூடிய ஒரு காப்பீட்டு அம்சமாகும்.
ஆயுஷ் சிகிச்சை: அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர் (NABH) சிகிச்சை அளிக்கும் பட்சத்தில் ஹோமியோபதி, ஆயுர்வேதம், சித்தா, யுனானி சிகிச்சை போன்ற மாற்று சிகிச்சை முறைகளுக்கான மருத்துவச் செலவுகளுக்கான காப்பீட்டை இந்த பாலிசி வழங்குகிறது.
எதுபோன்ற காத்திருப்பு காலம் தள்ளுபடி செய்யப்படுகிறன?
30 நாட்களுக்கான காத்திருப்பு காலத்தின் தள்ளுபடி | பாலிசி தொடங்கப்பட்ட முதல் 30 நாட்களுக்குள் ஏற்படும் எந்தவொரு உடல்நல பாதிப்பும் காப்பீட்டின் பாதுகாப்பின் கீழ் வரும் |
முதல் வருட விலக்கு அளிக்கப்பட்டவை தள்ளுபடி செய்யப்படுதல் | பாலிசி நிபந்தனைகளில் கூறப்பட்டுள்ள குறிப்பிட்ட உடல்நல பாதிப்புகள், உதாரணமாக, பித்தப்பை கற்கள் சிறுநீரகக் கற்கள், கணையக் கற்கள், சுக்கிலம், குடலிறக்கம், விரை வீக்கம் மற்றும் பிற நோய்கள் காப்பீட்டுத் திட்டம் துவங்கப்பட்ட முதல் தேதியிலிருந்து பாதுகாப்பு வரம்பின் கீழ் வரும். |
முதல் இரண்டு வருட விலக்கு அளிக்கப்பட்டவை தள்ளுபடி செய்யப்படுதல் | பாலிசி நிபந்தனைகளில் கூறப்பட்டுள்ள குறிப்பிட்ட உடல்நல பாதிப்புகள் உதாரணமாக, கண்புரை, ENT நோய்கள், முதுகெலும்புகளுக்கு இடையேயான வீக்கம், பெண் பிறப்புறுப்பு உறுப்புகள் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் பிற நோய்கள் காப்பீட்டுத் திட்டம் துவங்கப்பட்ட முதல் தேதியிலிருந்து பாதுகாப்பு வரம்பின் கீழ் வரும். |
ஏற்கனவே உள்ள நோய்களுக்கு விலக்கு அளிக்கப்படுதல் | ஏற்கனவே இருக்கும் நோய்க்கான (PED) சிகிச்சை மற்றும் அதனால் நேரடியாக ஏற்படும் சிக்கல்கள் தொடர்பான செலவுகளுக்கு பாலிசி தொடங்கப்பட்ட நாளிலிருந்து காப்பீடு அளிக்கப்படும். |
ஸ்டார் குரூப் ஹெல்த் இன்ஷூரன்ஸின் அம்சங்கள் பற்றிய கண்ணோட்டம்
ஸ்டார் குரூப் ஹெல்த் இன்ஷூரன்ஸ் என்பது ஊழியர்களுக்கு அவர்களின் நிறுவனத்தால் வழங்கப்படும் ஒரு காப்பீட்டுத் திட்டமாகும்.
- ஊழியர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களான மனைவி/கணவர், சார்ந்திருக்கும் குழந்தைகள், பெற்றோர் மற்றும் மாமனார்/மாமியார் ஆகியோரை சேர்க்கலாம்.
- வயதான பெற்றோர் மற்றும் மாமனார்/மாமியார் ஆகியோருக்கு இணை-கட்டணம் செலுத்தும், கோ-பே அம்சத்துடன் கூடிய அல்லது அந்த அம்சம் இல்லாமல் இந்த ஸ்டார் குரூப் ஹெல்த் இன்ஷூரன்ஸ் வழங்கப்படலாம்.
- உடல்நல பாதிப்பு அல்லது விபத்து காரணமாக 24 மணி நேரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற நேர்ந்தாலோ, அல்லது தினசரி சிகிச்சை பெற நேர்ந்தாலோ இந்த பாலிசி ஃப்ளோட்டர் அல்லது தனி நபர் காப்பீட்டுத் தொகையைப் பெற உதவுகிறது.
- ஊழியர் தமது தேவைகளுக்கேற்ப கூடுதல் டாப்-அப் காப்பீட்டு தொகையைத் தேர்வு செய்யலாம்.
ஸ்டார் குரூப் ஹெல்த் இன்ஷூரன்ஸின் அம்சங்கள்
ஃப்ளோட்டரின் நன்மை: கூடுதலாக ஒரு பிரீமியம் தொகையை செலுத்தி, பாலிசிதாரர் ஒரு ஃப்ளோட்டர் காப்பீட்டுப் பாதுகாப்பைப் பெற்று, குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் (மனைவி/கணவர், சார்ந்திருக்கும் குழந்தைகள், பெற்றோர் மற்றும் மாமானார்/மாமியார்) அதே காப்பீட்டுத் தொகையைப் பெறலாம்.
கேஷ்லெஸ் மற்றும் ரீஇம்பர்ஸ்மென்ட் வசதி: பாலிசிதாரர் காப்பீட்டு நிறுவனத்தின் நெட்வொர்க் மருத்துவமனைகளில் கேஷ்லெஸ் வசதியைப் பெறலாம், மற்றும் குறிப்பிட்ட ஆவணங்களைச் சமர்ப்பித்தால் சிகிச்சைக்கான பணத்தை திரும்பப் பெறலாம்.
காப்பீட்டு காலம்: 1 வருடம்
தகுதி: எல்லா வயதினரும் இந்த பாலிசியைப் பெறலாம்.
குழுவின் எண்ணிக்கை: உங்கள் நிறுவனம் காப்பீட்டுத் திட்டத்தை வழங்கினால், உங்களுக்கு பாலிசி பெற தகுதி உள்ளது. நிறுவனத்தின் அளவானது குடும்ப உறுப்பினர்கள் உட்பட சிறிய அளவில் குறைந்தபட்சம் 7 நபராக கூட இருக்கலாம்.
காத்திருப்பு காலம்: ஸ்டார் குரூப் ஹெல்த் இன்ஷூரன்ஸ் காப்பீட்டை எடுத்துக்கொள்வதன் மிகப்பெரிய நன்மைகளில் ஒன்று, காத்திருப்பு காலம்/ கால அடிப்படையிலான விதிவிலக்குகள் இல்லாமல் இருப்பது. வழக்கமாக, குரூப் ஆரோக்ய சஞ்சீவனி பாலிசியில், காத்திருப்பு காலம் 30 நாட்கள் முதல் 4 ஆண்டுகள் வரை இருக்கும். மேலும் மகப்பேறு செலவுகள் இதில் உள்ளடங்காது. இருப்பினும், ஸ்டார் குரூப் ஹெல்த் இன்ஷூரன்ஸ் திட்டமானது, ஊழியர்களுக்கு கால வரையறைகளிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதுடன், மகப்பேறு செலவுகளை ஈடுசெய்வது போன்ற சில கூடுதல் நன்மைகளையும் வழங்குகின்றது.
காப்பீடு அளிப்பதற்கு முன் மருத்துவத் பரிசோதனை இல்லை: இதர குரூப் இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் இதுபோன்ற முன் மருத்துவத் பரிசோதனைகள் இல்லாமல் காப்பீடு வழங்கப்படலாம். ஆனால், குரூப் ஆரோக்ய சஞ்சீவனி பாலிசியில் காப்பீட்டுத் திட்டத்தினை பெறுவதற்கு முன்பு மருத்துவத் பரிசோதனைக்கு உட்படுவது கட்டாயமானது. இதன் மூலம், ஏற்கனவே நோயாளராக இருக்கும் வயதான பணியாளரும் இந்த குரூப் இன்ஷூரன்ஸ் மூலம் காப்பீடு பெறலாம்.
பிரீமியம்: பாலிசியின் கீழ் வசூலிக்கப்படும் பிரீமியமானது, தேர்ந்தெடுத்துள்ள மொத்த காப்பீட்டுத் தொகை, கூடுதல் காப்பீட்டு அம்சங்கள் (பாலிசிதாரரால் தேர்ந்தெடுக்கப்பட்டால்) மற்றும் வயது, ஆபத்து நேரும் சாத்தியங்கள், அந்நகரின் தன்மை, நோயின் தன்மை போன்ற பிற காரணிகள் ஆகியவற்றைப் பொறுத்தது.
பாலிசி வகைகள்: வழக்கமான நுகர்வோருக்கு வழங்கப்படுவது போலவே பல்வேறு வகையான பாலிசிகளும் கிடைக்கும்; இருப்பினும், வழங்கப்படும் காப்பீட்டுத் தொகையின் அளவு உங்கள் நிறுவனம் தேர்ந்தெடுக்கும் பாலிசியைப் பொறுத்தது.
சேர்த்தல்/நீக்குதல்: குரூப் ஆரோக்ய சஞ்சீவனி பாலிசியில், இடைக்காலத்தில் சேர்ப்பு சாத்தியமில்லை, ஆனால் ஸ்டார் குரூப் ஹெல்த் இன்ஷூரன்ஸில் திருமணத்திற்கு பிறகும், புதிதாகப் பிறந்த குழந்தை, மற்றும் பாலிசிதாரரின் குடும்ப உறுப்பினர்களை காப்பீட்டுத்திட்டத்தின் இடைப்பட்ட காலத்தில் கூட சேர்க்கலாம்.
நாங்கள் எதற்கு பணம் செலுத்துவதில்லை?
காப்பீட்டுத் திட்டத்தின் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள நிரந்தர விலக்குகளுக்கு நாங்கள் பணம் செலுத்துவது கிடையாது.
- ஊன்று கோல் மற்றும் சக்கர நாற்காலிகள், வைட்டமின்கள் மற்றும் டானிக்குகள்
- செயற்கை பற்கள்
- உடலின் வெளிப்புறத்தில் ஏற்படும் பிறவிக் குறைபாடு
- கட்டண வரம்புக்குள் வராதவை / நுகர்வோர் தயாரிப்புகள் போன்றவை
கார்ப்பரேட் பஃபர் என்றால் என்ன?
கார்ப்பரேட் பஃபர் என்பது முழுக் குழுவிற்கும் கூடுதலாக அளிக்கப்படும் காப்பீட்டுத் தொகையைக் குறிக்கிறது. பணியாளர் ஒருவரது கவரேஜ் தீர்ந்த பிறகு, குறிப்பிட்ட நோய்கள்/நோய்களின் கீழ் ஏதேனும் மருத்துவ அவசரநிலை ஏற்பட்டால் இதைப் பெறலாம். நிறுவனத்தின் சம்மதத்துடன், ஃபேமிலி ஃப்ளோட்டர் வசதியின் கீழ் இந்த நன்மையை ஊழியர், அவரது மனைவி/கணவர் மற்றும் பிள்ளைகளுக்கு நீட்டிக்க முடியும்.
நிறுவனத்தினாலேயே வழங்கப்படும் க்ளைம் செட்டில்மென்ட்
கேஷ்லெஸ் க்ளைம் நடைமுறைகள்:
ஸ்டார் ஹெல்த் க்ளைம்ஸ் சர்வீசஸ் என்பது வாடிக்கையாளர்களுக்கு உகந்த மற்றும் தொந்தரவில்லாத சுலபமான ஒரு செட்டில்மென்ட் செயல்முறையாகும், இது அனைத்து க்ளைம்களையும் சரியான நேரத்தில் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்கிறது. உங்களது மருத்துவக் காப்பீட்டு நிபுணராக, இந்தியாவில் உள்ள எங்களின் அனைத்து நெட்வொர்க் மருத்துவமனைகளிலும் கேஷ்லெஸ் கிளைம்களை நாங்கள் வழங்குகிறோம்.
- ஸ்டார் ஹெல்த் இணையதளத்தில் நெட்வொர்க் மருத்துவமனைகளின் பட்டியல் உள்ளது, இதில் ஒப்புதல் வழங்கப்பட்ட நெட்வொர்க் மருத்துவமனைகளும் அடங்கும்.
- எங்கள் இணையதளத்தில் உள்ள நெட்வொர்க் பட்டியலிலிருந்து தேடி, உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள நெட்வொர்க் மருத்துவமனையைக் கண்டறியவும்.
- திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைக்கு, அனுமதிக்கப்படும் தேதிக்கு முன்னதாக மருத்துவமனையை அணுகவும், அவர்கள் பூர்த்தி செய்த ப்ரீ-ஆத்தரைசேஷன் படிவத்தை எங்களுக்கு அனுப்புவார்கள்.
- ப்ரீ-ஆத்தரைசேஷன் படிவத்தில், உங்கள் தொடர்பு எண்ணை நீங்கள் வழங்க வேண்டும்.
- முழுமையான விவரங்கள் அளிக்கப்படவில்லை என்றால், கோரிக்கையின் ஒப்புதலைப் பெறுவது தாமதமாகலாம்.
நெட்வொர்க் மருத்துவமனையில் உள்ள காப்பீட்டு அலுவலரை அணுகவும். 044 4674 5800 என்ற எண்ணில் எங்களைத் தொடர்புகொள்வதன் மூலமோ அல்லது support@starhealth.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் மூலமோ அதுபற்றி தகவல் தெரிவிக்கலாம்.
- க்ளைம் எண்ணைப் பெற ஆப்பரேட்டருக்குத் தெரிவிக்கவும்.
- வாடிக்கையாளர் ID/ பாலிசி எண்
- மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான காரணம்
- மருத்துவமனையின் பெயர்
- பாலிசிதாரர்/நோயாளரின் பெயர்
திட்டமிடப்பட்ட மருத்துவமனை சேர்க்கையை 7 முதல் 10 நாட்களுக்கு முன்னதாகவே தெரிவிக்காலம். அவசரகால சிகிச்சைக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் காப்பீட்டு நிறுவனத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.
- க்ளைமை பதிவு செய்யவும்.
- காப்பீட்டு அலுவலரை அணுகி நெட்வொர்க் மருத்துவமனையில் ஆவணங்களைச் சமர்ப்பிக்கவும்.
- ஸ்டார் க்ளைம்ஸ் அணிக்கு ஆவணங்கள் அனுப்பப்படும்.
- எங்கள் க்ளைம்ஸ் செயலாக்கக் குழுவால் ஆவணங்கள் சரிபார்க்கப்படும்.
- கிளைம் அங்கீகரிக்கப்பட்டால், பாலிசி நிபந்தனைகளின்படி க்ளைம் செட்டில் செய்யப்படும்.
- நெட்வொர்க் மருத்துவமனைக்கு கட்டணம் அனுப்பப்படும்.
- மீதம் உள்ள கட்டணத்தைச் செலுத்தி டிஸ்சார்ஜ் ஆகலாம்.
ரீஇம்பர்ஸ்மென்ட் க்ளைம் நடைமுறைகள்:
திட்டமிடப்பட்ட சிகிச்சையாக இருந்தால், காப்பீட்டு நிறுவனத்திடம் சிகிச்சையைப் பற்றி, பாலிசிதாரர் முன்கூட்டியே அறிவித்து, க்ளைம் எண்ணைப் பெற வேண்டும். அவசரகால அனுமதியின் போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் க்ளைம் எண்ணைப் பெறலாம். பாலிசிதாரர் 1800-425-2255 என்ற ஹெல்ப்லைனைத் தொடர்புகொண்டு, மருத்துவமனையின் பெயர் மற்றும் நோயாளரின் பெயர் போன்ற தேவையான தகவல்களை வழங்குவதன் மூலம் அவரது க்ளைம் எண்ணைப் பெறலாம். பாலிசிதாரர் , டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்குள் தேவையான ஆவணங்கள் அளித்து மருத்துவ செலவுகளைத் திரும்பப் பெறலாம்.
ரீஇம்பர்ஸ்மென்ட் க்ளைமிற்கு சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:
- முறையாக பூர்த்தி செய்யப்பட்ட க்ளைம் படிவம்
- மருத்துவமையில் சேர்பதற்கு முன் செய்யப்பட சோதனைகள் மற்றும் சிகிச்சை ஆவணங்கள்
- மருத்துவமனை மற்றும் மருந்தகத்திலிருந்து பெறப்பட்ட பண ரசீதுகள்
- பண ரசீதுகள் மற்றும் உடற்பரிசோதனை அறிக்கைகள்.
- மருத்துவர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் மயக்க மருந்து நிபுணர்களிடமிருந்து பெறப்பட்ட ரசீதுகள்
- நோய் கண்டறிந்தது தொடர்பாக சிகிச்சையளிக்கும் மருத்துவரிடமிருந்து சான்றிதழ்
- பான் கார்டின் நகல், ரத்து செய்யப்பட்ட காசோலை அல்லது புரபோசரின் NEFT விவரங்கள்
உங்கள் கேள்விகளுக்கு தீர்வு காண எங்கள் 24/7 வாடிக்கையாளர் சேவையையும் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.
கோ-பேமென்ட் என்பது ஒரு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியின் கீழ் செலவுகளை பகிர்ந்து கொள்ளும் ஒரு அம்சமாகும், இதில் பாலிசிதாரர் கிளைம் தொகையின் குறிப்பிட்ட சதவீதத்தை ஏற்க வேண்டும். இந்த கோ- பேமென்ட் செலுத்தும் அம்சம் குரூப் இன்ஷூரன்ஸின் செலவைக் குறைக்கும்.
ஸ்டார் குரூப் ஹெல்த் இன்ஷூரன்ஸை யாருக்கு பரிந்துரைக்கிறோம்?
எந்தவொரு நிறுவனத்திற்கும் அதன் ஊழியர்கள் விலைமதிப்பற்ற சொத்துக்கள் ஆவார்கள்; மேலும் ஆரோக்கியமான ஊழியர்களை உருவாக்க நிறுவனங்கள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன, அதன் மூலம் அவர்களது மன மற்றும் உடல் நலத்தை சிறந்த முறையில் பராமரித்து, பணியில் சிறப்பாக செயல்பட தயார் செய்கின்றன. தற்போதைய சூழ்நிலையில், மருத்துவக் காப்பீட்டை ஒரு ஊழியருக்கு அளிக்கும் பணி ஆதாயமாகக் கருதும் போக்கு நிறுவனங்களிடையே அதிகரித்து வருகிறது.
ஊழியர்களின் உழைப்பை பாராட்டி அதற்கு வெகுமதி அளிப்பதில் மருத்துவக் காப்பீடு முக்கிய காரணியாக அமைகிறது. ஊழியர்களை நீண்ட காலம் அதே நிறுவனத்துடன் பணிபுரிய வைக்க இதை ஒரு ஊக்கமாக பயன்படுத்தப்படலாம். வயதான பெற்றோரை மருத்துவமனையில் சேர்க்கும் செலவினை அவர்களது நிறுவனங்கள் ஏற்கும் போது, ஊழியர்கள் திருப்திகரமாக தங்கள் நிறுவனத்திற்காக முழு உழைப்பையும் அளிக்க முன்வருவார்கள்.
ஒவ்வொரு மனிதவள மேலாளர் அல்லது நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலருக்கும் (CEO) பொதுவாக எழும் கேள்வியை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. குரூப் ஹெல்த் இன்ஷூரன்ஸிற்கு குறைந்தபட்ச ஊழியர்கள் தேவையா? குரூப் ஹெல்த் இன்ஷூரன்ஸ் திட்டத்தினைப் பெற தேவையான குறைந்தபட்ச ஊழியர்களின் எண்ணிக்கை என்ன?
நாங்கள் 20-க்கும் குறைவான ஊழியர்களைக் கொண்ட ஒரு சிறிய நிறுவனமாக இருக்கிறோம். நாங்கள் குரூப் ஹெல்த் இன்ஷூரன்ஸ் திட்டத்தைப் பெற தகுதியானவர்களா?
இந்தக் கேள்விகள் அனைத்தைதிற்கும் நாங்கள் பதிலளிக்க விரும்புகிறோம்.
சிறு மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்கள் (SME) மற்றும் புதிய நிறுவனங்கள்
குறைந்தபட்சம் 7 உறுப்பினர்களைக் கொண்ட சிறிய குழு அளவிலான ஊழியர்களைக் கொண்ட ஸ்டார்ட்-அப்களுக்கு குரூப் மெடிகிளைம் பாலிசிகளில் வழங்கப்படலாம். உதாரணமாக, நீங்கள் 7 ஊழியர்களைக் கொண்ட ஒரு புதிய நிறுவனமாக இருக்கலாம், இருப்பினும் நீங்கள் குரூப் இன்ஷூரன்ஸ் பாலிசிகளைப் பெறலாம்.
குரூப் இன்ஷூரன்ஸ் பாலிசியை நிறுவனங்கள் வாங்குவதன் மூலம் இரட்டிப்பு பலன்களைப் பெறலாம். ஊழியர்களுக்குப் பலன்களை வழங்குவது மட்டுமல்லாமல், வருமான வரிச் சட்டத்தின் 37(1) பிரிவின் கீழ் வரி விலக்கு பெறவும் உதவவும்.
பெரிய நிறுவனங்கள்:
பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு என்பது ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் நலனுக்காகவும், உள்ளூர் சமூகத்தின் நலனுக்காகவும், அற நெறியில் தங்கள் தொழிலை தொடர்ந்து நடத்தி ஊழியர்கள் மற்றும் சமூக மேம்பாட்டிற்காக தங்களை பெரிதளவில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
உங்கள் ஊழியர்களுக்கான சிறந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை எவ்வாறு தேர்வு செய்வது?
திறமையான ஊழியர்களை ஈர்க்கவும் தக்கவைக்கவும் ஸ்டார் குரூப் ஹெல்த் இன்ஷூரன்ஸ் உதவுகிறது. சரியான பலன்களை அளிக்கும், மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளுடன் கூடிய காப்பீட்டுத் திட்டங்களை தேர்ந்தெடுத்து முழு அளவில் பயன்படுத்திக்கொள்வது மிகவும் முக்கியமாகும்.
இதனைக் கருத்தில்கொண்டு, நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்குப் பொருத்தமான ஒரு விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை வழங்குவது முக்கியம். நிறுவனங்களின் பொருளாதார வரம்பிற்குள் அவர்களுக்கு சிறந்த சாத்தியப் பலன்களை தரும், மாற்றியமைக்கக் கூடிய அம்சங்களை வழங்கும் ஒரு காப்பீட்டுத் திட்டமே சரியான குரூப் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எனப்படும்.
உங்கள் ஊழியர்களுக்கான சரியான காப்பீட்டுத் திட்டத்தை வடிவமைக்க உதவும் நடைமுறை விஷயங்களைப் பார்பதற்கு முன், உங்கள் ஊழியர்களை நீங்கள் நன்கு அறிந்து வைத்திருப்பது அவசியம்.
அதற்கான சில குறிப்புகள்
- காத்திருப்பு காலம் - ஸ்டார் குரூப் ஹெல்த் இன்ஷூரன்ஸ்
காலவரையறை சார்ந்த விதிவிலக்குகள்/காத்திருப்பு காலம் பொதுவாக 4 வகைப்படும்
ஸ்டார் குரூப் ஹெல்த் இன்ஷூரன்ஸின் காலவரையறை சார்ந்த விதிவிலக்குகள் பின்வருமாறு:
ஏற்கனவே இருக்கும் நோய்கள் - 4 ஆண்டுகள்.
சில குறிப்பிட்ட நோய்கள் - கண், ENT, பெண் பிறப்புறுப்பு தொடர்பான நோய்களுக்கு 2 ஆண்டுகள் காத்திருப்பு காலம்.
சில குறிப்பிட்ட நோய்கள் -குடலிறக்கம், மூலவியாதி, சிறுநீரகத்தில் கல் உருவாகுதல் போன்ற நோய்களுக்கு 1 வருடம்.
பாலிசியின் முதல் 30 நாட்களில் ஏற்பட்ட அல்லது தொற்றினால் ஏற்படும் ஏதேனும் நோய்.
ஸ்டார் குரூப் ஹெல்த் இன்ஷூரன்ஸின் கீழ் மேற்கூறிய காலவரையறை விதிவிலக்குகளின் கீழ், பின்வரும் நோய்கள் தள்ளுபடி செய்யப்படலாம்
- காத்திருப்பு காலம் - குரூப் ஆரோக்ய சஞ்சீவனி பாலிசி, ஸ்டார் ஹெல்த் அன்ட் அலைட் இன்ஷூரன்ஸ் கோ லிமிடெட்
- ஏற்கனவே இருக்கும் நோய்கள்- 4 ஆண்டுகள்
- சில குறிப்பிட்ட நோய்கள் - 2 ஆண்டுகள். சில உதாரணங்கள் கீழே கூறப்பட்டுள்ளன
- கண்புரை மற்றும் வயது முதிர்வின் காரணமாக ஏற்படும் கண் நோய்கள்
- தீங்கற்ற ENT கோளாறுகள்
- கருப்பை நீக்கம்
- எல்லா வகையான குடலிறக்க பிரச்சனைகள்
- சில குறிப்பிட்ட நோய்கள் -4 ஆண்டுகள். சில உதாரணங்கள் கீழே கூறப்பட்டுள்ளன
- விபத்தினால் ஏற்படாத மூட்டு மாற்று அறுவை சிகிச்சை
- வயது மிகுதியால் ஏற்படும் கீல்வாதம் மற்றும் எலும்புப்புரை
- பாலிசியின் முதல் 30 நாட்களில் ஏற்பட்ட அல்லது தொற்றினால் ஏற்பட்ட ஏதேனும் நோய்
- மகப்பேறு காப்பீடு
ஸ்டார் குரூப் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பிரசவம் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைக்கான காப்பீட்டை மதிப்பு கூட்டப்பட்ட ஆதாயமாக வழங்குகிறது. மகப்பேறு சமயத்தின் போது இந்த நன்மைகளை வழங்குவதன மூலம் உங்கள் ஊழியர்களுக்கு ஆதரவளிக்கலாம்.
- குடும்பத்தினருக்கான காப்பீடு
விரிவான மருத்துவக் காப்பீட்டின் மூலம் ஊழியர்களின் குடும்பத்தை நீங்கள் பாதுகாப்பதை அவர்கள் பாராட்டுவார்கள். நீங்கள் அவர்களை எவ்வளவு மதிக்கிறீர்கள் என்பதை நீங்கள் வழங்கக்கூடிய காப்பீட்டுத் திட்டத்தின் நன்மைகளே எடுத்துக்காட்டும். ஆம், இதற்கு நீங்கள் பணம் செலவிட வேண்டியிருக்கும், ஆனால் உங்கள் ஊழியரின் தேவைகளுக்கு ஏற்ப காப்பீட்டுத் திட்டத்தை வகுக்கலாம். மகப்பேறு போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பலன்கள் போல, உங்கள் ஊழியர்களின் வயதைக் கொண்டு மதிப்பீடு செய்து அவர்களுக்கு ஏற்ற காப்பீட்டுத் திட்டத்தை அளிப்பது சிறந்தது. எடுத்துக்காட்டாக, 20 வயதிற்குட்பட்ட ஊழியர்களுக்கு குடும்பத்திற்கான காப்பீடு அவ்வளவு அவசியமில்லாமல் இருக்கலாம்; ஆனால், முதுமையடையும் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளைக் கொண்ட நடு 30-களின் வயதில் உள்ள ஊழியர்களுக்கு அது அவசியமாகும். மருத்துவ அவசர நிலை ஏற்படும் போது, உங்கள் ஊழியர்களால் தங்கள் மருத்துவக் காப்பீட்டை சரியாகப் பயன்படுத்த முடியாவிட்டால் உங்கள் முயற்சிகள் பயனற்றதாகிவிடும்.
ஸ்டார் குரூப் ஹெல்த் இன்ஷூரன்ஸ் மூலம் ஊழியர்கள் பெறும் நன்மைகள் என்ன?
இன்றய காலகட்டத்தில், ஊழியர்கள் சம்பளத்தை மட்டுமே நோக்கமாக வைத்து நிறுவனங்களைத் தேடுவதில்லை. எனவே, அவர்களை ஈர்க்கும் சலுகைகளில் ஒன்று ஸ்டார் குரூப் ஹெல்த் இன்ஷூரன்ஸ் ஆகும், இது தற்போதைய பெருந்தொற்று நோய் காலக்கட்டத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. கோவிட்-19 நோயின் தாக்கத்தால் ஊழியர்களுக்கு கட்டாய கார்ப்பரேட் ஹெல்த் இன்ஷூரன்ஸ் வழங்க, உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பைக் கருத்தில் கொண்டு, கார்ப்பரேட் ஹெல்த் இன்ஷூரன்ஸ் திட்டமானது நிறுவனங்கள் மற்றும் அதன் ஊழியர்கள் ஆகிய இரு தரப்பினருக்கும் பல நன்மைகளை வழங்க முடியும்.
ஆரோக்கியமான ஊழியர்கள் அதிக உற்பத்தி திறன் கொண்ட மனிதவளத்தை உருவாக்குகிறார்கள். குறிப்பாக அவர்களுடைய குடும்ப உறுப்பினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், ஊழியர்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். உங்கள் மருத்துவத் தேவைகளை ஈடுகட்ட உங்கள் நிறுவனத்தில், ஸ்டார் குரூப் ஹெல்த் இன்ஷூரன்ஸ் திட்டத்தை பெறுவதால் கிடைக்கும் பல நன்மைகளை இன்னும் விரிவாகப் பார்ப்போம்.
ஒரு ஊழியராக,
செலுத்தப்பட்ட பிரீமியத்தைப் பொருத்து மட்டுமில்லாமல் அதனைக் கடந்தும் அதிக பலன்களைத் ஸ்டார் குரூப் ஹெல்த் இன்ஷூரன்ஸ் தருகிறது
- இது வெறும் காப்பீடு மட்டுமில்லை, அதற்கும் மேலாக ஒரு குடும்பத்திற்கான காப்பீட்டுத் திட்டமாக உள்ளது. பாலிசியைப் பொறுத்து, உங்கள் குடும்பமும் காப்பீட்டின் கீழ் வரும்.
ஒரு நிறுவனமாக,
உங்கள் ஊழியர்கள் முழு உற்பத்தித் திறனை வெளிப்படுத்த நீங்கள் அவர்களுக்கு பல நன்மைகள் நிறைந்த ஸ்டார் குரூப் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை வழங்கலாம்.
- வேலைக்கு வராமல் இருப்பதை தவிர்த்தல்
- உற்பத்தியை மேம்படுத்துதல்
- ஊழியர்களை தக்க வைத்தல்
- உற்பத்தித் திறனை அதிகரித்தல்
சிறிய மற்றும் பெரிய நிறுவனங்களுக்கு, அதன் ஊழியர்களின் மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கும் - சௌகரியமான மற்றும் ஊழியர்களின் தேவைக்கு ஏற்ப மாற்றத்தக்க அம்சங்களுடன் கூடிய கார்ப்பரேட் ஹெல்த் இன்ஷூரன்ஸ் தீர்வுகளை ‘ஸ்டார் ஹெல்த் அன்ட் அலைட் இன்ஷூரன்ஸ் கம்பெனி லிமிடெட்’ வழங்குகிறது. எங்கள் ஸ்டார் குரூப் ஹெல்த் இன்ஷூரன்ஸ் உங்கள் நிறுவனத்திற்கு என்ன பலன்களை வழங்க முடியும் என்பது இங்கே காணலாம்:
நோய்வாய்ப்படும் நாட்களால் ஏற்படும் செலவைக் குறைக்கிறது
ஊழியர்களை பணியமர்த்திய ஒவ்வொரு நிறுவனமும், நோய்வாய்ப்படும் அதன் ஊழியர்கள் எடுக்கும் விடுப்பு நாட்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் சவாலை எதிர்கொண்டு வருகிறது. நோய்வாய்ப்படும் நாட்களால் வேலை நாட்களின் எண்ணிக்கை குறைகிறது. இது தொழில்களின் லாபத்தை கணிசமாக பாதிக்கிறது. உங்கள் ஊழியர்கள் உடல்நலம் பாதிக்கப்படுவதை கட்டுப்படுத்த முடியாது என்றாலும், ஸ்டார் குரூப் ஹெல்த் இன்ஷூரன்ஸ் உங்கள் ஊழியர்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சையை கிடைக்கச் செய்வதோடு, அவர்கள் விரைவில் பணிக்குத் திரும்பவும் உதவுகிறது.
ஊழியர்களை பணியமர்த்தவும் தக்கவைக்கவும் உதவுகிறது
திறமையான நபர்களை பணியமர்த்தும் போது, நன்மைகள் நிறைந்த மருத்துவக் காப்பீட்டை வழங்குவதால் மற்ற நிறுவனங்களை விட உங்கள் நிறுவனத்தை அவர்கள் தேர்ந்தெடுப்பதற்கு அதுவே ஒரு காரணமாக இருக்கலாம். அதே நேரத்தில், உங்கள் தற்போதைய ஊழியர்கள் மற்ற நிறுவனங்களுக்கு மாறுவதையும் தவிர்க்கலாம். ஏனெனில் தனியார் மருத்துவக் காப்பீட்டை வழங்குவதன் மூலம், அவர்களின் நலனில் நீங்கள் கொண்டுள்ள அக்கறை மற்றும் மதிப்பையும் உணரச் செய்கிறது.
பணி மனநிறைவை அதகரிக்கும்
நிறுவனத்தின் மூலம் பெறும் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் என்பது ஊழியர்களால் மிகவும் விரும்பப்படும் சலுகைகளில் ஒன்றாகும். கார்ப்பரேட் ஹெல்த் இன்ஷூரன்ஸ் திட்டத்தின் மூலம் தரமான தனியார் மருத்துவ சிகிச்சையை வழங்குவதன் மூலம், தங்கள் நிறுவனம் தங்கள் உடல்நலம் மற்றும் நல்வாழ்வில் ஆர்வம் காட்டுகிறது என்பதை ஊழியர்கள் அறிந்தால், அவர்களது ஊக்கமும், உற்பத்தித்திறனும் அதிகரிக்கும். மேலும், உங்கள் நிறுவனத்துடன் நீண்ட காலம் இருக்கவும் அவர்கள் தூண்டப்படுவார்கள்.
ஸ்டார் ஹெல்த் மூலம் உங்கள் ஊழியர்களை கவனித்திடுங்கள்
உங்கள் ஊழியர்களை நீங்கள் கவனித்துக்கொண்டால், எதுவும் சாத்தியமாகும்
உங்கள் ஊழியர்களின் உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் கவனித்துக் கொள்ளப்படுவதை உறுதிசெய்வதற்காகவே, எங்களது குரூப் ப்ளான்கள் கவனத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. எனவே, அவர்கள் நிறுவனத்தின் முக்கியமான செயல்பாடுகளின் மீது கவனம் செலுத்த முடியும்.
- தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ளக் கூடிய கவர்
குரூப் பாலிசிகளைப் பொருத்தவரை, உங்கள் தொழில் தேவைகளுக்கும், காப்பீட்டுத் தொகைக்கும் ஏற்ப ஸ்டார் குரூப் ஹெல்த் இன்ஷூரன்ஸை எங்களால் பிரத்தியேகமாக வடிவமைத்து தர முடியும்.
- தொழில்நுட்பங்களுக்கு ஏற்றது
ஸ்டார் ஹெல்த் காப்பீட்டுத் திட்டங்கள் தொழில்நுட்பபங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருக்கும், இதனால் நீங்கள் மேற்கொள்ளும் க்ளைமை எளிமையாகவும் மன அழுத்தமின்றியும் செய்ய முடியும்.
- அட்மின் டேஷ் போர்டு
உங்கள் குரூப் ஹெல்த் பெனிஃபிட்ஸை நிர்வகிக்கும் அட்மின் டேஷ் போர்டு வசதி உள்ளது. இது உங்களுக்கு தேவையான அனைத்து செயல்பாடுகளையும் வழங்குகிறது.
ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தின், ஸ்டார் குரூப் ஹெல்த் இன்ஷூரன்ஸை நீங்கள் ஏன் தேர்வு செய்ய வேண்டும்
- 89.9% கேஷ்லெஸ் க்ளைம்கள் 2 மணி நேரத்தில் செட்டில் செய்யப்பட்டுள்ளன.
- இந்தியா முழுவதும் உள்ள 14,000+ற்கும் அதிகமான நெட்வொர்க் மருத்துவமனைகளில் நீங்கள் கேஷ்லெஸ் வசதியைப் பெறலாம்.2021-ஆம் ஆண்டில் எங்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஹெல்த் க்ளைம்களில் 94%, 30 நாட்களுக்குள் செயல்படுத்தப்பட்டன.
- TPA இல்லாத க்ளைம் செட்டில்மென்ட் செய்ய எங்களிடம் இன்-ஹௌஸ் மருத்துவர்கள் உள்ளனர்.
- இத்துறையிலேயே சிறந்த க்ளைம் - செட்டில்மென்ட் விகிதம் உள்ளது.
உதவி மையம்
குழப்பமா? பதில் எங்களிடம்
உங்கள் மருத்துவ காப்பீடு தொடர்பான அனைத்து சந்தேகங்களையும் தீர்த்துக் கொள்ளுங்கள்.