ஃப்ரீ லுக் பீரியட்
அன்புள்ள வாடிக்கையாளரே,
ஸ்டார் ஹெல்த் & அல்லைடு இன்சூரன்ஸ் கோ லிமிட்டெட் - இல் இருந்து மருத்துவ காப்பீடு பெற்றதற்கு நன்றி. இந்த பாலிசியானது "ஃப்ரீ லுக் பீரியட்" என்ற நிபந்தனைக்கு உட்பட்டது என்பதை நினைவில் கொள்ளவும். இந்த விதியின்படி, பாலிசியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மதிப்பாய்வு செய்ய பாலிசி பெறப்பட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்கு அனுமதி உண்டு. ஒருவேளை விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் உங்களுக்கு அதிருப்தி இருந்தால், பாலிசியை ரத்து செய்ய நீங்கள் கோரலாம். அத்தகைய சூழலில் காப்பீடு செய்த நபரின் மருத்துவப் பரிசோதனை மற்றும் முத்திரைத் தீர்வை கட்டணங்கள் நீங்கலாக மற்ற தொகையினை திரும்பப் பெற முடியும். அதற்கு முன்பு பாலிசிதாரர் க்ளைம் செய்திருந்தால், க்ளைம் தொகை நீங்கலாக மீதமுள்ள பிரீமியம் திரும்பக் கிடைக்கும்
இது சம்பந்தமாக ஒரு மாதிரி விண்ணப்பப் படிவமும் இணையதளத்தில் உள்ளது. நீங்கள் "ஃப்ரீ லுக் பீரியட்" கோர விரும்பினால் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பாலிசி புதுப்பித்தலின் போது ஃப்ரீ லுக் பீரியட் சலுகை பொருந்தாது,
நன்றி
தங்கள் உண்மையுள்ள,
அங்கீகரிக்கப்பட்ட கையொப்பம்