பாதுகாப்பாக வாங்குதல்
முக்கியமான ஆலோசனை
அன்புள்ள பாலிசிதாரர்களே,
உங்கள் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியமே எங்கள் முன்னுரிமை. எங்கள் வாடிக்கையாளர்களை ஏமாற்ற மோசடி கும்பல்கள் ஒவ்வொரு நாளும் புதிய நுட்பங்களை உருவாக்குகிறார்கள். எனவே, விழிப்புணர்வை ஏற்படுத்த, பின்வரும் எச்சரிக்கைகளை நாங்கள் முன்னிலைப்படுத்துகிறோம்:
கண்டறிக: எச்சரிக்கை அறிகுறிகள்
- சில கூடுதல் நன்மைகள் மற்றும் ஆதாயங்களை தருவதாக ஆசை காட்டி உங்களை அவசரமாகச் செயல்படச் சொல்கிறார்களா?
- UPI இணைப்பைப் பயன்படுத்தி அல்லது சில நம்பகத்தன்மை இல்லாத இணைப்புகளைப் பயன்படுத்தி அவசரமாகப் பணம் செலுத்துமாறு அவர்கள் உங்களிடம் கேட்கிறார்களா?
- பணம் செலுத்துதல் அல்லது தனிப்பட்ட தகவல்களுக்கு அங்கீகரிக்கப்படாத தகவல்களைக் கொண்ட சில இணைப்பைக் கிளிக் செய்யும்படி அவர்கள் உங்களிடம் கேட்கிறார்களா?.
நிறுத்து: சந்தேகத்திற்குரிய செயல்பாடுகள்
- செய்திகளின் ஆதாரத்தின் நம்பகத்தன்மையை சரிபார்க்கவும்.
- OTP, CVV எண் அல்லது கிரெடிட் / டெபிட் கார்டு எண் மற்றும் அதற்கான PIN அல்லது UPIக்கான MPIN ஆகியவற்றை யாருடனும் பகிர வேண்டாம்
புகாரளிக்க: சம்பவத்தை பற்றி தகவல் அளித்தல்
- நீங்கள் நிறுவனத்திடம் சீக்கிரம் புகாரளித்தால், மோசடியைக் கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
என்றும் அன்புடன்,
ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் டீம்
இணையதளம்: https://www.starhealth.in
மின்னஞ்சல்: support@starhealth.in
விற்பனை மற்றும் சேவைகள் - 044 4674 5800