ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ்

விபத்துக் காப்பீடுத் திட்டங்கள்

எதிர்பாரா நிகழ்வுகளில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்

*By providing my details, I consent to receive assistance from Star Health regarding my purchases and services through any valid communication channel.

அனைத்து விபத்து திட்டங்கள்

உங்களைப் பாதுகாக்க சிறந்த விபத்துக் காப்பீடுத் திட்டங்கள்

Family Accident Insurance

ஃபேமிலி ஆக்சிடண்ட் கேர் இன்ஷூரன்ஸ் பாலிசி

விபத்தால் ஏற்படும் இறப்புக்கான காப்பீடு: பாலிசி எடுத்த நபருக்கு விபத்து காரணமாக இறப்பு ஏற்பட்டால், காப்பீட்டுத் தொகையில் 100% முழுமையாக வழங்கப்படுகிறது.

நிரந்தர மொத்த உடல் செயலிழப்புக்கான காப்பீடு: விபத்துக்களால் நிரந்தரமாக முழு உடல் செயலிழப்பு ஏற்பட்டால் காப்பீட்டுத் தொகையில் 100% வழங்கப்படுகிறது.

வாழ்நாள் முழுவதும் புதுப்பித்தல்: இந்த பாலிசிக்கு வாழ்நாள் முழுவதும் புதுப்பித்தல் ஆப்ஷனை பெறுங்கள்

View Plan

Individual Accident Insurance

ஆக்சிடண்ட் கேர் இண்டிவிஜுவல் இன்ஷூரன்ஸ் பாலிசி

குடும்பத்திற்கான தள்ளுபடி: குடும்ப அடிப்படையில் பாலிசியைத் தேர்ந்தெடுப்பதற்கு 10% பிரீமியம் தள்ளுபடியைப் பெறுங்கள்

விபத்தால் ஏற்படும் இறப்புக்கான காப்பீடு: பாலிசி எடுத்த நபருக்கு விபத்து காரணமாக இறக்க நேரிட்டால், கவரேஜ் தொகையில் 100% முழுமையாக வழங்கப்படுகிறது.

கல்வி உதவித்தொகை: பாலிசி எடுத்தவர் இறந்தாலோ நிரந்தர முழு உடல் செயலிழப்பு ஏற்பட்டாலோ ரூ. 20,000/- கல்வி உதவித்தொகை அவரது குழந்தைகளுக்கு வழங்கப்படும்

View Plan

Saral Suraksha Bima Accident Insurance

சாரல் சுரக்ஷா பீமா, ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைடு இன்ஷூரன்ஸ் கோ லிமிட்டட்

ஒட்டுமொத்த போனஸ்: ஒவ்வொரு க்ளைம் இல்லாத ஆண்டிற்கும் காப்பீட்டுத் தொகையில் 5% முதல் 50% வரை ஒட்டுமொத்த போனஸாகப் பெறுங்கள்

விபத்து காரணமாக மருத்துவமனையில் சேர்க்கும் செலவுகள்: விபத்துகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் செலவுகளுக்கு காப்பீடு செய்யப்பட்ட தொகையில் 10% வரை ஆப்ஷனல் கவரேஜாக பெறுங்கள்

விபத்து காரணமாக ஏற்படும் இறப்புக்கான காப்பீடு: பாலிசி எடுத்த நபருக்கு விபத்து காரணமாக இறக்க நேர்ந்தால், காப்பீட்டுத் தொகையில் 100% முழுமையாக வழங்கப்படுகிறது

View Plan

plan-video
விபத்துக் காப்பீடு பாலிசி

விபத்துக் காப்பீடு என்றால் என்ன?

விபத்துக் காப்பீடு என்பது, பாலிசிதாரர் விபத்தால் காயமோ அல்லது உயிரிழக்க நேர்ந்தாலோ நிர்ணயிக்கப்பட்ட தொகை கிடைக்க வழிவகுக்கும். விபத்தில் மரணம், நிரந்தர உடல் செயலிழப்பு, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாகங்களின் நிரந்தர செயலிழப்பு மற்றும் தற்காலிகமாக மொத்த உடல் பாகங்கள் செயலிழப்பு போன்றவை ஏற்பட்டால் அதற்கு இழப்பீட்டுத் தொகை விபத்துக் காப்பீடு பாலிசிகள் மூலம் கிடைக்கும். மேலும், கல்வி உதவித் தொகை, ஆம்புலன்ஸ் கட்டணங்கள் உள்ளிட்ட மற்ற நன்மைகளையும் இவை வழங்கும். எதிர்பாரா நிலைமையை சமாளிக்க, விபத்துக் காப்பீடு என்பது பொருளாதார ரீதியிலான கருவியாகப் பயன்படும்.

விபத்துக் காப்பீடு அத்தியாவசியமானது. எதிர்பாராமல் ஒருவர் விபத்தில் இறந்தாலோ அல்லது காயம் ஏற்பட்டாலோ இது அவரையும் அவரது குடும்பத்தையும் பாதுகாக்கிறது.

விபத்துக் காப்பீட்டின் முக்கியத்துவம்

விபத்துக் காப்பீடு எனக்கு ஏன் தேவை?

விபத்துகள் துரதிருஷ்டவசமானவை. அந்த மாதிரியான சூழல்கள் நமக்கு உடல் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் சிக்கல்களை ஏற்படுத்தும். மருத்துவ செலவுகளை சமாளித்து அதிலிருந்து மீள்வது என்பது பொருளாதார ரீதியான அழுத்தங்களை ஏற்படுத்தும். இதனால் கடன் அதிகரிக்கும். எனவே, உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்க விபத்துக் காப்பீடு பாலிசி என்பது அத்தியவசியமாகிறது.

உதவி மையம்

குழப்பமா? எங்களிடம் பதில்கள் உள்ளன

விபத்துக் காப்பீடு தொடர்பான உங்களது அனைத்து சந்தேகங்களையும் நிவர்த்தி செய்து கொள்ளுங்கள்.