|Click here to link your KYC|Policies where the risk commencement date is on or after 1st October 2024, all the policy servicing shall be as per the IRDAI (Insurance Products) Regulations, 2024 dated 20th March 2024 and Master Circular on Health Insurance Business dated 29th May 2024
👋 Say Hello to SUPER STAR! Unmatched Coverage for Just ₹13/Day!* Customise Your Health Plan Now - Click here
காப்பீட்டுத் தொகைஇந்த பாலிசியின் குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூ. 1,00,000/- ஆகும். மேலும், இது ஒவ்வொருமுறை ரூ.10,000 என்ற எண்ணிக்கையின் மடங்குகளில் அதிகரிக்கும். காப்பீடு செய்த நபரின் சம்பாதிக்கும் திறனைப் பொறுத்து அதிகபட்ச காப்பீட்டுத் தொகை மாறுபடும். |
பாலிசி பலன்அட்டவணை A - விபத்தால் ஏற்படும் மரணத்திற்கான காப்பீடை வழங்குகிறது.
அட்டவணை B - விபத்தினால் ஏற்படும் மரணம் மற்றும் உடல் உறுப்புகள் நிரந்தர செயலிழப்புக்கு காப்பீடு வழங்குகிறது.
அட்டவணை C - விபத்தினால் ஏற்படும் மரணம், உடல் உறுப்புகள் நிரந்தர செயலிழப்பு மற்றும் முழு பாகங்கள் தற்காலிகமாக செயலிழப்பது ஆகியவற்றிற்கான காப்பீட்டை வழங்குகிறது. |
விபத்தினால் ஏற்படும் மரணம்இந்த பாலிசியானது, காப்பீடு செய்யப்பட்ட நபருக்கு விபத்து காரணமாக இறப்பு ஏற்பட்டால், மொத்த போனஸுடன் காப்பீடு தொகையில் 100% வழங்குகிறது. |
நிரந்தர முழு உடல் செயலிழப்புஇந்த பாலிசியானது, காப்பீடு செய்த நபருக்கு விபத்து காரணமாக முழு உடல் செயலிழப்பு ஏற்பட்டால், ஒட்டுமொத்த போனஸுடன் 150% காப்பீட்டுத் தொகையை வழங்குகிறது (காப்பீடு தொகையில் 100% மட்டுமே கணக்கிடப்படுகிறது). |
சில உறுப்புகளின் நிரந்தர செயலிழப்புவிபத்தால் ஏற்பட்ட காயம் காரணமாக, சில உடல் உறுப்புகள் நிரந்தரமாக செயலிழந்தால், பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி காப்பீட்டுத் தொகையின் குறிப்பிட்ட சதவீதம் வழங்கப்படும். |
முழு உறுப்புகள் தற்காலிக செயலிழப்புஇந்த பாலிசியானது பிரிவு C இன் கீழ் காப்பீடு செய்யப்பட்ட தொகையில் 1%ஐ வழங்குகிறது. மேலும் (ஒரு வாரத்திற்கு) ரூ.15,000க்கு அதிகமாக போகாது. அப்படி 100 வாரங்கள் வரை, காப்பீடு செய்யப்பட்ட நபருக்கு விபத்து காரணமாக முழு உடல் உறுப்புகளுக்கு தற்காலிக செயலிழப்பு ஏற்பட்டால் கவர் செய்யப்படும். |
கல்வி உதவித்தொகைகாப்பீடு செய்தவர் விபத்தினால் இறந்தாலோ அல்லது உடல் உறுப்புகள் நிரந்தரமாக செயலிழந்தாலோ, காப்பீட்டாளர் மூலம் அதிகபட்சம் அவரது இரண்டு குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
I) அதிகபட்சமாக ஒரு குழந்தைக்கு ரூ. 10,000/-என இரண்டு குழந்தைகள் வரை வழங்கப்படும் II) 18 வயதுக்குட்பட்ட ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகள் இருந்தால், ஒரு பிள்ளைக்கு ரூ.10,000/- என 20,000 ரூபாய்க்கு மிகாமல் செலுத்தப்படும். |
ஆம்புலன்ஸ் கட்டணம் / இறந்தவர்களின் உடலை கொண்டு வருவதற்கான போக்குவரத்துகாப்பீடு செய்தவரின் வசிப்பிடத்திற்கு வெளியே ஏற்படும் விபத்துகளுக்கான க்ளைம்களுக்கு, இந்த பாலிசியானது மருத்துவமனைக்குச் செல்வதற்கான ஆம்புலன்ஸ் கட்டணங்கள் அல்லது காப்பீடு செய்யப்பட்ட நபர் இறக்க நேர்ந்தால், உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்வதற்கு அதிகபட்சம் ரூ.5,000/- வரை வழங்குகிறது. |
ஒரு உறவினருக்கான பயணச் செலவுகள்
காப்பீடு செய்த நபர் விபத்தின் காரணமாக இறக்க நேர்ந்தால், அவரது ஒரு உறவினர் காப்பீடு செய்தவரின் இல்லத்திற்கு செல்வதற்கான போக்குவரத்து செலவுக்கு, கவரேஜ் தொகையில் 1% அதாவது ரூ.50,000 வரை நிறுவனம் வழங்கும். |
வாகனம் / குடியிருப்பு சீரமைத்தல்விபத்தின் காரணமாக, காப்பீடு செய்தவரின் குடியிருப்பு அல்லது வாகனத்தை இந்தியாவுக்குள் சீரமைக்க ஏற்படும் செலவுகள் காப்பீட்டுத் தொகையில் 10% வரை (அட்டவணை B மற்றும் C இன் படி) அதாவது அதிகபட்சம் ரூ. 50,000 வரை கவர் செய்யப்படும். |
இரத்தம் பெறுதல்பாலிசி எடுத்த நபருக்கு சிகிச்சைக்காகவோ அல்லது அறுவை சிகிச்சைக்காகவோ இரத்தம் வாங்க வேண்டியிருந்தால், இந்த பாலிசியானது காப்பீட்டுத் தொகையில் 5% அதாவது அதிகபட்சம் ரூ.10,000/- (எது குறைவான தொகையோ அது கொடுக்கப்படும்) வழங்குகிறது. |
மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான போக்குவரத்துசிகிச்சைக்கான மருந்துகளை இந்தியாவுக்கு இறக்குமதி செய்வதற்கான செலவுகளுக்கு, இந்த பாலிசியானது காப்பீட்டுத் தொகையில் 5% அதாவது அதிகபட்சம் ரூ.20,000/- வழங்குகிறது. |
ஒட்டுமொத்த போனஸ்ஒவ்வொரு க்ளைம் இல்லாத ஆண்டிற்கும் காப்பீட்டுத் தொகையில் 5% ஒட்டுமொத்த போனஸ் வழங்கப்படுகிறது. இது காப்பீட்டுத் தொகையில் அதிகபட்சம் 50% வரை வழங்கப்படும். |
நீட்டிக்கப்படும் மருத்துவ செலவுகளுக்கான கவரேஜ்உள்நோயாளராக மற்றும் வெளிநோயாளராக ஏற்படும் மருத்துவச் செலவுகளுக்கான க்ளைம்களில 25% கவராகும் அல்லது மொத்த காப்பீட்டுத் தொகையில் 10% கவராகும் (இவ்விரண்டில் எது குறைவானதோ அது வழங்கப்படும்). அதிகபட்சம் ரூ.5,00,000 வரை கவர் செய்யப்படும். |
குளிர்கால விளையாட்டுகளுக்கான கவரேஜ்காப்பீடு செய்த நபர் குளிர்கால விளையாட்டுகளில் பங்கேற்க விருப்பம் தெரிவித்திருந்தால் அந்த காலம் வரை இந்த நீட்டிப்பு வழங்கப்படலாம். |
ஹாஸ்பிடல் கேஷ்விபத்து நடந்த நாளிலிருந்து 30 நாட்களுக்குள் மருத்துவமனையில் சேர்க்கப்படும் போது, மருத்துவமனையில் தங்கியிருக்கும் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.1000/- ஹாஸ்பிடல் கேஷ் வழங்கப்படும். இந்த பலன் ஒருமுறை மருத்துவமனையில் அனுமதிக்கையில் அதிகபட்சம் 15 நாட்களுக்கும், ஒரு பாலிசி காலத்திற்கு 60 நாட்களுக்கும் வழங்கப்படுகிறது. |
ஹோம் கன்வேலசென்ஸ்மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு, மருத்துவரின் ஆலோசனையுடன் காப்பீடு செய்தவரின் இல்லத்தில் தங்கியிருக்கும் ஒரு மருத்துவ உதவியாளருக்கு ஏற்படும் செலவுகளில், ஒவ்வொரு நிறைவடைந்த நாளுக்கும் ரூ.500 வழங்கப்படும். ஒரு நிகழ்வுக்கு அதிகபட்சம் 15 நாட்கள் மற்றும் ஒரு பாலிசி காலத்தில் 60 நாட்களுக்கு கவராகும். |
ஒரு மருத்துவ காப்பீட்டு வல்லுனராக, எங்கள் பயனாளர்களுக்கு விரைவான க்ளைம் செட்டில்மெண்ட்ஸ்களை அளிக்கிறோம். எங்களுடன் பல மருத்துவமனைகள் இணைந்து வருவதால் உங்களுக்கான மருத்துவ தேவைகளை மிகவும் எளிதாக நீங்கள் பெறுவதை உறுதி செய்கிறோம்.
உங்களின் எதிர்காலத்தை எங்களுடன் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள்