அறிமுகம்
வயிற்றுப்போக்கு என்பது அடிக்கடி, தளர்வான மலத்தை கழிக்க நேரும் ஒரு உபாதை நிலையாகும். வயிற்றுப்போக்கு பொதுவாக பாதிப்பினை உண்டாக்காத ஒரு நிகழ்வாக இருக்கலாம்; ஆனால், சில நேரங்களில் ஏதேனும் மிகத் தீவிர பிரச்சினையின் அறிகுறியாகவும் இருக்கலாம்.
உடலில் ஏற்படும் நோய்த்தொற்றுகள், சில உணவுகளை உடல் ஏற்காமை, உட்கொள்ளும் மருந்துகள், அல்லது சில நோய்கள் போன்ற பல காரணங்களால் வயிற்றுப்போக்கு ஏற்படலாம். வயிற்றுப்போக்கு நீரிழப்பிற்கும் வழிவகுக்கும், சிகிச்சையளிக்கப்படாவிட்டால் ஆபத்தில் முடியும்.
வயிற்றுப்போக்கு பொதுவாக 1 முதல் 2 நாட்கள் வரை நீடிக்கும்; ஆனால் சில நேரங்களில் 2 வாரங்கள் வரை கூட நீடிக்கலாம். இருப்பினும், இந்த வகை வயிற்றுப்போக்கு பொதுவாக லேசானதாகவும், தானாகவே குணமாகும் ஒன்றாகவே இருக்கும். 2 வாரங்களுக்கு மேல் நீடிக்கும் வயிற்றுப்போக்கு என்பது நாள்பட்ட தொற்று, அல்லது உணவு ஒவ்வாமை போன்ற மிகவும் கடுமையான பிரச்சினையின் அறிகுறியாக இருக்கலாம்.
வயிற்றுப்போக்கு என்றால் என்ன?
வழக்கத்தை விட அடிக்கடி ஏற்படும் இலகுவான, நீர்த்த மலம் கழித்தலே வயிற்றுப்போக்கு எனப்படுகிறது. பொதுவாக, மலம் திடமாக உருவாகிறது. ஆனால் குடல்கள் அதிக தண்ணீரை உறிஞ்சும்போது அல்லது அதிக திரவத்தை சுரக்கும்போது, மலம் திரவமாகிறது மற்றும் அடிக்கடி கழிக்கவும் நேரிடுகிறது.
உடலில் ஏற்படும் நோய்த்தொற்றுகள், சில உணவுகளை உடல் ஏற்காமை, உட்கொள்ளும் மருந்துகள், அல்லது சில நோய்கள் போன்ற பல காரணங்களால் வயிற்றுப்போக்கு ஏற்படலாம். வயிற்றுப்போக்கு நீரிழப்பிற்கும் வழிவகுக்கும், சிகிச்சையளிக்கப்படாவிட்டால் ஆபத்தில் முடியும்.
வயிற்றுப்போக்கு பொதுவாக பாதிப்பினை உண்டாக்காத ஒரு நிகழ்வாக இருக்கலாம்; ஆனால், சில நேரங்களில் ஏதேனும் மிகத் தீவிர பிரச்சினையின் அறிகுறியாகவும் இருக்கலாம். உங்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், உடலின் நீரிழப்பைத் தடுக்க ஏராளமான திரவங்களை குடிக்க வேண்டும். பால் பொருட்கள், எண்ணெய் நிறைந்த அல்லது காரமான உணவுகள், மது அல்லது கஃபைன் நிறைந்த உணவுகள் போன்றவை வயிற்றுப்போக்கை மோசமாக்கும், எனவே அவற்றை நீங்கள் தவிர்க்க வேண்டும்.
வயிற்றுப்போக்கு ஏற்படுவதற்கான காரணங்கள்
உணவு விஷமாதல், வைரஸ்கள், பாக்டீரியா மற்றும் ஒட்டுண்ணிகள் ஆகியவற்றால் ஏற்படும் தொற்றுகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் வயிற்றுப்போக்கு ஏற்படலாம். இந்த காரணிகள் செரிமான அமைப்பின் இயல்பான செயல்பாட்டை பாதிக்கின்றன, மற்றும் குடலில் வீக்கம், எரிச்சல் அல்லது தொற்றுநோயை உண்டாக்குகின்றன. அதன் காரணமாக தளர்ந்த, நீர்த்த மலம் உருவாகி, வழக்கத்தை விட அடிக்கடி மலம் கழிக்க நேரடுகிறது.
வயிற்றுப்போக்கு ஏற்படுவதற்கான சில பொதுவான காரணங்கள் பின்வருமாறு:
உணவு விஷமாதல்
சால்மோனெல்லா, ஈ.கோலி அல்லது கேம்பிலோபேக்டர் போன்ற தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளால் மாசுபட்ட உணவை நாம் சாப்பிட்டால் ஏற்படுவது ஃபுட் பாயிசனிங் வயிற்றுப்போக்கு எனப்படுகிறது.. உணவு விஷமாவதால் வயிற்றுப்போக்குடன் குமட்டல், வாந்தி, வயிற்றுப் பிடிப்பு மற்றும் காய்ச்சல் ஆகியவையும் ஏற்படும்.
வைரஸ்கள்
சில வைரஸ்கள் குடலின் உட்புற படலத்தின் உயிரணுக்களை பாதித்து வயிற்றுப்போக்கை ஏற்படுத்துகின்றன. நோரோவைரஸ், ரோட்டா வைரஸ் மற்றும் கொரோனா வைரஸ் ஆகியன வயிற்றுப்போக்கை ஏற்படுத்தக்கூடிய வைரஸ் நோய்த்தொற்றுகளின் எடுத்துக்காட்டுகளாகும்.
பாக்டீரியா
சில பாக்டீரியாக்கள் குடலின் உட்புற படலத்தினை சிதைக்கும் நச்சுகளை உற்பத்தி செய்வதன் மூலமாகவோ, அல்லது குடலின் உட்புறதத்தை ஆக்கிரமித்து இன்ஃப்ளமேஷனை உண்டாக்குவதான் மூலமோ வயிற்றுப்போக்கை ஏற்படுத்துகின்றன. காலரா, டைஃபாய்டு காய்ச்சல் மற்றும் ஷிகெல்லா ஆகியன வயிற்றுப்போக்கை உண்டாக்கக்கூடிய பாக்டீரியா நோய்த்தொற்றுகளின் எடுத்துக்காட்டுகளாகும்.
ஒட்டுண்ணிகள்
சில ஒட்டுண்ணிகள் குடலின் உட்புறத்தில் ஒட்டிக்கொண்டு ஊட்டச்சத்துக்கள், மற்றும் இரத்தத்தை உட்கொள்வதன் மூலம் வயிற்றுப்போக்கை ஏற்படுத்துகின்றன. ஜியார்டியா, கிரிப்டோஸ்போரிடியம் மற்றும் அமீபா ஆகியன வயிற்றுப்போக்கை ஏற்படுத்தக்கூடிய ஒட்டுண்ணி தொற்றுகளுக்கான எடுத்துக்காட்டுகளாகும்.
வயிற்றுப்போக்கு பொதுவாக எவ்வளவு காலம் நீடிக்கலாம்?
2 நாட்களுக்கு மேல் நீடிக்கும் வயிற்றுப்போக்கானது மிகவும் கடுமையான உடல்நலப் பிரச்சினையின் அறிகுறியாக இருக்கலாம்.. அதாவது வயிற்றுப்போக்கு தானாகவே குணமாகவில்லை என்றால், அது வேறேதும் மிகக் கடுமையான தொற்று, நாள்பட்ட உடல் நிலை பாதிப்பு, அல்லது உணவு ஒவ்வாமை போன்றவற்றின் காரணமாக ஏற்பட்டிருக்கலாம்.
2 நாட்களுக்கு மேல் நீடிக்கும் வயிற்றுப்போக்கு நீரிழப்பு அபாயத்தை அதிகரிக்கிறது; அதற்கு உரிய சிகிச்சையளிக்கப்படாவிட்டால் ஆபத்தில் முடியலாம்.
2 நாட்களுக்கு மேல் நீடிக்கும் வயிற்றுப்போக்கு ஏற்பட சில சாத்தியமான காரணங்கள் பின்வருமாறு:
நோய்த்தொற்றுகள்
வைரஸ், பாக்டீரியா அல்லது ஒட்டுண்ணி ஆகியவற்றினால் ஏற்படும் நோய்த்தொற்றுகள் தொடர்ச்சியான வயிற்றுப்போக்கை உண்டாக்கும். அசுத்தமான உணவு, குடிநீர், அல்லது தொற்றுள்ள நபர்கள் அல்லது விலங்குகளுடனான தொடர்பின் மூலம் இந்த நோய்த்தொற்றுகள் நமது உடலுக்குள் நுழையலாம்.
டிராவலர்’ஸ் வயிற்றுப்போக்கு
டிராவலர்’ஸ் வயிற்றுப்போக்கு என்பது மோசமான சுகாதார சூழல் உள்ள நாடுகளுக்கு ஒருவர் பயணிக்கும்போது ஏற்படும் ஒருவகை பாதிப்பாகும். மேலும், இது வைரஸ்கள், பாக்டீரியாக்கள் அல்லது ஒட்டுண்ணிகளால் மாசுபடுத்தப்பட்ட உணவு அல்லது குடிநீரை உட்கொள்ளும்போதும் ஏற்படுகிறது.
இன்ஃப்ளமேட்டரி குடல் நோய்கள் (IBD)
இவை, செரிமான மண்டலத்தில் இன்ஃப்ளமேஷனை ஏற்படுத்தும் நாட்பட்ட பிரச்சினைகளை உள்ளடக்கிய ஒருவகை பாதிப்புகளாகும். அல்சரேட்டிவ் கோலிட்டிஸ், மற்றும் கிரோன்’ஸ் நோய் ஆகியன IBD-யின் உதாரணங்களாகும். IBD உள்ளவர்களுக்கு வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, இரத்தப்போக்கு, எடை இழப்பு மற்றும் சோர்வு ஆகியவை ஏற்படும்.
வயிற்றுப்போக்கு இருப்பது பற்றி நீங்கள் எப்போது கவலைப்பட வேண்டும்?
பின்வரும் சூழ்நிலைகள் ஏற்பட்டால் வயிற்றுப்போக்கு பற்றி நீங்கள் கவலைக்கொள்ள வேண்டும்:
மலத்தில் இரத்தம் காணப்படுதல்
மலத்தில் இரத்தம் இருந்தால், அது செரிமான மண்டலத்தில் இருக்கும் இரத்தக்கசிவு இருப்பதைக் குறிக்கலாம். நோய்த்தொற்றுகள், புண்கள், பாலிப்ஸ், அல்லது புற்றுநோயின் காரணமாக இப்படி நேரலாம். மலத்தில் உள்ள இரத்தம் சிவப்பு, கருப்பு நிறத்தில் அல்லது தார் போன்ற மலமாக வெளிப்படும்.
காய்ச்சல்
ஜுரம் ஏற்படுவது உடலில் ஏற்பட்டுள்ள ஏதேனும் தொற்று அல்லது வீக்கத்தைக் குறிக்கலாம்; வைரஸ்கள், பாக்டீரியா அல்லது ஒட்டுண்ணிகளால் அது ஏற்பட்டிருக்கலாம். காய்ச்சலானது நீரிழப்பு மற்றும் பலவீனத்தையும் ஏற்படுத்துகிறது.
கடுமையான வயிற்று வலி
அப்பென்டிசைட்டிஸ், டைவர்ட்டிக்யூலிடிஸ், குடலில் ஏற்படும் அடைப்பு அல்லது குடல் துளைகள் போன்று வயிற்றில் ஏற்படக்கூடிய ஏதேனும் தீவிர சிக்கலின் அறிகுறியாக கடுமையான வயிற்று வலி இருக்கலாம். கடுமையான வயிற்று வலியுடன் சேர்த்து குமட்டல், வாந்தி, வீக்கம் அல்லது மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளும் ஏற்படலாம்.
நீரிழப்பு
நீங்கள் உட்கொள்வதை விட அதிக திரவங்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகளை உங்கள் உடல் இழக்கும்போது நீரிழப்பு ஏற்படலாம். நாவறட்சி, தாகம், தலைச்சுற்றல், தலைவலி, சோர்வு அல்லது சிறுநீர் கழிப்பது குறைவது ஆகிய பாதிப்புகளை இந்த நீரிழப்பானது ஏற்படுத்தும். மேலும், இரத்த அழுத்தம், இதய துடிப்பு மற்றும் சிறுநீரக செயல்பாடுகள் ஆகியவற்றையும் இது பாதிக்கக்கூடும்.
எடை இழப்பு
நீங்கள் உட்கொள்வதை விட அதிக கலோரிகளை இழக்கும்போது எடை இழப்பு ஏற்படுகிறது. வயிற்றுப்போக்கின் காரணமாக ஊட்டச்சத்தினை ஏற்கும் திறன் பாதிக்கப்படுதல், ஊட்டச்சத்து குறைபாடு அல்லது பசியின்மை ஆகியவை ஏற்பட்டு, அதனால் எடை இழப்பு நேரலாம். எடை இழப்பானது உங்களது நோயெதிர்ப்பு மண்டலம், தசை எடை மற்றும் எலும்புகளின் அடர்த்தியையும் பாதிக்கிறது.
வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
வயிற்றுப்போக்கை எவ்வாறு கையாள்வது என்பதற்கான சில பொதுவான உதவிக்குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
நிறைய திரவங்களை குடிக்கவும்
நிறைய திரவங்களை எடுத்துக்கொள்வது, நீரிழப்பைத் தடுக்க உதவும்; நீரிழப்பிற்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால் அது ஆபத்தில் முடியலாம். எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் தாதுக்களைக் கொண்ட குடிநீர், வெறும் கஞ்சி, அல்லது நீர்ச்சத்து தரும் கரைசலை உட்கொள்ளவும். மது, கஃபைன் அல்லது சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்கள் போன்றவை உங்கள் நிலையை மேலும் மோசமாக்கும் என்பதால் அவற்றை தவிர்க்க வேண்டும்.
எளிமையான உணவுகளை உண்ண வேண்டும்
எளிமையான உணவுகளை உண்பது உங்கள் வயிறு மற்றும் குடலை இதமாக வைத்திருக்க உதவும். வாழைப்பழங்கள், அரிசி, ஆப்பிள் சாஸ் அல்லது டோஸ்ட் போன்ற எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவுகளையே சாப்பிடவும். இந்த உணவுகள் BRAT டயட் என்றும் அழைக்கப்படுகின்றன. பால் பொருட்கள், எண்ணெய் நிறைந்த அல்லது காரமான உணவுகள், மற்றும் அதிக நார்ச்சத்துள்ள உணவுகள் போன்றவற்றை தவிர்க்கவும்; ஏனெனில் அவை உங்கள் செரிமான மண்டலத்த்திற்கு உகந்தவை கிடையாது.
அறிகுறிகளுக்கு நிவாரணம் பெற மருந்தகத்தில் பரிந்துரையின்றி கிடைக்கும் மருந்துகளை உட்கொள்வதால் -
உங்களுக்கு அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படுவது, மற்றும் அதன் தீவிரத்தை குறைக்க இம்மருந்துகள் உதவலாம். உங்களது மல வெளியேற்ற செயல்பாட்டை குறைக்கவும், மலத்தை திடமாக்கவும் உதவும் லோபரமைடு அல்லது பிஸ்மத் சப்சேலிசிலேட் போன்ற வயிற்றுப்போக்கு எதிர்ப்பு மருந்துகளை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.
எப்போது நீங்கள் ஒரு மருத்துவரை அணுக வேண்டும்?
வயிற்றுப்போக்கு 2 நாட்களுக்கு மேல் நீடிக்கும் பட்சத்தில் அல்லது மேலே குறிப்பிடப்பட்ட பிற அறிகுறிகளில் ஏதேனும் தென்பட்டால், நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். மேற்கூறிய அறிகுறிகள் மிகக் கடுமையான சிக்கலையும் குறிக்கலாம் என்பதால், சரியான மருத்துவ கவனிப்பும், உரிய சிகிச்சையும் அவசியமாகும். உங்கள் வயிற்றுப்போக்கிற்கான சரியான காரணத்தைக் கண்டறிய, மருத்துவர் சில பரிசோதனைகளைச் செய்யலாம், மற்றும் அதற்கு பொருத்தமான மருந்து அல்லது சிகிச்சையையும் பரிந்துரைக்கலாம்.
முடிவுரை
வயிற்றுப்போக்கு என்பது அடிக்கடி, தளர்வான மலத்தை கழிக்க நேரும் ஒரு உபாதை நிலையாகும். வயிற்றுப்போக்கு பொதுவாக பாதிப்பினை உண்டாக்காத ஒரு நிகழ்வாக இருக்கலாம்; ஆனால், சில நேரங்களில் ஏதேனும் மிகத் தீவிர பிரச்சினையின் அறிகுறியாகவும் இருக்கலாம்.
வயிற்றுப்போக்கு இருந்தால், நீரிழப்பைத் தடுக்க ஏராளமான திரவங்களை உட்கொள்ள வேண்டும். உடல்நிலையை மோசமாக்கும் பால் பொருட்கள், எண்ணெய் பதார்த்தங்கள் அல்லது காரமான உணவுகள், மது அல்லது கஃபைன் போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும்.
வயிற்றுப்போக்குக்கான காரணத்தைப் பொறுத்து, சிகிச்சை பெற நீங்கள் ஒரு மருத்துவரை அணுக வேண்டியிருக்கும். சில வகையான வயிற்றுப்போக்குகள் தானாகவே சரியாகிவிடும்; ஆனால் வேறு சில வகை பாதிப்புகளுக்கு நுண்ணுயிர் எதிர்ப்புத்தன்மையுள்ள ஆன்ட்டி-பாயாட்டிக்ஸ், வயிற்றுப்போக்கினை நிறுத்தும் மருந்துகள் வேண்டியிருக்கலாம், அல்லது நரம்பு வழியே திரவங்கள் செலுத்தும் தேவையும் ஏற்படலாம். மேலே குறிப்பிடப்பட்ட அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்