முன்னுரை
நிலா போல பிரகாசியுங்கள் மற்றும் மற்றவர்களை ஆதரியுங்கள். இந்தப் பழமொழியில் குறிப்பிடப்பட்டுள்ளது நிலவின் நிறம் அல்ல, நிலவில் உள்ள பிரகாசம். அதுபோலவே, ஒருவர் பிரகாசமாக ஜொலிக்ககலாம், ஒருவர் நிறத்தைப் பொருட்படுத்த தேவை இல்லை.
காரணம் முகப்பொலிவு நிறத்தை பொறுத்து வருவதில்லை. பலர் பிரகாசமான முகத்தைப் பெற விரும்புகின்றனர், அதற்காக அவர்கள் எண்ணற்ற முயற்சி செய்கின்றனர்.
தொலைக்காட்சி(டிவி) விளம்பரங்களில் காட்டப்படும், ஃபேர்னஸ் க்ரீம்களை மக்கள் தங்கள் ஸ்கின்டோனை மாற்றிக் கொள்ள அதிகம் பயன்படுத்துகிறார்கள். இந்த அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்தி ஒருவர் முகத்தை தற்காலிகமாக மட்டுமே பிரகாசமாக்க முடியும் என்பதை நினைவில் வைத்து கொள்ளவேண்டும்.
பல காரணிகள் பொலிவில்லாத மற்றும் மந்தமான சருமத்தை ஏற்படுத்துகின்றன. மோசமான வாழ்க்கை முறை தேர்வுகள், அதிக சூரிய ஒளி, மாசுபாடு, மருத்துவ நிலை அல்லது அதிக மன அழுத்தம் போன்ற பல காரணங்கள் தான் ஒருவரது தோலை பொலிவிழக்க செய்கிறது. சந்தையில் பல்வேறு இரசாயன பொருட்கள் உள்ளன, அவை பயன்படுத்தும்போது அவை சருமத்தை சேதப்படுத்தும்.
அழகூட்டும் என்று நம்பி, அனைத்து வகையான இரசாயன அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, ஒரு சில பொதுவான முக பொலிவு வழிமுறைகளைப் பயன்படுத்தலாம். அவை உங்களின் மந்தமான சருமத்திற்கு சிகிச்சையளிப்பதற்கும் அதை பிரகாசமாக்குவதற்கும் உதவும்.
முக பொலிவு என்றால் என்ன?
முக பொலிவு என்பது எப்பொழுதுமே முகம் பொலிவாக காணப்படுவது. பளிச்சென்று, ஈரப்பதமுள்ள, மற்றும் புத்துணர்ச்சியான சருமம் கொண்டவர்கள் முகப்பொலிவு உடையவர்களாக காணப்படுகிறார்கள்.
அதிகமாக முக பொலிவு உடையவர்களின் சருமத்தில், இறந்த சரும செல்கள் குறைவாக காணப்படும். உங்கள் சருமத்தின் மேற்பரப்பில் இறந்த சரும செல்கள் அதிகமாக படிந்திருந்தால், அது பொலிவிழந்த சருமத்திற்கு வழிவகுக்கும்.
ஒருவரது முகத்தை பொலிவுவாக மாற்ற 5 எளிய வழிமுறைகள்!
உங்கள் முகத்தை பிரகாசமாக்க பல இயற்கை முறைகள் உள்ளன. உங்கள் முகத்தை பிரகாசமாக்குவதற்கான முக்கிய 5 எளிய முறைகள் இங்கே:
1. போதுமான தூக்கம் வேண்டும்
ஒருவரது தோலுக்கும் தூக்கத்திற்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் உண்மை என்னவென்றால், ஒருவரது உடலுக்கு ஒரு நாளைக்கு 7 முதல் 9 மணிநேர தூக்கம் தேவைப்படுவதால், குறைவான தூக்கம் முகத்தையும் தோலையும் பாதித்துவிடும். உள் பிரகாசத்தை வெளிக்கொணர உடல் ஓய்வெடுப்பது அவசியம், அதற்கு தூக்கம் மட்டுமே ஒரே வழி.
ஒருவர் தூங்கினால், அவரது உடலில் சருமத்திற்கு சரியான இரத்த ஓட்டம் செல்லும். அப்பொழுது, அவர் முக பிரகாசத்துடன் எழுந்திருப்பார். அதற்கு பதிலாக, நீங்கள் சரியாக தூங்கவில்லை என்றால், முகம் பார்ப்பதற்கு மந்தமாகவும், உயிரற்றதாகவும் இருக்கும். மேலும், கண்களைச் சுற்றி இருண்ட கருவளையங்கள் தோன்றும்.
2. மேக்கப்பை அழிக்கவும்
ஒருவரது தோலின் துளைகளில் உள்ள அழுக்கு மற்றும் எண்ணெய் அடைப்புகளை வெளியேற்ற, காலையிலும் இரவிலும் முகத்தை சுத்தமான தண்ணீரில் மெதுவாகக் கழுவவும். இரவு நேரங்களில், முகத்தில் உள்ள மேக்கப் மற்றும் அழுக்குகளைக் கவனமாக நீக்க வேண்டும். மேக்கப்பைக் கழுவ, ஒருவரது சருமத்திற்கு ஏற்ற சாதாரண குளியல் சோப்பைப் பயன்படுத்தலாம்.
இந்த கழுவுதல் அழுக்கு மற்றும் ரசாயனம் நிறைந்த மேக்கப்பை நீக்கி, சருமத்தை சுத்தமாக வைத்திருக்க உதவும். எனவே, அவரது முகம் புத்துணர்ச்சி மற்றும் பிரகாசம் அடையும்.
3. போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும்
ஈரப்பதமுள்ள மற்றும் பளபளப்பான சருமத்தைப் பெற, தினசரி நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
உடலை ஈரப்பதமுள்ளதாக வைத்திருக்க ஒரு நாளில் குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீரை (அதாவது 8 அவுன்ஸ் தண்ணீர்) குடிக்க வேண்டும். அதிக தண்ணீர் குடிப்பது, உடலில் உள்ள நச்சுகளை ஆழமாக வெளியேற்றி சருமத்தின் அமைப்பையும் தோற்றத்தையும் மேம்படுத்தும்.
4. பழக்க-வழக்கங்களை மாற்றவும்
ஆரோக்கியமான சருமம் மற்றும் தோற்றத்திற்கு, ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள் வேண்டும். அதற்கு, நீங்கள் அதிக நார்ச்சத்து மற்றும் அதிக புரதம் கொண்ட உணவுகளை உண்ணலாம், அதில் நிறைய ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் உள்ளன.
ஒவ்வொரு வாரமும் ஒன்றிரண்டு கார்டியோ உடற்பயிற்சிகளைப் பயிற்சி செய்வதன் மூலம் சருமத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கலாம். புகைபிடிப்பதைத் தவிர்க்கவும், ஏனெனில் சிகரெட் பயன்படுத்துவது சருமத்திற்கு நல்லதல்ல. இவ்வாறு நல்ல பழக்கங்களைப் பின்பற்றுவது, முகத்தைப் பொலிவடைய செய்யும்.
நல்ல பழங்களை உட்கொள்ள வேண்டும், அதில் உள்ள சத்துக்கள் உடல் மற்றும் தோலை பராமரிக்க உதவும்.
தினமும் மலம் வெளியேறுவதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். சில நேரங்களில், உடலில் தேங்கி நிற்கும் மலம், உடலின் வளர்சிதை மாற்றத்தை பாதிக்கலாம். இது சருமத்தின் இயற்கையான தோற்றத்தை பாதிக்கலாம்.
5. சருமத்தை தொடர்ந்து ஈரப்பதமாக்க வேண்டும்
ஒரு நாளைக்கு இரண்டு முறை, இயற்கையான முக எண்ணெய்களை அல்லது கடைகளில் விற்கப்படும் மாய்ஸ்சரைசர் பொருட்களைப் பயன்படுத்தி சருமத்தை ஈரப்பதமாக்கலாம். சருமத்தை ஈரப்பதமாக்குதல், வறண்ட சருமத்தைத் தடுக்கும் மற்றும் சருமத்தை பொலிவாக மாற்றும். மாய்ஸ்சரைசரில் உள்ள நீரேற்றம் சருமத்தின் பிரகாசத்திற்க்கு உடனடி ஊக்கத்தை அளிக்கும்.
அதிக சூரிய ஒளியில் செல்வதாக இருந்தால், நீங்கள் புறப்படும் முன் சருமத்திற்கு ஏற்ற சன்ஸ்கிரீமைப் பயன்படுத்தவும். சூரிய ஒளியில் இருந்து வீடு திரும்பிய பிறகு, 20 நிமிடங்களுக்குப் கழித்து, முகத்தைக் கழுவ வேண்டும். ஏனென்றால், சூரிய ஒளியில் இருந்து திரும்பியவுடன், உடனடியாக முகத்தை கழுவினால், சிலருக்கு சளி ஏற்படும்.
மந்தமான தோல் என்றால் என்ன?
மந்தமான தோல் என்பது தட்டையான, பொலிவிழந்த அல்லது சாம்பல் நிறமாக உள்ள தோல் ஆகும். அத்தகைய தோல் கரடுமுரடான அல்லது தொடுவதற்கு சமதளமாக கூட இருக்கலாம். சருமத்தின் மேற்பரப்பில் இறந்த சரும செல்கள் படிவதால் மந்தமான சருமம் ஏற்படுகிறது. இது எந்த வயதிலும் எந்த காலநிலையிலும் ஏற்படலாம். சருமத்தை ஒளிரச் செய்யும் பல்வேறு லோஷன்கள் மற்றும் கிரீம்கள் சந்தையில் கிடைக்கின்றன, ஆனால் அவை மந்தமான சருமத்திற்கு நிரந்தர தீர்வாக இருக்காது.
மந்தமான தோலின் காரணங்கள்
சருமத்தின் சரியான அழகு மற்றும் தோற்றத்தைப் பெறுவதற்கு, ஒருவரது சருமம், நிறம் மற்றும் பொலிவை இழப்பதற்கான காரணத்தைப் புரிந்துகொள்வது அவசியம். மந்தமான தோல் மற்றும் சுருக்கம் பல காரணிகளால் ஏற்படுகிறது:
1) இறந்த தோல் செல்கள்
ஒவ்வொரு நாளும், மில்லியன் கணக்கான இறந்த சரும செல்கள் தெரியாமல் விழுகின்றன, அவை குவிந்துவிடும். அவை, தோலின் மீது, குப்பைத் தொட்டியில் குப்பைகள் இருப்பது போல் குவிந்து கிடக்கின்றன. இறந்த சரும செல்களின் இந்த அடர்த்தியான அடுக்கு, சருமம் ஒளியைப் பிரதிபலிப்பதை நிறுத்து விடுகிறது அல்லது குறைக்கிறது. இது ஒருவரது முகத்தை சாம்பல் நிறமாக மாற்றும். வயதாகும்போது, சருமத்தின் மேற்பரப்பு புதுப்பிக்கும் திறன் வெகுவாக குறைகிறது, அதன் விளைவாக இறந்த சரும செல்கள் அதிகரிக்கும்.
2) உடலில் நீரின்மை
ஒருவர் அடிக்கடி தண்ணீரை உட்கொள்ள வேண்டும். தண்ணீர் குடிக்காத போது அல்லது வறண்ட வானிலை இருக்கும் இடத்தில் இருந்தால் (எ.கா. குளிர்காலம்), சருமத்தின் மேற்பரப்பிற்குக் கீழே உள்ள ஈரப்பதம் குறையக்கூடும், இதனால் சருமம் பிரகாசமாக இருப்பதைக் காட்டிலும் வறண்டதாக மாற கூடும்.
3)ரசாயனம் நிறைந்த மேக்கப்
தினசரி, நிறைய வேலைகள் இருக்கலாம். அந்த காரணத்திற்காக, தூங்குவதற்கு முன் மேக்கப்பை சுத்தம் செய்ய மறந்துவிட்டால், அது சருமத்தின் இயற்கையான புதுப்பித்தலில் இருந்து தடுக்கும், சருமத் துளைகளை சுவாசிக்க அனுமதிக்காது. இதனால் எரிச்சல் மற்றும் சருமத்தில் சீக்கிரமான முதுமை ஏற்படும். இதற்கு காரணம், உங்கள் மேக்கப் பொருட்கள், ரசாயன கலவையைக் கொண்டு தயாரிக்கப்பட்டதாக இருக்கலாம்.
ஒரு சில அழகுசாதனப் பொருட்கள் மற்றும் தோல் பராமரிப்புப் பொருட்களைத் தயாரிப்பதற்கு, பல உலோகங்களை பயன்படுத்தப்படுகின்றனர்.
ஒரு சில செயற்கையாக உருவாக்கப்படும், ரசாயனம் நிறைந்த சருமத்தை ஒளிரச் செய்யும் கிரீம்களில், பாதரசம் சேர்க்கப்படுவதை, ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
தோல் பராமரிப்புப் பொருட்களில் உள்ள சில உலோகங்கள் சருமத்தில் உறிஞ்சப்படுகின்றன. அவை உடலின் உள்ளே குவிந்து, உள் உறுப்புகளுக்கு சேதம் விளைவிக்கும்.
பாதரசம் நரம்பு மண்டலம், மூளை மற்றும் சிறுநீரகத்தை பாதிக்கலாம். இது சருமத்தை சேதப்படுத்தி, தடிப்புகள் மற்றும் கறை படிந்த புள்ளிகளை ஏற்படுத்துகிறது, இதன் விளைவாக தோல் சாம்பல் நிறமாக இருக்கும். பாதரசம் உள்ள பொருட்களை சருமத்திற்கு பயன்படுத்தினால், ஆரோக்கியத்திற்கு ஆபத்து அதிகம். இவை குறிப்பாக குழந்தைகளையும் பாதிக்க கூடும்.
4) மோசமான வாழ்க்கை முறை
புகைபிடித்தல், குறைவான உடற்பயிற்சி மேற்கொள்வது மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது, அதிக அளவு சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு ஆகியவை உணவில் சேர்த்துக் கொள்வது, சருமத்தின் பிரகாசத்தை கடுமையாக பாதிக்கும்.
5) போதுமான தூக்கம் இல்லை
சரியாக தூங்கினால், சருமம் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும். உடலின் மெலடோனின் அளவு அதிகரிப்பதால் இது நிகழ்கிறது. மெலடோனின் என்பது மனித வளர்ச்சி ஹார்மோன் ஆகும், இது திசு சரிசெய்தலுக்கு உதவுகிறது.
போதுமான தூக்கம் மனித உடலின் மன அழுத்த ஹார்மோனான கார்டிசோலையும் குறைக்கும். இரவில் போதுமான தூக்கம் இல்லாததால், சோர்வின் அறிகுறிகள் தெளிவாகத் தெரியும், மேலும் அது முகப்பொலிவைப் பாதித்து மந்தமான நிறத்தையும் ஏற்படுத்தும்.
6) காற்று மாசுபாடு
காற்று மாசுபாடு நுரையீரலை மட்டுமல்ல, தோலையும் பாதிக்கும். காற்றில் உள்ள அழுக்கு மற்றும் சல்பர் டை ஆக்சைடு போன்ற தீங்கு விளைவிக்கும் வாயுக்கள் ஃப்ரீ ரேடிக்கல்களை உருவாக்குகின்றன.
ஃப்ரீ ரேடிக்கல்கள் உடலில் உள்ள செல்களுக்கு சேதம் விளைவிக்கும் நிலையற்ற மூலக்கூறுகள். இது சருமத்தை அழித்து கொலாஜனை சேதப்படுத்தும், இதன் விளைவாக முகம் சோர்வாகவும் மந்தமாகவும் தோன்றும்.
7) மன அழுத்தம்
ஒருவர் மன அழுத்தத்திற்கு ஆளாகும்போது, பழிவாங்கும் எண்ணம் தொடங்கி, உங்கள் முகத்தில் இருந்து உடலின் மற்ற பகுதிகளுக்கு இரத்த ஓட்டத்தை எளிதில் திசைதிருப்பும். இது குறைந்த கலகலப்பான மற்றும் மந்தமான தோற்றத்திற்கு வழிவகுக்கும்.
8) இறந்த சரும செல்கள் உரித்தலில் குறைவு
சருமத்தை உரித்தல் என்பது சருமத்தின் மேற்பரப்பில் இருந்து இறந்த சரும செல்களை அகற்றுவதாகும். தோல் பராமரிப்பு வழக்கத்தில் இந்த நிலையை தவிர்த்திருக்க அதிகமான வாய்ப்புகள் உள்ளன. இதனால் முகம் சோர்வாக காணப்படும்.
கடலை மாவு சருமத்தை எவ்வாறு பளபளக்க செய்கிறது?
கடலை மாவு பயன்பாடு பல ஆண்டுகளாக வீடுகளில் முயற்சித்த தீர்வாக உள்ளது. ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான சருமம் தேவைப்படும்போது, கடலை மாவு பயன்பாடு தோல்வியடைந்ததில்லை.
கடலை மாவு மற்றும் உளுந்து மாவு இயற்கையான எக்ஸ்ஃபோலியேட்டராக செயல்பட்டு, இறந்த சரும செல்களை அழிக்க உதவுகிறது.
ஒருவர் வெளியில் இருந்து ஆடம்பரமான அழகுசாதனப் பொருட்கள் அல்லது ஃபேஸ் பேக்குகளை வாங்க தேவையில்லை, பதிலாக கடலை மாவை பயன்படுத்தலாம். கடலை மாவு சருமத்தின் மேற்பரப்பை ஆரோக்கியமாக்கி, புதிய தோல் போல் ஜொலிக்கச் செய்து மேஜிக் காட்டுகிறது.
சருமத்தில் கடலை மாவை எவ்வாறு பயன்படுத்துவது?
சிறிது கடலை மாவை(பெசன்) எடுத்துக் கொள்ளவும். பிறகு, கடலை மாவை தண்ணீர், பால் அல்லது வேறு ஏதேனும் பொருட்களுடன் கலக்கவும். இந்த கலவையைச், சருமத்தின் மீது ஃபேஸ்-பேக் போல பூசிவிடவும். பிறகு, அது காய்ந்தபின் கழுவவும். சில நேரங்களில், மிக சிறிய அளவில், சர்க்கரையை இந்த கலவையுடன் சேர்க்கலாம்.
பெர்ரி ஜூஸ் செய்வது எப்படி?
பெர்ரி ஜூஸ் ஆரோக்கியத்திற்கும் முகப் பொலிவிற்கும் நல்லது. பலர் பெர்ரி ஜூஸ் செய்முறையைப் பற்றி அறிய, ஆவலாக உள்ளனர். இங்கே பெர்ரி ஜூஸ் தயாரிப்பு முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
தேவையான பொருட்கள்
- பிளாக்பெர்ரிகள் அல்லது நாவல் பழம் - 19 கிராம் அல்லது 3 எண்ணிக்கை.
- ஸ்ட்ராபெர்ரிகள் - 38 கிராம் அல்லது 3 1/2 ஸ்ட்ராபெர்ரிகள்
- ராஸ்பெர்ரி - 14 கிராம் அல்லது 3 1/2 ராஸ்பெர்ரி
- ப்ளூபெர்ரிகள் - 19 கிராம் அல்லது 7 அவுரிநெல்லிகள்
- மாதுளை அரில்கள் - 57 கிராம் அல்லது 2/3 கப் அரில்கள்
- தர்பூசணி - 352 கிராம் அல்லது 2 கப் க்யூப் தர்பூசணி துண்டுகள்
- புதிய புதினா - 4 கிராம் அல்லது 4 புதினா இலைகள் அல்லது 2 1/2 தேக்கரண்டி நறுக்கிய புதினா
வழிமுறைகள்
- ஆரம்பத்தில், இந்த செய்முறையைத் தொடங்குவதற்கு முன் பெர்ரிகளை பிரிட்ஜில்(குளிர்சாதனப்பெட்டியில்) வைத்து உறைய சிறிது நேரத்திற்கு விடவும். உறைதல் மற்றும் உருகுதல் பெர்ரி விளைவிக்கக்கூடிய சாற்றின் அளவை அதிகரிக்கிறது.
- மெதுவாக, தேவையான பொருட்களை எடுத்து கழுவி அளவிடவும்.
- தர்பூசணியில் இருந்து தோலை நீக்கவும்.
- மாதுளை அரில்ஸ், தர்பூசணி மற்றும் புதினாவை, அரைத்து நன்றாக சாறு எடுக்க வேண்டும்.
- ஸ்ட்ராபெர்ரிகளில் இருந்து பச்சை நிற டாப்ஸை நீக்கிவிடவும்.
- கரைந்த பெர்ரிகளை ஒரு பிளெண்டரில் போட்டு, நன்கு சாறு வரும்வரை அரைக்கவும்.
- இப்போது, பழங்களை ஒவொன்றாக சேர்த்து அனைத்து சாறுகளும் ஒன்றாக ஆகும் வரை, மெதுவாக அவற்றை கலக்கத் தொடங்குங்கள். பிளண்டரின் வேகத்தை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
- அந்த ப்ளெண்டரில் நன்றாக சாறு வரும்வரை அரைக்கவும்.
- தேவைப்பட்டால், ஒரு ஸ்பூனைப் பயன்படுத்தி நன்றாக கலக்கவும்.
- பிறகு, மெஷ் ஸ்ட்ரைனரில் கலந்த சாற்றை ஊற்றவும்.
- ப்யூரியும்(பெர்ரி சாறு) மெல்லியதாக இருக்க வேண்டும், அது வடிகட்டி வழியாக செல்ல வேண்டும்.
- வடிகட்டிய பிறகு பெர்ரி ஜூஸ் தயார். நீங்கள் பெர்ரி ஜுஸைப் பருகிப் பார்க்கவும்.
கற்றாழை (அலோ வேரா) சருமத்தை எப்படி பளபளக்க உதவுகிறது?
கற்றாழையில் ஏராளமான வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன, அவை நம் சருமத்திற்கு மிகவும் நல்லது. கற்றாழையை அனைத்து தோல் வகையைச் சார்ந்தவர்களும் பயன்படுத்தலாம்.
கற்றாழை சருமத்தை நீரேற்றமாகவும், மென்மையாகவும் மற்றும் பளபளப்பாகவும் வைத்திருக்கும். கற்றாழையை வெயினினால் ஏற்படும் தோலின் எரிச்சலுக்கு பயன்படுத்தினால், அது வேகமாக குணமடைய உதவும். கற்றாழை பயன்படுத்தினால் முகப்பரு மற்றும் சுருக்கங்களின் வளர்ச்சிக் குறையும்.
சருமத்தின் மீது கற்றாழையை, எவ்வாறு பயன்படுத்துவது?
கற்றாழை சாற்றை வீட்டிலேயே எளிதாக தயார் செய்யலாம். மேலும், ஒரு சில பானங்களில் கற்றாழை ஜெல்லை சேர்க்கலாம்.
கற்றாழையை நேரடியாக சருமத்தில் தடவலாம். கற்றாழை இலைகளை மெதுவாக கீறினால், அதில் உள்ள ஜெல் வெளிப்படும். பின்பு, கற்றாழையில் இருந்து, ஜெல்லை மட்டும் தனியே பிரித்தெடுக்கலாம். அதன் பிறகு, அதை தோலில் தடவலாம். பிறகு, 10 முதல் 15 நிமிடங்கள் வரை, அதை தோலின் மீது காய விடவும். பின்னர், தோலை வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரில் கழுவி உலர வைக்கவும்.
பாதாம் சருமத்தை எப்படி பளபளப்பாக்க உதவுகிறது?
பாதாமில் வைட்டமின்-ஈ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. பாதாம் பருப்பை குறிப்பிட்ட அளவில் பயன்படுத்தினால், நமது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
பாதாமை அனைத்து தோல் வகையைச் சார்ந்தவர்களும் பயன்படுத்தலாம்.
பாதாம் எண்ணெயை வைத்து மசாஜ் செய்தால், நமது சருமம் பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். பாதாம் எண்ணெய், சருமத்தில் மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்கள் உருவாவதை நிறுத்துகிறது.
இது நம் சருமத்தை ஆழமாக ஈரப்பதமாக்குகிறது மற்றும் முகப்பருவை தடுக்கிறது. இது கருவளையங்களையும் குறைக்க உதவுகிறது.
சருமத்தின் மீது பாதாமை, எவ்வாறு பயன்படுத்துவது?
பாதாமை பொடிசாக அரிந்து கொள்ளவும். பின்னர், அவற்றை பாலில் ஊறவைத்து, நன்றாக பேஸ்ட் போல் அரைத்து எடுக்கவும். அந்த கலவையைத்(பேஸ்டை), தோலில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் வரை காய வைக்கவும்.
பின்னர் வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரில் கழுவவும். பின்னர், அதை உலர விடவும். இளமையான தோற்றத்தைப் பெற, தினசரி உங்கள் சருமத்தை 5 முதல் 10 நிமிடங்கள் வரை பாதாம் எண்ணெயால் மசாஜ் செய்யலாம்.
முடிவுரை
உங்கள் முகம் பிரகாசமாக இருக்க, ஒருவர் பொலிவிழந்து இருந்தாலும், சரியான இடத்தில் புன்னைகைக்கலாம். அது நம் முகத்தை பிரகாசமாக வைத்திருக்க இயற்கை நமக்கு வழங்கிய சிறந்த தீர்வு. முகத்தை பொலிவாக்கும் பல கிரீம்கள் மற்றும் லோஷன்கள் சந்தைகளில் கிடைக்கின்றன. ஆனால் அவை நிரந்தரத் தீர்வாக இருக்காது. முகத்தை பொலிவாக்க மேலே கொடுக்கப்பட்ட முறைகளை முயற்சி செய்யலாம்.
சில விளம்பரங்கள் இந்த க்ரீம் பயன்படுத்தினால் ஸ்கின்டோன் மாறும் என்று தவறான தகவலைக் காண்பிக்கும். ஆனால், உண்மை என்னவென்றால், சருமத்தை வெண்மையாக்குதல் மற்றும் மங்கலான சருமத்தை பளபளப்பான சருமமாக மாற்றுவது என்பது, அழகுசாதனப் பொருட்களின் விளம்பரத்தில் மேற்காட்டியப்படி முற்றிலும் சாத்தியமில்லை. ஏனென்றால், அந்த விளம்பரம் செய்யப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தினாலும் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள், மாசுபாடு போன்ற சருமத்தை பாதிக்கும் காரணிகளால் சருமம் இயற்கையானத் தோல் நிறத்தைப் அடையக்கூடும்.
அதிகமாக கேட்கப்படும் வினாக்கள்
1) முகத்திற்கு பொலிவை தரும் பழங்கள் யாவை?
2) மஞ்சள் சருமத்தைப் பளபளக்க எப்படி உதவுகிறது?
மஞ்சள் சருமத்தை அழிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை நீக்குகிறது மற்றும் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது, இது சருமத்தை மிருதுவாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்கும்.
3) எவ்வாறு தோலில் மஞ்சளைப் பயன்படுத்துவது?
4) இந்தியாவில் அறியப்படும் ப்ளாக்பெர்ரி பழம் எது?
நாவல் பழம் ஒரு சில இதய பிரச்சனைகளை கட்டுப்படுத்த உதவுகிறது. அது மட்டுமின்றி, இதில் நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, அவை கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. பக்கவாதம், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதயம் தொடர்பான பிற நோய்களைத் தடுக்கும் பொட்டாசியமும், இந்த பழத்தில் உள்ளது.
5) சருமம் பொலிவு பெற சிறந்த மேற்பூச்சு எது?
நீங்கள் ரசாயனம் கலந்த கிரீம்களைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, வைட்டமின் சி கொண்ட சிட்ரஸ் பழங்களை, சாப்பிடலாம். சரியான அளவில் அந்த பழங்களை சாப்பிடுவது, சருமத்தைப் பளபளப்பாக மாற்ற உதவும். சிட்ரஸ் பழங்கள் என்பது ஆரஞ்சு, திராட்சை மற்றும் எலுமிச்சைப்பழம், போன்றவையைக் குறிக்கின்றன. எலுமிச்சைப்பழத்தை சாப்பிட இயலாது, எலுமிச்சைச்சாற்றைக் குடிக்கலாம்.