பரங்கி விதைகளால் பெண்களுக்கு கிடைக்கும் 10 நன்மைகள்

Health Insurance Plans starting at Rs.15/day*

Health Insurance Plans starting at Rs.15/day*

அறிமுகம்

பரங்கிக்காய் எவ்வளவு பெரிதாக உள்ளதோ அந்தளவிற்கு அதிக நன்மைகளைக் கொண்ட பரங்கி விதைகள் குறித்து பலருக்கும் தெரிவதில்லை.

அந்த விதைகள் எவ்வளவு சிறிதாக உள்ளதோ, அந்தளவிற்கே ஒப்பீட்டளவில் பலரும் தெரிந்து வைத்துள்ளனர். பரங்கிக்காய்க்கு முக்கியத்துவம் தருவது போல நாம் அளவில் சிறியதாகவே இருக்கும் அதன் விதைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை.

பரங்கி விதைகள் உடல்நலத்திற்கு பல நன்மைகளை அளிக்கின்றன, குறிப்பாக பெண்களுக்கு! இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவது முதல் ஹார்மோன் சமநிலையை மேம்படுத்துவது வரை பரங்கி விதைகள் பெண்களுக்கு   எண்ணற்ற பிரத்தியேக நன்மைகளை வழங்குகின்றன.

100 கிராம் பரங்கி விதைகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

புரதம் : 100 கிராம் விதைகளில் 30 கிராம் வரை தாவர அடிப்படையிலான புரதம் என்பது மிக தாராளமாக அளவாகும்.  

ஆரோக்கியமான கொழுப்புகள் : மோனோசாச்சுரேட்டட் (monounsaturated) மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் (polyunsaturated) கொழுப்புகள் பரங்கி விதைகள் அதிகமாக உள்ளன.

நார்ச்சத்து : ஒவ்வொரு நூறு கிராம் பரங்கி விதையிலும் சுமார் 5 கிராம் நார்ச்சத்து உள்ளது.

நுண்ணூட்டச்சத்துக்கள் : மெக்னீசியம், ஜிங்க், இரும்புச்சத்து மற்றும் பாஸ்பரஸ் போன்ற அத்தியாவசிய மினரல்கள் பரங்கி விதைகளில் நிறைந்துள்ளன.

ஆன்ட்டிஆக்ஸிடன்ட்கள் : வைட்டமின் E மற்றும் கரோட்டினாய்டுகள் (carotenoids) போன்ற ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட்களும் இதில் நிறைந்துள்ளன.

பெண்களுக்கான நன்மைகள் : மேற்கூறிய அளவுகளில் முக்கிய ஊட்டச்சத்துகளை கொண்டுள்ள பரங்கி விதை பெண்களுக்கு எப்படி உதவுகின்ற என இனி காண்போம் :

1. ஹார்மோன் சமநிலை மற்றும் கருவுறுதலுக்கு துணைபுரிதல் :

பரங்கி விதைகளில் ஏராளமாக உள்ள தாதுப்பொருளான ஜிங்க் – ஹார்மோன் அளவை, குறிப்பாக ஈஸ்ட்ரோஜனைக் சீர்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இவை பெண்களின் இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் ஒழுங்குமுறைக்கும், அண்டவிடுப்பு செயல்பாட்டை (ஓவுலேஷன்) சீராக வைப்பதற்கும் உதவுகிறது. 

இதற்காக பல்வேறு சப்ளிமென்ட் மருந்துகளை சாப்பிடுவதைக் காட்டிலும் பரங்கி விதை மூலம் எளிதாக இந்த ஊட்டச்சத்தைப் பெற்று, கருவுற முயற்சி செய்யும் பெண்கள் எளிதாக கருவுறலாம். .

2. இதய ஆரோக்கியம் மற்றும் இரத்த சர்க்கரை கட்டுப்பாடு :

பரங்கி விதைகளில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் – நல்ல கொலஸ்ட்ரால் அளவை உயர்த்தி, இன்ஃப்ளமேஷனை குறைத்து பெண்களுக்கு இதய நோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கின்றன.

மேலும், இவற்றில் அதிக நார்ச்சத்து உள்ளதால், இரத்த சர்க்கரை அளவை இயல்பாக வைக்க உதவுகின்றன. இன்சுலின் எதிர்ப்புத்தன்மையை நிர்வகிப்பதில் உதவும் இவை, பெண்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் வராமலும் தடுக்கின்றன.

3. எலும்பு வலிமைக்கு உதவுகிறது:

பொதுவாக பெண்களுக்கே ஆர்த்டிரிட்டிஸ் போன்ற பிரச்சினைகள் அதிகம் ஏற்படுகின்றன. எலும்புகளின் அடர்த்தி மற்றும் வலிமைக்கு முக்கிய பங்களிக்கும் அத்தியாவசிய தாதுக்களான மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ், பரங்கி விதைகளில் அதிகம் உள்ளன. 

வயதான பெண்களை பாதிக்கும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்களைத் தடுக்க இவை உதவுகின்றன. 

4. மார்பக ஆரோக்கியம் மற்றும் நோயெதிர்ப்பு ஆற்றல் :

பரங்கி விதைகளிலுள்ள பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் மற்றும் தாவர கலவைகள் மார்பக திசுக்களின் ஆரோக்கியத்தை பராமரிக்கவும், மார்பக புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகின்றன.

மேலும் பரங்கி விதைகளில் உள்ள ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட்கள் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி, பெண்களுக்கு ஏற்படும் நோய்த்தொற்றுகளைத் தடுக்க உதவுகின்றன.

5. மாதவிடாய் பிரச்சினை மற்றும் கல்லீரல் நச்சுத்தன்மையை நீக்குகின்றன:

தசைக்கு நிவாரணம் தரும் பண்புகளுக்கு பெயர் பெற்ற மெக்னீசியம் பரங்கி விதைகளில் நிறைவாக உள்ளதால், இது மாதவிடாய் நேரத்தில் பெண்களுக்கு ஏற்படும் தசைப்பிடிப்புகள், மற்றும் PMS (மாதவிடாய்க்கு பிந்தைய நோய்க்குறி) உடன் தொடர்புடைய இதர அறிகுறிகளுக்கு நிவாரணம் தர உதவுகின்றன.

மேலும், இதிலுள்ள அமினோ அமிலமான குளுட்டமேட் (glutamate) கல்லீரலிலுள்ள நச்சுத்தன்மையை நீக்குவதிலும் உதவுகிறது.

6. சீரான மனநிலை மற்றும் சிந்தனைத் திறனுக்கு உதவுகிறது:

பரங்கி விதைகளில் டிரிப்டோஃபன் என்கிற அமினோ அமிலம் செரட்டோனின் என்ற நியூட்ரோ டிரான்ஸ்மிட்டரை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது; செரட்டோனின், மனநிலையை சீராக வைத்து, நல்லுணர்வுகளை மேம்படுத்துகிறது.

மேலும் இவற்றில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மூளையின்  அறிவாற்றல், செயல்பாடு, ஞாபகத்திறன், மற்றும் கவனம் செலுத்தும் திறனை மேம்படுத்துகின்றன.

7. சருமம், கூந்தல் ஆரோக்கியம் மற்றும் இளமையான தோற்றம் :

ஜிங்க், வைட்டமின் E மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களின் பரங்கி விதைகளில் பெருமளவு உள்ளது என நாம் பார்த்தோம்! இவை சருமத்திற்கு ஊட்டமளித்து, கூந்தல் வளர்ச்சியை ஆதரிக்கிறது; மேலும் பிரகாசமான தோற்றத்திற்கும் பங்களிக்கிறது.

பரங்கி விதைகளிலுள்ள ஆன்ட்டிஆக்ஸிடன்ட்கள் வயோதிக தோற்றத்தை தடுக்கவும், இளமையான தோற்றத்தை ஊக்குவிக்கவும் பெரிதும் உதவுகின்றன.

8. உடல் எடை மேலாண்மை மற்றும் செரிமான ஆரோக்கியம் :

பரங்கி விதைகளில் உள்ள புரதம் மற்றும் நார்ச்சத்து மிதமாக சாப்பிட்ட உடனே நிறைவாக உண்ட மனநிறைவை ஊக்குவித்து, பெண்கள் தங்கள் உடல் எடையை பராமரிக்க உதவுகிறது.

செரிமான ஆரோக்கியத்தை ஆதரிக்க இதிலுள்ள நார்ச்சத்து துணைபுரிகிறது. குடல் இயக்கங்களை இயல்பாக இருக்க ஊக்குவித்து  மலச்சிக்கலையும் தடுக்கிறது.

9. உடலுக்கு ஆற்றலை வழங்குகிறது :

பரங்கி விதைகளில் உள்ள மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற அத்தியாவசிய தாதுக்கள் சீரான வளர்சிதை மாற்றத்தில் உதவி, உடலின் ஒட்டுமொத்த ஆற்றலையும் மேம்படுத்துவதில் பங்களிக்கின்றன.

குறிப்பாக நாள் முழுவதும் பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் பெண்களுக்கு இது ஆற்றல் தரும் ஆரோக்கியமான சிற்றுண்டியாக இருக்கும்.

10. தைராய்டு அளவை சீராக பராமரிக்கிறது :

பரங்கி விதைகளில் உள்ள செலினியம் என்ற கனிமம், தைராய்டு செயல்பாடு மற்றும் ஹார்மோன் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது.

குறிப்பாக கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு தைராய்டு அளவு சரியாக இருக்க வேண்டியது மிக மிக அவசியமாகும். அது கருவில் உள்ள குழந்தையின் ஆரோக்கியத்தினையும் பாதிக்கும் என்பதால், தைராய்டு ஹார்மோன் சரியான அளவில் இருக்க வேண்டும். பரங்கி விதைகள் இயற்கையாகவே இந்த ஹார்மோனை சீர்படுத்துகின்றன.

உணவில் பரங்கி விதைகளை சேர்க்கும் வழிகள்:

ஸ்மார்ட் சிற்றுண்டி : உணவுக்கு இடையில், வறுத்த பரங்கி விதைகளை சத்தான சிற்றுண்டியாக உண்டு மகிழலாம். மற்ற பேக்கேஜ் செய்யப்பட்ட ஸ்நாக்ஸ்களுக்கு பதிலாக இதனை முயற்சிக்கவும்.

உற்சாகமான காலை நேர ஸ்நாக் : காலை எழுந்தவுடன் தயிர் அல்லது ஸ்மூதிகளில் வருத்த பரங்கி விதைகளை தூவி சாப்பிடலாம். இது சிறந்த ஊட்டச்சத்தாக இருப்பதோடு, அன்றைய நாளை உற்சாகமாக துவங்க மொறுமொறுப்பான இனிய துவக்கமாக இருக்கும்..

சாலட் : ஊட்டச்சத்தின் நிறைந்த காய்கறி அல்லது பழங்களின் சாலட்களின் சத்தினை மேலும் அதிகரிக்க பரங்கி விதைகளை அதனுடன் கலந்து, அதன் சுவையையும் மேம்படுத்தலாம்.

கேக் போன்றவற்றிற்கு சிறந்தது : முழு தானியங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் மஃபின், பிரெட் மற்றும் கேக் போன்ற பேக்கிங் தயாரிப்புகளில் பரங்கி விதைகளை அலங்காரமாகவும் ஆரோக்கியமாகவும் தூவலாம்.

முளைக்கட்டிய பரங்கி விதைகள் : மேம்பட்ட செரிமானம் மற்றும் ரத்தத்தில் ஊட்டச்சத்தை அதிகரிக்க முளைக்கட்டிய பரங்கி விதைகளை அன்றாட சமையலில் சேர்க்கலாம். முளைகட்டிய பரங்கி விதைகள் சூப், கிரேவி, குருமா மற்றும் பொரியல்களுக்கு ஏற்றது.

எச்சரிக்கை : பரங்கி விதைகள் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் அதே வேளையில், அவற்றால் சில சாத்தியமான ஒவ்வாமைகளும் உண்டாகலாம். சில நபர்கள் பொதுவாக விதைகளுக்கு எதிரான அலர்ஜி இருக்கலாம்.

அவர்கள் சிறிய அளவில் பரங்கி விதைகளை சாப்பிடத் தொடங்கி ஏதேனும் பாதகமான விளைவுகள் ஏற்படுகின்றதா என்பதை கவனிக்க வேண்டும். 

உப்பு சேர்த்து வறுத்த அல்லது பொறித்த பரங்கி விதைகளில் கூடுதல் சோடியம் மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் இருக்கலாம், எனவே அத்தகைய விதங்களில் அவற்றை சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

சிறந்த வகை பரங்கி விதைகளைத் தேர்ந்தெடுக்கும் முறை: பரங்கி விதைகளைத் தேர்ந்தெடுக்கும்போது, பூச்சிக்கொல்லி மற்றும் அதிகமான உப்பு போன்ற கூடுதல் உட்பொருட்கள் சேர்க்கப்பட்ட வகைகளைத் தவிர்க்கவும்.

இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட ஆர்கானிக் ரக பரங்கி விதைகளே நல்லது. அவை சதைப்பற்றாகவும், துர்நாற்றம் இல்லாமலும் இருக்கும்.

முடிவுரை : 

பரங்கி விதைகள் பெண்களின் ஆரோக்கிய தேவைகளை நிவர்த்தி செய்ய உதவும் தனித்துவமான ஊட்டச்சத்துக்களை நிறைவாக கொண்டுள்ளன.

ஹார்மோன் சமநிலை, தைராய்டு நிலையை பராமரித்தல், இதய ஆரோக்கியம், எலும்பு ஆரோக்கியம் என இந்த சிறிய விதைகள் பெரிய பலன்களைத் தருகின்றன. பரங்கி விதைகளை உணவில் சேர்ப்பதன் மூலம், பெண்கள் அதிக ஆற்றலுடன் தங்கள் வாழ்க்கையை நம்பிக்கையுடன் வாழலாம்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் :

1. மாதவிடாய் காலத்தில் பெண்கள் பரங்கி விதைகளை சாப்பிடலாமா?

ஆம், மாதவிடாய் காலத்தில் சாப்பிட பரங்கி விதைகள் உகந்தவை. அவற்றில் உள்ள மெக்னீசியம், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் தசைப்பிடிப்புகளைப் போக்க உதவும். மேலும் அவற்றிலுள்ள இரும்புச்சத்து, இழந்த ஊட்டச்சத்துக்களை நிரப்ப உதவுகிறது.

2. பரங்கி விதைகளால் பக்க விளைவுகள் ஏற்படுமா?

அரிதாக இருந்தாலும், சிலருக்கு பரங்கி விதைகள் ஒவ்வாமை விளைவுகளை ஏற்படுத்தலாம். அதிகமாக உட்கொள்வதால், அவற்றின் நார்ச்சத்து காரணமாக உப்புசம் அல்லது வயிற்றுப்போக்கு போன்ற செரிமான பிரச்சினைகள் சிலருக்கு ஏற்படலாம். பாதகமான விளைவுகளைத் தவிர்க்க, அளவுடன் உட்கொள்வது முக்கியம்.

3. பரங்கி விதைகளுடன் மற்ற விதைகளின் கலவையை சாப்பிடலாமா?

நிச்சயமாக சாப்பிடலாம்! பரங்கி விதைகளை சூரியகாந்தி, ஆளி அல்லது சியா போன்ற பிற விதைகளுடன் சேர்த்து ஊட்டச்சத்து நிறைந்த சிற்றுண்டியாக உண்ணலாம். இது ஊட்டச்சத்துக்களால் செறிவூட்டப்பட்ட ஒரு தரமான மிக்ஸராக இருக்கும். 
அதிகப்படியான கலோரி அளவைத் தவிர்க்க, விதைகளை சரியான விகிதங்களில் கலப்பதை கவனத்தில் கொள்ளுங்கள். அதிக கலோரிகள் நிறைந்த விதைகளை குறைவாக சேர்க்கவும்.

4. பரங்கிக்காயிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பரங்கி விதைகளை நாமே சேமித்து வைக்கலாமா?

பரங்கி விதைகளை சேமிக்க,  அவற்றை நன்கு உலர்த்த வேண்டும். குளிர்ந்த, உலர்ந்த இடத்தில் காற்று புகாத டப்பாக்களில் அவற்றை வைக்கவும். முறையாக பராமரிக்காவிட்டால், சிறிது ஈரப்பதம் இருந்தால் கூட அவற்றில் பூஞ்சைகள் உருவாகலாம்.
அப்படி பூஞ்சைகள் வந்துவிட்டால் அவற்றை ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது. சரியாக பராமரித்தால் அவை பல மாதங்கள் கெடாமல் இருக்கும்.


DISCLAIMER: THIS BLOG/WEBSITE DOES NOT PROVIDE MEDICAL ADVICE

The Information including but not limited to text, graphics, images and other material contained on this blog are intended for education and awareness only. No material on this blog is intended to be a substitute for professional medical help including diagnosis or treatment. It is always advisable to consult medical professional before relying on the content. Neither the Author nor Star Health and Allied Insurance Co. Ltd accepts any responsibility for any potential risk to any visitor/reader.

Scroll to Top