வாய் புண் (அல்சர்) – வகைகள், காரணங்கள், மற்றும் குணப்படுத்தும் தீர்வுகள்

வாய் புண் (அல்சர்) – வகைகள், காரணங்கள், மற்றும் குணப்படுத்தும் தீர்வுகள்

Health Insurance Plans Starts at Rs.44/day*

*I hereby authorise Star Health Insurance to contact me. It will override my registry on the NCPR.

Verified By Star Health Doctors  

Verified By Star Health Doctors
Health & Wellness

வாய் புண் (அல்சர்) – வகைகள், காரணங்கள், மற்றும் குணப்படுத்தும் தீர்வுகள்

வாயின் உட்புறத்தில் மியூக்கஸ் மெம்ப்ரேன் எனப்படும் வழவழப்பான படலம் உள்ளது. இந்த உணர்திறன் மிக்க திசுக்களின் படலத்தில் ஏதேனும் ஒரு பகுதியில் அரிப்பு அல்லது சிதைவு ஏற்பட்டால் அதுவே வாய் புண் அல்லது மவுத் அல்சர் எனப்படும்.

வாய் புண்கள் ஏற்பட பல்வேறு காரணிகள் உள்ளன. எதிர்பாராத விதமாக கன்னத்தின் உட்புறத்தை கடித்துக்கொள்வது உள்ளிட்டவை இந்த காயம் ஏற்பட முக்கிய காரணமாகும்.

பல்வேறு மருந்துகள், வாய் பகுதியில் ஏற்படும் தோல் வெடிப்புகள், வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்று, மாசுபடுத்தும் காரணிகள் மற்றும் பிற மருத்துவ பிரச்சினைகள் இதன் கூடுதல் காரணங்களாகும்.

வாய் புண்கள் பொதுவாக எந்தவொரு மருத்துவ உதவியும் இல்லாமல் 10 முதல் 14 நாட்களுக்குள் தானாகவே சரியாகிவிடும். காலப்போக்கில் குணமடையாத வாய் புண்கள் வாய் புற்றுநோயாக உருவாகிறது.

வாய் புண் வகைகள்

லேசான சிறிய வாய் புண்கள்

வாய் புண்களில் பெரும்பாலானவை லேசான சிறிய வகையைச் சேர்ந்தவையே. இவை மிகவும் வழக்கமான ஒன்றாகும். ஈறுகள், கன்னங்களின் உட்புறம், மற்றும் உதடுகள் மற்றும் நாக்கின் மேல் இவைத் தோன்றும்.

வாயின் மேல் அன்னத்தில் சில புண்கள் எப்போதாவது ஏற்படும். இந்த புண்கள் பெரும்பாலும் ஒரு பென்சில் முனையின் அளவில் இருக்கும். ஒருவருக்கு ஒரே நேரத்தில் நான்கு முதல் ஆறு சிறிய வாய் புண்கள் ஏற்படலாம்.

அவை ஒற்றைப் புண்ணாகவோ அல்லது கொத்தாகவோ உருவாகலாம். பொதுவாக இவற்றின் விட்டம் 5 மில்லிமீட்டருக்கும் குறைவாகவே இருக்கும். இந்த புண்கள் அதிக வலியை ஏற்படுத்தாது.

தீவிரமான பெரிய வாய் புண்கள்

பெரிதாக ஏற்படும் வாய் புண்களின் தீவிரத்தன்மை மற்றும் குணமாகும் நேரம் மாறுபடும். மூன்று வாரங்களுக்கு மேல் ஆறாமல் இருக்கும் வாய் புண்களை பரிசோதிக்க பல் மருத்துவரை அணுக வேண்டும்.

டான்சில் என்கிற தொண்டை சதை வளர்ச்சியின் காரணமாக பெரிய வகை வாய் புண்கள் ஏற்படலாம். இது குறிப்பாக விழுங்கும் போது, அதிக வலியை ஏற்படுத்தும். இவ்வகை வாய் புண் பொதுவாக ஒருவருக்கு ஒருசமயத்தில் ஒன்று மட்டுமே ஏற்படும்.

மிகச்சிறிய அளவில் வலி மிகுந்த 100 புண்கள் வரை ஏற்படவும் வாய்ப்புள்ளது. இவை ஒன்று முதல் இரண்டு வாரங்கள் வரை நீடிக்கும்.

பெரிய வகை  வாய் புண்கள் அரிதாகவே ஏற்படுகின்றன; இவை பொதுவாக 5 மில்லிமீட்டர் அல்லது அதற்கும் பெரிய அளவில் காணப்படும். இவை ஒற்றை புண்களாகவோ அல்லது ஜோடிகளாகவோ உருவாகலாம். இரண்டு வாரங்கள் முதல் பல மாதங்கள் வரை இந்த புண்கள் இருக்கும்; குறிப்பாக சாப்பிடும் போது அல்லது ஏதேனும் குடிக்கும்போது வலியை ஏற்படுத்தும்.

ஹெர்பெட்டிஃபார்ம் வாய் புண்கள்

பல சிறிய புண்கள் ஒன்றிணைந்து ஒரு பெரிய  வாய் புண்ணை ஏற்படுத்தும் போது அது ஹெர்பெட்டிஃபார்ம் வாய் புண்களாக இருக்கலாம். இவ்வகைப் புண்கள் தோற்றத்தில் ஹெர்பெஸ் போலவே இருப்பதால், ஹெர்பெட்டிஃபார்ம் புண்கள் என்று அழைக்கப்படுகிறது. ஆனால், ஹெர்பெட்டிஃபார்ம் அல்சர் ஏற்படுவதற்கு ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ் காரணமில்லை.

அறிகுறிகள்

வாயில் வலி ஏற்படுதல்

வாயின் உட்படலதத்தில் ஏற்படும் சிதைவு, வாய் புண் அல்லது அல்சர் எனப்படுகிறது. மேலும், வாயில் செரிமானத்திற்கு உதவும் என்ஸைம்கள் மற்றும் அமிலங்கள் நிறைந்துள்ள காரணத்தினாலும், நாம் அதிகளவில் வாயினைப் பயன்படுத்துவதாலும் வாய் புண், வலி நிறைந்த ஒன்றாக இருக்கலாம்.

வாய் புண்களில் இரத்தக்கசிவு ஏற்படலாம்

கன்னத்தின் உட்பகுதியை கடித்துக்கொள்ளுதல், காயம் ஏற்படுத்தும் சூடான உணவை உட்கொள்வது அல்லது சிப்ஸ் போன்ற கூர்மையான உணவுப் பண்டங்கள் கீறல்களை ஏற்படுத்துவது போன்ற காரணங்களினால் வாய் புண்கள் உண்டான பிறகு வாயில் இரத்தக் கொப்புளங்கள் தோன்றும்.

பாதிக்கப்பட்ட பகுதியைச் சுற்றி இலகுவாக இருத்தல்

காயத்தை சுற்றி உள்ள பகுதிகள் வழக்கத்தைவிட இலகுவாக இருப்பது வாய் புண்ணின் அறிகுறியாகும்.

வாயின் ஓரத்தில் வெடிப்பு ஏற்படுதல்

போதிய அளவு உமிழ்நீர் கிடைக்காததால் வாயின் ஓரங்கள் வறண்டு போகின்றன. இப்பகுதியின் சருமம் மிகவும் வறண்டு போவதன் விளைவாக ஆங்குலர் சீலிடிஸ் என்ற பாதிப்பு ஏற்படலாம். வறண்ட சருமம் காலப்போக்கில் வெடிக்கத் துவங்கும். அத்தகைய வெடிப்புகளில் பாக்டீரியா அல்லது புஞ்சையினால் தொற்று அல்லது வீக்கம் ஏற்படலாம்.

வாய் வறண்டு போகுதல்

வாயை ஈரமாக வைத்திருக்க வாயில் உள்ள உமிழ்நீர் சுரப்பிகளால்  போதுமான உமிழ்நீரை உற்பத்தி செய்ய முடியாமல் போனால், வாய் வறண்டு போகிறது.

காய்ச்சல்

தீவிரமான வாய் புண்கள் ஏற்படும் போது காய்ச்சல் உண்டாகும்.

பசியின்மை

சில சூழ்நிலைகளில், பெப்டிக் அல்சர் அல்லது வயிற்று புண் பாதிப்பு – பசியின்மை, எடை இழப்பு போன்ற கடுமையான அறிகுறிகளை வெளிப்படுத்தலாம். வாய் புண் காரணமாக வலியும், விழுங்குவதில் சிரமமும் ஏற்படுகிறது, இதன் காரணமாக பசியை சரிவர கவனிப்பது கடினமாகி எடை இழப்பு ஏற்படுகிறது.

அசதி அல்லது சோம்பேறித்தனம்

சில நேரங்களில், இரண்டாம் நிலை பாக்டீரியா தொற்றானது வாய் புண்ணாக மாறலாம். அப்போது அந்த நபர் மிகுந்த அசௌகரியமாக உணரலாம் அல்லது சருமம் சிவந்து  போகலாம் அல்லது அதிக வெப்பநிலையுடன் (காய்ச்சல்) உடல்நிலை சரியில்லாமல் போகலாம்.

வாய் புண்கள், பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதியில் உண்டாக்கும் அசௌகரியமான உணர்வை வைத்து வகைப்படுத்தப்படுகிறது. ஆனால் பல நோயாளர்கள் சோர்வு, காய்ச்சல் ஏற்படுவதாகவும், லிம்ஃப் நோடுகள் வீக்கமடைவதாகவும் தெரிவிக்கின்றனர்.

சீழ் அல்லது வெள்ளை திட்டுக்கள்

பல் அல்லது ஈறுகளில் ஏற்படும் தொற்று அல்லது பல் காயத்தின் காரணமாக டெண்டல் அப்செஸ் எனப்படும் காயங்களில் சீழ் நிரம்பிய வீக்கம் காணப்படும். இதுபோன்ற அப்செஸ் பாதிப்புகள் பொதுவாக வலியை ஏற்படுத்தாது. டெண்டல் அப்செஸின் காரணமாக முகம் மற்றும் லிம்ஃப் நோடுகளில் வீக்கம் ஏற்படலாம்.

வாயின் உட்புறப் பரப்புகளில் லுகோபிளாக்கியா எனப்படும் தடிமனான, வெள்ளைத் திட்டுகள் ஏற்படுகின்றன. மீண்டும் மீண்டும் ஏற்படும் காயம் அல்லது எரிச்சல் போன்ற பல விஷயங்களின் காரணமாக இப்படி நேரலாம். மேலும், இது வாய் புற்றுநோய் அல்லது புற்றுநோய்க்கு முந்தைய நிலைகளைக் குறிக்கலாம்.

அவை பொதுவாக வெள்ளை அல்லது மஞ்சள் நிற விளிம்புடனும், நடுவில் சிவப்பு நிறத்திலும் இருக்கும்; இதில் வலி அதிகம் இருக்கும்.

சருமத் தடிப்பு  

வாய் புண்கள் உள்ளவர்களுக்கு அவை உருவாகத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே தோலில் சிறிய, உயர்ந்த சிவப்புத் திட்டுகளுடன் கூடிய தடிப்பு ஏற்பட்டிருப்பதைக் காணலாம்.

தொண்டை புண்

தொண்டை புண் என்பது தொண்டையில் ஏற்படும் எரிச்சல் அல்லது வலியைக் குறிக்கும். நாக்கு மற்றும் தொண்டை வலி அடிக்கடி ஏற்பட வாய் புண்களே காரணமாகும்.

வீங்கிய லிம்ஃப் நோடுகள்

வாய் புண்கள் உள்ள சில நபர்களுக்கு, உதடுகளிலும் கன்னங்களின் உட்புறத்திலும் சிவப்பு புள்ளிகள் இருக்கலாம்; சிலருக்கு லிம்ஃப் (நிணநீர்) நோடுகளில் வீக்கம் ஏற்படுகிறது.

வாய் புண் ஏற்படுவதற்கான காரணங்கள்

வாய் பகுதியில் காணப்படும் பாக்டீரியாவிற்கு எதிரான ஒவ்வாமை

நோய்த்தொற்றினால் வாய் புண்களை ஏற்படுத்துவதில் வைரஸ்கள் மிகவும் பொதுவான காரணமாக உள்ளன.  இருப்பினும், பாக்டீரியாவும் வாய் புண்களை ஏற்படுத்தலாம். ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ் குளிர் புண்களை உண்டாக்குகிறது. ஆனால், ஸ்ட்ரெப்டோகாக்கஸ் மற்றும் ஆக்டினோமைசஸ் போன்ற சில பாக்டீரியாக்கள் வாய் புண்களை ஏற்படுத்துகின்றன.

பாக்டீரியா தொற்றின் காரணமாக வாய் புண்கள் மற்றும் வீக்கம் ஏற்படலாம். குறிப்பாக வாயில் பொதுவாகக் காணப்படாத பாக்டீரியா அல்லது புதிய நுண்ணுயிரிகளின் அதிகப்படியான வளர்ச்சி தொற்றுகளை ஏற்படுத்துகிறது.

பற்களில் அணியும் பிரேஸ்கள் 

பிரேஸ்கள், நீண்ட காலம் வாய் திசுக்களில் தொடர்ந்து அழுத்துவதன் காரணமாக, வாய் புண்களை ஏற்படுத்தலாம். பிரேஸ்கள் வாய் திசுக்களில் உராய்வதால், அப்பகுதியில் வீக்கம் மற்றும் புண் ஏற்படுகிறது. உரிய சிகிச்சயை எடுத்துக்கொள்ளாவிட்டால் அந்தப் புண் மோசமாகி, தொற்றும் ஏற்படலாம்.

மாதவிடாயின் போது ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள்

சில பெண்களுக்கு, மாதவிடாய் சுழற்சி முழுவதும் நிகழும் ஹார்மோன் மாற்றங்களின் காரணமாக (குறிப்பாக புரோஜெஸ்ட்டிரோன் அதிகரிப்பதால்) வாய் பகுதியில் –சிவந்து போகுதல், ஈறுகள் வீங்குதல், உமிழ்நீர் சுரப்பிகள் வீங்குதல் மற்றும் வாய் புண்கள் ஏற்படுதல் போன்ற மாறுதல்கள் உண்டாகின்றன.

மன  அழுத்தம் அல்லது உறக்கமின்மை 

பயமாகவோ அல்லது பதற்றமாகவோ உணரும் போது சிலர் தங்கள் உதடுகளை அல்லது கன்னங்களைத் தெரியாமல் கடித்துக்கொள்ள அதிக வாய்ப்புகள் உள்ளன, இதனால் வாய் புண்கள் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கிறது.

அதிக மன அழுத்தம், அட்ரினலினால் தூண்டப்படும் போதிய  ஊட்டச்சத்து இல்லாத வாழ்க்கை முறை மற்றும் போதிய தூக்கமின்மை காரணமாக வாய் புண்கள் திரும்பத்திரும்ப ஏற்படுகின்றன.

மன அழுத்தம் மற்றும் பதட்டத்திற்கு பதிலளிக்கும் விதமாக உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் தொடர்ந்து வாய் புண்களை உண்டாக்குகிறது.

சிட்ரஸ் பழங்கள், மற்றும் அமிலத்தன்மை அல்லது அதிக காரமான பிற உணவுகள்

சிட்ரஸ் பழங்களில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் வைட்டமின் C-யுடன் சேர்த்து சிட்ரிக் அமிலமும் உள்ளது. வாயில் உள்ள மென்மையான திசுக்களை எரிச்சலடையச் செய்து, சிட்ரிக் அமிலம் வாய் புண்களை ஏற்படுத்தும் அல்லது ஏற்கனவே உள்ள புண்களை மோசமாக்கும்.

காரமான உணவுகள் வாயின் உட்புற படலத்தை சேதப்படுத்தி, புண்களை உண்டாக்கும். அமிலத்தன்மை கொண்ட பழங்களைப் போலவே, காரமான உணவுகளிலும் அதிக அமிலத்தன்மை உள்ளது. அதனால் அவை சருமத்தை எரிச்சலடையச் செய்கின்றன.

மன அழுத்தம் அல்லது பதட்டம்

இக்கருத்தின் பின்னால் உள்ள அறிவியல் பூர்வமான காரணம் தெரியவில்லை என்றாலும், மன அழுத்தம் மற்றும் பதட்டம் காரணமாக வாய் புண்கள் அடிக்கடி ஏற்படுகின்றன.

மரபணு காரணிகள்

வாய் புண்கள் ஏற்பட சில மரபணுக்கள் அல்லது மரபணுக்களின் சில பகுதிகள் காரணமாக உள்ளன என்பதற்கு குறைந்தபட்ச ஆதாரம் உள்ளது. மரபு ரீதியாக ஒருவர் முன்னோர்களிடமிருந்து பெறும் மரபணுக்களும் வாய் புண்களை ஏற்படுத்துவதில் பங்கு வகிப்பதாக அந்தக் கூற்று சொல்கிறது. திரும்பத்திரும்ப வாய் புண்கள் ஏற்படும் நபர்களில், 40% சதவீதத்திற்கும் அதிகமானோர் தங்கள் குடும்பத்தில் அந்த பாதிப்பு இருப்பதாக கூறுகின்றனர்.

சரியாகப் பொருத்தப்படாத  பல் சீரமைப்பு உபகரணங்கள்

சிலர் தங்கள் உதடுகள் அல்லது நாக்கை எதிர்பாராமல் கடித்துக்கொள்வதாலும், பிரேஸ்கள் அல்லது பல்லில் நிரப்பப்பட்ட கூர்மையான ஃபில்லிங்ஸிற்கு எதிராக உராய்வதாலும், அல்லது ஒழுங்காகப் பொருத்தப்படாத பற்களின் காரணமாகவும் வாய் புண்கள் ஏற்படலாம். இவ்வகையான புண்கள் விரைவில் குணமாகிவிடும். அந்த நபர் உணரும் முன்பே அது சரியாகிவிடும்.

வாய் புண்ணுக்கான தீர்வுகள் மற்றும் சிகிச்சைகள்

ஐஸ்

வாய் புண் வலியிலிருந்து நிவாரணம் பெற மிகச் சிறந்த சிகிச்சைகளில் ஒன்று - ஐஸிங். அசௌகரியம் மற்றும் வாயின் வீக்கத்தைக் குறைக்க ஐஸ் சிப்ஸ்களை வாயில் மெதுவாக உருகும்படி பயன்படுத்தவும். சருமத்தில் நேரடியாக ஐஸை உபயோக்கிக்கக்கூடாது. இந்த சிகிச்சையானது குறுகிய கால நிவாரணத்தை மட்டுமே அளிக்கும். இருப்பினும், வலியைக் குறைப்பதால் இது இதமளிக்கும் ஒரு தீர்வாக இருக்கும்.

வெள்ளரி துண்டுகள்

வாய் புண்கள் இருப்பது தெரியவரும் ஆரம்ப நிலையில் பப்பாளிப்பழம் அல்லது வெள்ளரியை மெதுவாக நன்கு மெல்ல அறிவுறுத்தப்படுகிறது. இது வாய்ப்பகுதியின் கேவிட்டியை திறக்கச் செய்து அதன் வழியாக, புரதத்தை-செரிமானம் செய்யும் என்ஸைம்களை வாய் புண்களின் வீக்கமடைந்த பகுதிகள் மற்றும் வெளியே தெரியும் மேற்பரப்புகளுக்குச் செல்ல அனுமதிக்கிறது.

புண்ணின் மேற்பரப்பை மெதுவாக ஜீரணிப்பதன் விளைவாக, என்ஸைம்கள், மூடப்பட்ட ஒரு மேற் படலத்தை உருவாக்குகின்றன. இது உராய்வு, அமிலத்தன்மை மற்றும் உணவின் கரடுமுரடான வடிவம் ஆகியவற்றினால் பாதிக்கப்படாத வகையில் புண்களின் உணர்திறனை குறைக்கிறது.

வெள்ளரிக்காய் மற்றும் பப்பாளிப்பழம் ஆகிய இரண்டும் சாலட் செய்ய உகந்தவை. இந்த இரண்டையும் அல்லது அவற்றில் ஒன்றை மட்டும் ஜூஸ் செய்து ஒருவர் அருந்தலாம்.

விட்ச் ஹேசல் (உலர் இலை) மூலிகை

விட்ச் ஹேசல் அல்லது உலர் இலை என்பது ஒரு  துவர்ப்பான  மூலிகையாகும், இது வாய் புண்கள் ஏற்படுத்தும் அசௌகரியத்தை போக்க மவுத்வாஷாக பயன்படுகிறது. இந்த மூலிகையில் உள்ள டானின்ஸ் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.

மஞ்சள்

மஞ்சளைப் பயன்படுத்தி வாய் புண்களை சிறப்பாக குணப்படுத்த முடியும். இதற்கு இன்ஃபிலமேஷனைக் குறைக்கும் பண்புகள் உள்ளன. தண்ணீர் மற்றும் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து ஒரு மென்மையான களிம்பை உருவாக்கி புண்களின் மீது தடவவும். ஒரு சில நிமிடங்கள் அப்படியே வைத்து, பின்பு தண்ணீர் விட்டு கழுவவும்.

கெமோமில் (சீமை சாமந்திப்பூ)

கெமோமில் அல்லது சீமை சாமந்திப்பூவிற்கு இன்ஃபிலமேஷனை எதிர்க்கும் பண்புகள் உள்ளன. ஒரு திடமான கெமோமில் தேநீரை தயாரித்து, குளிர்ந்த பிறகு அதை மவுத்வாஷாகப் பயன்படுத்தலாம். வாய் புண்ணுக்கு கெமோமிலை மருந்தாகப் பயன்படுத்த இது ஒரு நல்ல வழியாகும். மேலும், வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்த கெமோமிலை, தேநீர் பையில் நிரப்பி நேரடியாக புண் மீது ஒத்தடம் போல வைக்கலாம்.

மவுத்வாஷ்கள்

வாய் புண்கள் வலி ஏற்படுத்தும் போது, புண்களில் தொற்றினை ஏற்படுத்தும் பாக்டீரியா, வைரஸ்கள் அல்லது பூஞ்சைகள் ஆகியவற்றை அழிக்க ​​நுண்ணுயிரிகளுக்கு எதிராக செயல்படும் மவுத்வாஷைப் பயன்படுத்தலாம். புண்கள் ஆறும் செயல்முறையையும் இது துரிதப்படுத்தலாம்.

உட்கொள்ளக்கூடிய மருந்துகள்

மருந்தகங்களில் கிடைக்கும் மேலாகத் தடவக்கூடிய அனஸ்திடிக் (மரப்பு) மருந்துகள் வாய் புண்களை குணப்படுத்தும். பெரும்பாலான வாய்ப் புண்கள் தாமாகவே குணமடையும் என்றபோதும், வலியைப் போக்கவும், மேற்படி சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கவும், காயங்களின் மீது தடவும் மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கலாம்.

ஆன்டிசெப்டிக் ஜெல், ஸ்டீராய்டு ஆயின்மென்ட்கள் அல்லது பரிந்துரைக்கப்படும் மவுத்வாஷ்கள் ஆகியன வாய் புண்ணுக்கு வழக்கமான மருத்துவத் தீர்வுகளாகும்.

தீவிர சூழ்நிலைகளின் போது, நோயெதிர்ப்பினைத் தடுக்கும் மருந்துகள் சிறப்பாக பலனளிக்கும். ஆன்டிமைக்ரோபியல் மவுத்வாஷ், வலிநிவாரணி மாத்திரை, ஜெல் அல்லது ஸ்ப்ரே, கார்டிகோஸ்டீராய்டு லோஸெஞ்சஸ் மற்றும் சலைன் மவுத்வாஷ் ஆகியவற்றைக் கொண்டு வாய் புண்ணுக்கு திறம்பட சிகிச்சை அளிக்கலாம்.

ஊட்டச்சத்து சப்ளிமெண்ட்ஸ்

வாய் புண்களை வைட்டமின் B-ஐ மட்டும் பயன்படுத்தி, அல்லது வைட்டமின் B-யுடன் பான்டோதெனிக் அமிலத்துடன் சேர்த்து பயன்படுத்தி நல்ல நிவாரணம் பெறலாம்.

வைட்டமின் B என்பது பலனளிப்பது மட்டுமல்ல, வாய் புண்கள் மீண்டும் வருவதற்கான வாய்ப்பையும் வெகுவாகக் குறைத்து, குணமாவதை துரிதப்படுத்துகிறது, மற்றும் சிகிச்சை பெறும் கால அளவையும் குறைக்கிறது. வைட்டமின் B-ஐ எடுத்துக்கொள்வதை வழக்கமாக்குவது வாய் புண்களைக் குறைக்கவும், தடுக்கவும் உதவும்.

காடரைசேஷன் (சுட்டு அழிக்கும் சிகிச்சை)

காடரி சிகிச்சையின் போது, ​​பாதிக்கப்பட்ட திசுவை எரிக்க, பொசுக்க அல்லது கொல்ல - ஒரு கருவி அல்லது இரசாயனப் பொருள் பயன்படுத்தப்படுகிறது. டெபாக்டெரால் என்ற மேலாக தடவும் மருந்து மூலம் வாய் புண்கள் மற்றும் ஈறுகளில் ஏற்படும் பிரச்சனைகளைக் குணப்படுத்தலாம். இந்த மருந்தானது புண்களை இரசாயன முறையில் நீக்குவதால், சுமார் ஒரு வாரத்திற்குள் காயத்தை குணமாக்கலாம்.

புண்கள் குணமாகும் வரை காரமான மற்றும் புளிப்பான உணவுகளைத் தவிர்க்கவும்.

ஒரு தனிநபரின் வாய் பகுதியின் ஆரோக்கியம், காரமான அல்லது உப்பு நிறைந்த உணவுகளால் எதிர்மறையாக பாதிக்கப்படலாம். எனவே, புண்கள் விரைவில் குணமடைய காரமான மற்றும் புளிப்பான உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

அதிக திரவங்களை அருந்தவும்.

வாயினை வறண்டு போகாமல் தண்ணீர் கொண்டு ஈரப்பதமளித்து, லூப்ரிகேட் செய்வதன் மூலம், ஒருவர் வலியை ஏற்படுத்தும் வகையில் கடித்துக்கொள்வது, மற்றும் வாய் புண்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கலாம்.

வாயைச் சுத்தமாக வைத்திருங்கள்.

வாய் புண்கள் தோன்றுவதற்கு வாய் சுகாதாரத்தை கடைபிடிக்காததும் பங்களிக்கிறது. பற்களில் உள்ள ப்ளாக் பாக்டீரியா தொற்றுகளால் அடிக்கடி புண்கள் ஏற்படும்.

வாய் புண்களுக்கு ஆன்டிசெப்டிக் ஜெல் தடவவும்

ஈறுகள், கன்னங்களின் உட்பகுதி, மற்றும் பற்களின் மேற்பரப்பில் ஆன்டிசெப்டிக் மவுத் ஜெல் உறுதியாக ஒட்டிக்கொள்கிறது. ஈறு இன்ஃபிலமேஷன், பற்கரை (டார்ட்டர்) ஏற்படுதல், சுவாச துர்நாற்றம் மற்றும் இதர வாய் பகுதி நோய்களை விளைவிக்கும் ஆபத்தான கிருமிகளை அழித்து இது பலனளிக்கிறது.

வாய் புண்களை தடுக்கும் வழிகள்

வாய் புண்கள் உருவாகும் சாத்தியங்களை பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி குறைக்காலாம்:

  • வாயை சுத்தமாக வைத்திருக்க முடிந்தவரை முயற்சி செய்ய வேண்டும்.
  • வாயில் பாதிப்பு ஏற்படும் அபாயத்தைக் குறைக்க நல்ல தரம் உயர்ந்த டூத் பிரஷ்களைப் பயன்படுத்துதல்.
  • வைட்டமின் A, C மற்றும் E  சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவை உட்கொள்ளவும். 
  • புதிதான பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற உணவுகளை சாப்பிடுவது வாய்ப் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கிறது.
  • பல் மருத்துவரை அடிக்கடி சந்தித்து ஆலோசிக்க வேண்டும்

எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?

பொதுவாக, வாய் புண்கள் தானாகவே குணமாகிவிடும். இருப்பினும், மூன்று வாரங்களில் குணமடையாமல் இருப்பின், பல் மருத்துவரை அணுக வேண்டும்.

நாக்கில் ஏற்படும் புண், கன்னத்திற்கும் ஈறுகளுக்கும் இடையில் ஏற்படும் புண் அல்லது நாக்கின் அடியில் ஏற்படும் புண் ஆகியவை சிகிச்சை பெற்றும் குணமடையவில்லையெனில் அது  வாய் புற்றுநோயாக இருக்கலாம்.

வாயில் ஏற்பட்டுள்ள பிரச்சினை ஒரு புண் (அல்சர்) தானே தவிர, வாய்ப் புற்றுநோய் போன்ற தீவிரமான பாதிப்பில்லை என்பதை  உறுதிசெய்ய, பல் நிபுணர்கள் நோயை சரியாக கண்டறியயும்  பரிசோதனையை வாயில் மேற்கொள்வார்கள்.

ஒருவருக்கு அடிக்கடி வாய் புண்கள் ஏற்பட்டால், எந்தவொரு மருத்துவ ரீதியான பாதிப்புகளும் அவருக்கு இல்லை என்பதை உறுதிசெய்ய  பல் மருத்துவரை அணுக வேண்டும்.

பின்வரும் நிலைகள் ஏதாவது இருந்தால் பல் மருத்துவர் அல்லது மருத்துவரை தவறாமல் ஆலோசிக்கவும்:

  • மூன்று வாரங்களுக்கும் மேலாக வாய் புண் இருந்தால்.
  •  திரும்பத்திரும்ப காய்ச்சல் ஏற்பட்டால்.
  • வாய் புண்கள் திரும்பத்திரும்ப வந்தால்.

முடிவுரை

வாய் புண் என்பது வாயின் மியூக்கஸ் மெம்ப்ரேன்  மீது உருவாகும் எரித்மாட்டஸ் தன்மை கொண்ட (இரத்தம் சேர்ந்து சிவந்து போகுதல்), வெண்மையான-சிவப்பு நிற திட்டுக்கள் ஆகும். வாய் புண்கள் பெரும்பாலும் ஜோடிகளாக அல்லது நான்கு புண்களின் குழுக்களாகத் தோன்றும்.

வலி இருந்தாலும்கூட, அவற்றால் பொதுவாக எந்த பிரச்சனையும் ஏற்படாது, அவை தாமாகவே குணமாகிவிடும். வாய் புண்கள் உதடுகளில் அல்லது கன்னங்களின் உட்புறத்தில் வட்டமான, மஞ்சள் நிற திட்டுக்களாக உருவாகின்றன.

அவை சிலநேரங்களில் நாக்கு, வாயின் மேலண்ணம் அல்லது ஈறுகளிலும் உண்டாகலாம். வாய் புண்கள் பொதுவாக எந்தவொரு கூடுதல் பரிசோதனையின் தேவையின்றி; அவை ஏற்படும் விதம், தொடர்ந்து அதிகரிக்கும் தன்மை மற்றும் அதன் தோற்றம் ஆகியவற்றைக் கொண்டு இயல்பாக கண்டறியப்படுகிறது.

வலி நிவாரணி அல்லது ஆன்டி-இன்ஃபிலமேஷன் மருந்துகள் கொண்ட ஜெல், கிரீம்கள் மற்றும் மவுத்வாஷ் ஆகியவற்றைக் கொண்டு அறிகுறிகளுக்கு ஏற்ப சிகிச்சை பெறலாம்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

1. வாய் புண்ணை விரைவாக குணப்படுத்தும் வழி என்ன?

வாய் புண்களை துரிதமாக குணப்படுத்துவதில், மருந்தகத்தில் கிடைக்கும் மருந்துகள் மற்றும் மவுத்வாஷ்கள் சிறந்த பலனளிக்கலாம். உப்பு நீர் வாய் கொப்பளிப்பது வாய் புண்ணுக்கு ஒரு சிறந்த வீட்டு வைத்தியமாகும்.

2. அல்சருக்கு எந்த பானம் நல்லது?

கெமோமில் தேநீர், தேன் கலந்த தண்ணீர் மற்றும் மஞ்சள் கலந்த தண்ணீர் ஆகியவற்றிற்கு புண்களை குணப்படுத்தும் திறன் உள்ளது.

3.  எந்தெந்த நோய்கள் வாய் புண்களை ஏற்படுத்துகின்றன?

குளிர் புண் வைரஸ், சின்னம்மை போன்ற வைரஸ் தொற்றுகள்,  வாய் பகுதியில் ஏற்படும் நோய், வைட்டமின் B12 அல்லது இரும்புச்சத்து குறைபாடு, கிராங்க்ஸ் நோய்(Crohn’s disease), செலியாக் நோய் (celiac disease), ரியாக்டிவ் மூட்டுவலி(arthritis), எச்.ஐ.வி, லூபஸ்(lupus) மற்றும் பெசெட்’ஸ் நோய்(Behcet’s) உள்ளிட்ட சில மருத்துவ நோய்களின் காரணமாக எப்போதாவது வாய் புண்கள் ஏற்படலாம்.

4. வைட்டமின்கள் குறைபாட்டால் வாய் புண்கள் ஏற்படுமா?

வைட்டமின் B12 குறைபாடு ஏற்பட்டால், நமது உடல் வழக்கத்திற்கு மாறாக, செயலிழந்த நிலையில் இருக்கும் பெரிய இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்யும். வாய் புண்கள் ஏற்படுவது வைட்டமின் B 12 குறைபாட்டின் அறிகுறிகளில் ஒன்றாகும், இது அடிக்கடி இரத்த சோகையுடன் தொடர்புடையதாக அறியப்படுகிறது.

DISCLAIMER: THIS BLOG/WEBSITE DOES NOT PROVIDE MEDICAL ADVICE

The Information including but not limited to text, graphics, images and other material contained on this blog are intended for education and awareness only. No material on this blog is intended to be a substitute for professional medical help including diagnosis or treatment. It is always advisable to consult medical professional before relying on the content. Neither the Author nor Star Health and Allied Insurance Co. Ltd accepts any responsibility for any potential risk to any visitor/reader.

;