மன அமைதிக்கான சிறந்த வழிகள்: உங்கள் மூளையை அமைதிப்படுத்தவும் மன அழுத்தத்தைக் குறைக்கவும் 6 யோசனைகள்!

மன அமைதிக்கான சிறந்த வழிகள்: உங்கள் மூளையை அமைதிப்படுத்தவும் மன அழுத்தத்தைக் குறைக்கவும் 6 யோசனைகள்!

Health Insurance Plans Starts at Rs.44/day*

*I hereby authorise Star Health Insurance to contact me. It will override my registry on the NCPR.

Verified By Star Health Doctors  

Verified By Star Health Doctors
Health & Wellness

மன அமைதிக்கான சிறந்த வழிகள்: உங்கள் மூளையை அமைதிப்படுத்தவும் மன அழுத்தத்தைக் குறைக்கவும் 6 யோசனைகள்!

முன்னுரை

மனஅழுத்தம் தகர்த்து வெற்றியை வசப்படுத்த, உன் வாழ்க்கைப் பாதையில்  சரியான வழிகளைத் தேர்வு செய். இந்த நவீன பழமொழிக்கேற்ப, வாழ்க்கையில்  எண்ணற்ற அளவில் மன-அழுத்தத்தைக் குறைக்கும் முறைகளைக் கையாண்ட அனுபவம் நிறைய பேருக்கு உண்டு. ஒரு சிலர் வாழ்வில், மன அழுத்தத்தைத் தினமும் சந்திக்கின்றனர்.

வேலை, குடும்பப் பிரச்சனைகள், உடல்நலக் கவலைகள் மற்றும் நிதிக் கடமைகள் போன்ற அன்றாட  வாழ்வின் ஒரு சில  காரணங்கள் அதிக மன அழுத்தத்திற்கு வழிவகுக்கிறது. எவ்வளவு  முறைகள் தேர்வு செய்தும், மன அழுத்தம் குறைய வில்லை  என்று மனதிற்குள்  புலம்புபவர்களுக்கு, எண்ணற்ற உபாயங்கள் உண்டு.  

இந்தியாவில் நடத்தப்பட்ட ஒரு சமீபத்திய கணக்கெடுப்பின் படி, அதிர்ச்சியூட்டும் வகையில் 24 சதவீத இந்தியர்கள் மன  அழுத்தத்தால் பாதிக்கப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மன அழுத்தம் அனைத்து  பாலினத்தைச் சார்ந்தவர்களையும்  பாதிப்படைய செய்கிறது.

மனச்சோர்வு பொதுவாக இந்தியாவில் எல்லா வயதினைச் சேர்ந்தவர்களையும் மற்றும் குறிப்பாக பெண்களைப் பாதிக்கிறது. பெண்கள் வகிக்கும் பல்வேறு பாத்திரங்கள் அவர்களுக்கு  மன அழுத்தத்தை கொடுக்கிறது, இதனால் அவர்களுக்கு  மனச்சோர்வு ஏற்படுகிறது.

சுய-கவனிப்பு போன்ற சில நடவடிக்கைகள் மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைக்க உதவும். உடற்பயிற்சி மற்றும்  நினைவாற்றல் நடைமுறைகள் போன்ற மற்ற விஷயங்களும்  மன அழுத்தத்தைக் குறைக்கும். 

மன அமைதி என்றால் என்ன?

மன அமைதி என்பது மனதின் ஒரு நிலை, இதில் உங்கள் மூளை அமைதியாகவும், எளிதாகவும், கவலையினால் தொந்தரவு இல்லாமல் இருக்கும். மன அமைதி என்பது, கவலையற்ற மனநிறைவின்  அனுபவ நிலையை விவரிக்கிறது, அதை அடைவது, ஒரு சிலருக்கு மிகவும் கடினமாக இருக்கும்.

ஏதேனும் ஒரு விஷயம் உங்களுக்கு மன அமைதியை அளித்தால், அது ஒரு குறிப்பிட்ட பிரச்சினை  அல்லது சிரமத்தைப்  பற்றி கவலைப்படுவதிலிருந்து தடுக்கிறது. உள் அமைதி என்பது உளவியல் அல்லது ஆன்மீக  அமைதி  வேண்டுமென்ற நிலை.

மன அமைதிக்கான சிறந்த வழிகள்: உங்கள் மூளையை அமைதிப்படுத்தவும் மன அழுத்தத்தைக் குறைக்கவும் 6 யோசனைகள்!

கவலை மற்றும் மனச்சோர்வு போன்ற மனநல கோளாறுகளுக்கு மன அழுத்தம் எப்போதும் சமமாக இருக்காது. எனினும் மன அழுத்தலிருந்து விடுபடுவது, மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. கீழே உள்ள உதவிக்குறிப்புகள் பல வகையான மன அழுத்தத்திலிருந்து விடுபட முக்கிய 6 யோசனைகள் ஆகும்!

1. உடல் செயல்பாடு செய்யுங்கள்

நீங்கள் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தால், உங்கள் உடலில் சிறிய அசைவுகள்  மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது, இதனால் மனநிலை மாற்றம் ஏற்படும். வழக்கமான உடற்பயிற்சி, கவலை மற்றும் மனச்சோர்வு போன்ற பொதுவான  மனநல நிலைகளின் அறிகுறிகளைக் குறைக்க உதவுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஒருவர் செயலற்ற நிலையில் இருப்பதாக உணர்ந்தால், நடைபயிற்சி அல்லது பைக்கிங் போன்ற மென்மையான  செயல்களைச் செய்யலாம்.

ஒரு ஆய்வில், மாணவர்கள் குழுவானது 6 வாரங்களுக்கு, வாரத்திற்கு 2 நாட்கள் ஏரோபிக்  உடற்பயிற்சியில் ஈடுபட்டது,  மன அழுத்தத்தைக் கணிசமாகக்  குறைத்தாகக் கண்டறியப்பட்டது. கூடுதலாக, இவ்வாறு செய்யப்படும் சுய- செயல்களால்   மனச்சோர்வு குறைக்கப்படுகிறது.

மாற்றுத் திறனாளிகளுக்கு, வாரத்திற்கு குறைந்தபட்சம் 2 மணிநேரம் மற்றும் 30 நிமிடங்கள் (150 நிமிடங்கள்) உடல் செயல்பாடு, அதாவது குறுகிய நடைப்பயிற்சி மற்றும் சக்கர நாற்காலியில் சிறிய ஓட்டம் செய்வது  போன்ற செயல்பாடுகள், அழுத்தத்தைக் குறைக்க உதவியாக இருக்கும்.

மேலும் அவர்கள் ஜாகிங் மற்றும் சக்கர நாற்காலி கூடைப்பந்து போன்ற உடல் செயல்பாடுகளை, வாரத்திற்கு குறைந்தது 1 மணிநேரம் 15 நிமிடங்கள் (75 நிமிடங்கள்) செய்யும்போது, அது அவர்களுக்கு மனநிலை மாற்றத்தை அளிக்கும். முக்கிய  தசைக் குழுக்களை  உள்ளடக்கிய லேசான செயல்பாடுகள் அவர்களுக்கு பயனளிக்கும்.

2. சரிவிகித உணவை உண் வேண்டும்

நீங்கள் உண்ணும் உணவின் தரம் மற்றும் அளவு, ஒருவரது ஆரோக்கியத்தை உறுதிப்படுத்துகிறது, மற்றும் அது உங்கள்  மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ஒரு ஆய்வின்படி, கொழுப்பு மற்றும் சர்க்கரைச்  சேர்க்கப்பட்ட மிகவும்  பதப்படுத்தப்பட்ட உணவுகளை  உட்கொள்பவர்களுக்கு அதிக மன அழுத்தத்தை  அனுபவிக்கும் அபாயம் உள்ளது.

போதுமான ஊட்டச்சத்து நிறைந்த முழுமையான உணவை உட்கொள்ளாதது உங்கள் ஊட்டச்சத்து  குறைபாடுகளை அதிகரிக்கலாம். மெக்னீசியம் மற்றும் பி-வைட்டமின்கள் மன அழுத்தத்தையும்  மனநிலையையும் கட்டுப்படுத்துவதற்கு மிகவும்  அவசியம்.

ஒருவர் மன அழுத்தத்தில் இருந்தால், உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும்  மனநிலையையும் பாதிக்கக்கூடிய மிகவும்  சுவையான உணவுகளை நீங்கள் சாப்பிட  யோசிப்பீர்கள்.

அதிகமாகப் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பானங்களை உட்கொள்வதற்குப் பதிலாக, முழுமையான உணவுகளையும்  சாப்பிடுங்கள், இது உடலுக்கு சரியான ஊட்டமளிக்கும். இவ்வாறு சத்துள்ள உணவைச் சாப்பிட்டால், மன அழுத்தத்திற்கு  எதிராக எதிர்ப்பை மேம்படுத்த  முடியும். பச்சை காய்கறிகள், பழங்கள், பச்சை இலைகள், பீன்ஸ், பால், மீன், கொட்டைகள்  மற்றும் விதைகள் ஆகியவை முழு உணவுப் பொருட்களாகும்.

3.  ஃபோன் மற்றும் திரை நேர பயன்பாட்டைக் குறைக்கவும்

நவீன உலகில், ஸ்மார்ட்போன்கள், கணினிகள் மற்றும் டேப்லெட்டுகள் அவசியம், ஆனால் அவற்றை அதிக நேரம் பயன்படுத்துவது உங்கள் மன அழுத்தத்தை அதிகரிக்கலாம்.

ஸ்மார்ட்ஃபோன் உபயோகிப்பதால் மன அழுத்தம் மற்றும் மனநலக் கோளாறுகள்  அதிகரிப்பதாக பல  ஆய்வுகள்  கண்டறிந்துள்ளன.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் கணினியில் மிக அவசரமான மற்றும் முக்கியமான தகவல்களை ஒருவர் சேகரிக்கலாம். பிற தகவல்களைச் சேகரிக்க விரும்பினால், செய்தித்தாள் மற்றும் புத்தகங்கள்  போன்ற ஆஃப்லைன் வழிகள் பயன்படுத்தி,  அவற்றைச் சேகரிக்க முயற்சிக்கவும்.

நீங்கள் எந்த வயதினராக இருந்தாலும், நீங்கள் திரைக்கு முன் அதிக நேரம் செலவிட்டால், அது ஒருவரது நல்வாழ்வைக் குறைத்து மன அழுத்தத்தை அதிகரிக்கும். மேலும், அதிக திரை நேரம் தூக்கத்தை மிகவும் பாதிக்கும், இது மன அழுத்தத்தை அதிகரிக்க கூடும்.

4. தயக்கமின்றி சுய-கவனிப்பு செய்யுங்கள்

சுய- கவனிப்பு மற்றும் பாதுகாப்பிற்கு நேரத்தைத் திட்டமிடுங்கள், இது மன அழுத்தத்தைக்  குறைக்கும். ஒருவர் வேலைக்காக மற்றவர்களைச் சார்ந்திருக்காமல் இருக்க  முயற்சி  செய்ய வேண்டும், பின்வரும் செயல்பாடுகளின் மூலம் சுய-கவனிப்பு மற்றும்  பாதுகாப்பு செய்யலாம்:

  • தினமும் பல் துலக்குங்கள்.
  • குளிக்கவும்.
  • திறனுக்கு ஏற்றவாறு ஒரு சிறிய நடைக்கு செல்லுங்கள்.
  • கடவுளை நம்பினால் கடவுளை வணங்குங்கள்.
  • இடையில் தண்ணீர் குடிப்பது நல்லது.
  • நல்ல புத்தகத்தைப் படியுங்கள்.
  • உங்களால் முடிந்தவரை உடற்பயிற்சி செய்யுங்கள்.
  • ஆரோக்கியமான உணவை தயாரித்து உண்ணுங்கள்.
  • உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் ஆரோக்கியமான உரையாடலில் பங்கேற்கவும்.
  • படுப்பதற்கு முன் உங்கள் கை மற்றும் கால்கள் நீட்டி உடற்பயிற்சிச் செய்யவும்.
  • உங்கள் விருப்பப்பொழுதுபோக்கைப் பயிற்சி செய்யுங்கள், இது உங்கள் ஆர்வத்தைச் சற்றுத் திசை திருப்பி, மன அழுத்தத்தைக் குறைத்து விடும்.
  • அபார்ட்மெண்டில்(அடுக்குமாடிக் குடியிருப்பில்) வசித்தாலும் சிறு செடிகளை வளர்க்கவும்.
  • நீங்கள் இசை விரும்பியாக இருந்தால், நல்ல இசையைக் கேளுங்கள்.
  • முடிந்தவரை யோகா பயிற்சி செய்யுங்கள்.
  • உங்கள் செல்லப்பிராணியுடன் நேரத்தை செலவிடுங்கள்.
  • நீங்கள் ஆர்வமாக இருந்தால், பத்திரிகை படிப்பதை முயற்சிக்கவும்.
  • அதிகமாக காபி அருந்துவதை தவிர்க்கவும்.
  • இந்த நடவடிக்கைகள் தவிர, நீங்கள் உங்கள் தொழில் மற்றும் தொழில் சார்த்த வேலைகளைச் செய்வதை தொடருங்கள்.

சுயமாக தங்களை கவனித்துக் கொள்பவர்கள் குறைந்த அளவு மன அழுத்தத்தையும் நல்ல வாழ்க்கைத் தரத்தையும் கொண்டுள்ளனர். மறுபுறம், சுய-கவனிப்பு இல்லாதவர்கள்  மன அழுத்தத்தின் அதிக ஆபத்துடன் தொடர்புடையவர்கள்.

5. குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நேரத்தை செலவிடுங்கள்

மன அழுத்தத்தின் போது  குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் சமூக ஆதரவு, மன அழுத்தத்தைச்  சமாளிக்க உதவும். ஒரு ஆராய்ச்சியின் படி, தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடமிருந்து  குறைந்த அளவிலான ஆதரவைக் கொண்ட  இளம் கல்லூரி மாணவர்கள், அவர்கள் மனச்சோர்வு  மற்றும் மன அழுத்த அறிகுறிகளுடன் தனிமையை உணர்ந்ததாக  தெரிவித்தனர்.

ஆகையால், சரியான விஷயங்களுக்கு தன்னம்பிக்கையுடன் சமூக ஆதரவையும் கொண்டிருப்பது, ஒட்டுமொத்த மன  ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. ஆனால், மற்றவர்களுக்கு எதிராக தவறான  நடைமுறைகளைச் செய்ய ஒருவர் சமூக  நண்பர்களைப் பயன்படுத்தகூடாது.

தனியாக இருப்பதாக உணர்கிறீர்கள்,  நண்பர்கள் அல்லது குடும்பத்தினர் இல்லை  என்றால், சில சமூக ஆதரவு குழுக்கள் உதவக்கூடும்.  ஒரு விளையாட்டுக் குழுவில்  சேரவோ அல்லது  முக்கியத்துவம்  வாய்ந்த ஒரு காரணத்திற்காக தன்னார்வ  தொண்டு செய்ய விருப்பம்  இருந்தால் செய்தல் நன்று.

6. எல்லைகளை உருவாக்கி, தேவையான நேரங்களின் இல்லை என்று  சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள்

சிலவற்றைத் தவிர எல்லா அழுத்தங்களும் ஒருவரது கட்டுப்பாட்டிற்குக் கீழே இருக்காது.  நேரத்தை, மன அழுத்தத்தில் செலுத்துவதால், சுய பாதுகாப்புக்காக செலவிடும் நேரம் குறைந்து போகலாம்.

ஒரு சில நேரம் ஒரு சில செயல்களுக்கு இல்லை அல்லது முடியாது என்று சொல்வது, மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான  ஒரு சிறந்த வழி.

அவ்வாறு மன ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும். அதாவது கையாளக்கூடியதை விட அதிகமான  வேலையை கையாண்டால்  இது வழக்கமாக இருக்காது,  ஏனென்றால்  சில கடமைகள் அல்லது  பொறுப்புகளை  செய்யாமல் ஏமாற்றுவது  அதிகமாகச் சுமைப்படுத்தும்.

எந்த வேலைகளை எடுத்துக்கொள்கிறீர்கள் என்பதைத் தேர்ந்தெடுத்து, தேவையில்லாத சுமையை  அதிகரிக்கும் மீதமுள்ள விஷயங்களுக்கு "இல்லை" என்று சொல்லுங்கள். இந்த "இல்லை",  தேவையற்ற மன அழுத்தத்தை குறைக்கும்.

மன அழுத்த நிலைகளுக்கு பங்களிக்கும் நபர்களுடன் எல்லைகளை உருவாக்குங்கள், இது உங்கள் நல்வாழ்வைப்   பாதுகாப்பதற்கான ஆரோக்கியமான வழியாகும்.

உங்கள் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான உதவிக்குறிப்புகள்

வாழ்வில் மன அழுத்தத்தைக் குறைக்கும், கருத்தில் கொள்ளவேண்டிய ஒரு சில வழிகள் உள்ளன. அவ்வழிகள் இதோ கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

  • தள்ளிப்போடுவதைத் தவிர்த்து, வணிகம் மற்றும் குடும்பத்தை அடிப்படையாகக் கொண்ட முக்கியமான வேலைகளுக்கு முன்னுரிமை கொடுங்கள். வணிகமும் குடும்பமும் சிலரின் மனதை எப்போதும் ஆக்கிரமித்திருப்பதால் இந்த வழி உபயோகப்படும்.
  • உதரவிதான சுவாசம், மாற்று நாசி சுவாசம் மற்றும் பெட்டி சுவாசம் போன்ற ஆழமான சுவாசப் பயிற்சிகள் செய்யுங்கள். சுவாசம் மன அழுத்தத்தைக் குறைப்பதால், விழிப்புணர்வை சுவாசத்தில் கவனம் செலுத்தி, அதை ஆழமாக்குங்கள்.
  • மன அழுத்தத்தைக் குறைக்க சுகாதாரமானப் பொருட்களைக் உபயோகியுங்கள், அவை எந்த பக்க விளைவுகளும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ரோடியோலா, அஸ்வகந்தா, பி வைட்டமின்கள் மற்றும் எல்-தியானைன் போன்ற சில பொருட்கள் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன. ஆனால், டயட்டரி சப்ளிமெண்ட்ஸ் அனைவருக்கும் ஏற்றதாக இருக்காது, ஆகையால் அந்தநேரத்தில், மன அழுத்தத்தைப் போக்க சப்ளிமெண்ட்ஸ் பயன்படுத்த விரும்பினால், மருத்துவரிடம் ஆலோசனையைப் பெறவும்.
  • நல்ல மற்றும் நம்பகமான நண்பர்களுடன் பயனுள்ளதாக நேரத்தை செலவிடுங்கள். இவ்வாறு செய்தல் ஒரு சிலருக்கு மன அழுத்தம் மற்றும் தனிமை உணர்வை போக்ககூடும். நண்பர்களை நீங்கள் தொடர்பு கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
  • நினைவில் கொள்ளுங்கள் ஒருவர் அவரது உங்கள் நிகழ்காலத்தில் இருக்க வேண்டும், ஏனெனில் அதுதான் தற்போதைய தருணத்தில் நங்கூரமிடும். எதிர்மறையான, கசப்பான கடந்தகால நடவடிக்கைகள் மனதை பாதித்திருக்கலாம், எனவே நிகழ்காலத்தை சிந்தியுங்கள். தியானம் மற்றும் நினைவாற்றல் அடிப்படையிலான அறிவாற்றல் சிகிச்சை (MBCT) போன்ற நினைவாற்றல் முறைகள், மன அழுத்தத்தைக் குறைக்கும் கணிசமான வழிகளாகும்.

நேரத்தை திட்டமிட்டு இயற்கையோடு செலவிடுங்கள்

மன அழுத்தத்தைக் குறைக்க இயற்கையோடு அதிக நேரம் வெளியில் செலவிடுங்கள். பலர் ஏற்றுக்கொள்ளத் தயங்கினாலும், இயற்கை காட்சிகள் நிறைந்த பூங்காக்கள்  மற்றும் காடுகள் போன்ற பசுமையான இடங்களில் நேரத்தை செலவிடுவது, மன அழுத்தத்தை சமாளிக்க உதவும்.

இயற்கையோடு ஒன்றியிருப்பது ஆரோக்கியமான வாழ்க்கைக்கான  வழி என்று  பல ஆய்வுகள் காட்டுகின்றன.

ஒரு ஆய்வின்படி, குறைந்தபட்சம் 10 நிமிடங்களாவது இயற்கையான  அமைப்பில் (செயற்கை பிளாஸ்டிக் செடிகள் அல்ல) செலவழிக்கப்பட்டது, கல்லூரி மாணவர்கள்  குழுவில் மகிழ்ச்சி உட்பட பல நல்ல மனநல நலன்களை  மேம்படுத்த உதவியது.

மிக ஒழுக்கத்துடன் நடைபயணம் செய்வது மற்றும் நடைபயணம் முகாம்களில் பங்கேற்பது, சிறந்த விருப்பங்கள். ஆனால் சிலருக்கு ஹைகிங் மற்றும் கேம்பிங் போன்ற  செயல்பாடுகளுக்கு அணுகல் இல்லை.

நகர்ப்புறம் அல்லது நகரத்தில் வசிக்கிறீர்கள் என்றால், உள்ளூர் பூங்காக்கள், ஹெர்பரியம்கள் மற்றும் தாவரவியல் பூங்காக்கள்  போன்ற பசுமையான  இடங்களைப் பார்வையிட செல்லலாம்.

ஒருவரது தோட்டத்திற்கும் இடத்திற்கும் பொருந்தக்கூடிய சிறிய புதிய தாவரங்களை வாங்க முடியுமா என்பதைச் சரிபார்க்க, நகரத்தில் உள்ள ஒரு சிறிய தோட்டத்தைப் பார்வையிட முயற்சிக்கலாம்.  

யோகா உங்கள் மன அழுத்தத்தை எவ்வாறு குறைக்கிறது?

மன அழுத்தத்தை போக்க யோகா வகுப்புகளில் பங்கேற்கலாம். சமீபகாலமாக அனைத்து வயதினரிடையேயும்  மன அழுத்தத்தைக் குறைக்க  யோகா ஒரு பிரபலமான முறையாக மாறியுள்ளது. யோகாவின் பாணி வேறுபட்டாலும், உடல் மற்றும் மூச்சு விழிப்புணர்வை அதிகரிப்பதன் மூலம் உங்கள் உடலையும்  மனதையும் இணைக்கும் பொதுவான  குறிக்கோளைக் கொண்டது யோகா.

மனச்சோர்வடைந்த சிலருக்கு யோகா நேர்மறையான விளைவைக் காட்டியது, அவர்களின் மன அழுத்தத்தை குறைத்தது. யோகா மன அழுத்தத்தையும் பதட்டத்தையும்  குறைக்கிறது என்பதை பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன. மேலும், இது உளவியல் நல்வாழ்வை  ஊக்குவிக்கிறது. பல மக்களில், யோகா பயிற்சி  கார்டிசோலின் அளவு, இரத்த அழுத்தம் மற்றும்  இதய துடிப்பு  ஆகியவற்றைக் குறைப்பதைக்  காட்டுகிறது, அதே நேரத்தில் காமா  அமினோபியூட்ரிக் அமிலத்தின்  அளவை அதிகரிக்கிறது.

காமா அமினோபியூட்ரிக் அமிலம் ஒரு நரம்பியக்கடத்தி ஆகும், இது மனநிலை கோளாறுகள்  உள்ளவர்களிடம் சிறிய அளவில் காணப்படுகிறது.

மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும் பொதுவான காரணிகள்

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் சில முக்கியமான காரணிகள், அவர்களில் மன அழுத்தத்தின் பாதிப்பை பாதிக்கலாம். இந்த காரணிகள் அடங்கும்:

  • மரபியல்
  • சமூக ஆதரவு நிலை
  • சூழ்நிலைகளைக் கையாளும் விதம்
  • பாலினம், இனம், LBGTQIA+ மற்றும் சமூகப் பொருளாதார நிலை ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு
  • சமாளிக்கும் பாணி
  • குழந்தைப் பருவ அதிர்ச்சி
  • தொழில் அல்லது பிற காரணிகள்

தினசரி வாழ்க்கையின் நாள்பட்ட மன அழுத்தத்தை முடிந்தவரை குறைப்பது ஒருவரது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை  மேம்படுத்த  உதவும். நாள்பட்ட மன அழுத்தம் இதய நோய், கவலைக் கோளாறுகள் மற்றும் மனச்சோர்வு  போன்ற  நிலைமைகளின் அபாயத்தை  அதிகரிக்கலாம்.

பதட்டத்தைக் குறைக்க பயனுள்ள வாசனை திரவியங்கள் யாவை?

மனநிலையை மேம்படுத்த விசித்திரமான வாசனைகளைப் பயன்படுத்துவது அரோமாதெரபி என்று அழைக்கப்படுகிறது. அரோமாதெரபி வழி, கவலையை குறைத்து தூக்கத்தை அதிகரிக்கிறது. அரோமாதெரபியில் பயன்படுத்தப்படும் சில வாசனைகள் இங்கே உள்ளன.

  • லாவெண்டர்
  • ரோஜா
  • சந்தன மரம்
  • ஆரஞ்சு அல்லது ஆரஞ்சு மலர்
  • பர்கமோட்
  • தூபம்
  • ஜெரனியம்
  • ஃபைன்ரோலி

முடிவுரை

மன அமைதி அத்தனை எளிதாக கிடைப்பதில்லை. மிக சிறந்த புத்தகங்கள், மன அமைதியைப் பற்றி எழுதி இருந்தாலும், அவை அனைவருக்கும் போய் சேருவதில்லை. மன அழுத்தம் புதிய காரணங்களால் வருவதால், அந்த நிலையைச் சமாளிக்க  ஒரு சிலர் தடுமாறி வருகின்றனர்.

இருப்பினும், ஒரு சில பொதுவான வழிமுறைகள் அனைத்து வகையான  மனஅழுத்தத்தையும் போக்க உதவுகிறது. அதை எப்படி கையாண்டு மனதிற்கு எப்படி  நிம்மதி கொடுப்பது  என்பது நம் கையில் தான் உள்ளது.

பிடித்த நல்ல விஷயங்களைச் செய்யும் போது, உதாரணத்திற்கு புத்தகம் வாசிப்பது, படம் வரைவது, நல்ல பாடல்களாக கேட்பது, கிரையான்கள் வைத்து வண்ணம் தீட்டுவது போன்றவைக் கூட  மனச் சுமையைக் குறைக்கும். ஆகையால், ஒருவரால் இயன்ற அளவிற்கு, மேலே குறிப்பிடபட்ட  வழிமுறைகளைப் பின்பற்றி  மன அழுத்தத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

அதிகமாககேட்கப்படும் வினாக்கள்

1. நான் எப்படி என் தலையில் உள்ள நிம்மதியின்மையை குறைப்பது?

சிறந்த முறையில் மனதை தெளிவுபடுத்த வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன, இவைகளை நீங்கள் முயற்சிக்கவும்:

ஒரு நடைக்கு செல்லுங்கள்
நல்ல இசையைக் கேளுங்கள்
உங்களுக்குப் பிடித்த புத்தகத்தின் முடிந்தவரைப் படியுங்கள்.
கைகளால் மாதிரி வரைதல்
வழிகாட்டப்பட்ட தியானம் செய்யுங்கள்
சுவாசம் பயிற்சி மேற்கொள்ளவும்
நன்கு தூங்குங்கள்

2. வாழ்க்கையில் அமைதி என்றால் என்ன?

நிம்மதியாக வாழ்வது என்பது ஒருவரது மற்றும் அவரைச் சுற்றியுள்ள அனைத்து  உயிரினங்களுடனும் இணக்கமாக வாழ்வதாகும். அமைதியுடன் வாழ்வது, நமதிடையே கலாச்சார, மத மற்றும்  அரசியல்  வேறுபாடுகள் இருந்தபோதிலும் ஒருவரையொருவர் மதிக்கும்  மற்றும் நேசிக்கும் ஒரு வாழ்க்கை முறை.

3. அதிகமாகச் சிந்திப்பதை எப்படி நிறுத்துவது?

அதிகமாகச் சிந்திப்பது ஒரு உளவியல் சிகிச்சையில் சந்திக்கப்படும் ஒரு கவலையான போக்கு. கடந்த காலத்தை மறுபரிசீலனை செய்வது மற்றும் எதிர்காலத்தைப்  பற்றி யோசிப்பது போன்ற  விஷயங்களில் நாம் அதிகமாக சிந்திக்கிறோம். அதிகமாக சிந்திப்பதை நிறுத்த நான் தினமும் பயன்படுத்தும் மூன்று உத்திகள் இங்கே:

1) நேர்மறை மறுவடிவமைப்பு
நேர்மறை மறுவடிவமைப்பு, மறுபுறம் உள்ள எதிர்மறையான அம்சங்களை ஒப்புக்கொள்ள  ஒருவரை அனுமதிக்கிறது, பின்னர் நிலைமையைப் பற்றி சிந்திக்க வேறு வழி இருக்கிறதா  என்பதை மதிப்பீடு செய்யும்படி கேட்கிறது.
இந்த நேர்மறை மறுவடிவமைப்பு ஒருவருக்கு சூழ்நிலையை மாற்றும் சக்தியை வழங்குகிறது. என்ன முக்கியமான பணிகளை செய்ய வேண்டும் என்பதை ஆராய்ந்து  தொடங்கலாம், பின்னர்  கவலைப்படாதவரை தாமதப்படுத்தலாம் அல்லது மீதமுள்ளவற்றை செய்யலாம். ஒரு படி பின்வாங்குவதும், ஒரு சில விஷயங்களைச் சமாளிப்பதும் முக்கியம்.

2) ஒருவர் அவரது எண்ணங்களை ஒரு முறை எழுதி, பிறகு 24 மணிநேரமும்  திசை திருப்புங்கள்
நாம் ஆபத்தில் உள்ளோம் என்று நமது மூளை நினைக்கும் போது, நம்மைப் பாதுகாக்க ஒரு  எச்சரிக்கையோடு செயல்படுவது முக்கியம்.
மூளை "அலாரம் பயன்முறையில்" இருக்கும்போது  பதிலளித்தால், பின்னர் ஒருவரது  கவனக்குறையான  விஷயங்களைச்  செய்யலாம். அந்த சமையத்தில் பொறுமையாகச் செயல்பட வேண்டும்.   முன்னேறும் படி உள்ள நல்ல விஷயத்தை,  புத்தகத்தில் எழுதி வைத்து கொள்ளுங்கள்.

3)'குறிப்பிட்ட நன்றியுணர்வு' பயிற்சி
உளவியலில், நாம் நன்றியை வெளிப்படுத்துவது நம் மகிழ்ச்சியை  ரெட்டிப்பு செய்து  அதிகரிக்கும்  என்பதை நாம் அறிவோம். ஆகையால், தேவையான நேரத்தில் நன்றி சொல்ல பழகுங்கள்.

DISCLAIMER: THIS BLOG/WEBSITE DOES NOT PROVIDE MEDICAL ADVICE

The Information including but not limited to text, graphics, images and other material contained on this blog are intended for education and awareness only. No material on this blog is intended to be a substitute for professional medical help including diagnosis or treatment. It is always advisable to consult medical professional before relying on the content. Neither the Author nor Star Health and Allied Insurance Co. Ltd accepts any responsibility for any potential risk to any visitor/reader.

;