"பழங்களின் தேவதை" என்று அழைக்கப்படும் பப்பாளி பழம் - பெரும்பாலும் மத்திய மற்றும் தென் அமெரிக்காவினை பூர்வீகமாக கொண்ட ஒரு பழமாகும். கர்ப்ப காலத்தில் பப்பாளி சாப்பிடுவதில் பிரச்சனையில்லை, ஆனால் பப்பாளி நன்கு பழுக்க வைக்கப்பட வேண்டும், இல்லையெனில் அது கருச்சிதைவினை ஏற்படுத்தும். பப்பாளியில் பல ஆரோக்கிய நன்மைகள் இருப்பதால், கர்ப்ப காலத்தில் உட்கொள்ளப் பரிந்துரைக்கப்படுகிறது.
மாதவிடாய் தாமதமாகும்போது அதை தூண்டுவதற்கு, ஒரு பெண் எப்போதும் ஒரு கப் பப்பாளியை சாப்பிடலாம். ஆனால் கர்ப்பமான பிறகு, இதுபோன்று செய்தல் கூடாது; ஏனெனில், கற்பகாலம் என்பது ஒரு மகிழ்ச்சியான தருணமாகும், ஒவ்வொரு பெண்ணும் தங்கள் குழந்தைகளை சந்திக்க ஆவலுடன் காத்திருப்பார்கள். ஆகையால் அந்த மகிழ்ச்சியான தருணத்திற்கு தயாராகும் போது, குழந்தையை சுமக்கும் தாயிற்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வது ஒரு பெற்றோராகப் போகும் தம்பதியின் மிகப்பெரிய பொறுப்பாகும், ஏனெனில் தாயின் உடல்நலம் வளர்ந்து வரும் சிசுவின் மீது நேரடியான தாக்கத்தினை கொண்டிருக்கும்.
கர்ப்ப காலத்தில் அந்த ஒன்பது மாதங்களும் "என்ன சாப்பிட வேண்டும்" மற்றும் "என்ன சாப்பிடக்கூடாது" என்பதே மிகவும் முக்கியமான கேள்வியாக இருக்கும். நமது தாத்தா, பாட்டி மற்றும் பெற்றோர்கள் கர்ப்ப காலத்தில் சில உணவுகளை சாப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்; குறிப்பாக, பப்பாளி கருச்சிதைவை ஏற்படுத்தும் உணவுகளில் ஒன்று என்று பலரும் நம்புகிறார்கள்.
கர்ப்ப காலத்தில் பப்பாளியை சாப்பிடலாமா?
- நன்கு பழுத்த பப்பாளி சாப்பிடுவது நல்லது மற்றும் கர்ப்பத்திற்கும் அது நல்லது. ஆனால் பழுக்காத மற்றும் அரைகுறையாக பழுத்த பப்பாளி தீங்கானது.
- பழுக்காத பப்பாளியில் பாப்பைன் மற்றும் லேடெக்ஸ் என்கிற உட்பொருட்கள் உள்ளன. பப்பாளியில் உள்ள லேடெக்ஸ் தான் பாப்பைன், புரோஸ்டாகிலான்டின்ஸ் எனப்படும் இந்த காரணியை சுரக்க செய்து பிரசவத்தை ஊக்குவிக்கும் ஒன்றாக உள்ளது, எனவே இது பெரும்பாலும் கருச்சிதைவுக்கு வழிவகுக்கும்.
- பழுக்காத பப்பாளியில் உள்ள பப்பைன் வளரும் கருவுக்கு தீங்கானது. இது கருவைச் சுற்றி இருக்கும் சவ்வை பலவீனப்படுத்துகிறது.
நன்கு பழுத்த பப்பாளியை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
- நன்கு பழுத்த பப்பாளியானது வைட்டமின் ஏ, பி, சி, பொட்டாசியம் மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற ஊட்டச்சத்துக்களின் நல்ல மூலாதாரமாகும், அவை கர்ப்ப காலத்தில் குழந்தையின் நரம்பியல் வளர்ச்சிக்கு முக்கியமானவையாகும்.
- பப்பாளி பழத்தில் உள்ள வைட்டமின்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதால் பல்வேறு நோய்த்தொற்றுகளை தடுக்கிறது.
- பப்பாளி பழம் செரிமானத்தை எளிதாக்குகிறது; கர்ப்ப காலத்தில் ஏற்படும் வழக்கமான மலச்சிக்கல் பிரச்சனைக்கு இயற்கையான தீர்வளிக்க உதவுகிறது.
- பப்பாளி பழம் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் வாந்தி குமட்டல் ஆகியவற்றிற்கு நிவாரணம் தர உதவுகிறது.
- பப்பாளி பழம் கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய வைரஸ் தொற்றுகளுக்கு சிகிச்சையளிப்பதற்கும் பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உதவுகிறது.
- நன்கு பழுத்த பப்பாளியை சரியான அளவில் சாப்பிடுவதால் பால் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது.
முடிவுரை
சில கர்ப்பிணிகள் தங்கள் கர்ப்ப காலம் முழுவதும் நன்கு பழுத்த பப்பாளி பழத்தை சாப்பிடுவார்கள். எனவே, நீங்கள் பப்பாளி பழத்தினை உண்ண ஆசைப்பட்டால், பாதுகாப்பாக குறைந்த அளவில், நன்கு பழுத்த பப்பாளியை மகிழ்ச்சியுடன் உண்ணலாம். ஆனால் நீங்கள் கர்ப்பமாக இருந்தாலோ அல்லது கர்ப்பமாக முயற்சித்தாலோ - காயான அல்லது அரைகுறையாக பழுத்த பப்பாளியை சாப்பிடக்கூடாது என்பதை நினைவில் கொள்ளவும்.
முதல் முறை தாய்மை அடைவது என்பது ஒரு தெய்வீகமான அனுபவமாகும். உங்கள் விலைமதிப்பற்ற மகிழ்ச்சியின் பொக்கிஷமாக வரும் குழந்தை, உங்கள் வாழ்வில் நீண்ட கால நினைவுகளை வழங்கும் என்பது உறுதி. எனவே, உங்கள் குழந்தைக்கு அவசியமான, சரியானதொரு பரிசை வழங்குங்கள். மேலும், உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியம் மற்றும் உங்களது குடும்பத்தின் புதிய உறுப்பினரின் ஆரோக்கியத்திற்கான உத்திரவாதம் இருந்தால் மட்டுமே உங்களது மகிழ்ச்சி முழுமையான ஒன்றாக இருக்கும். எனவே மகப்பேறு மற்றும் பிரசவத்திற்கான செலவுகளுக்காக உங்களது சேமிப்பை இழப்பதற்கு பதிலாக, புதிதாகப் பிறந்த குழந்தையின் வளர்ச்சி, மற்றும் மேம்பாட்டிற்காக அந்தத் தொகையை சேமித்து வையுங்கள்.
உங்களது மகப்பேறு மற்றும் மருத்துவத் தேவைகள், மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைக்கு ஆகும் செலவுகளை முழுமையாக ஈடுகட்டும் ஒரு மருத்துவக் காப்பீட்டுத் திட்டமானது – ஒரு தாயாகவும், பெற்றோராகவும் உங்களுக்கு அற்புதமானதொரு அனுபவத்தை வழங்கும்.
ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ், உங்களது மகப்பேறு மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைக்காகும் செலவுகளுக்கு விரிவான காப்பீடை உள்ளடக்கி, குறிப்பாக பெண்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கென தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை வழங்குகிறது - ஸ்டார் வுமன் கேர் இன்ஷூரன்ஸ் பாலிசி.
பிரசவத்திற்கு முந்தைய மருத்துவப் பராமரிப்பு அல்லது கர்ப்பகால பராமரிப்பிற்கு காப்பீட்டு பாதுகாப்பினை வழங்குவதே இதன் சிறப்பம்சமாகும். கர்ப்பம் உறுதி செய்யப்பட்ட பிறகு, இந்த பாலிசியில் குறிப்பிடப்பட்டுள்ள காப்பீட்டுத் தொகை வரம்புகள் வரை, வெளி நோயாளராக எடுத்துக்கொள்ளும் குழந்தை பிறப்புக்கு முந்தைய பராமரிப்புக்கான செலவுகளும் காப்பீட்டின் கீழ் வரும். இதனுடன், புதிதாகப் பிறந்த குழந்தைக்கான மருத்துவ சிகிச்சைகள் (பிறவி குறைபாடுகள் உட்பட) மற்றும் தடுப்பூசி கட்டணங்களும் பாலிசியில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளுக்கு உட்பட்டு வழங்கப்படும் மேலும் விவரங்களுக்கு, நீங்கள் பாலிசி விதிமுறைகளைப் படிக்கவும்.