ஹேங் ஓவர் - ஒரு அறிமுகம்
காலையில் எழுந்திருக்கும்போது ஒருவருக்கு தலைவலி, குமட்டல் மற்றும் அதிகப்படியான தாகம் இருந்தால் அது ஹேங் ஓவர் எனப்படுகிறது.
அளவுக்கு அதிகமாக மது (ஆல்கஹால்) குடித்த ஒருவருக்கு மறுநாள் காலை ஏற்படும் ஒரு சங்கடமான உணர்வே ஹேங் ஓவர் எனப்படுகிறது.
ஹேங் ஓவரால் உண்டாகும் தலைவலி, குமட்டல் மற்றும் சோர்விலிருந்து நிவாரணம் பெற மக்கள் வீட்டு வைத்தியங்களைப் பயன்படுத்துகிறார்கள்.
பெரும்பாலான ஹேங் ஓவர் பாதிப்புகள் 24 மணி நேரத்தில் தானாகவே சரியாகிவிடும். ஹேங் ஓவருக்கு எந்தவொரு சிகிச்சையும் இல்லையென்ற போதிலும், அதன் அறிகுறிகளை சமாளிப்பதன் மூலம் ஒருவர் சௌகரியமாக உணரலாம்.
ஹேங் ஓவர் ஏற்படுவதற்கான காரணங்கள்
அறிகுறிகள் தீவிரமாக இருப்பது பல்வேறு சூழ்நிலைகளைப் பொறுத்து மாறுபடலாம்; இருப்பினும், அதிகப்படியாக மது குடிப்பதே (குறைவான நேரத்தில் அதிக ஆல்கஹால் அருந்துவது) ஹேங் ஓவருக்கு முக்கிய காரணமாக உள்ளது.
- நீரிழப்பு - மது குடிப்பதால் ஒருவர் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிட்டு, அவரது உடல் திரவங்களை இழக்கிறது. பின்னர் நீரிழப்பின் விளைவாக தலைவலி, தாகம் மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகள் உண்டாகின்றன.
- இன்ஃப்ளமேஷன் - அதிகப்படியான குடிப்பழக்கத்தினால் கடுமையான ஹேங் ஓவர் ஏற்படும் போது, உடலில் இன்ஃப்ளமேஷன் ஏற்பட்டு, அசௌகரியமான உணர்வினை உண்டாக்குகிறது.
- உறங்குவதில் இடையூறுகள் - அதிகப்படியான மது குடிப்பதால் தூக்கத்தின் நேரம் குறைவதுடன், சீரற்றதாகவும் இருக்கிறது. சோர்வு மற்றும் அசதியுடன் எழும் நபர்கள், அவர்களது உற்பத்தித்திறன் பெரும்பாலும் குறைவதை காண்கிறார்கள்.
- செரிமான மண்டலத்தில் ஏற்படும் எரிச்சல் - அமில உற்பத்தியைத் தூண்டும் மதுபானம், வயிற்றின் உட்புற படலத்தில் எரிச்சலூட்டுகிறது. அதிகப்படியான அமிலம் வயிற்றில் சுரப்பதால் குமட்டல் மற்றும் அசௌகரியமான உணர்வு ஏற்படுகிறது.
- விலகியிருக்கும் அவ்வப்போது பிரச்சினை – அதிகமாக மது அருந்துபவர்களின் மூளை ஆல்கஹாலின் அமைதியான மற்றும் மகிழ்ச்சியான விளைவுகளுக்கு ஏற்ப விரைவாக தன்னை மாற்றிக் கொள்கிறது. மதுவின் விளைவுகள் குறைந்தவுடன் அவர்கள் பொதுவாக அதிக பதற்றம் மற்றும் அமைதியின்மையை உணர்வார்கள்.
ஹேங் ஓவரின் அறிகுறிகள்
ஹேங் ஓவரின் அறிகுறிகள் பின்வருமாறு:
- தாகம் மற்றும் வியர்வை
- சோர்வு மற்றும் பலவீனம்
- உறங்கும் போது தொந்தரவுகள்
- மனச்சோர்வு, கவலை அல்லது அமைதியின்மை
- கண்கள் சிவந்திருத்தல் மற்றும் தலைவலி
- அதிக ஒளி மற்றும் ஒலி உணர்திறனால் அசௌகரியம்
- வெர்டிகோ, அல்லது அசையாமல் இருக்கும்போது நகரும் உணர்வு
- இதயத் துடிப்பு அதிகரித்தல் மற்றும் உயர் இரத்த அழுத்தம்
- உடல் பலவீனம் மற்றும் தசை வலி
- வயிற்று வலி, குமட்டல் மற்றும் வாந்தி
- நடுக்கம் (உதறல்).
மேலும், ஒருவர் குடிபோதையில் இருக்கும்போது, அவரது ஞாபகத்திறன், கவனம் செலுத்தும் திறன் மற்றும் ஒருநிலைப்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
ஹேங் ஓவரைத் தடுப்பது எப்படி?
மது குடிப்பதற்கு முன்
கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள்
நம் உடல் மதுவை உறிஞ்சுவதை, அனைத்து விதமான உணவுகளும், குறிப்பாக கொழுப்பு நிறைந்த உணவுகள் மெதுவாக நிகழச் செய்கின்றன.
அதுமட்டுமில்லாமல் மது உறிஞ்சப்படுவதைத் தாமதப்படுத்துவது, ஹேங் ஓவரைத் தடுப்பதற்கான ஒரு சிறந்த வழியாகும். மது அருந்துவதற்கு முன்பு சாப்பிட அவகாடோ ஒரு எளிமையான உணவாகும்; மேலும், அதில் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன.
நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள்.
பிரஸ்ஸல்ஸ் ஸ்ப்ரவுட்ஸ், பயறு வகைகள் மற்றும் பாப்கார்ன் போன்ற அதிக நார்ச்சத்துள்ள உணவுகளை உண்பதால் மதுபான மூலக்கூறுகளை அவை பிரித்து உறிஞ்சிகின்றன; இதனால் இரத்த ஓட்டத்தில் மது மெதுவாக சேர்கிறது.
வைட்டமின் C உணவுகளை நிறைய எடுத்துக்கொள்ளவும்
சளிக்கு சிகிச்சையளிக்கும் திறன் கொண்ட வைட்டமின் C, ஹேங் ஓவர் அறிகுறிகளைத் தடுக்கவும் உதவுகிறது.
மது அருந்தும் போது கவனிக்கவேண்டியவை
ஒரே மதுபானத்தை அருந்துங்கள்
ஒரே மதுபானத்தை எடுத்துக்கொள்வதால் ஒருவர் தான் உட்கொள்ளும் மதுவின் அளவை தாமாகவே கண்காணிக்க முடியும், அதே நேரத்தில் வயிற்று பிரச்சினைகளையும் தடுக்கலாம்.
அதிகம் தண்ணீர் அருந்துங்கள்
தேவையான அளவு தண்ணீர் குடிப்பதால் உடலின் நீரேற்றத்தை பராமரிக்கவும், ஹேங் ஓவரைத் தடுக்கவும் முடியும்.
கார்பனேற்றப்பட்ட பானங்களைத் தவிர்க்கவும்
ஷாம்பெயின் போன்ற கார்பனேற்றப்பட்ட பானம், அல்லது சோடா அல்லது டானிக் தண்ணீருடன் கலந்த ஸ்டில் (கார்பனேற்றப்படாத) மதுபானத்தில் குமிழ்கள் இருப்பதால், உடல் மதுவை உறிஞ்சும் விகிதம் விரைவடைவதாக கண்டறியப்படுகிறது.
உடலால் மது அதிகளவில் உறிஞ்சப்பட்டால், கார்பனேற்றத்தின் காரணமாக வயிற்றின் மேற்பரப்பின் பரப்பளவு அதிகரிக்கிறது (மேலும் அடுத்த நாள் காலையில் அசௌகரியமான உணர்வு ஏற்படுகிறது).
ஹேங் ஓவரை சமாளிக்க உதவும் வழிமுறைகள்
தண்ணீர் குடிக்கவும்
மது உட்கொள்ளும் நபர்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க தூண்டப்படுவார்கள், இதனால் அவர்களது உடல் திரவங்களை இழக்கிறது. ஒருவருக்கு அதிக வியர்வை வெளியேற்றம், வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி எடுக்க நேர்ந்தால் அதுவும் நீரிழப்புக்கு வழிவகுக்கும். காலை எழுந்தவுடன், உடல் இழந்த திரவங்களை மீண்டும் நிரப்ப நிறைய தண்ணீர் குடிக்கவும்.
ஆப்பிள் மற்றும் வாழைப்பழங்கள்
ஆப்பிள் மற்றும் வாழைப்பழங்கள் ஹேங் ஓவரிலிருந்து மீள உதவும் இரண்டு நல்ல பழங்களாகும். வெறும் வயிற்றில் ஆப்பிள் சாப்பிடுவதால் ஹேங் ஓவரால் ஏற்படும் தலைவலிக்கு நிவாரணம் கிடைக்கும். தேன் கலந்த வாழைப்பழ ஷேக் குடிப்பதும் நல்லது. ஏனெனில், உடல் இழந்த இரத்த சர்க்கரை அளவை நிரப்பும் திறன் தேனுக்கு உள்ளது; அதுமட்டுமில்லாமல் மது குடித்ததால் உடலால் இழக்கப்பட்ட பொட்டாசியம் மற்றும் பிற முக்கிய கூறுகளை வாழைப்பழம் நிரப்புகிறது.
இஞ்சி
ஹேங் ஓவரின் காரணமாக ஏற்படும் குமட்டல் மற்றும் நகர்வது போன்ற உணர்வினை போக்க இஞ்சி உதவுகிறது. எனவே இஞ்சியானது ஹேங் ஓவருக்கு வீட்டிலேயே பெறக்கூடிய ஒரு சிறந்த நிவாரணியாகக் கருதப்படுகிறது. மதுவை ஜீரணிக்க உதவுவதன் மூலமாகவும், வயிற்றை இதமாக வைப்பதன் மூலமாகவும், இஞ்சி விரைவான நிவாரணத்தை அளிக்கிறது.
சிறிய இஞ்சி துண்டுகள் சிலவற்றை மென்று சாப்பிடலாம், அல்லது இஞ்சி கலந்த தேநீர் ஒரு கப் குடிப்பதன் மூலமாகவும் விரைவான நிவாரணம் பெறலாம். 4 கப் தண்ணீரில் 10 முதல் 12 புதிய இஞ்சி துண்டுகளை போட்டு, பத்து நிமிடங்கள் வேகவைப்பதன் மூலம் ஒரு கஷாயம் தயாரித்து; அதனுடன் ஒரு ஆரஞ்சு, அரை எலுமிச்சை மற்றும் அரை கப் தேன் சேர்க்கவும். ஆல்கஹால் அருந்திய பிறகு பொதுவாக இரத்த சர்க்கரை குறையும். இருப்பினும், இந்த இஞ்சி பானத்தை பருகுவதால் சர்க்கரை அளவை சீரான நிலைக்கு கொண்டுவர முடியும்.
டீ அல்லது காபி குடிக்கவும்
கஃபைன் உள்ள பானங்கள் ஹேங் ஓவருக்கு சிகிச்சையளிப்பதில் பயனுள்ளவையாக அமைகின்றன. காபி, கிரீன் டீ மற்றும் பிளாக் டீ ஆகியவற்றில் உள்ள ஆன்ட்டிஆக்ஸிடன்ட்கள் ஹேங் ஓவருக்குப் பிறகு உண்டாகும் சோர்வைக் குறைக்க உதவுகின்றன.
இந்த கஃபைன் உள்ள பானங்களுக்கு டையூரிடிக் தன்மை உள்ளது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்; இவை உடலின் நீரிழப்பு நிலையை மேற்கொண்டு தூண்டிவிடலாம். அதுமட்டுமில்லாமல், மது அருந்துவதுடன் தொடர்புடைய உடல்நலப் பிரச்சினைகளைக் குறைப்பதில் கஃபைனின் பங்களிப்பு சிறிதளவே உள்ளது.
தேன்
எளிதான மற்றும் உடனடியாக கிடைக்கக்கூடிய இயற்கையான மருந்துகளில் ஒன்று தான் தேன். தேனில் உள்ள பிரக்டோஸிற்கு, மதுவின் வளர்சிதை மாற்றத்தினை தடுக்கும் குணமுள்ளது. எனவே மதுபானத்தின் எதிர்மறையான விளைவுகளை எதிர்த்துப் போராடும் ஆற்றல் தேனுக்கு உள்ளது. மேலும், ஆல்கஹாலை ஜீரணிப்பதற்கும் தேன் நமது உடலுக்கு உதவுகிறது.
எலுமிச்சம் பழம்
ஹேங் ஓவரின் அறிகுறிகளைக் குறைக்க எலுமிச்சை ஜூஸ் அல்லது லெமன் டீ குடிப்பது நல்லது என்பதை பலரும் அறிவார்கள். உடனடியாக அசௌகரியத்தைக் குறைக்கும் இது, கேடு விளைவிக்கும் கூறுகளை நீக்கி வயிற்றையும் சுத்தம் செய்கிறது.
உப்பு நிறைவான உணவுகள்
அதிக அளவு மது உட்கொண்ட பிறகு உடல் சோடியத்தை இழக்க நேரிடுகிறது. எனவே உப்பு சேர்த்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் இழந்த சோடியத்தை நிரப்பலாம்.
மிளகுக்கீரை (பெப்பர் மின்ட்)
அதிக நன்மைகளைத் தரும் பெப்பர்மின்ட்டை தேநீருடன் சேர்த்து சாப்பிடலாம் அல்லது மென்றும் சாப்பிடலாம்; இது குடலுக்கு இதமளிக்கும். வயிறு உப்புசத்தை போக்கும் ஒரு கார்மினேட்டிவ் மருந்தான மிளகுக்கீரை, வயிறு மற்றும் குடலில் இருந்து உப்புசத்தை வெளியேற்ற உதவுகிறது.
கார்போஹைட்ரேட்டுகளை அதிகம் சாப்பிடவும்
குடிப்பழக்கத்தினால் இரத்த சர்க்கரை அளவு குறைகிறது; எனவே, மூளை அதன் முதன்மையான எரிபொருளான சர்க்கரை இல்லாமல் செயல்படும்போது - ஹேங் ஓவருடன் தொடர்புடைய சோர்வு மற்றும் தலைவலி ஏற்படலாம்.
அதுமட்டுமில்லாமல், அடிக்கடி குடிக்கும் நபர்கள் சாப்பிட மறந்து விடுகிறார்கள்; இதன் காரணமாக இரத்த சர்க்கரை அளவு மேலும் குறைகிறது. நல்ல உணவினை சாப்பிடுவதன் மூலம் மெதுவாக சர்க்கரை அளவை இயல்பு நிலைக்கு கொண்டுவர முடியும்.
நன்கு ஓய்வெடுக்கவும்
ஹேங் ஓவரை சமாளிக்க, போதுமான தூக்கம் அவசியமாகும். மது அருந்திய அடுத்த நாள் காலை அந்நபர் சாதாரணமாக உணர்ந்தாலும், மதுபானத்தின் விளைவுகளால் அவரது வழக்கமான செயல்திறன் குறைகிறது. சோர்விலிருந்து மீள முடிந்தவரை போதிய நேரம் தூங்க முயற்சிக்கவும்.
எலக்ட்ரோலைட் பானங்களை உட்கொள்ளவும்
மதுவினால் உடலில் நீரிழப்பு மற்றும் எலக்ட்ரோலைட் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுகின்றன; மேலும், இந்த சிக்கல்களை சமாளித்து மீள்வதற்கான சிறந்த வழி எலக்ட்ரோலைட்டுகள் அதிகம் உள்ள நீர் அல்லது பானங்களை உட்கொள்வதேயாகும். பேக் செய்யப்பட்ட எலக்ட்ரோலைட் பானங்கள் மற்றும் இளநீர் போன்ற இயற்கையான பானம் என இரண்டும் நல்ல பலன் தரும். மது அருந்தும்போது, உடலுக்கு ஆற்றலை வழங்கும் இயற்கையான சப்ளிமெண்ட்களை உட்கொள்வதன் மூலம், உடலுக்குத் தேவையான நீரேற்றத்தை தக்கவைத்து ஹேங் ஓவரைத் தடுக்க முடியும்.
முட்டைகள்
முட்டைகளில் சிஸ்டைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளதால், இது உடலிலிருந்து அசிட்டால்டிஹைடினை அகற்ற உதவுகிறது.
மதுபானத்தின் வளர்சிதை மாற்றம் நிகழும் போது, அசிட்டால்டிஹைடு உருவாகிறது. அசிட்டால்டிஹைடை அதிகமாகக் குடித்தால் நமது உடலால் அதனை விரைவாக உடைத்து வெளியேற்ற முடியாது. ஹேங் ஓவருடன் தொடர்புடைய தலைவலி, வியர்வை, குமட்டல் மற்றும் வாந்தி போன்றவை இரத்தத்தில் அதிக அசிட்டால்டிஹைடு இருப்பதைக் குறிக்கும் அறிகுறிகளாகும்.
ஆரோக்கியமான காலை உணவை சாப்பிடவும்
அதிகப்படியான மது அருந்தியதால் உடல் இழந்த ஊட்டச்சத்துக்களை மீண்டும் நிரப்பி, ஹேங் ஓவரிலிருந்து மீள நல்ல காலை உணவு உதவுகிறது. டோஸ்ட் மற்றும் தானியங்கள் எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவுகளாகும், அவை நமக்கு தேவையான ஆற்றலைப் பெறவும் உதவுகின்றன.
ஆன்டாசிட்களை எடுத்துக்கொள்ளலாம்
ஆன்டாசிட்கள் வயிற்று அமிலத்தை நடுநிலைப்படுத்துவதன் மூலம் வயிற்று உபாதைகளுக்கு நிவாரணம் தருகின்றன. நெஞ்செரிச்சல், அஜீரணம் மற்றும் குமட்டலைக் குறைக்கவும் உதவுகின்றன.
தவிர்க்க வேண்டிய நிவாரணிகள்
மது அருந்தியவர்கள் அசிடமினோஃபென் (acetaminophen) உள்ள எந்தவொரு மருந்தையும் தவிர்க்க வேண்டும். அசிடமினோஃபென் மற்றும் ஆல்கஹால் சேர்ந்தால் அது கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும்.
மதுவின் ஹேங் ஓவரை சரிசெய்ய இன்னும் அதிகமாக ஆல்கஹால் உட்கொள்ள வேண்டும் என்ற ஒரு பொதுவான மூடநம்பிக்கை நிலவுகிறது. ஹேங் ஓவரிலிருந்து மீள, மதுவை விட்டு விலகி இருப்பதே சிறந்தது. மதுவானது ஹேங்ஓவரின் அறிகுறிகளுக்கு நிவாரணம் தராது. மாறாக, உடலில் ஆல்கஹால் நச்சுத்தன்மையை அதிகரிக்கவே செய்யும்.
முடிவுரை
அதிகப்படியான மதுபானம் உட்கொண்ட பிறகு ஏற்படும் அறிகுறிகளே மொத்தமாக ஹேங் ஓவர் எனப்படுகிறது. மதுபானம் குடித்த மறுநாளில் தான் ஹேங் ஓவர் அடிக்கடி ஏற்படுகிறது. பலர் தான் முயற்சித்ததாகவும், உண்மையான ஹேங் ஓவர் வைத்தியம் இது தான் என்று கூறினாலும், அந்த சிகிச்சை முறைகள் எல்லாம் எல்லாருக்கும் பலன் தரும் என்று உறுதியாகக் கூறமுடியாது.
நபருக்கு நபர் அறிகுறிகள் மாறுபடும்; அவரவர் அறிகுறிகளுக்கு ஏற்ப சிகிச்சையளிப்பதே பெரும்பாலும் ஹேங் ஓவரிலிருந்து விடுபடுவதற்கு சிறந்த வழியாகும். மிதமான மது அருந்துவது, உடலுக்கு தேவையான நீர்ச்சத்தினை அளிப்பது, மற்றும் வெறும் வயிற்றில் மதுபானம் குடிப்பதைத் தவிர்ப்பது போன்றவற்றின் மூலம் ஹேங் ஓவரின் தீவிரத்தை குறைக்கலாம்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
ஹேங் ஓவரைத் தவிர்க்க மதுபானம் குடித்த பிறகு நான் ஏதேனும் மருந்து உட்கொள்ளலாமா?
ஹேங் ஓவர் எவ்வளவு நேரம் நீடிக்கும்?
ஆல்கஹால் விஷமாதல் (பாயிசனிங்) என்றால் என்ன?
ஹேங் ஓவரால் ஏற்படும் தலைவலியை விரைவாக குணப்படுத்துவது எப்படி?
1. குடிநீர்
2. உணவு சாப்பிடுதல்
3. வலி நிவாரணியைப் பயன்படுத்துதல்
4. போதுமான அளவு உறங்குதல்.