காய்ச்சல் காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை

காய்ச்சல் காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை

Health Insurance Plans Starts at Rs.44/day*

*I hereby authorise Star Health Insurance to contact me. It will override my registry on the NCPR.

Verified By Star Health Doctors  

Verified By Star Health Doctors
Health & Wellness

காய்ச்சல் காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை

முன்னுரை

காய்ச்சல் என்பது உள் கோபத்தின் வெளிப்பாடு. காய்ச்சல் என்பது பாக்டீரியா, வைரஸ் அல்லது ஒட்டுண்ணி நோய்த்தொற்று ஆகியவற்றிற்கு எதிரான கோபத்தின் வெளிப்பாடு அல்லது அது அவற்றை நடுநிலையாக்கச் செயல்படும் உடலின் நோயெதிர்ப்பு என்பதைத்தான் இந்த பழமொழி குறிக்கிறது. மனித உடல் பல நோய்களுக்கு எதிராக குறிப்பிட்ட எதிர்ப்பைக் காட்டுகிறது. அந்த வகையில், காய்ச்சல் என்பது நோயெதிர்ப்பு மண்டலத்தின் பிரதிபலிப்பாகும். காய்ச்சல் காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை போன்றவற்றை பற்றி நாம் பார்ப்போம்.

காய்ச்சல் என்றால் என்ன?

காய்ச்சல் என்பது உடலில் தற்காலிகமாக ஏற்படும் வெப்பநிலையின் அதிகரிப்பைக் குறிக்கிறது, இது பொதுவாக தொற்றுநோயால் ஏற்படுகிறது. காய்ச்சல் என்பது அந்த நோய்த்தொற்றுக்கு எதிராக உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் மொத்த பதிலின் ஒரு பகுதியாகும்.

குழந்தைகளில், குறைந்த காய்ச்சல் கூட கடுமையான தொற்றுநோயைக் குறிக்கலாம். சில நாட்களில் காய்ச்சல் மறைந்துவிடும். பல மருந்துகள் காய்ச்சலைக் குறைக்க உதவுகின்றன. உண்மையைச் சொல்வதானால், காய்ச்சலால் எந்த  அசௌகரியமும் ஏற்படாவிட்டாலோ அல்லது கடுமையானதாக இல்லாமலோ இருந்தால், நீங்கள் அதற்கு சிகிச்சை  அளிக்க வேண்டியதில்லை.

ஒவ்வொரு வயதை சேர்ந்தவருக்கு, காய்ச்சலாகக் கருதப்படும் வெப்பநிலை கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

1) குழந்தைகள் (0-2 ஆண்டுகள்)

  • மலக்குடல், நெற்றி அல்லது காதில் வெப்பநிலை - 100.4 F (F என்பது பாரன்ஹீட் ஆகும்.)
  • கையின் கீழ் வெப்பநிலை - 99 F

2) குழந்தைகள் (2-5 ஆண்டுகள்)

  • மலக்குடல், நெற்றி அல்லது காதில் வெப்பநிலை - 100.4 F
  • கையின் கீழ் வெப்பநிலை - 99 F

3) குழந்தைகள் (5 வயது மற்றும் அதற்கு மேல்)

  • காதில் வெப்பநிலை - 100.4 F (காது வெப்பநிலை)
  • வாய் வெப்பநிலை - 100 F
  • கையின் கீழ் வெப்பநிலை - 99 F

4) பெரியவர்கள்

  • வாய் வெப்பநிலை - 100.4 F

காய்ச்சல் காரணங்கள்

உங்களில் பலருக்குத் தெரியும், சளி என்பது காய்ச்சலுக்கு மிகவும் பொதுவான காரணம். இது தவிர காய்ச்சலை ஏற்படுத்தும் பல காரணங்கள் உள்ளன. காய்ச்சலுக்கான காரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

  • தொண்டை, காது, நுரையீரல், தோல், சிறுநீர்ப்பை அல்லது சிறுநீரகத்தில் தொற்றுகள்
  • காய்ச்சல் அல்லது கோவிட்-19 போன்ற வைரஸ் தொற்றுகள்
  • தடுப்பூசிகள்
  • வெப்ப சோர்வு
  • வெயிலின் தாக்கம்
  • முடக்கு வாதம் போன்ற வீக்கத்தை ஏற்படுத்தும் நிலைகள்
  • மருந்துகளின் பக்கவிளைவுகள்
  • இரத்தக் கட்டிகள்
  • லூபஸ் மற்றும் அழற்சி குடல் நோய் (IBS) போன்ற தன்னுடல் தாக்க நிலைகள்
  • கோகைன் மற்றும் ஆம்பெடமைன்கள் போன்ற சட்டவிரோத மருந்துகளின் பயன்பாடு
  • புற்றுநோய்
  • வயிற்றுப் பூச்சிகள் (இரைப்பை குடல் அழற்சி) போன்ற சில தொற்றுகள்
  • ஹைப்பர் தைராய்டிசம் போன்ற ஹார்மோன் கோளாறுகள்
  • சிறு குழந்தைகளில் பற்கள் முளைப்பு, லேசான அல்லது குறைந்த தர காய்ச்சலை (101 டிகிரிக்கு கீழே) ஏற்படுத்தலாம்.

காய்ச்சல் அறிகுறிகள்

காய்ச்சல் என்பது ஒரு நோய் அல்லது தொற்றுநோய்க்கான அறிகுறியாகும். அந்த நோய்த்தொற்றுக்களில் ஒன்று ஏற்படும்போது, இந்த அறிகுறிகளை நீங்கள் கவனிக்கலாம்:

  • நடுக்கம் அல்லது குளிர்ச்சி
  • உடல் வலி
  • தலைவலி
  • சோம்பல் (பலவீனமான உணர்வு)
  • வியர்த்தல்
  • நீரிழப்பு
  • பசியின்மை
  • சிவப்பு அல்லது சிவந்த முகம்
  • எரிச்சலாக இருப்பது

காய்ச்சலின் போது குழந்தைகளால் உணரப்படும் அறிகுறிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

  • அதிகமான மற்றும் அதிக சத்தம் நிறைந்த அழுகை
  • காதுவலி (அவர்களின் காதுகளை இழுப்பது போல)
  • பசியின்மை
  • கூடுதல் தாகம்
  • குறைந்த சிறுநீர் வெளியீடு

மருத்துவரை எப்போது பார்க்க வேண்டும்?

சில சூழ்நிலைகள், காய்ச்சலுடன் சேர்ந்து வரும் போது, உங்கள் மருத்துவரிடம் இருந்து மருத்துவ உதவி பெற வேண்டும் என்று வலியுறுத்தும்.

1) சிறிய குழந்தைகள்

உங்கள் குழந்தைக்காக உங்கள் மருத்துவரிடம் மருத்துவ உதவியைப் பெறலாம்.

  • உங்கள் குழந்தையின் காய்ச்சல் ஒரு நாளுக்கு மேல் நீடித்தாலும் வேறு எந்த அறிகுறிகளையும் காட்டாமல் இருந்தாலும் மருத்துவரிடம் சிகிச்சைக்காக செல்லலாம்.
  • உங்கள் குழந்தைக்கு மூக்கு ஒழுகுதல், வயிற்றுப்போக்கு அல்லது இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவரிடம் உங்கள் குழந்தையை அழைத்து செல்லலாம்.
  • உங்கள் குழந்தைக்கு 4 மாதங்களுக்கும் குறைவான வயது இருந்து, மற்றும் மலக்குடல் வெப்பநிலை 100.4 °F (38 °C) அல்லது அதற்கு மேலும் இருந்தால், உங்கள் குழந்தையை மருத்துவரிடம் அழைத்துச் செல்லவும் .
  • உங்கள் குழந்தையின் வயது, 4 முதல் 6 மாதங்களுக்கு இடைப்பட்டதாக இருந்து, உங்கள் குழந்தையின் மலக்குடல் வெப்பநிலை 102 F (38.9 C) அல்லது அதற்கும் மேல் இருந்தால், சிகிச்சைக்கு உங்கள் குழந்தையை மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லவும்.
  • உங்கள் குழந்தைக்கு 100.4 F க்கும் குறைவான வெப்பநிலை இருந்து, ஆனால் எரிச்சல் அல்லது சங்கடமான உணர்வு இருந்தால், உங்கள் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும்.
  • உங்கள் குழந்தையின் வயது 7 முதல் 24 மாதங்களுக்கு இடைப்பட்டதாக இருந்து, குழந்தையின் மலக்குடல் வெப்பநிலை 102 F (38.9 C)க்கு மேல் இருந்தால், பிறகு உங்கள் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து செல்லவும்.

2) குழந்தைகள்

உங்கள் குழந்தையின் நலனுக்காக, மருத்துவரிடம் சிகிச்சை பெற, நீங்கள் உங்கள் குழந்தையை மருத்துவமனைக்கு கூட்டிச் செல்லலாம்:

  • திரும்பத் திரும்ப வாந்தி எடுப்பதுடன் கடுமையான தலைவலி  அல்லது தொண்டை வலி இருக்கும் போது, உங்கள் குழந்தையை சிகிச்சைக்காக மருத்துவரிடம் அழைத்து செல்லலாம்.
  • எரிச்சல், வயிற்றுவலி அல்லது சில அசௌகரியங்களுக்கு  வழிவகுக்கும் பிற அறிகுறிகள் தென்படும்போது உங்கள்  குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து செல்லலாம்.
  • மூன்று நாட்களுக்கு மேல் நீடிக்கும் காய்ச்சல் இருந்தால், மருத்துவரால் தான் உங்கள் குழந்தைக்கு சரியான சிகிச்சை அளிக்க முடியும். 
  • உங்கள் குழந்தை காய்ச்சலினால், உங்களிடம் குறைவான கவனம்  செலுத்தினால் அல்லது கண் தொடர்பு வைத்திருந்தால், உங்கள் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து செல்வது அவசியம்.
  • வலிப்புடன் காய்ச்சல் உங்கள் குழந்தைக்கு ஏற்பட்டால், உடனடியாக நீங்களும் உங்கள் குழந்தையும் மருத்துவரிடம் செல்லவும்.
  • ஐந்து நிமிடங்களுக்கு மேல் வலிப்பு இருந்தால் அல்லது உங்கள் குழந்தை அதிலிருந்து மீளவில்லை என்றால் நீங்கள் உங்கள் குழந்தையுடன்மருத்துவமனைக்கு செல்லவும்.
  • சூடான காரில் பயணம் செய்த பிறகு காய்ச்சல் ஏற்பட்டால், நீங்கள் உங்கள் குழந்தையை மருத்துவமனைக்கு கூட்டிச்செல்லலாம்.
  • நோயெதிர்ப்பு அமைப்பு பிரச்சினைகள் அல்லது ஏற்கனவே  இருக்கும் நோய் இருக்கும் பட்சத்தில் காய்ச்சல் வந்தால், மருத்துவமனைக்கு செல்லவும்.

உங்கள் பிள்ளை காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தாலும், உங்களுடன் கண்களைத் தொடர்புகொண்டு கவனத்துடன் செயல்பட்டு, உங்கள் குரல் மற்றும் முகபாவனைகளுக்கு பதிலளித்தால், காய்ச்சலின் தீவிரம் குறைவாக இருக்கக்கூடும். ஆனால், நீங்கள் அதை அப்படியே விட்டுவிடாமல், உங்கள் குழந்தைக்கு சிகிச்சை பெறலாம், ஏனெனில் அது எதிர்காலத்தில் அதிகரிக்கக்கூடும்.

3) பெரியவர்கள்

உங்கள் வெப்பநிலை 103 F (39.4 C) அல்லது அதற்கு மேல் இருந்தால் உங்கள் சுகாதார வழங்குநரை சிகிச்சைக்காக அழைக்கவும். காய்ச்சலுடன் பின்வரும் அறிகுறிகளை நீங்கள் கண்டால், உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறலாம்:

  • தொடர்ந்து தலைவலி
  • தொடர்ச்சியான வாந்தி
  • சுவாசிப்பதில் சிரமம்
  • சொறி
  • பிரகாசமான ஒளிக்கு உணர்திறன்
  • நெஞ்சு வலி
  • வயிற்று வலி
  • உங்கள் தலையை முன்னோக்கி வளைக்கும் நேரத்தில் கூர்மையான கழுத்து வலி
  • விசித்திரமான நடவடிக்கை அல்லது மாறுப்பட்ட பேச்சு
  • சிறுநீர் கழிக்கும் போது வலி
  • வலிப்பு
  • மனக் குழப்பம்
  • முழு உடல் வலி, ஒன்றும் செய்ய முடியாத நிலை
  • 2 நாட்களுக்கு மேல் காய்ச்சல்

காய்ச்சல் சிகிச்சைகள்

காய்ச்சலுக்கு சிகிச்சையளிப்பதற்காக பரிந்துரைக்கப்படும் மருந்துகள் பெரும்பாலும் ஓவர்-தி-கவுன்டர் மருந்துகள் அல்லது ஸ்டெராய்டல் அல்லாத அழற்சி எதிர்ப்பு (NSAID) மருந்துகளாக இருக்கலாம். மருந்துகளைப் பயன்படுத்தும் போது, உங்கள் மருத்துவரிடம் அவற்றின் சரியான அளவைப் பற்றி விவாதிக்கவும். ஓவர்-தி-கவுன்டர் மருந்துகளில் அசெட்டமினோஃபென் (டைலெனால், மற்றவை), இப்யூபுரூஃபன் (அட்வில், மோட்ரின் ஐபி, மற்றவை) போன்றவை அடங்கும். அதே சமயம், ஸ்டெராய்டல் அல்லாத அழற்சி எதிர்ப்பு (NSAID) மருந்துகளில் இப்யூபுரூஃபன் மற்றும் நாப்ராக்ஸன் ஆகியவை அடங்கும்.

ஆனால், இளம் குழந்தைகள் மற்றும் இளம் வயதினருக்கு ஆஸ்பிரின் கொடுக்க வேண்டாம். 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு, ஆஸ்பிரின் பயன்படுத்தும்படி பரிந்துரைக்கப்படுவதில்லை. ஏனெனில், முறையற்ற மருந்தானது, நோயாளியின் கல்லீரல் மற்றும் மூளையை சேதப்படுத்தும், ரெய்ஸ் சிண்ட்ரோம் எனப்படும் ஒரு நிலைக்கு வழிவகுக்கக்கூடும்.

வீட்டிலேயே காய்ச்சலுக்கு சிகிச்சையளிப்பதற்கான சில வழிகள் இங்கே  கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

  • தண்ணீர், சூப், பழச்சாறுகள் போன்ற தெளிவான திரவங்களை போதுமான அளவு குடிக்கவும்.
  • நீங்கள் வெதுவெதுப்பான குளியல் எடுக்கலாம். குளிர்ந்த நீர் அல்லது ஆல்கஹால் பயன்படுத்த வேண்டாம்.
  • குளிர்ந்த நீர் அருந்தக் கூடாது.
  • மது அருந்தக் கூடாது.
  • போதுமான அளவு நல்ல சுத்தமான தண்ணீரை குடிக்கவும்.
  • உங்களுக்கு குளிர் அல்லது நடுக்கம் ஏற்பட்டால், அவை மறையும்  வரை கூடுதல் போர்வையைப் பயன்படுத்தி அவற்றை சமாளிக்கலாம்.
  • இலகுவான எடையுள்ள ஆடைகள் மற்றும் படுக்கை உறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் குளிர்ச்சியைப் பராமரிக்கவும்.

காய்ச்சலின் போது சாப்பிட வேண்டிய உணவுகள்

உங்களுக்கு காய்ச்சல் இருக்கும்போது நீங்கள் உட்கொள்ளக்கூடிய பல உணவுகள் உள்ளன. காய்ச்சலின் போது சாப்பிட வேண்டிய உணவுகளின் பட்டியல் இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1) சூப்கள்

காய்ச்சலின் போது, ஒருவரால்  சுவைக்களை உணர முடியாது. அப்போது சூப் குடிப்பதற்கு ஏற்றதாக இருக்கும். மேலும், சூப் குடிப்பதால், நோயாளிக்கு இதமாகவும் சூடாகவும் நீரேற்றமாகவும் இருக்கும், மேலும் அது ஆற்றல் உள்ளடக்கத்தின் வளர்சிதை மாற்றத்திற்கு உதவும். கேரட், காளான்கள், செலரி மற்றும் கீரை போன்ற சில காய்கறிகள் சூப்பில் சேர்ப்பது நல்லது. மற்றவையான, சிக்கன் மற்றும் டோஃபு போன்ற மெலிந்த புரதங்களுடன் தயாரிக்கப்படும் சூப்களும்  பரிந்துரைக்கப்படுகின்றன. உங்கள் சூப்களில் குயினோவா, பழுப்பு அரிசி அல்லது மற்ற முழு தானியங்களையும் பயன்படுத்தலாம். காய்கறி சூப்பில் ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன, அவை காய்ச்சலின் போது வலிமையை அளிக்கின்றன.

2) புதிய பழங்கள்

சர்க்கரை கலந்த பழச்சாறுகளை குடிப்பதை விட, புதிய பழங்களை சாப்பிடுவது சிறந்தது. புதிய பழங்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன, அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. சர்க்கரை அல்லது ஐஸ் க்யூப்ஸ் சேர்க்காத சாத்துக்குடிச்சாறு காய்ச்சலுடன் சேர்ந்து சளியால்  பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நல்லது. ஸ்ட்ராபெர்ரி, ஆரஞ்சு, அன்னாசி மற்றும் கிவி போன்ற பழங்களில் வைட்டமின் சி உள்ளது. காய்ச்சலின் போது உங்கள் உடலை ரீஹைட்ரேட் செய்ய, தர்பூசணி மற்றும் திராட்சை பழச்சாறுகளை நீங்கள் குடிக்கலாம்.

3) ஜீரணிக்கக்கூடிய புரதம்

எந்தவொரு உடல்நல அசௌகரியத்தின் போதும், பலர் தங்கள் புரத மூலத்தை ஜீரணிக்க முடியவில்லை என்று உணர்கிறார்கள். எனவே, உங்கள் வயிற்றுக்கு மென்மையான புரத மூலங்களைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது. இத்தகைய நல்ல புரத ஆதாரங்கள் சால்மன், முட்டை, பருப்பு, தோல் இல்லாத கோழி, வான்கோழி, டோஃபு போன்றவை ஆகும்.

புரதம் பொதுவாக, உங்கள் உடல் அமைப்பை  அதிகரிக்க உதவுகிறது மற்றும் திசு மீளுருவாக்கத்தையும்  ஆதரிக்கிறது. எனவே, உங்கள் காய்ச்சல் நேரத்தில்  இது தேவைப்படுகிறது. ஜீரணிக்கக்கூடிய புரத மூலங்கள் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தாமல் உங்கள் உடலை  சுயமாக சரிசெய்து கொள்ள உதவுகிறது.

4) மூலிகை தேநீர்

உயர்தர மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்படும் பல மூலிகை தேநீர்கள் உள்ளன, அவை காய்ச்சலின் அறிகுறிகளைத் தணிக்க உதவுகின்றன. இஞ்சி, துளசி போன்ற சில விசித்திரமான மூலிகைகள் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை  அதிகரிக்க உதவுகின்றன. நீங்கள் தூக்க பிரச்சனைகளை சமாளிக்க கெமோமில் தேநீர் சிறந்தது. தலைவலி மற்றும் தசை வலிக்கு, மிளகுக்கீரை டீ ஒரு நல்ல வழியாகும். சில மூலிகை தேநீர்கள் காய்ச்சலின் போது, செரிமான பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகின்றன.

5) புரோபயாடிக்குகள்

புரோபயாடிக்குகள் பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தி மற்றும்  குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும், தாவர நட்பு பாக்டீரியா ஆகும். உங்களின் குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உங்கள் உணவில் கேஃபிர், தயிர், சார்க்ராட் மற்றும் கிம்ச்சி போன்ற உணவுகளை சேர்க்கலாம். இந்த ப்ரோபயாடிக்குகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு, அவர்களது  உடலில் எளிதாக ஜீரணமாகிவிடும்.

6) மற்ற உணவுகள்

காய்ச்சலின் போது நீங்கள் பல உணவுகளை உண்ணலாம். அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

  • நீங்கள் பால் மற்றும் பால் சார்ந்த உணவுகளை சேர்க்கலாம்.
  • சூப்கள் மற்றும் பழச்சாறுகளைக் குடிப்பதோடு, நீங்கள் நிறைய நல்ல பானங்களை குடிக்கலாம்.
  • காய்ச்சலின் போது, சில பருப்பு வகைகள், நன்றாக சமைத்த பழங்கள் மற்றும் மென்மையான காய்கறிகள் போன்றவற்றை சேர்த்துக்கொள்வது நல்லது.
  • மென்மையான பாலாடைக்கட்டி, முட்டை, மீன், மென்மையான இறைச்சி, கோழி போன்றவை காய்ச்சல் நேரத்திற்கு ஏற்றதாகும்.
  • மைதா, சுஜி மற்றும் அவற்றின் தயாரிப்புகளை  உள்ளடக்கிய சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள் போன்ற குறைந்த நார்ச்சத்துள்ள உணவுகளை காய்ச்சலின் போது சேர்க்க பரிந்துரைக்கப்படுகிறது.
  • அது தவிர, ஆரோக்கியமான சர்க்கரைகள், தேன், வெற்று  ஜெலட்டின் அடிப்படையிலான இனிப்புகள் மற்றும் ஜாம்  ஆகியவற்றை நீங்கள் உங்கள் உணவில் சேர்க்கலாம்.

காய்ச்சலின் போது தவிர்க்க வேண்டிய உணவுகள் யாவை?

சில உணவுகள் காய்ச்சலின் போது அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடும், எனவே அவற்றைத் தவிர்ப்பது நல்லது. காய்ச்சலின் போது தவிர்க்க வேண்டிய உணவுகள் இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  • முழு தானியங்கள் மற்றும் அவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட  பொருட்கள் போன்ற நார்ச்சத்துள்ள  உணவுகளை  உண்ண வேண்டாம்.
  • லட்டு, ஷவர்மா, பாதுரா, பகோரா, சமோசா போன்ற  வறுத்த கொழுப்பு உணவுகளை நீங்கள் தவிர்க்கலாம்.
  • காய்ச்சலின் போது பீட்சா, பிரியாணி, ஊறுகாய் போன்ற உணவுகளைத்  தவிர்க்கலாம்.
  • காய்ச்சலின் போது சில முழு பருப்பு வகைகள் மற்றும்  உமியுடன் கூடிய பருப்பு வகைகளை முற்றிலும் தவிர்க்கலாம்.
  • முட்டைக்கோஸ், கேப்சிகம், பூண்டு, முள்ளங்கி, வெங்காயம், டர்னிப் போன்ற அனைத்து மூல மற்றும் வலுவான சுவையுள்ள காய்கறிகள் காய்ச்சலின் போது அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். எனவே, இந்த உணவுகளை தவிர்க்கலாம்.

காய்ச்சலின் போது வேறு என்ன தேர்வுகள் பரிந்துரைக்கப்படுகின்றன?

காய்ச்சலின் போது சில காரமாக சமைத்த இறைச்சிகள் உட்கொள்ளலை,  தவிர்க்க வேண்டும், ஏனெனில் அது வயிற்று உபாதையை ஏற்படுத்தும்.

  • காய்ச்சலின் போது மது அருந்தக் கூடாது.
  • காய்ச்சலின் போது புகைபிடிப்பதைத் தவிர்க்கவும்.
  • மென்மையான, எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவை உண்ணுங்கள் அல்லது குடியுங்கள்.
  • காய்ச்சல் நேரத்தில், திரவ உணவு உட்கொள்தல், மற்றும் மென்மையான உணவுக்கு மாறுதல் சிறந்ததாகும்.
  • காய்ச்சலின் போது பால் மற்றும் பால் பொருட்களை சேர்க்கலாம். ஆனால், மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில், அது பேதியை ஏற்படுத்தலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், நீங்கள் பாலை தவிர்க்கலாம். ஃபுல் க்ரீம் அல்லது எருமைப் பாலை விட, டோன்ட் அல்லது  ஸ்கிம்டு பாலை பயன்படுத்துவதை உறுதி செய்து கொள்ளுங்கள். நீங்கள் காய்ச்சலுடன் இருக்கும்போது, சுவையூட்டப்பட்ட பாலையும் சேர்த்துகொள்ளலாம்.
  • மருந்துகளை உட்கொள்ளவதோடு, கோதுமை ரொட்டி(ப்ரெட்) போன்ற மென்மையான உணவுகளுடன், பால் கலந்த காபி மற்றும் பால் கலந்த தேநீர் குடிப்பது, காய்ச்சல் நேரத்தில் உதவக்கூடும்.

முடிவுரை

உடல் வெப்பநிலையில் தற்காலிக அதிகரிப்பு, காய்ச்சல் என்று அழைக்கப்படுகிறது. இது உடலின் நோயெதிர்ப்பு அமைப்பின் ஒரு பிரதிபலிப்பாகும். சளி, தொண்டை தொற்று, காது தொற்று, நுரையீரல் தொற்று, தோல் தொற்று, சிறுநீர்ப்பை தொற்று, சிறுநீரக தொற்று, காய்ச்சல், கோவிட்-19, தடுப்பூசிகள், நோய்த்தடுப்பு மருந்துகள்  போன்ற பல காரணிகள் காய்ச்சலுக்கு முக்கிய காரணங்களாக உள்ளன. நடுக்கம், குளிர்ச்சி, உடல்வலி, தலைவலி போன்றவை  காய்ச்சலின் முக்கிய அறிகுறிகளாகும். காய்ச்சலைக் குணப்படுத்த உதவும் மருந்துகளை மருத்துவர் பரிந்துரைப்பார். காய்ச்சலின் போது, பல வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள் (FAQs)

1) பெரியவர்களுக்கு 99.7 காய்ச்சலாகக் கருதப்படுகிறதா?

சுகாதார வழங்குநர்களின் கூற்றுப்படி, பெரியவர்களில் 100-100.4 டிகிரி உடலின்  வெப்பநிலை  காய்ச்சலாகக் கருதப்படுகிறது. கைக்குழந்தைகள் மற்றும் குழந்தைகளுக்கு, வாய்வழி வெப்பநிலை 99.5 டிகிரியாக அல்லது மலக்குடல் வெப்பநிலை 100.4 டிகிரியாக இருக்கும்போது, அது காய்ச்சலாக கருதப்படுகிறது.

2) அறிகுறிகள் இல்லாமல் காய்ச்சல் இருக்க முடியுமா?

ஆம், அறிகுறிகள் இல்லாத காய்ச்சல் பெரியவர்களுக்கு ஏற்படுவது உண்டு. அதுபோன்ற சந்தர்ப்பங்களில், காய்ச்சலுக்குப் பின்னால் உள்ள உண்மையான காரணத்தை பெரும்பாலும் மருத்துவர்களால்  கண்டுபிடிக்க முடிவதில்லை.

3) உடல் சூடாக இருந்தாலும், காய்ச்சல் இல்லாமல் இருக்க முடியுமா?

பொதுவாக, காய்ச்சல் ஒரு நபரை சூடாக உணர வைக்கிறது. ஆனால், சில சுற்றுச்சூழல் காரணிகள், வாழ்க்கை முறை காரணிகள், வயது, ஹார்மோன்கள், மருந்துகள் மற்றும் சில உணர்ச்சி நிலைகள் காய்ச்சல் இல்லாமலும், உங்கள் உடலின் வெப்பநிலையை அதிகரிக்கலாம்.

4) நான் சாப்பிட்ட பிறகு ஏன் குளிர்ச்சியாக உணர்கிறேன்?

சாப்பிட்ட பிறகு லேசான குளிர்ச்சியாக இருப்பது மிகவும் சகஜம். இது,  நீங்கள் சாப்பிட்ட உணவின் வளர்சிதை மாற்றம் மற்றும் செரிமானம் ஆகியவற்றில் உங்கள் உடல் அதன் ஆற்றலை நிர்வகிக்கிறது என்பதை  குறிக்கலாம்.

5) ஒவ்வாமை காய்ச்சலுக்கு வழிவகுக்குமா?

ஒவ்வாமை காய்ச்சலுக்கு வழிவகுக்கும் என்று சிலர் நினைக்கிறார்கள், ஆனால் அது உண்மையல்ல.

DISCLAIMER: THIS BLOG/WEBSITE DOES NOT PROVIDE MEDICAL ADVICE

The Information including but not limited to text, graphics, images and other material contained on this blog are intended for education and awareness only. No material on this blog is intended to be a substitute for professional medical help including diagnosis or treatment. It is always advisable to consult medical professional before relying on the content. Neither the Author nor Star Health and Allied Insurance Co. Ltd accepts any responsibility for any potential risk to any visitor/reader.

;