கொலாஜன் ஒரு கண்ணோட்டம்
கொலாஜன் சப்ளிமென்ட்ஸ் என்பது கேட்பதற்கு ஒரு ஆடம்பரமான விஷயமாகத் தோன்றினாலும், இதனை முறையாக எடுத்துக்கொண்டால் சருமத்திற்கு அதிசயத்தக்க பலன்களைத் தரக்கூடியதாக இருக்கும். சருமம் மற்றும் அதனுடன் இணைந்துள்ள கனெக்டிவ் திசுக்கள் பெரும்பாலும் ஸ்ட்ரக்ச்சுரல் புரதமான கொலாஜனால் ஆனவையாகும்.
உடலில் உள்ள தசைகள், எலும்புகள், குருத்தெலும்பு (கார்டிலேஜ்), தோல், முடி மற்றும் கனெக்டிவ் திசுக்களால் இந்த கொலாஜன் பயன்படுத்தப்படுகிறது; ஏனெனில், அவை நமக்கான தனித்துவமான உடலியல் பண்புகளை வழங்கும் அமினோ அமிலங்களைக் கொண்டு உருவானவையாகும்.
இந்த புரதங்களை உருவாக்கும் அமினோ அமிலங்களைத் தான் நாம் ஒரு கொலாஜன் சப்ளிமென்ட்டாகவோ அல்லது எலும்பு சூப்பாகவோ உட்கொள்கிறோம்.
வயது அதிகரிக்கும் போது உடலின் இயற்கையான கொலாஜன் உற்பத்தி குறைவதால், சப்ளிமென்ட் மூலம் உணவில் அதனை அதிகமாக நாம் சேர்த்துக்கொள்ளலாம். அதன் மூலம் வலுவான எலும்புகள், மூட்டுகள் மற்றும் சருமத்திற்கு தேவையான கொலாஜனைப் பெறலாம்.
இதன் காரணமாக, பல சப்ளிமென்ட் உற்பத்தி நிறுவனங்கள் கொலாஜன் பவுடர்கள், மற்றும் மாத்திரைகளை விற்பனைக்குக் கொண்டுவருகின்றன; அவை பெரும்பாலும் மீனின் செதில்கள் அல்லது மாட்டு எலும்புகள் மற்றும் தோல் உள்ளிட்ட பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.
கொலாஜன் என்றால் என்ன?
திசுக்களுக்கான கட்டமைப்பை வழங்குவதும், அவற்றை நீட்சித்தன்மை உள்ளதாகவும், அதிர்வுகளைத் தாங்கக்கூடியதாக மாற்றுவதுமே கொலாஜனின் முதன்மை செயல்பாடுகளாகும்.
தோலில் டைப் I மற்றும் III கொலாஜன்ளும், மூட்டுகளில் டைப் II கொலாஜனும் உள்ளன. கொலாஜனை அதிகரிக்க, அல்லது இயல்பு நிலைக்குக் கொண்டுவர சிலர் கொலாஜன் சப்ளிமென்ட்களைப் பயன்படுத்துகிறார்கள்.
மூட்டுகளில், எலும்பின் அடர்த்தியில் மற்றும் வயதான சருமத்தில் கொலாஜன் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆய்வு முடிவுகள் சாதகமானவையாக இருந்தபோதிலும், கொலாஜன் சப்ளிமென்ட்ஸ் பயனுள்ளதா இல்லையா என்பதை தீர்மானிக்க கூடுதல் ஆய்வுகள் தேவைப்படுகிறது.
கொலாஜனின் பயன்கள்
கொலாஜன் சப்ளிமென்ட்ஸ் முதுமையால் ஏற்படும் பின்வரும் அறிகுறிகளை எதிர்கொள்ள உதவுகின்றன,
- வயோதிகம் தொடர்பான ஆபத்துகளிலிருந்து பாதுகாக்கிறது.
- சருமத்தை சுருக்கங்கள் இன்றி திடப்படுத்துகிறது.
- எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
கொலாஜன் சப்ளிமென்ட்ஸ் எடுத்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்
உடல் இழந்த இயற்கையான கொலாஜனை மீண்டும் நிரப்ப உதவுகிறது
உடலை ஒன்றிணைக்கும் பசையாக செயல்படும் கொலாஜன், உடலில் உள்ள புரதத்தில் மூன்றில் ஒரு பங்காக உள்ளது.
நமது உடல், வயது கூடக் கூட குறைவான கொலாஜனையே உற்பத்தி செய்யத் துவங்கும். கொலாஜன் பெப்டைட்ஸை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம், வயது அதிகரிப்பதால் இழக்கும் ஊட்டச்சத்துக்களை நிரப்புவதோடு, நமது உடலின் பொதுவான ஆரோக்கியத்தையும் அது பராமரிக்கிறது.
சரும சுருக்கங்களை மென்மையாக்கி, தோலின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது
கொலாஜனை எடுத்துக்கொள்வதால் சரும ஆரோக்கியப் பலன்கள் கிடைப்பதாக பல ஆய்வுகள் கூறுகின்றன.
சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒரு நாளைக்கு 10 கிராம் என்ற அளவில் 800-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொலாஜனை அளித்து, மாதிரியினால்-கட்டுப்படுத்தப்பட்ட 11 வெவ்வேறு ஆய்வுகளை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டதாக - ஜனவரி 2019-இல் டெர்மட்டாலஜி ஜர்னல் ஆஃப் பார்மசூட்டிகல்ஸில் வெளியான ஆய்வறிக்கை கூறுகிறது.
அந்த ஆய்வில், சப்ளிமென்ட்கள் உடலின் கொலாஜன் ஃபைபரின் அடர்த்தியை அதிகரிப்பதாகவும், சருமத்தில் ஈரப்பதத்தை நன்கு தக்க வைத்து அதனை அதிகம் மிருதுவாக்க உதவுவதாகவும் கண்டறியப்பட்டது. ஒரு நாளைக்கு பத்து கிராம் கொலாஜென் என்பது இளமையான தோற்றத்தை பராமரிப்பதற்கு உதவும் ஒரு சிறிய முயற்சியாக இருக்கும்.
மூட்டு வலியைக் குறைக்கிறது
கொலாஜன் குருத்தெலும்புகளின் (கார்டிலேஜ் - எலும்புகளை மூடி பாதுகாக்கும் ஒரு ரப்பர் போன்ற பாகம்) ஒரு முக்கிய அங்கமாக இருப்பதால் மூட்டு அசைவுகளை எளிதாக மேற்கொள்ள உதவுகிறது.
ஆஸ்ட்டியோ ஆர்த்ரிட்டிஸ் நோயால் ஏற்படும் மூட்டு வலி மற்றும் பிற மூட்டு சார்ந்த பிரச்சினைகளின் அறிகுறிகளைக் குறைக்க கொலாஜன் சப்ளிமென்ட்ஸ் உதவுகின்றன.
எலும்பின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது
தினசரி கொலாஜன் சப்ளிமென்ட் எடுத்துக் கொண்ட மெனோபாஸ் நிலையை எட்டிய பெண்களிடம், ஒரு வருடத்திற்குப் பிறகு அவர்களது எலும்பின் மினரல் அடர்த்தி அதிகரித்தது ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது; குறிப்பாக அவர்கள் வைட்டமின் D மற்றும் கால்சியத்தையும் அதனுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளும்போது சிறந்த பலன்கள் கிடைத்துள்ளன.
பிற மருத்துவ நிபுணர்களின் கருத்துப்படி, சப்ளிமென்ட்களை எடுத்துக்கொள்வது பயனுள்ளதாக இருக்காது என்றும் சிலர் நம்புகிறார்கள். ஆனால், நம் ஜீரண அமைப்பானது, கொலாஜனை உட்கொண்ட பிறகு அதனை பல்வேறு கூறுகளாக பிரித்துவிடுகிறது.
எலும்பு அல்லது மற்ற தசை எலும்புத் (மஸ்க்குலோ ஸ்கெலிட்டல்) திசுக்களை உருவாக்குவதற்காக உடல் இந்த கொலாஜன் பில்டிங் பிளாக்குகளைப் பெரிதாகப் பயன்படுத்துவதில்லை. ஆற்றலை உருவாக்கவே அவற்றைப் பயன்படுத்துகிறது.
காயங்கள் மற்றும் வயோதிகத்தை குணப்படுத்துகிறது
சருமம் வயோதிகத் தோற்றமடைவது, மற்றும் காயத்தை குணப்படுத்துவதில் கொலாஜன் சப்ளிமென்ட்ஸின் தாக்கம் எந்தளவிற்கு உள்ளது என்பதை அறிய ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், கொலாஜன் சப்ளிமென்ட்ஸ் பொதுவாக பாதுகாப்பானது என்றும், சருமத்தின் நெகிழ்வுத்தன்மை மற்றும் ஈரப்பதத்தையும் அது மேம்படுத்துகிறது என்றும் அறியப்பட்டது. ஆனால், சப்ளிமென்ட்டின் சரியான அளவையும், அதனை எதற்காக பயன்படுத்தவேண்டும் என்பதையும் தீர்மானிக்க கூடுதல் ஆய்வுகள் தேவைப்படுகின்றன.
சருமத்திற்கு பளபளப்பைச் சேர்ப்பதன் மூலம் கொலாஜன் வயதான தோற்றத்திற்கு புத்துயிர் அளிக்கிறது. தினசரி தோல் பராமரிப்பு வழக்கத்தில் கொலாஜனைச் சேர்ப்பதன் மூலம் தெளிவான சருமத்தை அடையலாம்.
ஒரு சப்ளிமென்ட்டாக எடுத்துக் கொள்ளும்போது, கொலாஜன் கனெக்டிவ் திசுக்களாக செயல்படுகிறது; மேலும், சருமத்தினை பழுதுநீக்கம் செய்யவும் உதவுகிறது. ஏனெனில், கொலாஜன் என்பது ஒரு கட்டமைக்கும் புரதமாகும்; அது இறந்த அல்லது சேதமடைந்த சருமத்தை மீண்டும் உருவாக்கவும், சருமத்தின் அசல் பிரகாசத்தை மீட்டெடுக்கவும் உதவுகிறது.
தோல் மற்றும் கூந்தல் பராமரிப்பு
மென்மையான, இளமையான தோற்றமுடைய சருமத்திற்கும் சில கொலாஜன் பெப்டைட்களுக்கும் தொடர்புள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே, ஆரோக்கியமான தலைமுடி மற்றும் நகங்களுக்கு கொலாஜன் பவுடர்களைப் பயன்படுத்துவது உதவுமென்று ஆதாரத்தின் அடிப்படையிலான சான்றுகளின் மூலம் சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
கொலாஜன் சப்ளிமென்ட்ஸ் அல்லது பெப்டைட்ஸை உட்கொள்வதால் சரும வறட்சி மற்றும் சுருக்கங்கள் உருவாகுவது குறைகிறது; அதன் மூலம் முதிர்வடையும் செயல்முறையும் மெதுவாக நிகழ்கிறது.
கொலாஜனை உற்பத்தி செய்ய உடலைத் தூண்டுவதன் மூலமாகவும் இந்த சப்ளிமென்ட்கள் வேலை செய்கின்றன; மேலும், சருமத்தின் நெகிழ்வுத்தன்மைக்கு உதவும் புரதங்களையும் உருவாக்குகின்றன.
முகப்பரு போன்ற சருமப் பிரச்சினைகளைத் தடுக்கவும் கொலாஜன் சப்ளிமென்ட்ஸ் உதவுகின்றன என்று சில அதிகாரபூர்வமற்ற ஆய்வுகள் நிரூபித்துள்ளன.
செரிமானம்
கொலாஜனிலிருந்து-பெறப்படும் சில அமினோ அமிலங்கள், குறிப்பாக கிளைசின் - செரிமானத்திற்கும், கேஸ்ட்ரோ இன்டெஸ்ட்டினல் இன்ஃப்ளமேஷனைக் குறைக்கவும் உதவுகிறது. இருந்தபோதும், கொலாஜனின் அமினோ அமிலங்கள் நேரடியாக குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன என்பதற்கு உறுதிபடுத்தப்பட்ட ஆதாரங்கள் எதுவும் இல்லை.
குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்
இரிட்டபில் பவல் சின்ட்ரோம் (IBS) உள்ளிட்ட இன்ஃப்ளமேட்டரி செரிமான பிரச்சினைகளின் போது குடலை சீராக்க கொலாஜன் உதவுகிறது. சில வகையான நோய்கள் உள்ளவர்களுக்கு கொலாஜன் அளவு குறைவாக இருப்பதாக பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. குறைவான கொலாஜன் அளவினை உயர்த்துவதற்கு கொலாஜன் சப்ளிமென்ட்களை எடுத்துக்கொள்வது உதவுகிறது.
கொலாஜனின் அளவை அதிகரிப்பதன் மூலம் உடலில் ஒரு குணப்படுத்தும் சூழல் உருவாகிறது; ஏனெனில், இது பெருங்குடல் மற்றும் கேஸ்ட்ரோ இன்டஸ்ட்டினல் பாதையில் இருக்கும் கனெக்டிவ் திசுக்களின் ஒரு அங்கமாகவுள்ளது. உடலுக்கு கொலாஜன் கிடைப்பதை அதிகரிக்க ஏதேனும் சப்ளிமென்ட்டை எடுத்துக்கொள்வது பயனளிக்கலாம்.
கொலாஜன் சப்ளிமென்ட்ஸை உட்கொள்வது பாதுகாப்பானதா?
கொலாஜன் பவுடர்கள் அல்லது சப்ளிமென்ட் தயாரிப்புகளின் பாதுகாப்பு அல்லது செயல்திறனை FDA வழக்கமாக சரிபார்ப்பது கிடையாது; அந்த சப்ளிமென்ட் ஒரு குறிப்பிட்ட நோய்க்கு சிகிச்சையளிக்கிறது என்று அதன் உற்பத்தியாளர் பிரகடனம் செய்தால், அல்லது ஏதேனும் தவறு நடந்தால், அல்லது மக்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டால் மட்டுமே FDA அவற்றை சரிபார்க்கும்.
இக்காரணத்தினை கருத்தில் கொண்டு, சப்ளிமென்ட்களை வாங்குவதற்கு முன்பு, அல்லது வழக்கமான உணவுப் பழக்கத்திற்கு நிரந்தரமாக மாறுவதற்கு முன்பு அவற்றை நன்கு ஆராய்வது முக்கியமாகும். எனவே, ஒரு மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரை கலந்தாலோசித்த பிறகு, கொலாஜன் சப்ளிமென்ட்ஸ் உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.
எந்த வடிவில் எடுத்துக்கொள்ளும் போது கொலாஜன் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்?
வடிவம் எதுவாக இருந்தாலும், சப்ளிமென்ட்ஸுக்கு பதில் உணவைத் தேர்ந்தெடுப்பதே நல்லது.
உடல்நலக்குறைவு, காயம், விளையாட்டு, சருமப் பிரச்சினைகள் அல்லது பசியின்மை ஆகியவற்றால் ஏற்படும் அதிக தேவைகளை நிவர்த்தி செய்ய புரோட்டீன் ஐசோலேட்ஸ் உதவுகின்றன.
டயட்டரி கொலாஜன் சப்ளிமென்ட் வாங்கும்போது, பின்வரும் விஷயங்களைக் கருத்தில் கொள்வது அவசியமாகும்:
- குறைந்த எண்ணிக்கையிலான அடிப்படை கூறுகளைக் கொண்ட சப்ளிமென்ட்களையே முடிந்தவரை தேர்வுசெய்யவும். கொலாஜன் புரோட்டீன் பவுடர் வடிவில் கிடைக்கும் கொலாஜன் ஹைட்ரோலைசேட், ஹைட்ரோலைஸ்டு கொலாஜன், அல்லது கொலாஜன் பெப்டைட்ஸ் என்று குறிப்பிடப்படும் கொலாஜன் புரத ஐசோலேட்ஸ்களாகவே அவை இருக்க வேண்டும்.
- பல்வேறு சுவைகளில் கிடைக்கும் சப்ளிமென்ட்களில் கூடுதல் சர்க்கரை இருக்கலாம்; இது இரைப்பை குடற்பாதையில் (GI) பிரச்சினைகளை ஏற்படுத்தலாம், அல்லது கூடுதல் கலோரிகளை உடலில் சேர்க்கலாம். எனவே இனிப்பு சேர்க்கப்படாத வகையைத் தேர்வுசெய்யவும்.
- சாத்தியம் இருப்பின் மூன்றாம் தரப்பினர் அளித்துள்ள சான்றளிப்பை கவனியுங்கள். எந்தவொரு ஊட்டச்சத்து சப்ளிமென்ட்டின் பாதுகாப்புத் தன்மையை ஏதேனும் ஒரு நம்பகமான நிறுவனம் முன்னதாக பரிசோதித்துள்ளதா என்பதைச் சரிபார்க்கவும்; ஏனெனில், நீங்கள் வாங்க முயலும் இத்தகையத் தயாரிப்புகள் FDA-வின் கட்டுப்பாட்டின் கீழ் வராது.
- கொலாஜன் சப்ளிமென்ட்டை உட்கொள்ளப் போவதாக ஒருவர் முடிவு செய்தால், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடமிருந்து ஒப்புதல் பெற்ற, மற்றும் ஹெவி உலோக மாசுபாடு இல்லாத தயாரிப்பை தேர்வு செய்யுமாறு பரிந்துரைக்கப்படுகிறது.
கொலாஜன் தயாரிப்புகளை உட்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்
பொதுவாக கொலாஜன் சப்ளிமென்ட்களை உட்கொள்வதால் குறிப்பிடத்தக்க அளவில் எதிர்மறையான விளைவுகள் எதுவும் ஏற்படுத்தாது. லேசான வயிற்று பிரச்சினைகள், அல்லது அசவுகரியமான சுவை உணர்வுகள் போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம்.
உடலில் கொலாஜன் உருவாக்கத்தைத் தூண்டுவதற்காக ஒரு சப்ளிமென்ட்டை உட்கொண்டால் அது ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை உயர்த்தலாம். ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தினால் உயிரணுக்கள், மற்றும் திசுக்களுக்கு சேதம் ஏற்படுவது சாத்தியமாகும். கொலாஜனின் எதிர்மறையான விளைவுகள் ஏற்படுவது பொதுவானது.
அவற்றில் பின்வரும் விளைவுகளும் உள்ளடங்கும்:
- சரும சிரங்குகள்
- வயிற்றுப்போக்கு
- தலைச்சுற்றல்
- டிஸ்பெப்சியா
- வாயில் அசவுகரிய உணர்வு
- தலைவலி தூக்கமின்மை
உட்கொள்ள வேண்டிய கொலாஜனின் அளவு
கொலாஜன் சப்ளிமென்ட்களின் நற்பலன்கள் குறித்த ஆய்வுகளில், தினமும் 2.5 முதல் 10 கிராம் அளவுகளை சோதனை அடிப்படையில் வழங்கியுள்ளது.
இருந்தபோதும், சில உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளிமென்ட்ஸ் சப்ளையர்கள் ஒவ்வொரு நாளும் 30 கிராம் வரை கொலாஜனை உட்கொள்ள பரிந்துரைக்கிறார்கள்.
கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கு சப்ளிமென்ட்ஸ் மட்டுமே ஒரே வழி கிடையாது. ஜெலட்டின் மற்றும் எலும்பு சூப் ஆகியவையும் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கும் உணவுகளாகும்.
கொலாஜன் உற்பத்தியைத் தூண்டும் உணவு மூலப்பொருட்கள்
கொலாஜன் நிறைந்த உணவுகள் - கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கவும், சருமப் பிரச்சினைகளை எதிர்த்துப் போராடவும் உதவுகின்றன. பின்வரும் உணவுகளில் கொலாஜன் நிறைந்துள்ளது:
- கோழி
- எலும்பு சூப்
- எலுமிச்சை, ஆரஞ்சு, கிரேப்ஃபுரூட் உள்ளிட்ட சிட்ரஸ் பழங்கள்
- முட்டையின் வெள்ளைக்கரு
- பச்சை இலை கீரைகள்
- மீன்
- ஷெல் மீன்கள்
- குடைமிளகாய்
- ஸ்ட்ராபெர்ரி, ராஸ்ப்பெர்ரி மற்றும் ப்ளூபெர்ரி போன்ற பெர்ரி வகைகள்
- தக்காளி
- பூண்டு
- பீன்ஸ்
- வெப்பமண்டல பழங்கள்
- முந்திரி
முடிவுரை
வயது அதிகரிக்க அதிகரிக்க உடலின் கொலாஜன் உற்பத்தித் திறன் குறைவதால், மக்கள் கொலாஜன் சப்ளிமென்ட்களைப் பயன்படுத்துகிறார்கள்.
சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிப்பது, மற்றும் எலும்பு, இதயம் மற்றும் மூட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்துவது போன்ற சில உடல்நலப் பலன்களை கொலாஜன் சப்ளிமென்ட்ஸ் வழங்கலாம் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. இருப்பினும், இந்த நற்பலன்கள் குறித்த ஆராய்ச்சிகள் குறைவாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
கொலாஜன் சப்ளிமென்ட்களை சிலர் உட்கொள்ளக் கூடாது. ஹலால், கோஷர், சைவ அல்லது வீகன் உணவு முறையைப் கடுமையாகப் பின்பற்றுபவர்கள், குறிப்பிட்ட மருந்துகளை உட்கொள்பவர்கள், உடல்நலப் பிரச்சினைகள் அல்லது ஒவ்வாமை உள்ளவர்கள் சில கொலாஜன் தயாரிப்புகளை தவிர்க்க வேண்டியிருக்கும். கொலாஜன் சப்ளிமென்ட்டை உட்கொள்வதற்கு முன்பு மருத்துவரை அணுக வேண்டும்.