சேற்றுப்புண் (அத்லீட்’ஸ் ஃபூட்) என்றால் என்ன?
சேற்றுப்புண் (அத்லீட்’ஸ் ஃபூட்) அல்லது டினியா பெடிஸ் என்பது பொதுவாக கால்களின் தோலை பாதிக்கும் ஒரு பூஞ்சை தொற்றாகும். அத்லீட்’ஸ் ஃபூட் தொற்றை ஏற்படுத்தும் டெர்மட்டோபைட்ஸ் பூஞ்சைகள், ஜாக் இட்ச் மற்றும் ரிங்வார்ம் பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது. பரவலாக காணப்படும் இந்த நிலை, கிட்டத்தட்ட நான்கு பேரில் ஒருவரை அவர்களது வாழ்வின் ஏதோவொரு கட்டத்தில் பாதிக்கிறது.
பூஞ்சை அல்லது பூஞ்சைக் கிருமிகள் மனித தோலில் ஒப்பீட்டளவிற்கு குறைவான அளவில் காணப்படும், அவை பொதுவாக எந்தத் தீங்கும் ஏற்படுத்தாது. இருப்பினும், ஏதுவான சூழ்நிலைகள் அமைந்தால் தோலில் ஊடுருவி, பெருக்கமடைந்து, தொற்றுநோயை பரப்புகின்றன. பூஞ்சைகள் கால்விரல்களுக்கு இடையில் காணப்படும் சூடான, ஈரமான மற்றும் காற்றோட்டம் இல்லாத தோல் பகுதிகளையே விரும்புகின்றன.
சேற்றுப்புண் (அத்லீட்’ஸ் ஃபூட்) ஏற்படுவதன் காரணங்கள்
சேற்றுப்புண் (அத்லீட்’ஸ் ஃபூட்) யாரை வேண்டுமானாலும் பாதிக்கலாம். அதிகமாக வியர்க்கும் நபர்கள் அல்லது கால்களில் அதிகம் வியர்க்க வைக்கும் சாக்ஸ் மற்றும் ஷூக்களை அணிபவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது.
மேலும், சேற்றுப்புண் (அத்லீட்’ஸ் ஃபூட்) ஒருவரிடமிருந்து மற்றொரு நபருக்குப் பரவுகிறது. நோய்த்தொற்று உள்ள விளையாட்டு வீரர்கள் அல்லது நீச்சல் வீரர்கள் பயன்படுத்தும் குளியலறை அல்லது நீச்சல் குளங்களில் மற்றொருவர் வெறும் கால்களுடன் நடந்தால் இத்தொற்று ஏற்படலாம்.
குளிக்கும்போது, ஒருவரின் சேற்றுப்புண் பாதிக்கப்பட்ட தோலிலிருந்து ஒரு சிறிய துகள் வெளியேறலாம். அதன் பிறகு, மற்றவர்கள் அதன் மீது பாதம் பதித்து நடந்து செல்லும்போது தொற்று ஏற்படலாம். பொதுவாக, ஒரு சிறிய வடிவில் தொற்று உண்டான பிறகு தோலில் தொடர்ந்து பரவிவிடும்.
அத்லீட்’ஸ் ஃபூட் பாதிப்பை ஏற்படுத்தும் காரணிகள்
பாதங்களை முழுவதுமாக மூடும் காலணிகளை அடிக்கடி அணிவது
பாதங்களை முழுவதும் மூடும் காலணிகள் அவற்றை வியர்வையுடன் வைத்திருப்பதால், பூஞ்சை பெருக்கத்திற்கு அது ஏற்ற சூழலாக அமைகிறது.
அதிகப்படியான வியர்வை
அதிகப்படியான வியர்வை ஈரப்பதத்தை உருவாக்குகிறது, இது பூஞ்சைகள் வாழவும், அவை விரைவாக பெருக்கவும் வசதியாக இருக்கும்.
பாய்கள், தரை விரிப்புகள், படுக்கை விரிப்புகள் ஆகியவற்றை பகிர்வது
பாய்கள், தரை விரிப்புகள் மற்றும் படுக்கை விரிப்புகள் ஆகியவற்றை தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர் பயன்படுத்தும்போது அவற்றில் தொற்றுகள் எளிதில் ஒட்டிக்கொள்ளும். அவற்றைப் பயன்படுத்தும் போது, மற்ற உடல் பாகங்களுக்கும் தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளது.
பூஞ்சை தொற்றுள்ள ஒருவரின் உடைகள் அல்லது காலணிகளைப் பகிர்ந்து கொள்வது
பூஞ்சை தொற்றுள்ள ஒருவரின் உடைகள் மற்றும் காலணிகளைப் பகிர்ந்துகொள்வதன் மூலம், அதனைப் பயன்படுத்தும் தொற்று இல்லாத நபருக்கு பூஞ்சை பரவுகிறது.
அத்லீட்’ஸ் ஃபூட்டின் அறிகுறிகள்
சிவந்த மற்றும் அரிக்கும் சருமம்
அத்லீட்’ஸ் ஃபூட் உள்ள ஒருவரின் கால் வீங்கி, சொறி உருவாகிறது. சொறி சிவப்பு நிறமாகி, அரிப்பும் ஏற்படுகிறது.
எரியும் அல்லது கொட்டுவது போன்ற வலி
அத்லீட்’ஸ் ஃபூட் தீவிரமடைந்தால், சொறி மற்றும் தொற்று வலிமிகுந்த எரியும் உணர்வினைக் கொடுக்கிறது.
கசியும் அல்லது செதில் உரியும் கொப்புளங்கள் ஏற்படும்
இறுக்கமான ஷூக்களை அணியும் போது வியர்வை மற்றும் ஈரப்பதம் காரணமாக இந்த தொற்று ஏற்படுவதால், கால்களுக்கு காற்றோட்டம் கிடைக்காது. அதனால் திரவம் நிரம்பிய கொப்புளங்கள் உண்டாகலாம். கொப்புளங்கள் அவற்றின் திரவங்களை வெளியேற்றிய பிறகு செதில் போன்று உரியலாம்.
தோலில் செதில்கள், உரிதல் அல்லது வெடிப்புகள் ஏற்படுதல்
பூஞ்சை தொற்று காரணமாக ஏற்படும் சொறியானது, பொதுவாக சிவந்து, செதில்களாக காணப்படும். நிலைமை தீவிரமாகும் போது, தோல் உரியத் தொடங்குகிறது, அதனுடன் அரிப்பும் ஏற்படலாம். கால்விரல்களுக்கு இடையில் உள்ள தோலில் வெடிப்புகளும் உண்டாகலாம்.
உலர்ந்த, செதில் போன்ற சருமம்
பூஞ்சை தொற்று காரணமாக பாதங்களில் புண் ஏற்பட்டு, வறண்டு போகின்றன. வறண்ட மற்றும் செதில் போன்ற தோல் ஆரம்பத்தில் பாதத்தின் அடிப்பகுதியில் துவங்கி, பின்னர் பக்கவாட்டில் பரவும்.
கால் நகங்கள் நிறமாறுதல், தடிமனாதல் மற்றும் நொருங்குதல்
கால் நகங்கள் ஈரப்பதமாகவும் சூடாகவும் இருப்பதால் அவை பூஞ்சை தொற்றுக்கு ஏற்ற இடமாக விளங்குகிறது. அவை உடையக்கூடியதாகவும், நொறுங்கும் தன்மையுடையதாகவும் மாறுகின்றன. நகத்தின் அடியில் அழுக்குகள் சேர்வதால் நிறமாற்றம் அடைந்து, நகம் கருமையாகிறது.
நகம் அதன் படுகையை விட்டு விலகி இருத்தல்
கால் விரல் நகங்கள் மற்றும் அதன் அடிப்படுகை ஆகிய இரண்டுக்கும் இடையில் பூஞ்சைகள் வளர்வதால், நகத்தை கடைசியில் உதிரச் செய்கிறது.
சேற்றுப்புண்ணின் (அத்லீட்’ஸ் ஃபூட்) வகைகள் யாவை?
அத்லீட்’ஸ் ஃபூட் அதன் பல்வேறு அறிகுறிகளைப் பொருத்து நான்கு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது.
கால்விரல்களுக்கு இடையில் ஏற்படும் வலைத் தொற்று
இவ்வகையான தொற்று பாதத்தின் நான்காவது மற்றும் ஐந்தாவது விரலுக்கு இடையில் உள்ள பகுதியை பாதிக்கும் பொதுவான ஒன்றாகும்; இதனால் தோல் சிவந்து,விரிசல் ஏற்படுகிறது.
மொக்கேசின் வகை தொற்று
இவ்வகை அத்லீட்’ஸ் ஃபூட், பொதுவாக காலின் அடிப்பகுதி மற்றும் குதிகாலை பாதிக்கிறது. வெகுசில சந்தர்ப்பங்களில், இத்தொற்று கால் நகங்களுக்கு பரவி, அவற்றை விழச் செய்கின்றது.
வெசிகுலர் வகை தொற்று
இவ்வகைத் தொற்று பொதுவாக பற்களின் அடிப்பகுதியை பாதிக்கிறது மற்றும் உடலின் மற்ற பகுதிகளிலும் ஏற்படுகிறது. இவ்வகை அத்லீட்’ஸ் ஃபூட் தொற்று உள்ளவர்களின் கால்களில் திரவம் நிறைந்த கொப்புளங்கள் ஏற்படுகின்றன.
அல்சரேட்டிவ் தொற்று
அல்சரேட்டிவ் தொற்று என்பது ஒரு கடுமையான தொற்றாகும், இது கால்விரல்களின் இடையிலும், பாதங்களின் அடிப்பகுதியிலும் அரிதான வகை புண்களை ஏற்படுத்துகிறது. இத்தொற்று மிகுந்த அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது.
அத்லீட் ஃபூட்டினை கண்டறிதல்
KOH பரிசோதனை
KOH ப்ரெப் டெஸ்ட் என்பது நகங்கள் மற்றும் தோலின் பூஞ்சை தொற்றுகளைக் கண்டறிவதற்கான ஒரு அறுவை சிகிச்சை செய்யத் தேவையில்லாத செயல்முறையாகும்.
பாதிக்கப்பட்ட தோல் பகுதியில் இருந்து சேகரிக்கப்பட்ட செல்கள் பொட்டாசியம் ஹைட்ராக்சைடு (KOH) கரைசலுடன் சேர்த்து, ஒரு ஸ்லைடில் வைக்கப்பட்டு நுண்நோக்கியின் கீழ் பகுப்பாய்வு செய்யப்படும். இதன் மூலம், பூஞ்சையின் அறிகுறிகளைக் கண்டறிய முடியும்.
தோல் கல்ச்சர் பரிசோதனை
பூஞ்சை அல்லது தோலை கல்ச்சர் முறையில் வளர்ப்பதன் மூலம் - தோல் உரிதல், வெடிப்பு அல்லது கொப்புளங்கள் போன்றவற்றின் மூல காரணத்தைக் கண்டறிய முடியும். சிவத்தல் அல்லது தொடர் எரிச்சலுக்கான காரணத்தைக் கண்டறியவும் இம்முறை உதவுகிறது. பூஞ்சைகள் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அத்லீட்’ஸ் ஃபூட் பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது.
தோல் பயாப்ஸி
பாதிக்கப்பட்ட பகுதியின் தோல் மாதிரிகளை சேகரித்து பரிசோதிப்பது பயாப்ஸி எனப்படுகிறது. ஒரு பிளேடினால் அகற்றப்பட்ட தோல் ஒரு ஸ்லைடில் வைக்கப்பட்டு நுண்ணோக்கியின் கீழ் ஆய்வு செய்யப்படும்
ஸ்லைடில் உள்ள மாதிரி தோல் துண்டுகள் - சாயங்கள் மற்றும் ரசாயனங்களில் தோய்க்கப்பட்டிருக்கும்; இது பூஞ்சையின் இருப்பை பகுப்பாய்வு செய்ய உதவுகிறது.
அத்லீட்’ஸ் ஃபூட்டிற்கான சிகிச்சைகள்
மாத்திரைகள்
‘அத்லீட்’ஸ் ஃபூட் பாதிப்பிலிருந்து விடுபட உதவுவன யாவை?’ என்ற தலைப்பில் NCBI வெளியிட்டுள்ள கட்டுரையில், இவ்வகை தொற்றுக்கு மேலாக தடவும் கிரீம்கள் பெரும்பாலான நேரங்களில் நிவாரணம் தருவதாகக் கூறுகிறது. மேலாகத் தடவும் மருந்துகள் பலன் தராவிட்டால் மட்டுமே மாத்திரைகள் பரிசீலிக்கப்பட வேண்டும்.
நோய்த்தொற்று மோசமாக இருந்தால் மற்றும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கால் நகங்களுக்கு பாதிப்பு பரவியிருந்தால் மட்டுமே மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
டெர்பினாஃபைன் அல்லது இட்ராகோனசோல் மாத்திரைகளில் அத்லீட்’ஸ் ஃபூட் பாதிப்பிற்கு சிகிச்சை அளிக்க தேவையான உட்பொருட்கள் உள்ளன.
பொதுவாக, இட்ராகோனசோல் 100 mg என்கிற அளவில் நான்கு வாரங்களுக்கு, ஒரு நாளைக்கு ஒரு முறை எடுத்துக்கொள்ளப்படுகிறது. டெர்பினாஃபைன் மாத்திரையானது இரண்டு வாரங்களுக்கு, 250 mg என்கிற அளவில், பொதுவாக ஒரு நாளைக்கு ஒரு முறை எடுத்துக்கொள்ளப்படுகிறது. நகத்திலும் பூஞ்சை தொற்று இருந்தால், சிகிச்சை செயல்படத் துவங்க அதிக நேரம் எடுக்கும்.
பவுடர்கள்
லோட்ரிமின் AF போன்ற ஆன்ட்டி-ஃபங்கல் பவுடர்கள், அத்லீட்’ஸ் ஃபூட் பாதிப்பிற்கு எதிராக மிகுந்த ஆற்றலுடன் செயல்படுகிறது.
2% மைக்கோனாசோல் நைட்ரேட்டைப் பயன்படுத்துவதன் நன்மை என்னவென்றால், அதில் பூஞ்சையை மேலும் வளரவிடாமல் தடுக்கும் செயல்திறன் மிக்க உட்பொருள் உள்ளது.
இதனுடன் சேர்த்து, இத்தயாரிப்பைப் பயன்படுத்துவதினால் பாதங்களும் உலர்வாக இருக்கும். இத்தயாரிப்பு ஒரு பவுடர் வடிவில் இருப்பதால், கால்களை எளிதாக காய்ந்து போக செய்கின்றன, உலர்வான பாதங்களில் அத்லீட்’ஸ் ஃபூட் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவாகிறது. அவை கால்களை உலர் செய்ய எளிதாக இருக்கும்.
திரவங்கள்
ஹைட்ரஜன் பெராக்சைடைப் போலவே, ரப்பிங் ஆல்கஹால் தோலின் மேற்பரப்பில் உள்ள பூஞ்சையைக் கொல்வதில் உதவுகிறது. இதை நேரடியாக பூஞ்சைத் தொற்றுள்ள இடத்தில் தடவுவது, அல்லது 70% ஆல்கஹால் மற்றும் 30% தண்ணீர் அடங்கிய பாதம் கழுவும் கலவையில் கால்களை 30 நிமிடங்கள் ஊறவைப்பது நல்ல பலன் தரும்.
ஸ்பிரேக்கள்
டோல்னாஃப்டேட் என்கிற பூஞ்சை எதிர்ப்பு காரணி, ஏரோசொல் வடிவில் வரும் ஆன்ட்டி-ஃபங்கல் தயாரிப்புகளில் ஒரு முக்கிய உட்பொருளாக உள்ளது. இவ்வகையான திரவ ஸ்பிரேக்கள் அத்லீட்’ஸ் ஃபூட் பாதிப்பிற்கு சிகிச்சையளித்து, மீண்டும் வராமல் தடுப்பதற்கு உதவுகின்றன.
ஆன்ட்டி-ஃபங்கல் ஸ்பிரேக்கள் பயன்படுத்துவதற்கு விரைவாகவும், எளிதாகவும் இருக்கும். காலுறைகள் மற்றும் ஷூக்களுக்குள் கூட இவற்றைப் பயன்படுத்தி நல்ல பலன்களைப் பெறலாம்.
இருப்பினும், ஒரு ஸ்பிரேயைப் பயன்படுத்துவது அத்லீட்’ஸ் ஃபூட் பாதிப்பிற்கு, குறிப்பாக சிகிச்சையளிப்பதை கடினமாக்கும் என்பதை கவனத்தில் கொள்ளவும். கிரீம் வடிவ மருந்து நேரடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவப்பட்டு செயல்புரிகிறது. ஆனால், ஸ்பிரேக்கள் பரவலாக அடிக்கப்படுவதால், பாதிப்பற்ற சாதாரண தோலில் கூடப் படுகின்றன.
பூஞ்சையின் உயிரணு சவ்வுகளை சிதைப்பதன் மூலம் ஆன்ட்டி-ஃபங்கல் மருந்துகள் செயல்படுகின்றன, இதனால் சவ்வுகள் உடைந்து பூஞ்சைகள் கொல்லப்படுகின்றன.
கிரீம்கள்
அத்லீட்’ஸ் ஃபூட் பாதிப்பிற்கு சிகிச்சையளிப்பதில் கிரீம்கள் சிறப்பாக வேலை செய்கின்றன. ஏனெனில் இது அரிப்பைக் குறைக்கிறது, பூஞ்சை வளர்ச்சியை நிறுத்துகிறது மற்றும் பூஞ்சைகளைக் கொல்கிறது.
வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு, பவுடரை விட கிரீம் பயன்படுத்த மிகவும் சௌகரியமான ஒன்றாக இருக்கும்.
க்ளோட்ரிமசோல் (லோட்ரிசோன்), சைக்ளோபைராக்ஸ் (லோப்ராக்ஸ், பென்லாக்) அல்லது ஈகோனசோல் (ஈகோசா, ஸ்பெக்டாசோல்) உள்ளிட்ட கிரீம்கள் அல்லது ஆயின்மென்ட்களைப் பெற மருத்துவரை சந்தித்து அவரது பரிந்துரைச் சீட்டை பெறுவது கட்டாயமாகும்.
அத்லீட்’ஸ் ஃபூட் பாதிப்புகள் ஆன்ட்டி-ஃபங்கல் மருந்துகள் மற்றும் சுய-பராமரிப்பு முறைகளால் குணமடையாத போது கிரீம்களைப் பயன்படுத்துவது அவசியமாகிறது.
அத்லீட்’ஸ் ஃபூட்டினால் உண்டாகும் சிக்கல்கள்
நகங்களில் ஏற்படும் பூஞ்சை தொற்று
அத்லீட்’ஸ் ஃபூட் பாதிப்பினால் ஆனிகோமைகோசிஸ் அல்லது நகத்தில் பூஞ்சைத் தொற்று ஏற்படலாம். பூஞ்சை தொற்றானது கால்விரல்கள் மற்றும் பாதங்களுக்கு இடையில் உள்ள தோலில் உண்டாகும் போது இந்த நிலை ஏற்படலாம்.
இரண்டாம் கட்ட பாக்டீரியா தொற்று
சில நேரங்களில் அத்லீட்’ஸ் ஃபூட் பாதிப்பானது, பாக்டீரியா தொற்றுடன் இணைந்திருக்கும். அத்லீட்’ஸ் ஃபூட் கடுமையான தொற்றாக இருக்கும் போது - பாக்டீரியாவினால் தோல் மிகவும் எளிதாக பாதிக்கப்பட்டு, வெளிப்புற புண்கள் ஏற்படுகின்றன. இத்தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் பாதம் முழுவதும் பரவும் வாய்ப்பு உள்ளது.
லிம்ஃப் மண்டலம் பாதிக்கப்படுதல்
சிகிச்சை அளிக்கப்படாத அத்லீட்’ஸ் ஃபூட் தொற்று அல்லது பூஞ்சை தொற்றானது, லிம்ஃப் மண்டலத்திற்கும் பரவுகிறது; மற்றும் லிம்ஃப் வெசல்கள் அல்லது லிம்ஃப் நோடுகளில் லிம்ஃப்அங்கிட்டிஸ் அல்லது லிம்ஃப்அடினைட்டிஸ் தொற்றுகளை ஏற்படுத்துகிறது.
செல்லுலைட்டிஸ்
பாதிக்கப்பட்ட தோலினுள் நுழையும் பாக்டீரியாக்கள் செல்லுலைட்டிஸ் பாதிப்பினை ஏற்படுத்துகின்றன, இது தோலில் போதுமான ஆழத்திற்கு ஊடுருவினால் எலும்புத் தொற்று அல்லது இரத்ததில் விஷத்தன்மையை ஏற்படுத்தலாம். இது மிகவும் அரிதானது என்றாலும், இதற்கு உடனடி ஆன்ட்டி-பயாட்டிக் சிகிச்சைகள் தேவைப்படுகிறது.
ஒவ்வாமை
சில நோயாளர்களுக்கு அத்லீட்’ஸ் ஃபூட்டினை உண்டாக்கும் பூஞ்சையினால் தூண்டப்படும், ஒவ்வாமை எதிர்வினைகள் ஏற்படுகின்றன. இந்த ஒவ்வாமை பாதிப்பு கால்கள் அல்லது கைகளில் கொப்புளங்களாக வெளிப்படும்.
முடிவுரை
சேற்றுப்புண் அல்லது அத்லீட்’ஸ் ஃபூட் என்பது பொதுவாக கால்களின் தோலை பாதிக்கும் ஒரு பூஞ்சை தொற்றாகும். அத்லீட்’ஸ் ஃபூட் தொற்றை ஏற்படுத்தும் டெர்மட்டோபைட்ஸ் பூஞ்சைகள், ஜாக் இட்ச் மற்றும் ரிங்வார்ம் பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது.
அதிகமாக வியர்க்கும் நபர்களுக்கு, அல்லது கால்களை வியர்க்க வைக்கும் சாக்ஸ் மற்றும் ஷூக்களை அணிபவர்களுக்கு இந்த தொற்று அடிக்கடி ஏற்படும்.
மாத்திரைகள், கிரீம்கள், பவுடர்கள் மற்றும் ஆயின்மென்ட்கள் அத்லீட்’ஸ் ஃபூட் தொற்றுக்கு பயனளிக்கும் சிகிச்சைகளாகும். பாதங்களை சுத்தமாகவும் உலர்வாகவும் வைத்திருப்பது, நன்கு காற்றோட்டமான ஷூக்களை அணிவது மற்றும் படுக்கை விரிப்புகள், டவல்கள் மற்றும் காலணிகளைப் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவதால், ஒருவர் அத்லீட்’ஸ் ஃபூட் தொற்றிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.