முன்னுரை
மருத்துவர்களின் சிறந்த நண்பர்கள் மூலிகைகள் என குறிப்பிடலாம். காயங்கள் குணப்படுத்துவது மற்றும் திசு மீட்பு, போன்ற உயிரியல் செயல்முறைகள் குறுப்பிட்ட நேரத்தை எடுத்துக்கொள்வதால், அவை சிக்கலான விவகாரங்கள் என கருதப்படுகிறது.
அது போன்ற உயிரியல் செயல்முறைகளுக்கு பல மூலிகைகளைப் பயன்படுத்தி வருகின்றனர். பல்வேறு மூலிகைகளில் பல்வேறு குணாதிசயங்களை கொண்டுள்ளது.
பல மூலிகைகளில் ஒவ்வாமை எதிர்ப்பு(உதாரணம்: வலி நிவாரணம் மற்றும் வீக்கம் மற்றும் வீக்கத்தைக் குறைத்தல்) திறன் கண்டறியபட்டுள்ளது. அத்தகைய மூலிகைகளில் ஒன்று கற்றாழை(அலோ வேரா).
கற்றாழை ஒரு பாரம்பரிய மருத்துவ தாவரமாகும். இந்த மூலிகை கிரீஸ் மற்றும் சீனா போன்ற பல நாடுகளில், கிமு 1500 ஆண்டிலிருந்தே பயன்படுத்தப்பட்டுள்ளது.
பல நூற்றாண்டுகளாக, கற்றாழையைப் பல்வேறு நோய்கள் மற்றும் ஆரோக்கிய பிரச்சனைகளுக்குப், பாரம்பரிய மருந்தாக பயன்படுத்தி வந்துள்ளனர். சில எகிப்திய ராணிகள் கூட, கற்றாழையைத் தங்கள் அழகு முறைகளில் பயன்படுத்தியுள்ளனர்.
எவ்விதத்திலும் புண்கள் மற்றும் நோய்கள் ஏற்படலாம். தீக்காயங்கள், தமனி சார்ந்த நோய்கள், அறுவை சிகிச்சை மற்றும் அதிர்ச்சி காரணமாக தோல் புண்கள் ஏற்படலாம். வியாதிகள் பல வகை, அவற்றை குணப்படுத்துவதில், ஒரு சில மூலிகைகள் முன்னணி வகிக்கின்றன. அவ்வரிசையில் காற்றாழைக்கு முக்கிய பங்கு உண்டு.
காற்றாழை ஒரு சில நோய்களை கட்டுப்படுத்த உதவுகிறது.
கற்றாழையைப் பயன்படுத்துவதால் ஏற்படும் 10 நன்மைகள்
கற்றாழை பல நன்மைகளைக் கொண்டுள்ளது, எனவேதான், இதை ஒரு சில உடல்நல அபாயங்களின் பொழுது கருத்தில் கொள்ளலாம்.
1. இரைப்பை-உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ்( GERD ஆங்கிலத்தில்) நோய் சிகிக்சைக்கு உதவுகிறது
கற்றாழை ஜெல் இரைப்பை குடல் கோளாறுகளுக்குச் சிகிச்சையளிப்பதில் பயனுள்ளதாக இருக்கும். இரைப்பை-உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், பொதுவாக நெஞ்செரிச்சல், வாய்வு, உணவுப் பிடிப்பு, குமட்டல், வாந்தி, அமிலம் மீளுருத்தல் போன்ற அறிகுறிகளை அனுபவிப்பார்கள். அவர்களுக்கு இது ஒரு சரியான மருந்து.
2. செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது
கற்றாழை கூழ் உட்கொள்வது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும். உண்மையில், கற்றாழை நமது செரிமான அமைப்புக்கு சிறந்த இயற்கை மருந்துகளில் ஒன்றாக கருதப்படுகிறது. கற்றாழை சாறு குடிப்பது செரிமான மண்டலத்தை சுத்தப்படுத்தவும் உதவுகிறது.
3. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
கற்றாழை ஒரு சக்திவாய்ந்த மூலிகை. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், எனவே பல்வேறு நோய்த்தொற்றுகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. இதை பயன்படுத்தவதால், உடம்பில் உள்ள ஒரு சில பாக்டீரியாக்கள், வைரஸ்கள் மற்றும் பூஞ்சைகள், போன்றவைகளை அழிக்க முடியும். ஆக்ஸிஜனேற்றியாக இருப்பதைத் விட, இது அழற்சி எதிர்ப்பு சக்தியாகச் செயல்படுகிறது, எனவே இது வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
4. வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
அலோ வேரா(கற்றாழை) சில மவுத்வாஷ்களில் ஒரு பாகமாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ஈறுகளில் இரத்தப்போக்கைக் குறைக்க உதவுகிறது.
இது நுண்ணுயிர் எதிர்ப்பி பண்பு கொண்டது. எனவே, கற்றாழை நமது ஈறுகளில் உள்ள பிளேக்குகளைக் குறைக்கவும் மற்றும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. வாய்வழி குழியில் தொற்று ஏற்படாமல் தடுக்கவும், கற்றாழை உதவுகிறது.
5. இரத்த சர்க்கரை அளவுகளை குறைக்க உதவுகிறது
கற்றாழை வகை 2 நீரிழிவு நோயை திறம்பட குறைக்க உதவுகிறது. கற்றாழை பானத்தை (சர்க்கரை மற்றும் தேன் சேர்க்காமல்) குடிப்பது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது.
6. குத பிளவுகளுக்கான சிகிச்சை
கற்றாழை ஜெல்லின் வேறு சில பயன்பாடுகளில், குத பிளவுகளில் இருந்து நிவாரணம் அளிப்பதும் அடங்கும். குத பிளவு என்பது குத கால்வாய் அல்லது ஆசனவாயில், புறணிக்கு அருகில் கிழிவது. ஆசனவாய் என்பது உடலில் இருந்து மலம் வெளியேறும் பகுதி. குதப் பிளவு மிகவும் வேதனையாக இருக்கும். இது சரியான நேரத்தில் மற்றும் சரியான வகையில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், பின்பு அதற்கு அறுவை சிகிச்சைதான் தேவைப்படும்.
குதப் பிளவுக்கு சிகிச்சையளிக்க, கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்தலாம். குத பிளவுகளுக்கு பயன்படுத்த, தண்டுகளிலிருந்து கற்றாழை ஜெல்லை பிரித்தெடுத்து, அதை நேரடியாக பாதிக்கப்பட்ட பகுதிக்கு தினமும் தடவலாம். இந்த சிகிச்சை முறையை, குதப் பிளவு குணமாகும் வரை தொடரலாம்.
7. சருமத்தை சரி செய்கிறது
கற்றாழையைச் சருமத்தின் மீது பயன்படுத்தவதால் பல நன்மைகள் ஏற்படும். இது சருமத்தை ஈரப்பதத்துடன் பராமரிக்கிறது மற்றும் சுருக்கங்களைத் தடுக்கிறது.
கற்றாழை ஜெல்லின் மெல்லிய அடுக்கை முகத்தில் தடவினால், அது சூரிய ஒளி உறிஞ்சுவதைக் குறைத்து, சருமத்தின் ஒட்டுமொத்த பொலிவை மேம்படுத்தும்.
சூரிய ஒளியினால் சருமத்தின் மீது ஏற்பட்ட கருமையைக், கற்றாழை விரைவாக குணப்படுத்துகிறது. ஆராய்ச்சியின் படி, கற்றாழை ஜெல் முதல் மற்றும் இரண்டாம் நிலை தீக்காயங்களுக்கு சிகிச்சையளிப்பதில் பயனுள்ளதாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
8. உங்கள் தலைமுடியைப் பலப்படுத்துகிறது
உங்கள் தலைமுடியில் பயன்படுத்தப்படும் கற்றாழை ஜெல் அதை வலுவாகவும், பளபளப்பாகவும் மாற்ற உதவுகிறது. அலோ வேரா(கற்றாழை) ஜெல், தலைமுடியை ஸ்டைலிங் செய்ய பயன்படுத்தப்படுகிறது.
கற்றாழை ஜெல் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம் முடி வளர்ச்சியை அதிகரிக்கச் செய்கிறது. பொடுகைக் குறைக்க இது பயனுள்ளதாக இருக்கும். இதுபோன்ற காரணங்களுக்காக தான், இது பல ஷாம்புகள் மற்றும் ஹேர் கண்டிஷனர்களில் பயன்படுத்தப்படுகிறது.
இருப்பினும், கற்றாழை பயன்படுத்துதல், உலர் உச்சந்தலை(dry scalp) மற்றும் ஒவ்வாமை எதிர்வினைகள் போன்ற ஒரு சில நிரூபிக்கப்படாத பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கிறது.
9. சொரியாசிஸ் சிகிச்சை
சோரியாசிஸ் நோயாளிகளுக்கு அலோ வேரா(கற்றாழை) ஜெல் பயன்படுத்துதல், சிவத்தல் மற்றும் ஸ்கேலிங் கோடுகளை குறைக்க உதவுகிறது. மேலும் அது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும்.
10. காயம் குணமடைய தூண்டுகிறது
கற்றாழைக் காயங்களை ஆற்றும் குணசார்புடையது, அதனால் தான் இது உடலின் பாதிக்கப்பட்ட பகுதியில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. கற்றாழைப் பூச்சி கடித்தல், தீக்காயங்கள், வெட்டுக்கள் மற்றும் அரிக்கும் தோலழற்சி போன்றவைக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது.
எவ்வாறு கற்றாழை, உடல் எடையைக் குறைக்க உதவுகிறது?
காலையில் எழுந்தவுடன் கற்றாழை சாறு குடித்தால் உடல் எடை வெகுவாக குறையும். இது கொழுப்பை எரிப்பதன் மூலம் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.
இது நம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி நமது செரிமான அமைப்பை சுத்தப்படுத்துகிறது. இவ்வாறு, கற்றாழை சாறு உடல் எடையை குறைக்க உதவுகிறது.
பறித்த காய்கறிகள் மற்றும் பழங்களின் ஆயுளை, எவ்வாறு கற்றாழையை வைத்து அதிகரிக்கலாம்?
சில காய்கறிகள் மற்றும் பழங்களை, இன்னும் சிறிது காலம் பாதுகாக்க விரும்பினால், அவைகளை அலோ வேரா(கற்றாழை) ஜெல் வைத்து பாதுகாக்கலாம்.
அவ்வாறு பாதுகாக்கவேண்டிய பழங்கள் மற்றும் காய்கறிகள் மீது, அலோ வேரா ஜெல்லை(கற்றாழைச் சாற்றை) தடவி விட வேண்டும். இவ்வாறு செய்வதனால், பாக்டீரியா மற்றும் பூஞ்சையின் வளர்ச்சியைத் தடுக்கலாம், அதன் மூலம் அந்த காய்கறிகள் மற்றும் பழங்கள் கெட்டுப்போகாமல் இருக்கும்.
அலோ வேரா ஜெல்(கற்றாழை சாறு) சாப்பிடக்கூடியது, கண்ணுக்கு தெரியாதது மற்றும் மணமற்றது, ஆகையால் அதைப் பயன்படுத்தும் பொழுது, பழங்கள் மற்றும் காய்கறிகளின் சுவையைப் பாதிக்காது.
அலோ வேரா ஜெல்லை, பப்பாளி பழங்களின் மீது பூசி குளிர்சாதனக் கிடங்கில் வைத்து விட்டு, அப்பழங்களைப் மீண்டும் பயன்படுத்திய பொழுது, அவை நீண்ட நாட்கள் கெடாமல் இருந்ததாக, ஒரு ஆராய்ச்சியின் முடிவு குறிப்பிட்டுள்ளது. அலோ வேரா பற்றி மேலும் அறிய எங்கள் வலைத்தளத்தையும் நீங்கள் பார்க்கலாம்.
கற்றாழை(அலோ வேரா) என்றால் என்ன?
கற்றாழை(அலோ வேரா) மிகவும் பழமையானச் சதை நிறைந்த தாவரமாகும், இதில் 420 வெவ்வேறு தாவர இனங்கள் உள்ளன.
இந்திய மருத்துவத்தில் கற்றாழை பல நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இந்த மூலிகை, ஆரோக்கியம், அழகு, தோல் பராமரிப்பு மற்றும் மருத்துவம், போன்ற துறைகளில் பயன்படுத்த தக்கவையாக உள்ளதால், இதன் புகழ் ஓங்கி நிற்கிறது.
ஆங்கிலத்தில், அலோ வேரா என்பது கற்றாழையாகும். அலோ வேரா, அலோ மற்றும் வேரா ஆகிய இரண்டு சொற்களின் கலவையாகும். கற்றாழையின் "அலோ" சொல் அரபு வார்த்தையான "அலோ" என்பதிலிருந்து வந்தது, அதாவது "பிரகாசிக்கும் கசப்பான துகள்" என்பது அதன் பொருள் ஆகும். "வேரா" என்பது லத்தீன் வார்த்தையான "வேரா" என்பதிலிருந்து பெறப்பட்டது, அதற்கு "உண்மை" என்பது அர்த்தம்.
விஞ்ஞான ரீதியாக, இது கட்டமைப்பில் கள்ளிச்செடியை ஒத்திருக்கிறது. கற்றாழை ஒரு மூலிகை தாவரமாகும், இது சதைப்பற்றுள்ள, அடர்த்தியான மற்றும் நீண்ட இலைகளைக் கொண்ட வற்றாத வகையைச் சார்ந்தது.
எகிப்து, கிரீஸ், மெக்சிகோ, சீனா மற்றும் ஜப்பான் போன்ற பல நாடுகள் பல நூற்றாண்டுகளாக அலோ வேராவைப் பயன்படுத்துகின்றன. இந்தியாவில், அலோ வேராவை(கற்றாழையை), வியாபாரம் மற்றும் தொழில் விருத்திக்காக, ஒரு சில வியாபாரிகள் கண் திரிஷ்டியைக் கழித்து, வியாபாரம் செய்யும் இடத்தில், நற்சக்தி பெருக்குவதற்கு, பாரம்பரியமாக பயன்படுத்தி வந்துள்ளனர். அலோ வேரா(கற்றாழை) ஆஸ்போடெலேசியே (லிலியாசியே) குடும்பத்தைச் சேர்ந்தது. இவை ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவில் வறண்ட பகுதிகளில் செழித்து வளரும்.
அலோ வேராவின்(கற்றாழை) ஊட்டச்சத்து விளக்கப்படம்
கற்றாழை சாற்றில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, இது ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக போராடுகிறது. இது படிப்படியாக மனித உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கிறது. மேலும் இது நீரிழிவு, இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. கற்றாழையில் உள்ள ஊட்டச்சத்துக்களின் பட்டியல் இங்கே.
- வைட்டமின் சி
- வைட்டமின் ஏ
- வைட்டமின் ஈ
- பீட்டா கரோட்டின்
- ஃபோலிக் அமிலம்
- கால்சியம்
- மெக்னீசியம்
- கலோரிகள்
- புரதம்
- கொழுப்பு
- கார்போஹைட்ரேட்டுகள்
- ஃபைபர்
கற்றாழை ஜூஸ்(அலோ வேரா ஜூஸ்)
கற்றாழை ஜூஸை(அலோ வேரா ஜூஸ்) தொடர்ந்து பருகி வந்தால், நமது உடலின் கலோரிகள் எரிக்கப்பட்டு, உடல் எடை குறையும். கற்றாழை ஜூஸை குடித்தால், உடலில் உள்ள நச்சுகள் நீங்கி, குடல் ஆரோக்கியமாகும். அதைத்தவிர, கற்றாழையின் குணாதிசயம் மலச்சிக்கலுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. கற்றாழை ஜூஸ் ஆன்லைன் மூலமாக அல்லது கடைகளில் சென்று நேரடியாக வாங்கிப் பயன்படுத்தலாம்.
அலோ வேரா ஜூஸ்(கற்றாழை சாறு) என்னென்ன சத்துக்களைக் கொண்டுள்ளது?
மெக்னீசியம் நிறைந்த, கற்றாழை சாறு, அதிக ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கி உள்ளது. மெக்னீசியம் ஒரு முக்கிய தாது, அது இதய துடிப்பைக் கட்டுப்படுத்துவதிலும் மற்றும் இரத்த அழுத்தத்தை பராமரிப்பதிலும், முக்கிய பங்கு ஆற்றுகிறது.
1 கப் அலோ வேரா ஜூஸ் (கற்றாழை சாறு), உள்ளடிக்கிய சத்துக்கள்:
- கலோரி - 131 கிலோ கலோரி
- கொழுப்பு - 0.3 கிராம்
- கார்போஹைட்ரேட் - 31.92 கிராம்
- சர்க்கரை - 24.75 கிராம்
- ஃபைபர் - 0.5 கிராம்
- புரதம் - 0.89 கிராம்
- சோடியம் - 5 மில்லி கிராம்
- கொலஸ்ட்ரால் - 0 மில்லி கிராம்
- பொட்டாசியம் - 322 மில்லி கிராம்
அலோ வேரா ஜூஸ்(கற்றாழை ஜூஸ்) தயாரிப்பது எப்படி?
கற்றாழை சாறு(அலோ வேற ஜூஸ்), கடைகளில், அதிகமாக தேடப்படும் பொருள். அதை ஆஃப்லைன்(நேரடியாக) அல்லது ஆன்லைன் மூலமாக எந்த மளிகைக் கடையிலும் வாங்கலாம். ஆனால் நீங்கள் அதை வீட்டிலேயே சுலபமாக தயார் செய்யலாம்.
அதற்குத் தேவையான பொருட்கள்:
1) கற்றாழை இலை
2) தேன் அல்லது எலுமிச்சைச்சாறு
அலோ வேரா சாறு தயாரிக்கும் முறை
வீட்டில் தயாரிக்கப்படும் அலோ வேரா ஜூஸ் பருகுவது, மிகவும் ஆரோக்கியமானது. ஏனெனில், அதில் உள்ள சத்துகள் நேரடியாக, மனித உடலுக்குப் போய் சேரும்.
- முதலில், கற்றாழை இலையை எடுத்து கொள்ளுங்கள்.
- பின்னர், ஒரு கத்தியை வைத்து கற்றாழையின் தோலை மெதுவாக அகற்றவும். தோலை அகற்றும் போது கவனமாக செயல்படவும், ஏனெனில் கற்றாழை ஜெல் கத்தியைச் சுலபமாக வழுக்கி விடும்.
- இப்போது தண்ணீர் குழாயின் அடியில் வைத்து, தண்ணீரைத் திறந்து, குளிர்ந்த தண்ணீரில் ஜெல்லை அலசி விடவும். இந்த சமயம், ஜெல்லை உள்ளடக்கிய மஞ்சள் நிற லேடெக்ஸை அகற்றி விடவும்.
- பின்னர், ஸ்ட்ரைனர் கொண்டு அதிகமான நீரை வடிகட்டவும். உங்களிடம் ஸ்ட்ரைனர் இல்லையென்றால், கற்றாழை ஜெல்லை குளிர்ந்த நீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து, தேவையற்ற தண்ணீரை மெதுவாக கீழே ஊற்றவும். அப்போது மீதி இருப்பது, தங்களின் சுத்தமான கற்றாழை சாறு மட்டுமே.
- அவ்வாறு எடுக்க பட்ட கற்றாழை சாறை, 8 கப் தண்ணீருடன் கலக்கவும். பிளெண்டர் வைத்திருப்பவர்கள், கற்றாழை சாற்றைப் பிளெண்டரில் போட்டு, அச்சாறு மென்மையாகும் வரை பிளெண்டரைச் செயல்படுத்துங்கள். பிளெண்டர் இல்லாதவர்கள், வீட்டில் உள்ள சமையல் கரண்டியில், கற்றாழை சாற்றைக் கலக்குங்கள். அவ்வளவுதான், உங்கள் அலோ வேற ஜூஸ் தயார் ஆகி விட்டது.
- இந்த கற்றாழை சாற்றைக்(அலோ வேற ஜூஸ்) அப்படியே குடிக்க முடிந்தவர்கள் அப்படியே குடித்து விடுங்கள், ஏனெனில் கற்றாழை சாறு மிகவும் கசப்பாக இருக்கும்.
- இல்லையெனில், அதனுடன் எலுமிச்சைச்சாறு அல்லது தேன் கலக்கவும். ஒரு புதிய எலுமிச்சை அல்லது ஒரு டீஸ்பூன் தேன் சேர்க்கலாம், இவை சுவையை மெருகூட்டும். பின்னர் பருகி பாருங்கள்.
- இதை இரண்டு நாட்கள் வரை குளிர்சாதனப்பெட்டியில் வைத்துக் குடிக்கலாம்.
முடிவுரை
கற்றாழை பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது, எனவேதான் இது உலகின் தாவரங்களின் பட்டியலில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.
கற்றாழை ஒரு சில நோய்களுக்கு சிகிச்சையளிப்பதால், இதைக்கொண்டு மனித உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். இருப்பினும், கற்றாழையை வாய்வழியாக உட்கொள்வது வயிற்று வலி மற்றும் பிடிப்புகள் போன்ற நிலைமைகளுக்கு வழிவகுக்கும்.
கற்றாழையை வாய்வழியாக நுகர்வுவது கடுமையான ஹெபடைடிஸின் போன்ற பல நிகழ்வுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. அலோ வேரா(கற்றாழை) ஜெல் மற்றும் லேடெக்ஸ் போன்றவற்றை, கர்ப்ப காலத்தில் வாய் வழியாக உட்கொள்வது பாதுகாப்பற்றதாகக் கருதப்படுகிறது. அத்தகைய சந்தர்ப்பங்களில், கற்றாழையைப் பயன்படுத்துவதற்கு முன், நீங்கள் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனையைப் பெறலாம்.
எனவே, மக்கள் தங்கள் செரிமான பிரச்சனைகளைத் தீர்க்க கற்றாழையைக் குறைந்த அளவில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். தோல் பிரச்சனைகள் உடையவர்கள் குறிப்பிட்ட அளவில் மட்டுமே கற்றாழையைப் பயன்படுத்தலாம். மேலும், கற்றாழையால் ஓவ்வாமையை உணர்ந்தால், பயன்படுத்த வேண்டாம்.
அதிகமாக கேட்கப்படும் வினாக்கள்
1) கற்றாழையை யார் அடிக்கடி உட்கொள்ளக்கூடாது?
சிறுநீரக கோளாறுகள்
இதய நிலைகள்
மூலநோய்
குடல் அடைப்பு
கிரோன் நோய்
சிறுநீரக கோளாறுகள்
அல்சரேட்டிவ் பெருங்குடல் அழற்சி
நீரிழிவு நோய்
2) கற்றாழை வாய்வழியாக உட்கொள்வதால் ஏற்படும் பக்கவிளைவுகள் யாவை?
எலக்ட்ரோலைட் சமநிலையின்மை
தசை பலவீனம்
வயிற்று வலி
சிறுநீரக பிரச்சனைகள்
குறைந்த பொட்டாசியம்
வயிற்றுப்போக்கு