வயிற்று வலி என்றால் என்ன?
வயிற்று வலி என்பது மார்புக்கும் இடுப்புக்கும் இடையில் எங்கேனும் ஏற்படும் வலியாகும்.
அடிவயிற்றில் அசௌகரியம் அல்லது பிற விரும்பத்தகாத உணர்வுகளை உண்டாக்கும் வலி என்றும் இதனைக் கூறலாம். நம்மில் பெரும்பாலோர் நம் வாழ்க்கையின் ஏதோவொரு கட்டத்தில் வயிற்று வலியை உணர்ந்திருப்போம்.
அடிவயிற்று வலி அல்லது வயிற்று வலி பிரச்சினைகள் போன்ற பெரும்பாலான வயிறு சார்ந்த அசௌகரியங்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சையளிக்க முடியும். இருப்பினும், சில சந்தர்ப்பங்களில், இது கடுமையான உடல்நல பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம், அப்போது உடனடி மருத்துவ சிகிச்சை கட்டாயமாகிறது.
வயிற்று வலியின் வகைகள்
வலது பக்க மேற்புறத்தில் ஏற்படும் வலி (RUQ)
கணையம், கல்லீரல், பித்தப்பை, வலது சிறுநீரகம் மற்றும் குடல் ஆகிய அனைத்தும் வலது பக்க மேல் கால் பாகம் (RUQ) பகுதியில் அமைந்துள்ளன. வலது விலா எலும்புகளின் கீழ் இருக்கும் உறுப்புகளில் ஒன்றை அல்லது சுற்றியுள்ள திசுக்களை ஏதேனும் உடல்நலப் பிரச்சினை பாதித்திருந்தால் இத்தகைய வலி ஏற்படலாம்.
இடது பக்க மேற்புறத்தில் ஏற்படும் வலி (LUQ)
இடது பக்க மேல் கால் பாகம் (LUQ) என்பது அடிவயிற்றின் இடது பக்க மேற்புறத்தில் அமைந்துள்ள வயிற்றுப் பகுதியாகும். இதில் ஏற்படும் வலியை உங்கள் விலா எலும்புக்கு மிக அருகில் இடது பக்கத்தில் நீங்கள் உணர்வீர்கள்.
வலது பக்க கீழ் புறத்தில் ஏற்படும் வலி (RLQ)
உங்கள் விலா எலும்புகளின் அடிப்பகுதியில் இருந்து உங்கள் பியூபிக் முடி வரை நான்கு கால் பாகங்களாக (குவாட்ரண்ட்) பிரிக்கப்பட்டுள்ள வயிற்றுப் பகுதியின் – வலது கீழ் கால் பாகம் (RLQ) என்பது உங்கள் தொப்புளுக்கு கீழே, வலது பக்கத்தில் உள்ள கால் பகுதியைக் குறிக்கும்.
இடது கீழ் புறத்தில் ஏற்படும் வலி
உங்கள் விலா எலும்புகளின் அடிப்பகுதியில் இருந்து உங்கள் பியூபிக் முடி வரை நான்கு கால் பாகங்களாக (குவாட்ரண்ட்) பிரிக்கப்பட்டுள்ள வயிற்றுப் பகுதியின் – இடது கீழ் கால் பாகம் (RLQ) என்பது உங்கள் தொப்புளுக்கு கீழே, இடது பக்கத்தில் உள்ள கால் பகுதியைக் குறிக்கும்.
வயிற்று வலி ஏற்படுவதற்கான காரணங்கள்
வயிற்று வலியை ஏற்படுத்தும் சில பொதுவான காரணங்கள் பின்வருமாறு:
மலச்சிக்கல்
வயிற்று வலியுடன் கூடிய மலச்சிக்கல் மிகவும் பொதுவான ஒன்றாகும். வயிற்றில் வாயு உருவாவது, அல்லது குடலில் மல வெளியேற்ற இயக்கம் சீரின்றி தூண்டப்படுவது போன்றவை மலச்சிக்கலை உண்டாக்கும் பொதுவான காரணமாகும். வயிற்று வலி ஏற்பட, மலச்சிக்கல் ஒரு முக்கிய காரணியாக உள்ளது.
மலச்சிக்கல் காரணமாக உங்கள் வயிற்றில் அசௌகரியம் ஏற்பட்டால், உங்கள் அடிவயிறு முழுவதும் வாயுவால் கடுமையான வலி இருக்கும். மலச்சிக்கல் உள்ளவர்கள் பெரும்பாலும் வயிறு உப்புசமாகவும், முழுவதும் நிரம்பியதாகவும் உணர்வார்கள். இந்த பிரச்சினை உள்ளவர்களின் வயிறு வீங்கியது போலக் காணப்படும்.
எரிச்சலூட்டும் குடல் அழற்சி (இரிட்டபில் பவல் சின்ட்ரோம்)
இரிட்டபில் பவல் சின்ட்ரோம் (IBS) எனப்படும் எரிச்சலூட்டும் குடல் அழற்சி நோயானது, பெருங்குடலை பாதிக்கிறது மற்றும் வயிற்று வலியை ஏற்படுத்தும் பொதுவான உடல்நலப் பிரச்சினையாகவும் உள்ளது. தசைப்பிடிப்பு, வயிற்று வலி, வயிறு உப்புசம், வாயுத்தொல்லை, வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல் ஆகியவை இதன் பொதுவான அறிகுறிகளாகும். IBS என்பது வயிற்று வலி, மற்றும் குடலின் மல வெளியேற்ற இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்களினால் வகைப்படுத்தப்படும் ஒரு நீண்டகால உடல்நலப் பிரச்சினையாகும்.
உணவு ஒவ்வாமை அல்லது உடலுக்கு ஏற்றுக்கொள்ளாமை
நமது உடலின் நோயெதிர்ப்பு அமைப்பானது, நாம் உட்கொள்ளும் உணவில் உள்ள சில புரதங்களுக்கு எதிராக வினைபுரியும்போது, உணவு சார்ந்த ஒவ்வாமை ஏற்படுகிறது. உணவு ஒவ்வாமையானது சிறிய பிரச்சினை முதல் தீவிரமான பாதிப்பு வரை எந்த நிலையிலும் இருக்கலாம். இது அனாஃபிலாக்ஸிஸ் எனப்படும் உயிருக்கு ஆபத்தான அறிகுறிகளையும் ஏற்படுத்துகிறது; இதில் ஆபத்தான சுவாசப் பிரச்சினைகள் மற்றும் அதிர்ச்சி ஏற்படுவதும் உள்ளடங்கும்.
உணவு விஷமாதல் (ஃபுட் பாயிசனிங்)
ஃபுட் பாயிசனிங் எனப்படும் உணவு விஷமாதல் என்பது ஒரு நோயெதிர்ப்பு வினையாகும்; உங்கள் உடலுக்கு பொருந்தாத சில உணவுகளை உட்கொண்ட சிறிது நேரத்திற்குப் பிறகு இது நிகழ்கிறது. உணவு ஒவ்வாமையானது மோசமான அறிகுறிகளை ஏற்படுத்தலாம், அல்லது சிலருக்கு அனாபிலாக்ஸிஸ் எனப்படும் உயிருக்கு ஆபத்தான எதிர்வினையை கூட ஏற்படுத்தலாம்.
வயிற்று ஃப்ளூ
வைரஸ் இரைப்பை குடல் அழற்சி (கேஸ்ட்ரோஎன்டரிட்டிஸ்) என்பது ஒரு வகையான குடல் தொற்று பாதிப்பாகும்; இது நீர்த்த வயிற்றுப்போக்கு, வயிற்று வலி அல்லது தசைப்பிடிப்பு, குமட்டல் அல்லது வாந்தி ஆகியவற்றை ஏற்படுத்தும், மற்றும் சில நேரங்களில் காய்ச்சலையும் உண்டாக்கும். வைரல் கேஸ்ட்ரோஎன்டரிட்டிஸ் பாதிப்பு பெரும்பாலும் ஸ்டமக் ஃப்ளூ என்று அழைக்கப்படுகிறது. வயிற்று ஃப்ளூ மற்றும் உணவு விஷமாதல் ஆகிய இரண்டு காரணங்களாலும் வயிற்று வலி ஏற்படலாம்.
மாதவிடாய் தசைப் பிடிப்புகள்
பெண்களுக்கு ஏற்படும் அடிவயிற்று வலி என்பது மகளிரை மட்டும் பாதிக்கும் ஒரு பொதுவான உடல்நலப் பிரச்சினையாகும். இது மாதவிடாய் தசைப் பிடிப்புகளில் துவங்கி, குடல் பிரச்சினைகள் வரை எப்படி வேண்டுமானாலும் வெளிப்படலாம். இது பெரும்பாலும் அனைத்து வயது வரம்பிலும் உள்ள பருவமடைந்த பெண்களுக்கு ஏற்படும் ஒரு பொதுவான பாதிப்பாகும்.
வயிற்று வலியின் அறிகுறிகள்
கடுமையான வலி
மலச்சிக்கல், எரிச்சலூட்டும் குடல் அழற்சி(IBS), உணவு ஒவ்வாமை, லாக்டோஸை உடல் ஏற்காமை, உணவு விஷமாதல் மற்றும் வயிற்றில் ஏற்படும் வைரஸ் தொற்று போன்ற போன்ற அறிகுறிகள் அடிவயிற்றில் கடுமையான வலியை உண்டாக்குகின்றன.
காய்ச்சல்
வயிற்று வலி காரணமாக ஏற்படும் காய்ச்சலானது - எரிச்சலூட்டும் குடல் அழற்சி(IBS), இஸ்கிமிக் கோலைட்டிஸ் (பெருங்குடல் அழற்சி), பேன்கிரியாட்டிடிஸ் (கணைய அழற்சி), பாலிஆர்டெரிடிஸ் நோடோசா (PAN), ஃபேமிலியல் மெடிடெரெனியன் காய்ச்சல் (FMF), போர்ஃபிரியா மற்றும் சிக்கில் செல் க்ரைசிஸ் போன்ற தொற்று அல்லாத பாதிப்புகளின் அறிகுறியாக இருக்கலாம்.
மலதத்தில் இரத்தம் கலந்திருத்தல்
மூல நோய், ஆசனவாய் பிளவுகள், எரிச்சலூட்டும் குடல் அழற்சி நோய் (IBD), வயிற்று புண்கள் (அல்சர்) மற்றும் பெருங்குடல் (கோலன்) புற்றுநோய் போன்ற உடல்நல பாதிப்புகளின் காரணமாக மலக்குடலில் இரத்தப்போக்கு ஏற்படலாம். மலக்குடலில் ஏற்படும் இரத்தப்போக்கானது பொதுவாக டாய்லெட் பேப்பரில், கழிவறை பவுலில் உள்ள தண்ணீரில், அல்லது உங்கள் மலத்தில் தென்படும்.
தொடர் குமட்டல் மற்றும் வாந்தி
குமட்டல் மற்றும் வாந்தி ஆகியன, நாட்பட்ட அல்லது நீண்டகால வயிற்று பிரச்சினைகளின் பொதுவான அறிகுறிகளாகும். வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் மற்றும் வயிற்று வலி ஆகியவை இதன் பிற அறிகுறிகளாகும்.
அதிகப்படியான உணவினை சாப்பிடுதல், குடல் நோய்த்தொற்றுகள், மன அழுத்தம் & பதட்டம், மற்றும் தொடர்ச்சியான இரைப்பை குடல் நோய்கள் போன்றவை குமட்டல் மற்றும் வாந்தி ஏற்படுவதற்கான சாத்தியமான காரணங்களாகும்.
பொதுவாக, குமட்டல் மற்றும் வயிற்று வலி ஆகியன தாமாகவே சரியாகும், இது ஒரு வந்துபோகும் பாதிப்பாகும். அதேசமயத்தில்,தொடர்ச்சியாக இந்த அறிகுறிகள் தென்படும் நபர்கள் சிகிச்சைக்காக மருத்துவரை அணுக வேண்டும்.
எடை இழப்பு
எடை இழப்புடன் கூடிய நீண்டகால வயிற்று வலி என்பது ஆபத்தான நோயின் அறிகுறியாக இருக்கலாம்; உங்கள் மருத்துவரால் இது உடனடியாக அடையாளம் காணப்பட்டு, உரிய சிகிச்சையளிக்கப்பட வேண்டும்.
இரைப்பை குடல் சார்ந்த அசௌகரியத்தைத் தூண்டும் இன்ஃப்ளூயன்ஸா அல்லது ஜலதோஷம் போன்ற குறுகிய கால நோய்களாலும் கூட எடை இழப்பு ஏற்படலாம்.
மனச்சோர்வு, வயிற்றுப்போக்கு, வாய் (அல்சர்) புண்கள் மற்றும் வைரஸ் தொற்றுகள் போன்ற அனைத்தும் எதிர்பாராமல் ஏற்படும் எடை இழப்பிற்கான பொதுவான காரணங்களாகும்.
மஞ்சள் நிறத்தில் காணப்படும் சருமம்
பொதுவாக இரத்தத்தில் அதிக அளவு பிலிரூபின் இருக்கும்போது, மஞ்சள் காமாலை (ஜான்டிஸ்) ஏற்படுகிறது; சருமம் மஞ்சள் நிறமாக மாறுவதற்கு இது மிகப் பொதுவான ஒரு காரணமாகும். பழைய அல்லது சேதமடைந்த சிவப்பு இரத்த அணுக்கள் உடைந்து போகும்போது, உடலானது பிலிரூபினை உற்பத்தி செய்வதால், அதன் மூலம் மஞ்சள் நிறம் உருவாகிறது.
கணையம் அல்லது பித்தநீர் குழாயில் பரவும் (கேன்சர் போன்ற) பாதிப்புகளால் தூண்டப்படும் மஞ்சள் காமாலையின் மிகவும் பொதுவான அறிகுறியாகவும் வயிற்று வலி ஏற்படலாம். ஒருவருக்கு ஏற்பட்டுள்ள கல்லீரல் நோயின் காரணமாகக் கூட மஞ்சள் காமாலை ஏற்படலாம்.
உங்கள் அடிவயிற்றை தொடும்போது அதிக வலி ஏற்படலாம்
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்புகளில் இன்ஃப்ளமேஷன் அல்லது பிற கடுமையான பாதிப்புகளின் காரணமாக வயிற்றை தொட்டால் அதிக வலியை உணர முடியும். உணர்திறன் அதிகமுள்ள இப்பகுதியைச் சுற்றி, உள்ளுறுப்புகள் ஓரிடத்தில் அமைந்துள்ளன.
அடிவயிற்றில் வீக்கம்
உங்கள் வயிற்றுப் பகுதியானது இயல்பை விட பெரியதாகக் காணப்பட்டால் அது வயிற்று வீக்கமாகும். இது லார்ஜ் பெல்லி (பெருத்த வயிறு) அல்லது ப்ரோட்ரூடிங் அப்டமன் (முன்னோக்கி உப்பிய வயிறு) என்றும் அழைக்கப்படுகிறது. சங்கடத்தை ஏற்படுத்தும் அல்லது வலிமிகுந்த உப்புசமே, வயிறு வீங்குவதற்கான பொதுவான காரணமாகும். பல்வேறு காரணிகளால் ஏற்படும், இந்த வயிற்று வீக்கம் மிகவும் பரவலாக ஏற்படும் ஒரு பாதிப்பாகும்.
IBS காரணமாக ஏற்படும் வீக்கம், நெஞ்செரிச்சல், மலச்சிக்கல் மற்றும் மாதவிடாய் தசைப் பிடிப்புகள் ஆகியவையும் அடிவயிற்று வீக்கத்திற்கான பொதுவான காரணங்களாகும்.
வயிற்று வலிக்கான சிகிச்சைகள்
குடலுக்கு ஓய்வளித்தல்
க்ரோன்’ஸ் & கோலைட்டிஸ் ஃபவுண்டேஷனின் கூற்றுப்படி, குடலுக்கு ஓய்வளித்தல் என்பது எதையும் உட்கொள்ளாமல் உங்கள் செரிமான மண்டலத்திற்கு ஓய்வு கொடுப்பதை குறிக்கிறது. அதாவது உணவு உண்பதை நிறுத்த வேண்டும் அல்லது, பிஸ்கட்கள் அல்லது வாழைப்பழங்கள் போன்ற எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும்.
நீர்ச்சத்தினை அளித்தல்
உடலில் ஏற்படும் நீரிழப்பு காரணமாக கடுமையான வயிற்று வலி ஏற்படலாம். போதுமான நீர்ச்சத்தினை வழங்குவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து அனைவருக்கும் எடுத்துரைக்க வேண்டும்.
மலத்தை உற்பத்தி செய்ய உடலில் போதுமான நீர் இல்லாமல் போனால், நீரிழப்பின் விளைவாக மலச்சிக்கல் உருவாகலாம். இதனால் வயிற்றுப் பிடிப்பு, வீக்கம் மற்றும் அடிவயிற்றில் வலி ஏற்படுகிறது. நீரிழப்பு என்பது போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது மட்டும் ஏற்படுவதில்லை. உடலில் சரியான எலக்ட்ரோலைட் சமநிலை இல்லாத பட்சத்திலும் உங்களுக்கு நீரிழப்பு ஏற்படலாம்.
வெதுவெதுப்பான ஒத்தட சிகிச்சை
உங்கள் வயிற்றில் வலிக்கும் இடத்தில் ஹீட்டிங் பேடை வைப்பது வலிக்கு ஒரு எளிய தீர்வாக இருக்கும். கதகதப்பு, உங்கள் வெளிப்புற வயிற்று தசைகளை தளர்த்தும் மற்றும் வயிற்றின் செரிமான செயல்முறையையும் நன்கு ஊக்குவிக்கும். பொதுவாக இப்படி செய்யும்போது படுத்துக் கொள்வது நல்லது. ஹீட்டிங் பேடினை 15 நிமிடங்கள் வயிற்றின் மீது வைக்கவும்.
வயிற்று வலியைப் போக்க ஹீட் கம்ப்ரஸ் முறையையும் பயன்படுத்தலாம். ஒரு ஹாட் வாட்டர் பேக் அல்லது ஏலக்ட்ரிக் ஹீட் பேடை பயன்படுத்தி உங்கள் வயிற்று தசைகளை தளர்த்தி, வலியைப் போக்கலாம். ஒரு கப் அரிசி வடித்த நீரைக் குடிப்பதாலும் வயிற்றுப் பிரச்சினைகள் நீங்கும்.
வீட்டு வைத்தியம்
ஹீட்டிங் பேட் அல்லது சூடான துணியைக் கொண்டு உங்கள் வயிற்றுக்கு கதகதப்பினை அளிக்கவும். அந்த வெப்பமானது, தசையை தளர்த்தி, தசைப்பிடிப்பிற்கு நிவாரணம் தர உதவுகிறது. எப்சம் உப்புகள் கலந்த நீரில் குளிப்பது அல்லது, வெந்நீரில் குளிப்பதால் உங்களது வயிற்று வலியைப் போக்குவதில் நல்ல பலன் கிடைக்கும். உங்கள் வயிற்று வலி நீங்கவில்லை எனில் - வாழைப்பழங்கள், அரிசி, ஆப்பிள் சாஸ் மற்றும் டோஸ்ட் ஆகியவற்றைக் கொண்ட "BRAT" உணவு முறையை முயற்சி செய்யலாம். அதனுடன் சேர்த்து, மிளகுக்கீரை (பெப்பர்மின்ட்), ஆப்பிள் சிடர் வினிகர் மற்றும் இஞ்சி போன்ற பிற உணவுகளின் மூலமாகவும் நிவாரணம் பெற முயற்சிக்கலாம்.
வயிற்று வலியோடு தொடர்புடைய ஆபத்து காரணிகள்
முதுமைப் பருவம்
வயதானவர்களுக்கு வயிற்று வலி ஏற்பட ஒரு பொதுவான காரணம் தான் ‘டைவர்டிக்யூலிட்டிஸ்’. இந்த பாதிப்பு ஏற்படின், நோயாளர்கள் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டு, வெளிநோயாளராக அனுமதிக்கப்பட்டு வாய்வழியாக நுண்ணுயிர் எதிர்ப்புத்தன்மையுள்ள ஆன்ட்டி-பாயாட்டிக் மருந்துகள் வழங்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படும். உடல் தன்னை பாதிப்பிலிருந்து மீட்டெடுக்க சீராகும் போது ஏற்படும் அட்ஹெஷன் நோய் அல்லது புற்றுநோயால் - சிறு மற்றும் பெரு குடலில் அடைப்புகள் ஏற்படுவது வயதானவர்கள் மத்தியில் மிகவும் பொதுவாக காணப்படுகிறது. பெரும்பாலும் இவற்றிற்கு அறுவை சிகிச்சைகள் தேவைப்படுகின்றன.
வயிற்றில் முன்பு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை
வயிற்றில் முன்பு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை (PAS) என்பது லேப்ராஸ்கோபி அல்லது லேப்ரோடோமி முறையில் வயிற்றில் ஏற்கனவே செய்யப்பட்ட அறுவை சிகிச்சைகளைக் குறிக்கும். மேலும், இது வயிற்றில் முன்பு மேற்கொள்ளப்பட்ட மேஜர் அறுவை சிகிச்சை மற்றும் மைனர் அறுவைசிகிச்சை என்று இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
நள்ளிரவுக்குப் பிறகு, தண்ணீர் மற்றும் சூயிங் கம் உட்பட எதையும் சாப்பிடவோ குடிக்கவோ கூடாது. உங்களது மருந்துகளை பரிந்துரைத்தபடி, தண்ணீருடன் மட்டுமே தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும். அறுவை சிகிச்சைக்கு ஒரு வாரத்திற்கு முன்பு, ப்ரூஃபன், ஆஸ்பிரின் அல்லது ஆஸ்பிரினை உள்ளடக்கிய வேறெந்த மருந்தையும் உட்கொள்ளாமல் தவிர்க்கவும்.
குடல் இயக்க பிரச்சனைகளின் பின்னணி
இரைப்பை-உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் (எதிர்க்களிப்பு) நோய், புற்றுநோய், எரிச்சலூட்டும் குடல் அழற்சி, லாக்டோஸை உடல் ஏற்காமை மற்றும் ஹியேடல் குடலிறக்கம் ஆகியவை பொதுவான குடல் இயக்க கோளாறுகளாகும். இது தவிர, இரத்தப்போக்கு, வயிறு உப்புசம், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, நெஞ்செரிச்சல், அசௌகரியம், குமட்டல் மற்றும் வாந்தி போன்ற பிற பிரச்சினைகளையும் நீங்கள் எதிர்கொள்ள நேரலாம்.
வயிற்றில் ஏற்படும் வைரஸ் தொற்று
வைரஸுடன் தொடர்பு நிகழந்த முதல் 12 முதல் 48 மணி நேரத்திற்குள் ஒருவருக்கு வயிற்று ஃப்ளூ ஏற்படுகிறது. குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, தசை வலி, வயிற்றுப் பிடிப்பு மற்றும் குறைவான வெப்பநிலையுடன் கூடிய காய்ச்சல் ஆகிய அறிகுறிகளின் அடிப்படையில் வயிற்று ஃப்ளூ பெரும்பாலும் கண்டறியப்படுகிறது. வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு தனித்தனியாகவோ அல்லது ஒன்றாகவோ நேரலாம்.
வயிற்று வலி வராமல் தடுக்கும் வழிகள்
ஆரோக்கியமான உணவை உட்கொள்வது
அரிசி நல்ல வெள்ளை நிறத்தில் இருப்பதை உறுதி செய்யவும். கருப்பு அல்லது பிரவுன் நிற அரிசியை ஜீரணிப்பது, குறிப்பாக உங்களுக்கு வயிற்று வலி இருந்தால் மிகவும் கடினமாக இருக்கும். வெள்ளை அரிசி என்பது மாவுச்சத்துள்ள, குறைந்த நார்ச்சத்துள்ள ஒரு உணவாகும், இது உங்கள் மலத்தை திடமாக்கவும், சில நேரங்களில் வயிற்று பிரச்சினைகளால் ஏற்படும் வயிற்றுப்போக்கை நிறுத்தவும் உதவும்.
சிறிய அளவுகளில் உணவை உட்கொள்வது
சிறிய அளவுகளில் உணவுகளை உண்பது - நாள் முழுவதும் பசி ஏற்படாமல் தடுக்கிறது, இரத்த சர்க்கரை அளவை நிலைப்படுத்துகிறது, மற்றும் வைட்டமின் விநியோகத்திற்கும் உதவுகிறது. குறைந்த அளவு உணவை உண்பது செரிமானத்திற்கு உதவுகிறது, மற்றும் வயிற்று வலி ஏற்படுவதையும் தடுக்கிறது.
எப்போது நாம் மருத்துவரை அணுக வேண்டும்?
பொதுவாக, வயிற்றில் ஏற்படும் அசௌகரியத்தை ஒரு அவசர பிரச்சினையாக கருத வேண்டும். உங்களுக்கு திடீரென்று, கடுமையான வலி ஏற்பட்டால், அல்லது அதனுடன் குமட்டல் மற்றும் வாந்தியும் இருந்தால், நீங்கள் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.
உங்களுக்கு ஒரு வாரத்திற்கும் மேலாக வயிற்று வலி, வீக்கம் இருந்து, அத்துடன் வயிற்றுப்போக்கும் ஏற்பட்டால், அல்லது 24 முதல் 48 மணி நேரத்திற்குள் உடல் நிலையில் முன்னேற்றம் தெரியவில்லையென்றால், உங்கள் மருத்துவரை அணுகவும்.
கட்டுரை சுருக்கம்
உங்களுக்கு ஏற்படும் வயிற்று வலியை லேசாக எண்ணி புறக்கணிக்க வேண்டாம். வயிற்று வலி தொடர்பான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம்.
எப்போதும் ஆரோக்கியமான உணவுகளையே சாப்பிடவும். ஜங்க் ஃபுட் சாப்பிடுவதைத் தவிர்த்து, தவறாமல் உடற்பயிற்சி செய்யவும்.