முன்னுரை
வெப்பமான கோடையின் மதியநேரத்தில் நீங்கள் ஏதோவொரு சாலையில் நடப்பதாக கற்பனை செய்துபாருங்கள். அப்போது சிறிது ஓய்விற்காக நின்று, ஒரு கிளாஸ் குளிர்ந்த கரும்புச் சாற்றை ருசித்தால் எப்படி இருக்கும்? கரும்புச் சாற்றின் சுவை உங்களுக்கு உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தை தரும். ஹைட்ரேஷன் எனப்படும் நீர்ச்சத்தை தவிர, சூடான மதிய நேரத்தில் கரும்புச் சாற்றைப் பருகுவது ஒரு அலாதியான நிம்மதி தான்.
கரும்புச் சாறு உங்கள் தாகத்தைத் தணிப்பது மட்டுமல்லாமல், உங்களது உடல் இழந்த ஊட்டச்சத்துக்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகளை மீட்டுத்தருகிறது.
கரும்பு என்பது, போயேசியா (Poaceae) குடும்பத்தைச் சேர்ந்த, எப்போதும் விளையக்கூடிய ஒரு புல் வகை தாவரமாகும். இது பொதுவாக தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் பயிரிடப்படுகிறது. கரும்பு நமக்கு வழங்கும் ஊட்டச்சத்து நன்மைகளின் காரணமாகவே அது பிரதானமாக விளைவிக்கப்படுகிறது.
தாவர நிறமிகள் இருப்பதால் கரும்புச் சாற்றிற்கு அதன் நிறம் கிடைத்துள்ளதாக ஆரம்பத்தில் கருதப்பட்டது. பின்னர், அதில் உள்ள குளோரோஜெனிக் அமிலம், ஃபிளேவனாய்ட்ஸ் மற்றும் சின்னமிக் அமிலம் போன்றவற்றின் கலவையே அதன் நிறத்திற்கு காரணம் என்று கண்டறியப்பட்டது. கரும்பு உடல்நலத்திற்கு பல நன்மைகளைத் தருகிறது, அவற்றில் சிலவற்றை இந்த வலைப்பதிவில் காணலாம்.
ஊட்டச்சத்துக்களின் அளவு
கரும்பு கழிகளை முறுக்கிப் பிழிந்தால் நமக்கு கரும்புச் சாறு கிடைக்கும். NCBI-யின் தகவல் படி, கரும்புச் சாற்றில் 70-75% தண்ணீர், 10-15% நார்ச்சத்து மற்றும் 13-15% சுக்ரோஸ் உள்ளது.
ஹை பெர்ஃபார்மன்ஸ் லிக்விட் க்ரோமாட்டோகிராபி (HPLC) முறையின் உதவியுடன் கரும்பில் உள்ள ஊட்டச்சத்துக்கள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டன; பின்வரும் ஃபிளேவோன்ஸ் மற்றும் பீனாலிக் அமிலங்கள் அதிலிருந்து தனியே பிரிக்கப்பட்டன.
- ஹைட்ராக்ஸிசின்னமிக் அமிலம்
- சினாபிக் அமிலம்
- கேஃபிக் அமிலம்
- அபிஜெனின்
- லுடோலின் மற்றும்
- ட்ரைசின்
கரும்புச் சாற்றின் 11 நன்மைகள்
கரும்புச் சாறு பருகுவதால் கிடைக்கும் சில பொதுவான நன்மைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்குகிறது
சாலையோர கடைகளில் கரும்புச் சாறு விற்கப்படுவதை நம்மால் பார்க்க முடியும். வெப்பமான கோடையின் மதிய நேரத்தில் வாகனம் ஓட்டும்போது, உடலில் நீரிழப்பு உணர்வு ஏற்படும். இந்த சீதோஷன நிலையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு, இந்த சாலையோர கடைகள் பலனளிப்பதாக இருக்கும்.
கரும்புச் சாற்றில் உள்ள எளிய சர்க்கரையை உடல் எளிதாக உறிஞ்சிவிடும். எனவே, இது நமக்கு உடனடி ஆற்றலை வழங்கி, உடலுக்கு நீர்ச்சத்து கிடைத்த உணர்வையும் தருகிறது.
எனவே, கோடைக்காலத்தில் மதிய நேரத்தில் வாகனம் ஓட்டும்போது நீர்ச்சத்து குறைவாக இருப்பது போல நீங்கள் உணர்ந்தால், உடல் வெப்பத்தைக் குறைக்க ஒரு கிளாஸ் குளிர்ந்த கரும்புச் சாற்றை அருந்துங்கள்.
இந்த சாறு உங்கள் சருமத்தினை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும் கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள் மற்றும் மினரல்களை வழங்குகிறது.
ஜீரணத்தை எளிதாக்குகிறது
ஜீரணக் கோளாறுகள் நமக்கு பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். கரும்புச் சாறு செரிமானத்தை எளிதாக்கி, இதமளிக்க உதவுகிறது.
செரிமான அமைப்புகளை சமநிலையில் வைத்திருக்க கரும்புச் சாறு உதவுகிறது, மேலும் கரும்புச் சாற்றில் உள்ள பொட்டாசியம் வயிற்றில் ஏற்படும் நோய்த்தொற்றுகளைத் தடுக்கிறது, மற்றும் மலச்சிக்கலையும் குணப்படுத்துகிறது..
வயிற்றுடன் தொடர்புடைய GERD நோயின் அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவதில் கரும்புச் சாற்றின் செயல்திறனை ஒரு முன்னோட்ட ஆய்வு ஆராய்ந்தததாக NCBI தெரிவித்தது. GERD அறிகுறிகளுக்கு கரும்புச் சாறு நேர்மறையான விளைவைக் கொண்டிருப்பதாகவும், அறிகுறிகளின் தீவிரத்தைத் தணிப்பதாகவும் அந்த ஆய்வு நிரூபித்துள்ளது.
மஞ்சள் காமாலைக்கு தீர்வு
கரும்புச் சாறு மஞ்சள் காமாலையின் அறிகுறிகளைப் போக்க உதவக்கூடும். NCBI அறிக்கையின்படி, மஞ்சள் காமாலை நோயாளிகளுக்கு கரும்புச் சாறு உகந்த ஒன்று என்று யுனானி மருத்துவ முறை கருதுவதாக தெரிவிக்கிறது.
மேலும், அதிக அளவில் கரும்புச் சாற்றை அருந்துவதால் உடனடி நிவாரணம் கிடைக்கக்கூடும். நவீன மருந்தியல் ஆய்வுகளும் கூட பாரம்பரிய இந்திய மருத்துவத்தின் இந்த அனுமானங்களை ஆதரிக்கின்றன.
கரும்புச் சாற்றில் வலி நிவாரணி, வீக்க எதிர்ப்பு காரணிகள், டையூரிடிக், ஆன்ட்டிஹைபர்கிளைசெமிக் மற்றும் ஹெபாடோப்ரொடெக்டிவ் விளைவுகள் போன்ற பல்வேறு உயிரியல் செயல்பாடுகள் இருப்பதாக இந்த ஆய்வு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. டிரைசின், அபிஜெனின், லுடோலின் கிளைகோசைட்ஸ் பாலிகோசனால்ஸ் மற்றும் ஸ்டீராய்டுகள் போன்ற பிற உட்பொருட்களும் கரும்புச் சாற்றில் முக்கிய அங்கமாக இருப்பதாக அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த உயிரியல் செயல்பாடுகள் மற்றும் உயிரியல் சேர்மங்கள் இருப்பதால், கரும்புச் சாறு மஞ்சள் காமாலையில் சாதகமான பலன்களைத் தருகிறது.
கரும்புச் சாற்றில் பல்வேறு ஆன்ட்டிஆக்ஸிடென்ட்கள் உள்ளன. இது கல்லீரல் நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவுகிறது, மற்றும் பிலிரூபின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
மஞ்சள் காமாலை பாதிப்பின் போது, நமது உடலானது புரதங்களை பெருமளவில் உடைத்து, உங்கள் இரத்தத்தில் பிலிரூபின் அளவை அதிகரிக்கிறது. நீங்கள் இழந்த புரத எண்ணிக்கையை விரைவாக நிரப்ப கரும்புச் சாறு உதவுகிறது.
எடை குறைப்பிற்கு உதவுகிறது
எடை குறைப்பு என்பது ஒரு நீண்ட பயணமாகும், அதில் கலோரி கட்டுப்பாடு என்பது முக்கியமான ஒன்றாகும். கரும்பில் 70-75 சதவீதம் தண்ணீர் உள்ளது. இது உங்களை நீண்ட நேரம் பசியின்றி வைத்திருக்கும் மற்றும் நீங்கள் உட்கொள்ளும் அதிகப்படியான கலோரிகளைக் குறைக்கும்.
கரும்புச் சாறு வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது, மற்றும் உடல் செயல்பாட்டின் அளவை அதிகரிக்கிறது, இது எடை குறைப்பை விரைவாக்குகிறது. மேலும், கரும்புச் சாற்றில் அதிக நார்ச்சத்து உள்ளதால், செரிமானத்திற்கு உதவுகிறது.
கரும்புச் சாறு உங்கள் குடலை சுத்தப்படுத்துகிறது, உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கவும் உதவுகிறது. கரும்புச் சாற்றில் இயற்கையான சர்க்கரைகள் உள்ளதால், அவை உடலால் எளிதில் உறிஞ்சப்பட்டு, எடை குறைப்பிற்கு சரியான பானமாக அமைகிறது.
சிறுநீரக ஆரோக்கியத்தை பராமரிக்கிறது
கரும்புச் சாறு என்பது சாச்சுரேட்டட் கொழுப்புகள் இல்லாத குறைந்த சோடியம் கொண்ட ஒரு பானமாகும். இது சிறுநீரகங்களுக்கு பாரம் சேர்க்காமல் ஆரோக்கியமாக வைக்கும்.
உங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுகள் மற்றும் தொற்றுகளை அகற்றி சுத்தம் செய்ய உதவும் ஆற்றல்மிக்க டையூரிடிக் பண்புகள் கரும்புச் சாற்றில் உள்ளது. சிறுநீர் பாதையில் ஏற்படும் நோய்த்தொற்றுகளை நீக்க மற்றும் சிறுநீரக கற்கள் வராமல் தடுக்க கரும்புச் சாறு குடிக்கலாம். உங்கள் சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய இது உதவுகிறது.
கரும்புச் சாற்றில் உள்ள எரியும் உணர்வை போக்க, சிறிது இளநீர் மற்றும் எலுமிச்சை சாற்றை அதில் கலக்கவும். இந்த கலவையை ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிக்கவும்.
புற்றுநோயை எதிர்த்துப் போரிட உதவுகிறது
கரும்புச் சாற்றில் மெக்னீசியம், கால்சியம், இரும்பு, பொட்டாசியம் மற்றும் மாங்கனீஸ் போன்ற மினரல்கள் நிறைந்துள்ளன. இவை கரும்புச் சாற்றை காரத்தன்மை உள்ளதாக மாற்றும், காரத்தன்மையான சூழல் புற்றுநோய் செல்கள் உயிர்பிழைப்பதைக் கடினமாக்கும்.
கூடுதலாக, கரும்புச் சாற்றில் பாலிபினால்கள் உள்ளன, அவை புற்றுநோய் செல்களுக்கு எதிராக உடலைப் பாதுகாப்பதில் உதவுகின்றன. கரும்பில் ஆன்ட்டி-ப்ரோலிஃபெரேட்டிவ், ஆன்ட்டி-ஆஞ்சியோஜெனிக் மற்றும் ஆன்ட்டி-மெட்டாஸ்டேடிக் பண்புகள் உள்ளதால், அவை புற்றுநோய் செல் பெருக்கமடைவதைத் தடுக்கும்.
கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது
கரும்புச் சாறு இயற்கையாகவே கல்லீரல் நோய்களுக்கு நிவாரணம் அளிக்கும் ஒன்றாகும். இது கல்லீரல் நோய்களின் அறிகுறிகளையும் குறைப்பதில் உதவுகிறது.
கல்லீரலின் செயல்பாட்டை வலுப்படுத்த உதவும், இயற்கையான கல்லீரல்-பாதுகாப்பு பண்புகள் கரும்புச் சாற்றில் உள்ளன. அதற்கு அதில் உள்ள அந்தோசைனின்ஸ், ஃபிளேவனாய்ட்ஸ் மற்றும் ஆன்ட்டிஆக்ஸிடன்ட்ஸ் தன்மைகளே காரணம். இந்த ஊட்டச்சத்துக்கள் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை குறைத்து, கல்லீரலை நல்ல நிலையில் வைத்திருக்க உதவுகிறது.
எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்த உதவுகிறது
கரும்புச் சாற்றில் கால்சியம் உள்ளதால், எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்துவதில் உதவுகிறது. இது குழந்தைகளுக்கு மிகவும் பயனளிப்பதாக இருக்கும். கரும்புச் சாறு உட்கொள்வது ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தைக் குறைக்க உதவும்.
கரும்புச் சாறு மட்டுமில்லாமல், கரும்பினை மெல்லுவதால் பல் எனாமல் வலுப்படுகிறது, மற்றும் பற்சிதவை தடுக்கிறது. ஊட்டச்சத்து மிகுந்த கரும்புச்சாறு வாய் துர்நாற்றத்தை தடுக்க உதவுகிறது.
இயற்கையான டையூரிடிக்காக செயல்படுகிறது
கரும்புச் சாறு இயற்கையான டையூரிடிக் பண்புகளைக் கொண்டுள்ளது. கரும்புச் சாற்றில் 75% தண்ணீர் இருப்பதால் நீர்ச்சத்தை தக்கவைக்க இது ஏற்ற பானமாகும்.
கரும்புச் சாறு இயற்கையான டையூரிடிக்காக செயல்பட்டு, உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றவும், இழந்த எலக்ட்ரோலைட்டுகளை திரும்பக் கொண்டுவரவும் உதவுகிறது.
முகப்பருவை குணப்படுத்த முடியும்
தொடர்ந்து அருந்தி வந்தால், கரும்புச் சாறு முகப்பருவை கட்டுப்படுத்துவதில் உதவும். மேலும், முகப்பருவின் பாதிப்புள்ள சருமத்தின் மீதும் நேரடியாக இதனைப் பயன்படுத்தி, பாக்டீரியா சேருவதை கட்டுப்படுத்தலாம்.
கரும்புச் சாற்றில் உள்ள ஆன்ட்டி-ஆக்ஸிடென்ட்ஸ், ஃபிளேவனாய்ட்ஸ் மற்றும் பினாலிக் அமிலம் ஆகியன இயற்கையான ஈரப்பதத்தை அளித்து, சருமத்தின் பொலிவைத் தக்க வைக்கிறது.
கரும்புச் சாற்றில் உள்ள கிளைகோலிக் அமிலம் மிகச்சிறிய ஹைட்ராக்சைல் அமிலத்தின் மூலக்கூறாக இருப்பதால், அதனால் தோலின் வழியாக ஊடுருவிச் செல்ல முடியும். இந்த கிளைகோலிக் அமிலம் உயிரற்ற சரும செல்களை அகற்றி ஆரோக்கியமான சருமத்திற்கு வழிவகை செய்கிறது.
பால்வினை(STD) மற்றும் சிறுநீர் குழாய் தொற்றால் (UTI) ஏற்படும் வலிக்கு நிவாரணம் தருகிறது
சிறுநீர் குழாய் நோய்த்தொற்றுகளால் ஏற்படும் எரிச்சல் உணர்வைக் குறைக்க கரும்புச் சாறு மற்றும் இளநீர் உதவும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
கரும்புச் சாறு ஒரு இயற்கையான டையூரிடிக்காக செயல்பட்டு, சிறுநீர் குழாயில் இருக்கும் தொற்றுகளை வெளியேற்ற உதவுகிறது. மேலும் இது எரிச்சல் உணர்வைத் தவிர்க்கவும், சிறுநீரக கல் உருவாவதைத் தடுக்கவும் உதவுகிறது.
கரும்புச் சாறு பால்வினை நோய்களால் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கிறது. கரும்புச் சாறு மனித உயிரணுக்களில் வீக்க-எதிர்ப்பு பண்புகளை கொண்டு சேர்ப்பதாக முதல்நிலை மருத்துவ ஆராய்ச்சி தரவின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
சர்க்கரை நோய்க்கு கரும்புச் சாறு
கரும்புச் சாற்றில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதால், சர்க்கரை நோய் உள்ளவர்கள் அதைத் தவிர்க்க வேண்டும். NCBI- பகிர்ந்த கூற்றின்படி, கரும்புச் சாற்றை அருந்தியவர்களுக்கு - உடற்பயிற்சியின் போதும், அதற்குப் பிறகும் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவுகளில் கணிசமான அளவு உயர்ந்திருப்பது தெரியவந்தது.
கரும்புச் சாறு சர்க்கரை நோயை ஏற்படுத்தாது. இருப்பினும், சர்க்கரை நோயாளிகள் கரும்புச் சாற்றை பருகக்கூடாது, ஏனெனில் இது இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை அதிகரிக்கச் செய்யும்.
கரும்புச் சாற்றின் பக்க விளைவுகள்
உணவுகளை குறைந்த அளவில் உட்கொள்ளும் போது, அதன் பலனை நம்மால் பெற முடியும். ஆனால் அவற்றை அதிக அளவில் எடுத்துக்கொண்டால், அதுவே சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும்.
கரும்புச் சாற்றின் பக்க விளைவுகள் மிகக் குறைவு தான் என்றாலும், சில சந்தர்ப்பங்களில், அது சில உடல்நலப் பிரச்சினைகளையும் ஏற்படுத்தலாம்.
கரும்பில் பாலிகோசனால் என்ற ஒரு லாங்-செயின் அமைப்பைப் கொண்ட மது உள்ளது- இது உறக்க சுழற்சியை பாதிக்கலாம், மற்றும் தூக்கமின்மை, தலைச்சுற்றல், தலைவலி, வயிற்று வலி மற்றும் எடை இழப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும். கரும்புச் சாற்றை அதிக அளவில் உட்கொள்பவர்களுக்கு இந்த பக்க விளைவுகள் ஏற்படுகின்றன.
கூடுதலாக, இது இரத்தத்தை நீர்த்துப்போகச் செய்யலாம், அது இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை பாதிக்கும். இரத்தத்தை நீர்த்துப்போகச் செய்யும் மருந்துகளை எடுத்துக் கொள்ளும் ஒருவர், கரும்புச் சாறு குடிப்பதை தவிர்க்க வேண்டும், ஏனெனில் அது கடுமையான இரத்தப்போக்கு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கக்கூடும்.
கரும்புச் சாறு விரைவில் கெட்டுப்போகும் தன்மை கொண்டது; எனவே அதை உடனுக்குடன் புதிதாக பருகவே அறிவுறுத்தப்படுகிறது. ஆராய்ச்சிகளின்படி, கரும்புச் சாற்றை நீண்ட நேரம் வைத்திருந்து, பிறகு உட்கொண்டால், அது ஆக்ஸிடைஸ் செய்யப்பட்டு, தீங்கு விளைவிக்கும் ஒன்றாக மாறலாம். அது வயிறு சார்ந்த பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
மேலும், சர்க்கரை நோய் உள்ளவர்கள் கரும்புச் சாறுக்குப் பதிலாக கரும்பை எடுத்துக்கொள்ளலாம். இருப்பினும், கரும்பு சாப்பிடுவதற்கு முன், கிளைசெமிக் இன்டெக்ஸ் அளவை சரிபார்த்துக்கொள்வது உகந்தது. கரும்பு சாப்பிடும் முன் உங்கள் மருத்துவரை ஆலோசிக்கவும்.
வீட்டில் கரும்புச் சாறு தயாரிப்பது எப்படி?
கரும்புச் சாறு செயல்முறை:
- முதலில் கரும்பின் தோலை உரித்து, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
- ஒரு பிளெண்டரில் நறுக்கிய துண்டுகளைச் போடவும்.
- சிறிது துருவிய இஞ்சியைச் சேர்த்து அரைக்கவும்.
- கூடுதலாக தண்ணீர் சேர்ப்பதைத் தவிர்க்கவும்.
- அதன் பிறகு, நீங்கள் அரைத்த கரும்பிலிருந்து சாற்றினை வடிகட்டி எடுக்க வேண்டும்.
- சாற்றை வடிகட்டிய பின்பு, அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
- சில மணி நேரம் குளிர வைத்து, குளிர்ச்சியாகப் பரிமாறவும்.
முடிவுரை
கரும்புச் சாறு என்பது ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு தொகுப்பாகும். இதில் ஆன்ட்டிஆக்ஸிடென்ட்ஸ் மற்றும் வைட்டமின் சி, கால்சியம் மற்றும் பொட்டாசியம் போன்ற மினரல்கள் மற்றும் வீக்க எதிர்ப்பு காரணிகள் மற்றும் டையூரிடிக் பண்புகள் உள்ளன.
கரும்புச் சாற்றில் உள்ள ஆன்ட்டிஆக்ஸிடென்ட்ஸ், செல்களில் ஏற்படும் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தைக் குறைக்கிறது. இந்த பண்பு, பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுவதிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.
நீர்ச்சத்தினை தக்கவைக்க கரும்பு ஒரு சிறந்த தேர்வாகும். குறைந்த அளவில் உட்கொண்டால், கரும்புகளின் பலன்களை நம்மால் பெறமுடியும்.
தினமும் கரும்புச் சாறு குடிப்பது நல்லதா?
தினமும் கரும்புச் சாறு குடிப்பதால் பல்வேறு ஆரோக்கியமான நன்மைகள் கிடைக்கிறது. இதில் கால்சியம், பொட்டாசியம், இரும்பு, மெக்னீசியம் மற்றும் மாங்கனீஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் கொலஸ்ட்ரால் மற்றும் சோடியம் குறைவாகவே உள்ளதால், இது உங்கள் சிறுநீரகத்தை நல்ல நிலையில் பராமரிக்க உதவுகிறது. மேலும், நம் உடலில் உள்ள நச்சுகளை அவ்வப்போது வழக்கமாக வெளியேற்ற உதவும் டையூரிடிக் பண்புகளும் கரும்புச் சாறுக்கு உள்ளது. அதன் டையூரிடிக் பண்பு, சிறுநீர் பாதையில் தொற்று ஏற்படாமல் தடுக்கிறது.கரும்புச் சாற்றை யார் குடிக்கக்கூடாது?
நீரிழிவு நோய் உள்ளவர்கள் கரும்புச் சாறு அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக, அவர்கள் கரும்பு துண்டுகளை உட்கொள்ளலாம். இரத்தத்தை நீர்த்துப்போக வைக்கும் மருந்துகளை எடுத்துக்கொள்பவர்கள் கரும்புச் சாற்றைத் தவிர்க்க வேண்டும்.கரும்புச் சாறு சருமத்திற்கு நல்லதா?
கரும்புச் சாற்றை நேரடியாக சருமத்தில் பயன்படுத்தினால், அது முகப்பருவைக் குறைக்கும், மற்றும் பாக்டீரியாவின் உயிரணுப் பெருக்கத்தையும் கட்டுப்படுத்துகிறது. மேலும், இது உயிரற்ற சரும செல்களை நீக்கி ஆரோக்கியமான சரும செல்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.இளநீர் அல்லது கரும்புச் சாறு, இவற்றில் எது சிறந்தது?
கரும்புச் சாற்றுடன் ஒப்பிடும்போது இளநீரில் கலோரிகள் மற்றும் சர்க்கரை அளவு குறைவாக உள்ளது. கரும்புச் சாற்றுடன் ஒப்பிடும் போது இளநீரில் தாதுக்களின் அளவு சற்று அதிகமாக உள்ளது.இளநீர் சர்க்கரையை அதிகப்படுத்தாதன் காரணத்தால், ஒரு சிறந்த பானமாக உள்ளது. இருப்பினும், இரண்டு பானங்களும் அதற்குரிய ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளன.