இந்தியாவில் பெரும்பாலான வீடுகளில் துளசிச் செடிகள் வளர்க்கப்படுகிறது.மூலிகையின் அரசி என்று அறியப்படும் இந்த துளசி செடியில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.குழந்தைகளுக்கு ஏற்படும் சளி,இருமல் போன்றவற்றிற்கு துளசியானது ஒரு மிகச்சிறந்த மருந்தாகும்.துளசி பாரம்பரியமாக சில வாஸ்து நன்மைகளை கொண்டுள்ளது என்று பெரியவர்களால் இன்றளவும் நம்பப்படுகிறது.எனவே இந்திய மரபுகளில் இந்த செடிக்கு முக்கிய இடம் உண்டு.இந்தியாவில் சளி இருமலுக்கு இந்த இலைகள் அப்படியே பயன்படுத்தப்படுகிறது.
துளசியில் இருந்து பெறப்படும் அத்தியாவசிய எண்ணெய்,அழகுசாதனத் தயாரிப்பு,தோல் பராமரிப்பு,வாசனை திரவியம் மற்றும் ஷாம்பு தயாரிக்கவும் பயன்படுகிறது.
இத்தகைய புனிதத் தன்மை கொண்ட மூலிகையில் வைட்டமின்கள் ஏ,சி,கே மற்றும் கால்சியம், இரும்பு மற்றும் மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற தாதுக்களும் உள்ளன. இதில் கணிசமான அளவு புரதம் மற்றும் நார்ச்சத்து உள்ளது.இவை இரண்டும் நல்ல ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதவை. துளசி இலைகள் பல்வேறு நோய்களுக்கு மருந்தாகவும் நோய் வருவதை தடுப்பதற்கும் ஒரு சிறந்த இயற்கை வழியாகும்.
NCBI கட்டுரையின் படி துளசி ஓசிமம் சாக்டம்.இந்த மூலிகை பல உபாதைகளுக்கு மருந்தாக பயன்படக்கூடியது என்கிறது.ஆயுர்வேதத்தில் துளசி மிகவும் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. சமீபத்திய ஆய்வுகளில் துளசியில் மேலும் பல ஆரோக்கிய நன்மைகள் இருப்பதை குறிக்கிறது.
ரசாயனங்களினாலும் அதிக உடல் உழைப்பினாலும் உடலின் உள்ளுறுப்புகள் மற்றும் திசுக்களும் பாதிப்படைய கூடும் அவற்றை துளசி தடுக்கிறது.பாதிப்புகள் அதிக உடல் உழைப்பு,உடல் உழைப்பில்லாமை இரத்த ஓட்ட குறைபாடு இப்படியான குளிர் மற்றும் அதிகப்படியான சத்தத்திற்கு ஆட்படுவது தொழிற்சாலைகளின் கழிவு மற்றும் வாகனங்களிலிருந்து வெளிவரும் நச்சுக்களால் ஏற்படுகிறது.
துளசியின் தனித்துவமான ஆரோக்கிய நன்மைகள்
1. மன அழுத்தத்தை போக்கும் துளசி
துளசியானது மன அழுத்தத்திற்கு எதிரான குணங்களைக் கொண்ட ஒரு இயற்கை மூலிகையாகும். எனவே,ஒரு நபர் மன அழுத்தம் அல்லது கவலையை உணரும்போது ஒரு கப் துளசி டீயை பருகினால்,புத்துணர்ச்சி பிறக்கும்.
2. தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு மற்றும் உடலில் ஏற்படும் காயங்களுக்கு சிகிச்சை அளித்தல்
துளசியில் நீண்ட காலமாக அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உள்ளன.மேலும் இவை ஒரு சிறந்த வலி நிவாரணியாகவும் செயல்படுகிறது.
3. செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது
துளசி செடியானது கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக அறியப்படுகிறது.அதனால் அது செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுகிறது.
4.உடல் எடையை குறைக்க உதவுகிறது
துளசி ஜீரண உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலம் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றி உடல் எடை குறைகிறது.இது உடலில் வளர்சிதை மாற்ற விகிதத்தை துரிதப்படுத்துகிறது.இது உடலின் கொழுப்பு எரியும் செயல்முறையை மேலும் துரிதப்படுத்துகிறது.
5.சிறுநீரக கற்களை கரைக்கிறது
துளசி ஒரு சிறந்த நச்சு எதிர்ப்பு பொருள்.எனவே, சிறுநீரக கற்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு இது அரு மருந்தாகும்.சிறுநீரக கற்களுக்கு காரணமான யூரிக் அமிலத்தின் அளவை குறைக்க உதவுகிறது.
6. நீரிழிவு நோயை எதிர்த்துப் போராட உதவுகிறது
துளசி தேநீர் டைப் 2 நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது.நீரிழிவு நோயை நிர்வகிப்பதற்கு இது மிகவும் விரும்பப்படும் மூலிகை டீகளில் ஒன்றாகும்.இந்த மூலிகை டீ நீரழிவு நோயை கட்டுப்பாட்டில் வைக்கிறது.
7. பல் மற்றும் வாய் ஆரோக்கியம்
பல் குழி என்பது மக்கள் தங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் பொதுவான பல் பிரச்சனையாகும். நல்ல செய்தி என்னவென்றால், துளசியில் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் உள்ளன. அவை வாயில் பாக்டீரியா மற்றும் கிருமிகளை எதிர்த்துப் போராடுகிறது.
8. தோல் மற்றும் முடி நன்மைகள்
துளசியில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்,தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிரம்பியுள்ளன.இது வயது முதிர்வு அறிகுறிகளை எதிர்த்து போராடுகிறது.இது உச்சந்தலையில் ஏற்படும் அரிப்புகளை குறைப்பதோடு, முடி உதிர்தலையும் கட்டுப்படுத்துகிறது.
9. சரும பராமரிப்பு
துளசி பேஸ்ட் சருமத்தில் ஏற்படும் கறைகள் மற்றும் முகப்பருவைப் போக்க வல்லது.இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளதால் முகச்சுறுக்கங்களை போக்கி சரும பிரச்சனை வராமல் பாதுகாக்கிறது.
10.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
துளசியில் துத்தநாகம் மற்றும் வைட்டமின் சி ஆகிய இரண்டு கூறுகள் உள்ளன.அவை தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகின்றன.துளசி இலைகள் அல்லது துளசி டீயை தினமும் உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
துளசி இலைகளின் ஊட்டச்சத்து மதிப்புகள்
துளசியில் வைட்டமின்கள், தாதுக்கள், பைட்டோநியூட்ரியன்கள், புரதம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. இது கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, துத்தநாகம் மற்றும் மாங்கனீசு போன்ற தாதுக்களின் சிறந்த மூலமாகும்.
சிறப்புமிக்க துளசி இலையில் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் ஏ மற்றும் கே, அத்துடன் வைட்டமின் சி,உர்சோலிக் அமிலம், லினாலூல், கார்வாக்ரோல், ரோஸ்மரினிக் அமிலம், லுடீன், எஸ்ட்ராகோல் மற்றும் ஜியாக்சாண்டின் ஆகியவை துளசி இலைகளில் காணப்படுகின்றன.
துளசியின் ஊட்டச்சத்து மதிப்பு (Ocimum gratissimum )
- ஆற்றல் - 22.4 கிலோகலோரி
- கார்போஹைட்ரேட் - 2.65 கிராம்
- புரதம் - 3.15 கிராம்
- உணவு நார்ச்சத்து - 1.6 கிராம்
- கொழுப்பு - 0.64 கிராம்
- நீர் - 92.06 கிராம்
- கால்சியம் - 177 மி.கி
- இரும்பு - 3.17 மி.கி
- பொட்டாசியம் - 295 மி.கி
- சோடியம் - 4 மி.கி
- பாஸ்பரஸ் - 56 மி.கி
- துத்தநாகம் - 0.81 மி.கி
- மாங்கனீசு - 1.148 மி.கி
- β-கரோட்டின் - 3142 µg
- தியாமின் - 0.034 மி.கி
- நியாசின் - 0.902 மி.கி
- ரிபோஃப்ளேவின் - 0.076 மி.கி
- பாந்தோத்தேனிக் அமிலம் - 0.209 மி.கி
- வைட்டமின் பி6 - 0.155 மி.கி
- கோலின் - 11.4 மி.கி
- வைட்டமின் சி - 18 மி.கி
- வைட்டமின் ஈ - 0.8 மி.கி
- வைட்டமின் கே - 414.8 μg
மேலே குறிப்பிட்டுள்ள துளசியின் ஊட்டச்சத்து மதிப்புகள், 'துளசியின் மருந்தியல் மற்றும் இயற்பியல்-வேதியியல் பண்புகள் (Ocimum gratissimum L):மேம்படுத்தப்பட்ட மதிப்பாய்வு' என்ற தலைப்பில் உள்ள கட்டுரையில் இருந்து பெறப்பட்டது.
துளசி இலைகளின் பக்க விளைவுகள்
ஆண் மற்றும் பெண் கருவுறுதலை பாதிக்கிறது
2010 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆயுர்வேத ஆராய்ச்சியின் சர்வதேச இதழில் வெளியிடப்பட்ட கருத்தானது விலங்குகள் மீது நடத்தப்பட்ட ஆய்வில், துளசி அதிக அளவு உட்கொண்டால் விந்தணுக்களின் இயக்கத்தை குறைக்கும் மற்றும் விலங்குகளின் எண்ணிக்கையை குறைக்கும் என்று கண்டறியப்பட்டது.
கருவுறாமை பிரச்சினைகள் உள்ள ஆண்கள் மூலிகையின் பயன்பாட்டை குறைப்பதன் மூலம் எதிர்மறை விளைவுகள் ஏற்படுவதை தடுக்கலாம்.இது இன்னும் மக்களிடையே நிரூபிக்கப்படவில்லை.
கல்லீரலை சேதப்படுத்தும்
யூஜெனால் என்பது துளசியில் உள்ள ஒரு பொருள். யூஜெனோல் நச்சுகள் காரணமாக கல்லீரல் சேதப்படுத்துவதை தடுக்கிறது.ஆனால் அதிகப்படியான அளவு எடுத்துக் கொள்ளும் போது,அவை கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும்.மேலும் வாந்தி, வயிற்றுப்போக்கு, விரைவான இதயத் துடிப்பு மற்றும் வலிப்பு ஆகியவற்றை ஏற்படும்.
இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கிறது
துளசி இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. இருப்பினும், ஒரு நபர் நீரிழிவு மருந்துகளை எடுத்துக் கொள்ளும்போது, துளசி இலைகளை உட்கொண்டால் அதன் விளைவு அதிகரிக்கலாம் மற்றும் சர்க்கரை அளவானது மிகக் குறைவதற்கும் வாய்ப்புள்ளது.
இரத்த உறைதல் மருந்துகளை உட்கொள்பவர்களுக்கு தீங்கு விளைவிக்கும்
இரத்தத்தின் அடர் தன்மையை குறைப்பது துளசியின் நன்மையாகும் இரத்தத்தின் அடர் தன்மையை குறைப்பதற்கு வந்து மாத்திரைகள் எடுக்கக் கூடாது என்று நினைப்பவர்களுக்கு துளசி சரியான மாற்றாகும். எனவே இரத்தத்தின் அடர் தன்மையை குறைப்பதற்கு சிகிச்சை எடுப்பவர்கள் துளசியை உட்கொண்டால்,எதிர்மறை விளைவுகள் ஏற்பட வாய்ப்புண்டு.இரத்தத்தின் அடர் தன்மையை குறைப்பதற்கு சிகிச்சை எடுப்பவர்கள் துளசியை தவிர்க்க வேண்டும்.
கர்ப்பம்
துளசி இலைகள் கர்ப்பிணிப் பெண்ணின் ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.தீவிர சூழ்நிலைகளில், இது கருச்சிதைவு கூட ஏற்படலாம்.மேலும் இம்மூலிகை தீங்கு விளைவிக்கும் கருப்பை சுருங்குவதற்கு வழிவகுக்கும்.
துளசி இலைகள் இடுப்பு மற்றும் கருப்பையின் இரத்த ஓட்டத்தை அதிகரித்து கருப்பை சுருங்குவதற்கு வழிவகுக்கும். ஆயினும்கூட, கர்ப்ப காலத்தில் துளசியின் பயன்பாட்டை ஆதரிக்க அல்லது மறுக்க போதுமான தரவு இல்லை.இருப்பினும் நிபுணர்கள் கருவுற்ற பெண்கள் ஆரோக்கியமாக இருக்க துளசி உட்கொள்வதை தவிர்க்க அறிவுறுத்துகிறார்கள்.
குமட்டல்
மிதமான குமட்டல் துளசியின் குறைந்த நேர பக்க விளைவாகும் . நீண்டகால பக்க விளைவு துளசியை பயன்படுத்துவதால் வர வாய்ப்பில்லை
ஆயினும்கூட, துளசி பயன்பாட்டின் பாரம்பரிய வரலாறு, குறிப்பிடத்தக்க நீண்ட கால விளைவுகள் என்பது அசாதாரணமானது மற்றும் தினசரி உட்கொள்வது பாதுகாப்பானதாக இருக்கலாம் என்று கூறுகிறது. இருப்பினும், இது கூடுதல் ஆராய்ச்சி மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
பல் எனாமலை சேதப்படுத்தும்
துளசி இலைகளை மென்று சாப்பிடுவதை விட, அவற்றை விழுங்குமாறு யாராவது அறிவுறுத்தலாம்.இதற்கு அறிவியல் நியாயமும் உண்டு.துளசி இலைகளில் பாதரசம் இருப்பதால் மெல்லக்கூடாது, இது பற்களின் மேற்பரப்பு தன்மையை பாதிப்படைய செய்யும்.
துளசியில் பாதரசம் உள்ளதால், இது மெல்லும்போது வாயில் இருந்து வெளியேறி பற்களை சேதப்படுத்தி நிறமாற்றம் செய்கிறது. கூடுதலாக, துளசி இலைகள் இயற்கையில் அமிலத்தன்மை கொண்டவை,இதனால் காரத்தன்மை ஏற்பட்டு பற்கள் நிறமாற்றம் அடைகின்றன.
துளசியை எப்படி உட்கொள்ள வேண்டும்?
துளசியை சாப்பிட சில பாதுகாப்பான வழிகள்
- துளசி தேநீர்
- துளசி கலந்த நெய் அல்லது தேன்
- துளசி சாறு
- துளசி நீர்.
துளசி இலைகளை நேரடியாக தேநீரில் சேர்த்து உட்கொள்ளலாம்.
துளசி டீ விரும்பத்தக்கது, ஏனெனில் இந்த பானம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது.
துளசி மூலம் வாழ்க்கை தரத்தை பாதுகாப்பாக வைக்க உதவும் குறிப்புகள்
- மனிதர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின் போது ,துளசி எடுத்துக் கொண்டவர்களுக்கு பக்கவிளைவுகள் ஏதும் ஏற்படவில்லை. இருப்பினும், பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பமாக இருப்பவர்கள் அல்லது கருத்தரிக்க முயற்சிப்பவர்கள் துளசியைத் தவிர்க்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
- பச்சிளங்குழந்தைகள், குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு துளசி பாதுகாப்பானதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், துளசி ஒரு பெண்ணின் கருத்தரிக்கும் திறனை பாதிக்கும் வாய்ப்புண்டு.
- துளசி தேநீர் முதன்முதலில் அருந்தும் போது அல்லது உணவில் சேர்க்கும்போது குமட்டல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.எனவே அதை சிறிய அளவில் அருந்தி, காலப்போக்கில் அதிகரிக்கவும்.
- துளசி இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, எனவே இதை எச்சரிக்கையுடன் உட்கொள்ள வேண்டும்.குறிப்பாக நீரிழிவு நோய்க்கான மருந்துகளை உட்கொள்பவர்கள் துளசி எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.
தற்காப்பு நடவடிக்கைகள்
பக்கவிளைவுகளைத் தடுக்க துளசியை உட்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெறுவது நல்லது. குறிப்பாக இளம் வயதினர், முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள்.
முடிவுரை
துளசி அறிவியல் ரீதியாக ஓசிமம் சான்டம் என்று குறிப்பிடப்படுகிறது.இது பெரும்பாலும் ஆயுர்வேத மருத்துவத்தில் ஒரு அடாப்டோஜென் மூலிகையாக குறிப்பிடப்படுகிறது.இது பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும். குறிப்பாக மன அழுத்தத்தால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு துளசி ஒரு சிறந்த தீர்வாகும்.
துளசி இலையிலிருந்து எண்ணற்ற மருத்துவப் பயன்களைப் பெறலாம். கல்லீரல், சிறுநீரகம் மற்றும் இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகளின் ஆரோக்கியமான செயல்பாட்டை அவை ஆதரிக்கின்றன.
அவை மனதை அமைதிப்படுத்துவதன் மூலம் ஓய்வெடுக்கவும், பதற்றத்தைக் குறைக்கவும் உதவுகின்றன. எனவே, தினமும் இரண்டு அல்லது மூன்று துளசி இலைகளை உட்கொள்வது ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
துளசி அல்லது வேறு ஏதேனும் துணை உணவுகளை உணவில் அறிமுகப்படுத்தும் முன் எப்போதும் மருத்துவரிடம் கேட்டறிவது நல்லது. துளசியில் இருந்து தயாரிக்கப்படும் சப்ளிமெண்ட்ஸ் மற்றும் மூலிகைகளின் தரம், தூய்மை அல்லது செயல்திறனை FDA கட்டுப்படுத்தாது,எனவே உங்கள் வீடுகளில் இத்தகைய புனித துளசியை வளர்ப்பது சிறந்தது.அசுத்தமான சூழலில் துளசியை வளர்க்கும்போது, அது இரண்டு மடங்கு நச்சுத்தன்மை கொண்டது.எனவே சுகாதாரமான சூழ்நிலைகளில் துளசி செடியை வளர்த்து பயன்பெறலாம்.